General Category > Jokes - நகைச்சுவை

தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு

<< < (2/9) > >>

AslaN:


அமலா : பைனான்ஸ் கம்பெனிக்காரரைக் காதலிச்சது தப்பாய் போச்சு!

விமலா : ஏன்?

அமலா : எங்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் ஓடிப் போய் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறார்.

AslaN:

அமலா : என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!
விமலா : இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்.



AslaN:

அமலா : என்னடி, நீ வேலைக்காரி சேலையைப் போய் கட்டியிருக்க?
விமலா : அப்பத்தான்டி என் புருசன் ஏறெடுத்தே என்னைப் பாக்குறாரு.


AslaN:


அமலா : பத்திரிக்கை ஆசிரியருக்கு காதல் கடிதம் அனுப்பியது தப்பாப் போச்சு.
விமலா : ஏன் ?
அமலா : பத்திரிக்கையில பிரசுரம் பண்ணிட்டு, சன்மானம் அனுப்பிட்டார்


AslaN:

அமலா : வாசல்ல நின்னுக்கிட்டுதான் என் மாமியார் என்கூட சண்டை போடுவாங்க
விமலா : ஏன்?
அமலா : அப்பதான் ஜெயிக்க முடியும்னு அவுங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்ல சொன்னாங்களாம்.



Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version