Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2] 3 4 ... 7
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-007
பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தான்
தீபாவளி பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும்
பண்டிகையின் களிப்பில் மகிழ்ந்து இருப்போம்
புது வெளிச்சத்தின் வருகைக்காக காத்து இருப்போம்.
நாங்கள் ஒரு தீபத்தை ஏற்றி வைப்போம்
எங்கள் கண்ணில் அதன் ஒளியை இணைத்திடுவோம்
அது எங்கள் வாழ்க்கையில் ஒளிரட்டும்...


இந்து மதத்தின் சிறப்பான பண்டிகை
இருள் நீங்கி ஒளி வீசும் தீபாவளி
இல்லந்தோறும் புது விளக்கேற்றும் தினம்
புத்தாடை அணிந்து பட்டாசு வெடிக்கும் பழக்கம்
கூட்டு குடும்பமாய் கொண்டாடும் வழக்கம்
உறவினர் நண்பர்களோடு மகிழ்ச்சி பகிரும் நாள்
இனிப்புகளை பகிர்ந்து மனம் களிக்கும் தினம்
நரகாசுரனை வதம் செய்து கொண்டாடும் விதமாய்
மகிழ்ச்சி நிறைந்த உணர்வோடு கொண்டாடி மகிழ்வோம் .

சூரிய உதயத்தில் நமக்குள் நிறைந்திருக்கும்
மாய இருள்தனைப் போக்க அறிவு தீயை தீட்டி
அகல் விளக்கினை ஏற்றி வெளிச்சத்தை மூட்டி
நமக்குள் மறைந்திருக்கும் சாதி மத பேதம் பொறமை அகற்ற
வாழ்க்கையின் இருள் நீங்கி ஒளி பிறக்க 
அனைவருக்கும் மகிழ்ச்சி ஒளி வீசும் திருநாள் தீபாவளி பண்டிகை.

எண்ணெய் தேய்த்து குளித்து மனம் மாற்றம் பெற்றிட
புத்தாடைகள் பளபளக்க அணிந்து
புத்துணர்வோடு வெளிவந்து பட்டாசு படபடக்க
உறவினர் வீட்டில் பலகாரம் இனிப்புகள் நாவெல்லாம் சுவைகொடுக்க
ஆதவன் மறைந்தும் மத்தாப்பூ கொண்டு இரவெல்லாம் பகலாக்க
 கறுப்பு வானத்தையும் பட்டாசு கொண்டு வர்ணம் பூச
ஒருவரை ஒருவர் புரிந்து அனைவரும் சமமாய் இணைந்து
உள்ளத்து மகிழ்ச்சியோடு அனைவரும் கொண்டாடுவோம்….
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
....


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக GTC அரட்டையில் உள்ள எனது நண்பர்களுக்கு அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உங்கள் நேரத்தை அனுபவிக்கவும்.
மற்றும் எனக்கு மிட்டாய்(SWEETS) அனுப்ப மறக்க வேண்டாம்.....



   



October 19, 2022, 08:03:15 pm
1
Re: கவிதையும் கானமும்-008 பிரம்மன் படைத்த அற்புதம் நீ
நான் வாங்கி வந்த வரம் நீ
என் வாழ்க்கையின் அடையாளம் நீ
என் எதிர்காலத்தின் சாயல் நீ
என் வாழ்வின் துணை நீ…..

நீயும் நானும் காதலர் ஆனாது அதிசயம்
நாம் சந்தித்த முதல் கனவே கார் காலம்
கனவு நிஜமான நேரம் அந்தி பொழுது
ஒரு குடையின் கீழ் தஞ்சமடைய வைத்த இயற்கை தாயே
நீ என் முதல் தெய்வம்…..

அந்திமழை பொன்மேகம்
தங்க மழை தூவும் நாள்
ஜில் என வீசும் காற்று
நீர் துளிகள் பாடும் நேரம்
இடி  கொட்டும் நேரம்….

தேகம் இரண்டும் உரசும்
தீ மின்னல் மின்னும்
பெண்  உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
வான முத்துக்கள் சிந்தி
குடைக்கம்பி குளிர்ந்தது
வானிலே நீரின் வெண்நிற தோரணம்
கல்லும் முள்ளும் இப்போது பூவானது…..


உன் தோளில் சாயும் போது
என் கவலைகள் பறந்தோடுது
காணாத ஒன்றை தேடும் நேரம் இது
வீணைகள் ராகம் மீட்டும் நேரம் இது
நாம் சேர்ந்த அழகிய பொழுது இனிமேல்
நம் வாழ்க்கையின் இனிய தருணம்….

இதழோடு இதழ்சேர்ந்து பல வர்ணம் திட்டினோம்
நம்மை நாம் இழந்தோம், மறந்தோம்
வாழ்வின் பலனை அடைந்தோம்
காலங்கள் கடந்தாலும் இந்த உறவு தளைக்கும்
காதலின் வலிமை துலங்கும்
அன்பால் என்றும் இணைந்திருப்போம்…..

November 01, 2022, 03:51:05 am
1
Re: கவிதையும் கானமும்-009 என் தேவதையே...

எந்தன் ஜீவனில் உயிர்த்தவள் நீ தானே
மரணம் வென்று ஈன்ற ஜனனம் நீ தானே
உந்தன் கரம் பற்றி வரும் பாதை போதவில்லை
என்னும் மழலையாக நீ இருக்கனுமே...
எந்தன் உந்தன் பாதி தூங்கும் நேரம்
நீயும் நானும் பேசனும் சிறு புன்னகையில்
உந்தன் குமின் சிரிப்பு போதுமடி
எந்தன் ஜென்மம் முழுவதும் உன் முகம் போதுமடி...

பொன் வாய் பேசும் தாரகையே
மார்புதைக்கும் காலுக்கு மணிக் கொழுசு
முத்துக்கள் தெறிக்கின்ற உன் மழலை மொழியே
எந்த மொழியிலும் இல்லாத தேவபாஷை...
அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது
எந்தன் பொற்றவள் சாயல் கண்டேன்
மேல் நாட்டு ஆடையில் நடந்த போது
மீசை இல்லாத மகனை கண்டேன்...

என் ராணியின் ரோஜா முகம்
தினம் தினம் பார்க்கையில்
எத்தனை ஜென்மம் எனக்கு கிடைத்தாலும் போதாது
ஆரம்பத்திலிருந்தே உன் கையைப் பிடித்து
உன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினேன்
கல்வி கண்ணைத் திறந்திட பள்ளி இருக்க
கற்றுக் கொண்டு மேதை என பெயரும் எடுக்க
உன்னை வளர்த்த தந்தை என புகழை
இன்னும் பல ஆசையுண்டு சொல்லி மகிழ
மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது நீ என் மகளாக வேண்டும்...


நாம் அனைவரும் ஒரே கருத்தைப் பகிர்ந்துகொள்கிறோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் :
குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட அப்பாதான் உலகின் சிறந்த மனிதன்! LOVE YOU APPA( LIEBE DICH PAPA)...

அதேபோல் அப்பாவுக்கும் என்றும் மகளே தேவதை...

[/b]

November 08, 2022, 10:42:57 am
1
Re: கவிதையும் கானமும்-010
அழாதே… மலைகளும் வயல்களும் நம்மை பிரிக்கும்
ஆனால் அவைகளை தாண்டி நான் உன்னை நினைக்கிறேன்.
விடியல் உதயமாகும் போது நான் உன்னை நினைக்கின்றேன்
அந்தி சாயும் நேரத்தில் நான் உன்னை நினைக்கிறேன்
எப்போது நட்சத்திரங்களின் இராணுவம் கூடுகிறதோ
அப்போதும் உன்னை நினைக்கிறேன்…
ஏனெனில் இதயத்தில் காதல் ஒளிரும் என்றும்…

ஒரு காலை நாம் இருவரும் சந்தித்தவேளை
இரண்டு இதயங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தன
யாருமே புரிந்து கொள்ளவில்லை அவ் உறவின் ஆழத்தை
ஒருவருக்கொருவர் ஆழ்ந்த விசுவாசமுள்ளவர்கள்,
ஆனால் இன்று நாம் பிரிந்து செல்ல வேண்டும்!
சக்தி வாய்ந்த உள்ளுணர்வு ஒன்றிணைத்தது,
இன்று அதுவே நம்மை பிரிக்கிறது
அது விதியின் போக்காகும்,
ஆனால் இதயத்தில் காதல் ஒளிரும் என்றும்…

அன்று எங்களைப் பார்த்து சந்திரன் சிரித்தான்
நட்சத்திரங்கள் முன்னால் காதல் ஒப்புதல் வாக்குமூலமா என்று,
இன்றும் எங்களைப் பார்த்து சிரிக்கின்றான்
உங்கள் காதல் எங்கே என்று ….
துரோகம் நம்மை பிரிக்கின்றது என்று அவனுக்கு தெரியுமா?
மனக்கசப்பு  நம்மை பிரிக்கின்றது என்று அவனுக்கு தெரியுமா?
புரிந்துணர்வு இல்லாமை நம்மை பிரிக்கின்றது என்று  தெரியுமா?
ஆனால் இதயத்தில் காதல் என்றும் ஒளிரும் என்று சந்திரனுக்கு தெரியும் …

என் இதயம் காலியாக உள்ளது
நான் உன்னை இன்னும் நேசிக்கிறேன்
என்னை முழுமையாக்கினாய் நீ
உன்னை நினைத்து கசப்புடன் அழுகிறேன்
ஒவ்வொரு அடியும் உன்னை நினைக்கிறேன்
ஒவ்வொரு நொடியும் என் ஆழமான காயம்
நினைவூட்டும் உன் உறவை….
 ஆனால் இதயத்தில் காதல் ஒளிரும் என்றும்…

"நேசித்தேன், நம்பினேன், பிரிந்தேன் "


"LOVE FAILURE IS NOT LIFE FAILURE"   . THIS IS MY MOTTO FOR MY LIFE...

THANK YOU KG TEAM and GTC  FOR THIS OPPORTUNITY.

WITH LOVE
YOUR SANJU

November 14, 2022, 05:07:37 am
1
Re: கவிதையும் கானமும்-011 பள்ளிக் காலம்

பள்ளிக் காலம் மிக சிறந்த  காலம்
பெரியவர்கள் அதை என்னிடம் பகிர்ந்த பொழுது
மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அன்று
ஆனால் அவர்களுக்கும் சரியாகத் தெரியவில்லை
பள்ளிக்குச் செல்லவிரும்பும் நான்
புத்திசாலியாக மாறுவேன் என்று…(smile)

அப்போது நான் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்
எனது ஆசிரியர் என்னை சரியான நேரத்தில் பார்க்க விரும்புவார்
சற்று தாமதம் என்றாலே முகத்தை சுழிப்பார்
அவர் அன்பும் நட்பும் முகத்தில் தெரியும்
வகுப்பில் தூங்குவேன் அதையும் பொருட்படுத்த மாட்டார்
என் ஆசான் குறுஞ்சிகண்ணன்…

நீங்கள் கணிதம் செய்ய வேண்டும்,எழுத வேண்டும், படிக்க வேண்டும்
என கூறும் அறிவுரையை நான் சற்று நினைத்து பார்க்கிறேன் இன்று
வீட்டுப்பாடம் எப்போதும் இருக்கும்
ஆனால் அதை நான் கண்டுகொள்வதில்லை
தோழி தோழருடன் விளையாடுவதே எனது சந்தோசம்
அதை விட வேறு என்ன சுகம் இந்த உலகில்
அதனால் திட்டு வாங்கும் போது நான்
அன்று என் மனதில் எண்ணியது ஒன்றே ஒன்று
"நான் மருத்துவராகும் வரை காத்திருங்கள்!" என்று...


எப்போதும் என் நினைவில் இருக்கும் அந்த பள்ளிக் காலம்
ஆனால் காலம் செய்த கோலமோ
விதி செய்த துரோகமோ
இல்லை போர் செய்த கொடுமையோ
இடையிலே நாட்டை விட்டு பள்ளியை விட்டு பிரிய நேர்ந்தது
தொலை தூரத்தில் மீண்டும் வேறு மொழியில் கற்க நேர்ந்தது…


அதிகமாக பயிற்சி செய்து கற்றுக்கொண்டேன்
அனைத்து ஆசையும் நிறைவேறியது
ஆனால் அந்த பள்ளிக்கால சந்தோசம்
என்றுமே திரும்ப வரவில்லை
வரவும் வராது என உணர்ந்தேன்
பள்ளிக் காலம் மிக சிறந்த  காலம் என உணர்ந்தேன்
இன்றும் உணருகிறேன்….




THANK YOU KG TEAM and GTC  FOR THIS OPPORTUNITY.

WITH LOVE
YOUR SANJU

November 30, 2022, 09:49:20 am
1
Re: கவிதையும் கானமும்-012 "வா நண்பனே !
வயலுக்கு செல்லலாம் !
சேற்றில் கால் வைத்து
நாம் விவசாயம் செய்யலாம் !
நாற்று நடவு செய்து
மக்களின் உணவை அறுவடை செய்யலாம்!!"

"படித்து, படித்து பட்டதாரி ஆகி
வெளிநாடு சென்ற காலம் போகட்டும்!!
மறந்து, மறந்து தாய்நாட்டை மறந்து
விவசாயத்தை மறந்த காலம் மறையட்டும்!!
இனி உள்ளூரிலேயே உழைத்திடுவோம்,
உழவன் என்று சொல்லி நம் நெஞ்சை நிமிர்த்திடுவோம்!!
நம் நாகரீகங்களின் புதுமையை மறந்து
விவசாயத்தின் பெருமையை உணர்ந்திடுவோம்!!
நம் நாட்டை விவசாயம் செய்து வளர்த்திடுவோம்!!"

"இளைஞர் கூட்டம் இணைந்துவிட்டால்
இன்பம் எங்கும் பரவி நிற்குமே!!
வாலிபர் கூட்டம் வயலில் நடந்தால்
வறண்ட நிலமும் பசுமை காணுமே!!"

"வானம் பார்த்து
ஏறு பூட்டி
விதை விதைத்து
முப்போகம்
விளைச்சல்யென்று
விவசாயம் பார்த்து
தலை நிமிர்ந்து
நடந்து சென்றான்
விவசாயி... ம்ம்
அது அந்த காலம்...!!"

"ஏர் ஓட்டம் இல்லையென்றால்
தேர் ஓட்டம் இல்லை என்பதை
எல்லோரும் நினைவில் வைத்து
நாட்டின் விவசாயத்தை
பாதுகாக்க சபதம் கொள்வோம்!!"

December 15, 2022, 12:12:18 pm
1
FEEDBACKS AND EXPERIENCES 💙 FEEDBACKS AND EXPERIENCES 💙





Dear Friends,

Global Tamil CHAT  2.0 will celebrate its 1. Anniversary. GTC CHAT has decided to give  GTC FRIENDS an opportunity to express their experiences and feedbacks . All friends get a chance to share their feedbacks and experiences in this thread.....We name this thread as “EXPRESS YOUR EXPERIENCES AND FEEDBACK".

Let GTC bind us further in our journey of friendship.
------------------------------------------------------------------

HOW TO EXPRESS?
- All FRIENDS may express their experiences in our GTC CHAT ROOM and give their Feedback on GTC CHAT.
-Every post should be minimum 10 lines.
- FREINDS can express in Tamil or English.




அன்பிற்குரிய நண்பர்களே,

GLOBAL TAMIL CHAT 2.0 அதன் முதலாவது ஆண்டு விழாவைக் கொண்டாட இருகின்றது. GTC CHAT ஆனது GTC நண்பர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தொடரிழையில் அனைத்து நண்பர்களும் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள்..... இந்த தொடருக்கு "உங்கள் அனுபவங்களையும் கருத்தையும் வெளிப்படுத்துங்கள்" என்று நாங்கள் பெயரிடுகிறோம்.

எங்கள் நட்பு பயணத்தில் GTC நம்மை மேலும் இணைக்கட்டும்.


எப்படி வெளிப்படுத்துவது?
- அனைத்து நண்பர்களும் எங்கள் ஜிடிசி அரட்டை அறையில் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தலாம் மற்றும் ஜிடிசி அரட்டையில் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

-ஒவ்வொரு இடுகையும் குறைந்தது 10 வரிகள் இருக்க வேண்டும்.

- நண்பர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வெளிப்படுத்தலாம்.


January 08, 2023, 12:32:30 pm
1
Re: Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்) 8.01.2023:

MY FEEDBACK:

-- AS ALLWAYS SEMA PRESENTATION RJ RJIA SIS--AMAZING VOICE ;D

-- ALL POETS WERE REALLY AMAZING.KEEP ROCKING FRIENDS....

-- VERA LEVEL EDITING DEAR COFFEE BOY BOSS

--WAITING FOR NEXT TOPIC!!!

January 15, 2023, 04:11:24 pm
1
Program Feedback -பின்னூட்டங்கள் ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS)









January 16, 2023, 05:39:14 am
6
Re: PROGRAM FEEDBACK ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS)









January 16, 2023, 05:45:49 am
1