Advanced Search

Author Topic: புன்னைவனத்து பூச்செடி  (Read 99 times)

September 02, 2026, 11:09:44 pm
Read 99 times

CRaNKY

புன்னைவனத்து பூச்செடி
« on: September 02, 2026, 11:09:44 pm »
என் தனிமையை
எனக்கு தந்துவிடு..

யாரும் இசைக்காகத புல்லாங்குழல்,
புயல் காற்று புகுந்து,
புது இராகம் இசைப்பது போல்.
என் ஏகாந்தத்தின் இருண்ட பக்கத்தை
நீ ஏதேதோ செய்கிறாய்!.

பனித்துளி விழுந்து,
எரிமலை வெடிப்பது போல்.
உன் பார்வை பட்ட
இதயக்கூட்டில் திராவக குமிழிகள்.

எனக்குள் என்னை புதைத்து
என்னோடு நான் வாழ்ந்த,
அந்த ஆமை கூடே
எனக்கு அமைதி..!

என் தனிமையை
எனக்கு தந்துவிடு!

அரவம் இல்லா கடல்
மிதக்கும் நட்சத்திரங்கள்
மேய நினைக்கும் மினாய்,
என் தனிமை எங்கும்
உன் நினைவுகளோடு
முட்டி முட்டி மூர்ச்சையாகிறேன்!

என் தனிமையை
எனக்கு தந்துவிடு,
அல்லது என்னௌடு நீயும் வந்துவிடு..


              CRaNK