Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-073  (Read 1944 times)

August 24, 2026, 06:44:28 pm
Read 1944 times

RiJiA

கவிதையும் கானமும்-073
« on: August 24, 2026, 06:44:28 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-073


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: August 24, 2026, 07:51:23 pm by RiJiA »

August 24, 2026, 11:50:38 pm
Reply #1

ChuttiGurl

Re: கவிதையும் கானமும்-073
« Reply #1 on: August 24, 2026, 11:50:38 pm »
♥️ வாழ்க்கையில் இசை ♥️

இசை வெறும் ஓசையாகக் கேட்பது மட்டுமல்ல,
அது இதயத்தைத் தொடும் ஓர் உணர்வு.

சோகம் வந்து நம்மைத் தீண்டும் போது,
இசை நம்மை அமைதிப்படுத்தும் துணையாகும்.
தனிமை நம்மோடு இருக்கும் போது,

மெல்லிசை நம்மைப் புரிந்துகொள்ளும் நண்பனாகும்.
மகிழ்ச்சி நம் மனதை நிரப்பும் போது,
இசையும் நம் புன்னகையுடன் சேர்ந்து பாடும்.

கண்ணீர் மெதுவாக விழும் போது,
ஒரு பாடல் நம் மனதைத் தேற்றி,
மீண்டும் புன்னகைக்க வைக்கும்.

சில பாடல்கள் நினைவுகளை உயிர்ப்பிக்கும்,
சில பாடல்கள் ஒருவரை நினைவுபடுத்தும்,

சில பாடல்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத
நம் காயங்களையும் புரிந்துகொள்ளும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்
எழுதப்படும் ஒரு பாடலைப் போன்றது.

சில நாட்கள் இனிமையான மெல்லிசை போல இருக்கும்,
சில நாட்கள் சோகமான இசை போலக் கடினமாக இருக்கும்.
ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திற்கும்
அதற்கென்று ஒரு தனி இசை இருக்கும்.
அதனால்,

இசை காதுகளால் கேட்பதற்கு மட்டுமல்ல,
இதயத்தால் உணர்வதற்கும்.
இசை என்பது
சொல்ல முடியாத உணர்வுகளுக்கு ஒரு மொழி,

மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு பயணத்திலும்
நம்மோடு வரும் ஓர் அழகான துணை.
ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு பாடல் உண்டு,

அதில் மகிழ்ச்சியும் உண்டு, சோகமும் உண்டு,
மறக்க நினைக்கும் சில நினைவுகளும் உண்டு.
ஆனால் அவையும் இசையின் அலையில்
எப்போதும் பதிவாகியே இருக்கும்.

எனென்றால், இசை வெறும் கேட்பதற்காக மட்டுமல்ல,
இதயத்தால் உணர்வதற்காக.
அது நம் ஒவ்வொரு அடி பயணத்திலும் துணையாக இருந்து,
வாழ்க்கையின் அழகான பின்னணி இசையாக மாறும்.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத
உணர்வுகளையும் நிறைக்கும்.
இதுதான் வாழ்க்கையில் இசையின் அர்த்தம்…

எப்போதும் நம்மோடு இருக்கும் ஒரு துணை,
ஒவ்வொரு மகிழ்ச்சியிலும்,
ஒவ்வொரு கண்ணீரிலும்,
ஒவ்வொரு வாழ்க்கைக் கதையிலும்… 🎶❤️
« Last Edit: August 25, 2026, 12:00:00 am by ChuttiGurl »
🤓Nan ungal chutti🤓

August 25, 2026, 01:06:41 am
Reply #2

AzhaGi

Re: கவிதையும் கானமும்-073
« Reply #2 on: August 25, 2026, 01:06:41 am »
இசை எனும் மருந்து

ஒரு சிறு குமிழிக்குள்
மறைந்திருந்தது ஓர் அதிசயம்,
மருந்தென்று நினைத்து திறந்தபோது,
அதிலிருந்து பிறந்தது இசையுலகம்...

வலிக்கும் உள்ளத்திற்கு மருந்தும் இசைதான்,
வாடும் மனதிற்கு துணையும் இசைதான்,
மௌனத்தில் தவிக்கும் உயிர்களுக்கு
மெட்டாய் வருவதும் இசை தான்...

சிவப்பில் ஒரு தாளம்,
நீலத்தில் ஒரு மென்மையான ராகம்,
இரண்டும் இணைந்தபோது,
பிறந்தது இனிமையான கானம்...

அமைதியான இரவின் மடியில்,
மௌனத்தை கலைக்கும் மெட்டாக,
வானத்தை நோக்கிப் பறக்கின்றன
இசையின் இனிய குறியீடுகள்...

வானத்தை நோக்கிப் பறக்கும்
ஒவ்வொரு இசைக் குறியீடும்,
இதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும்
ஆயிரம் உணர்வுகளை எழுப்பும்…

சில ராகங்கள் நினைவுகளைத் தருகின்றன,
சில மெட்டுகள் கண்ணீரைத் தருகின்றன,
சில பாடல்கள் சிரிப்பைத் தருகின்றன,
சில இசைகள் நம்மையே மாற்றுகின்றன,
சில கானங்கள் புதிய கனவுகளை விதைக்கின்றன…

வார்த்தைகள் சொல்ல முடியாததை,
ஒரு சிறு ராகம் சொல்லிவிடும்...
உள்ளம் மறைத்த உணர்வுகளை,
ஒரு இனிய மெட்டு வெளிப்படுத்திவிடும்...

வாழ்க்கை சில நேரம்
கசப்பான மருந்து,
ஆனால் இசை அதற்குள் இருக்கும்
இனிமையான தேன்...

இதயம் சோர்ந்து போகும் நேரத்தில்,
இசைதான் மீண்டும் நம்மை எழுப்பும்,
உயிர் தளர்ந்து போகும் தருணத்தில்,
ராகமாய் வந்து நம்மைத் தழுவும்...

ஒரு சிறு குமிழி திறந்தது,
அதிலிருந்து ஓர் இனிய கானம் பிறந்தது...
இசை இருக்கும் இடமெல்லாம்,
இதயமும் உயிரோடு துடித்துக்கொண்டே இருக்கும்...

ஏனெனில்...
இசை என்பது வெறும் ஒலி அல்ல,
உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும்
ஒரு இனிய மருந்து!!!

« Last Edit: August 25, 2026, 01:19:06 am by AzhaGi »

August 25, 2026, 01:55:17 am
Reply #3

MDU

Re: கவிதையும் கானமும்-073
« Reply #3 on: August 25, 2026, 01:55:17 am »
💊🎶 இசை – மனதின் மருந்து


கலங்கிய மனதை அமைதிப்படுத்தும் மருந்து இசை,
சிதறிய எண்ணங்களைச் சீராக்கும் இனிய தாளம் இசை.

சில நேரங்களில் சோகத்தின் நிழல் நெருங்கும்,
சில நேரங்களில் சந்தோஷத்தின் ஒளி மலரும்.
இரண்டும் கலந்து வாழ்வின் ஓவியம்,
இசை அதற்கு வண்ணம் தீட்டும்.

மருந்து உடலை காக்கும் காவலன்,
இசை உள்ளம் தழுவும் தோழன்.
சோகத்தை கரைக்கும் இசை,
சந்தோஷத்தை பெருக்கும் இசை.

மருந்து வலி தணிக்கும் சக்தி,
இசை துயரம் கரைக்கும் முத்தி.
இரண்டும் சேர்ந்து நிற்க,
வாழ்வு தோட்டம் மலர்ந்து நிற்க.

சில நேரங்களில் ஒரு மாத்திரை போதும் உடல் நலம் பெற,
பல நேரங்களில் ஒரு இனிய பாடல் போதும் மனம் நிம்மதி பெற.

சோகத்தின் கண்ணீர் வழிந்தாலும்,
இசை அதை துடைக்கும் மென்மையான கையை தரும்.
சந்தோஷத்தின் சிரிப்பு மலர்ந்தாலும்,
இசை அதை இன்னும் இனிமையாய் ஒலிக்கச் செய்யும்.

மருந்து உடலுக்கான நிவாரணம்,
இசை மனதுக்கான நிம்மதி.
இரண்டும் இருக்கும் வரை,
வாழ்க்கை சோகத்திலும் சந்தோஷத்திலும் மலர்ந்து நிற்கும்.

வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருப்பதில்லை,
ஆனால் இனிமையான இசை இருக்கும் வரை,
எந்த வலியும் நம் மனதை முழுமையாக வெல்லாது.

மருந்து சோர்வை கரைக்கும், இசை மனதை மலர்க்கும்,
மருந்து உயிரின் காவலன், இசை ஆன்மாவின் தோழன்.
மருந்து உடலை மலர்க்கும், இசை உள்ளத்தை மலர்க்கும்,
இரண்டும் சேர்ந்து நிற்க, வாழ்வு தோட்டம் மலர்ந்து நிற்க.

மருந்து உடலுக்கான நிவாரணம்,
இசை மனதுக்கான நிம்மதி…
இவை இரண்டும் இருக்கும் வரை வாழ்க்கையின்,
வலிகளுக்கிடையிலும் இனிமையை ரசித்துக்கொண்டே இருப்பேன்.

சொல்ல முடியாத வலிகளுக்கான மொழி,
நிம்மதியைத் தேடும் இதயத்திற்கான இனிய மருந்து.
மனதில் சோகமே நெருங்க முடியாது  ஏன் என்றால்,
இசை எனக்கு மருந்தாய் நிற்கிறது.
« Last Edit: August 25, 2026, 02:00:30 am by MDU »

August 25, 2026, 07:47:35 am
Reply #4

Kannaa

Re: கவிதையும் கானமும்-073
« Reply #4 on: August 25, 2026, 07:47:35 am »
இசை பிறந்தது…
ஆனால் என் மனதில் மட்டும் அமைதி இல்லை… 🎶

ஒருகாலத்தில் உன் குரல்,
எனக்கு பிடித்த பாடலாக இருந்தது…

இன்று அதே குரல் நினைவானதும்,
என் இதயம் மௌனமாகிவிடுகிறது…

உன்னுடன் கேட்ட பாடல்கள் எல்லாம்,
இப்போது தனிமையில் என்னைத் தேற்றுகின்றன…

மெட்டுகள் மாறவில்லை,
ஆனால் கேட்கும் மனது தான் மாறிவிட்டது…

நீ விட்டுச் சென்ற இடத்தில்,
இன்னும் என் நினைவுகள் மட்டும் வாழ்கின்றன…

காதல் தோல்வியடைந்ததா தெரியவில்லை,
ஆனால் நான் மட்டும் தோற்றுவிட்டேன்…

உன்னை மறக்க முயன்ற ஒவ்வொரு இரவும்,
உன்னை இன்னும் அதிகமாக நினைக்க வைத்தது…

கடைசியில் புரிந்தது…
சில காதல்கள் முடிவதில்லை,
நம்மோடு வாழாமல்… நம்முள் மட்டும் வாழ்கின்றன… ❤️‍🩹

உன்னைப் பற்றிய நினைவுகள் மட்டும்,
என் இரவுகளுக்கு துணையாகிவிட்டது…

பேச முடியாத வார்த்தைகள் எல்லாம்,
இன்று இசையாக மனதில் ஒலிக்கிறது…

நீ இல்லாத வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும்,
உன்னை இல்லாமல் வாழ மனம் பழகவில்லை…

சில நேரம் பாடல்கள் கூட,
உன்னைப் போலவே காயப்படுத்துகின்றன…

மறக்க வேண்டும் என்ற ஆசையும்,
நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற மனமும்…
இரண்டுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டது,
நான் மட்டும் தான்…

ஆனாலும் ஒவ்வொரு இரவும்,
அந்த இசையை மீண்டும் கேட்கிறேன்…
ஏனென்றால் அந்த இசையில் நீ இல்லை என்றாலும்,
உன்னோடு இருந்த நான் இன்னும் இருக்கிறேன்… ❤️‍🩹

August 25, 2026, 08:02:41 am
Reply #5
Re: கவிதையும் கானமும்-073
« Reply #5 on: August 25, 2026, 08:02:41 am »
சுரங்கள் சுமந்த மருந்து 🎶❤️

மாத்திரை திறந்த அந்த நொடியிலே
மௌனங்கள் ராகமாய் மலர்ந்தது,
மெல்லிசை மீட்டும் மாயச்சிறகில்
மனமோ வானில் பறந்தது....

சிவந்த உணர்வின் சுடரொளி வந்து
சோகத்தின் நிழலைச் சுட்டது,
நீல வானின் நிம்மதி வந்து
நெஞ்சினில் பூவாய் மலர்ந்தது...

மாத்திரை திறந்த மாய நொடியே
நாதங்கள் சிறகுகள் விரித்தது,
மனத்தின் மூலை முடுக்கெல்லாம்
இசைமழை வந்து நிறைந்தது!

வலியின் வழியில் விழுந்த கண்ணீர்
வரியாய் இன்று மாறியது,
வருத்தம் கொண்ட மனக்கதவும்
ராகம் கேட்டு திறந்தது.

மருந்தென்று நினைத்தேன் —
மந்திரமாக மாறியது,
மனதைத் தொட்ட இசைத்துளியே
மறுபிறவி தந்தது!

ஒவ்வொரு சுரமும் ஒளிமாத்திரை,
உயிருக்கு ஊற்றாய் சேர்ந்தது,
ஒவ்வொரு தாளமும் தாய்க்கரம் போல்
உள்ளத்தைத் தாலாட்டியது.

காதில் விழுந்த கானம் ஒன்று
கவலைகளைக் களவாடியது,
காயம் பட்ட இதயத்திற்குள்
கனவுகளை விதைத்தது.

இருளில் இருந்த என் உள்ளமெல்லாம்
இசையால் இன்பம் கண்டது,
இமைக்கும் நேரம் இசையாய் மாறி,
இதயம் பூவாய் மலர்ந்தது.

உடலின் நோய்க்கு மருந்து உண்டு,
உள்ளத்தின் நோய்க்கு என்ன உண்டு?
உடைந்த மனதை ஒன்றாய் சேர்க்கும்
உயிர்மருந்தாய் இசை உண்டு!

எத்தனை நாளாய் ஏங்கி நின்ற
எண்ணங்கள் எல்லாம் உருகியது,
ஒரே ஒரு ராகம் போதுமே —
உடைந்த மனமும் உயிர்த்திடவே!

மாத்திரை தீரும் நேரம் உண்டு,
மருந்தும் தீர்ந்து போகலாம்,
மனதில் பதிந்த கானம் ஒன்று
மறையாமல் என்றும் வாழலாம்!

வாழ்க்கை எனும் வழிப்பயணத்தில்
வலிகள் ஆயிரம் வந்தாலும்,
வானம் போல விரிந்த இசை
வழித்துணையாய் நிற்கும் நாளெல்லாம்!

இயற்கை தந்த இனிய மருந்து —
இசை எனும் அந்த மாத்திரை,
இதயம் இருக்கும் வரையிலுமே
இன்பம் தரும் உயிர்மாத்திரை!
« Last Edit: August 25, 2026, 09:35:34 am by YaazhVeena »

August 25, 2026, 08:05:03 am
Reply #6

Thavasi

Re: கவிதையும் கானமும்-073
« Reply #6 on: August 25, 2026, 08:05:03 am »
❤️‍ராகமாகிப் போன காதல்

ஒரு மாத்திரைக்குள்
எத்தனை ராகங்கள் இருக்க முடியும் என்று
அன்றுதான் தெரிந்தது...

உடலுக்கு மருந்தாக வந்தது,
மனதுக்கு இசையாகிப் போனது.

காதல் தோல்வி
ஒரு நோயென்றால்,
அதற்கு மருந்து தேடினேன்...

கிடைத்ததெல்லாம்
உன்னை நினைவுபடுத்தும்
பாடல்கள்தான்.

நீ போன பிறகு
என் அறையில் இருக்கும் அமைதிக்கும்
ஒரு சத்தம் வந்துவிட்டது...

அது—
நம் காதல் முடிந்துவிட்டது
என்று தினமும் சொல்லும்
ஒரு மெல்லிய ராகம்.

ஒரு காலத்தில்
நீ சிரித்தால் இசை கேட்டது;
இப்போது
நீ நினைவுக்கு வந்தாலே
இசை கேட்கிறது.

காதல் தோல்வி
என்னை அழவைக்கவில்லை...

அழுகையை
இசையாகக் கேட்கக் கற்றுக் கொடுத்தது.

நான் மறக்க நினைத்த
ஒவ்வொரு நினைவும்
ஒரு பாடலாகி விட்டது...

நான் புதைக்க நினைத்த
ஒவ்வொரு வலியும்
ஒரு வரியாகி விட்டது...

நீ இல்லாத வாழ்க்கை
வெறுமையாக இல்லை...

நீ விட்டுச் சென்ற
நினைவுகளால்
நிரம்பி வழிகிறது.

சில மனிதர்கள்
நம் வாழ்க்கையில்
வசிப்பதில்லை...

அவர்கள் போன பிறகுதான்
நம் வாழ்க்கையின்
ஒவ்வொரு மூலையிலும்
அவர்கள் இருப்பது தெரிகிறது.

நீயும் அப்படித்தான்...

என் அருகில் இல்லை;
ஆனால்
என் காதுகளில் ஒலிக்கும்
ஒவ்வொரு ராகத்திலும் இருக்கிறாய்.

அதனால்தான்
இசையை நான் கேட்பதில்லை...

இசைக்குள்
உன்னைத் தேடுகிறேன்.

கிடைத்தால்
அது ஒரு பாடல்...

கிடைக்கவில்லை என்றால்
அது ஒரு கவிதை...

இரண்டிலும்
நான் மட்டும் இருக்கிறேன்—
நம் காதலை
இன்னும் உயிரோடு வைத்துக்கொண்டு.

காதல் முடிந்த இடத்தில்
இசை தொடங்குகிறது...
இசை முடிந்த இடத்திலோ
உன் நினைவு தொடங்குகிறது.

அதனால்தான்
என் வாழ்க்கைக்கு
முடிவு என்ற வார்த்தை இல்லை...

நீ விட்டுச் சென்ற காதல்
இன்னும் என் உள்ளத்தில்
முடிவில்லாத ராகமாக
ஒலித்துக்கொண்டிருக்கிறது...

இப்படிக்கு ........ தவசி ️
« Last Edit: August 25, 2026, 08:23:47 am by Thavasi »

August 25, 2026, 09:14:33 am
Reply #7

Crowny

Re: கவிதையும் கானமும்-073
« Reply #7 on: August 25, 2026, 09:14:33 am »
          இசை மாத்திரை

உடலுக்கு ஒரு காயம் என்றால்
மருத்துவரின் மாத்திரை போதும்...
ஆனால், உள்ளத்திற்கு ஒரு காயம்
 என்றால் என்ன செய்வது? அங்கேயே
பிறக்கிறது இசையின் தேவை!

சொற்கள் தோற்கும் இடத்தில் சங்கீதம்
பேசுகிறது... வலிகள் கூடும் இடத்தில்
இசை மருந்தாக மாறுகிறது.

ஆறுதல் அற்ற பல நேரங்களில்...
தோலோடு தோல் கொடுத்த இசையே...
உன் வார்த்தைகள் வெறும் இசையல்ல..
எனது இதயத்திற்கே ஒரு மருந்து......
மருத்துவர் தரும் மாத்திரைகள்
உடலின் நோயை மட்டுமே தீர்க்கும்......
 இசை என்னும் மாத்திரையோ ....       
உயிரின் வலியையும் மெல்ல ஆற்றும்.

ஆறுதல் வார்த்தையின்றி,,,
பேச யாருமின்றி,,,
இரவோடு உறக்கத்தில் உறங்க முடியாமல்
 தவிக்கும் இதயத்திற்கு தெரியும்...
அந்த இசையின் ஒவ்வொரு வார்த்தையும் ஆறுதலும்....
என் தனிமைக்கு இசை மட்டும் இல்லையெனில்.....
 என்றோ நான் மனநோயாளி ஆக மாறி இருப்பேன்....

அமைதியாய் என் மனம் GTC குள்ளே நுழைந்தது...
இசையில் மடியில் தவழ....
என் உறங்காத இரவுகளை  கழிக்க.....
மௌனமாய் சாய்ந்துகொண்டேன்....
இயர்போன் ஐ அணிந்து கொண்டேன்...
பாடலை கேட்டுக்கொண்டே,   
 கண்களை மூடிக்கொண்டேன்!             
வெளி உலகச் சத்தமெல்லாம்.     
 வெளியிலேயே நிற்கட்டும்...                         
என் இதயத்தின் தனிமையிலே.       
 இசை மழை மட்டும் பொழியட்டும்!   

  வலிகள் தந்த நினைவுகளும்.           
வழியை விட்டு விலகட்டும்...       
 இசை தந்த மாத்திரையில்.                   
மனசும் மெல்ல ஆறட்டும்!
காலமும் நொடியும் உறையட்டும்,
 கவலைகள் காற்றாய் கரையட்டும்... 
 இசை என்னும் பேரலைக்குள்.                     
என் ஆயுள் வரை அமைதி தொடரட்டும்!
மருந்தென ஒன்று மாத்திரையில் இருந்தால்.....     
 அதன் பெயர் ‘இசை’ என எழுதலாம்!
மருத்துவக் கூடமும் தேவையில்லை.
 இசை வெள்ளத்தில் நாமும் மூழ்கலாம்!

கவலையின் சுவடுகள் கரைந்து போகும்,
கண்ணீரின் துளிகளும் மறைந்து போகும்!
காற்றில் மிதக்கும் (g)கானத்திலே.         
  ஆயுள் வரை நிம்மதி நிலைத்து வாழும்!...
இது இசையில் தொலைந்த மனம்...
இசையோடு இணைந்து வலியை
மறைக்க நினைத்த மனம்.....
துடிக்க மறுக்கும் இதயத்தை ..
இசையாக வந்து மருந்தாக இருந்த இசையே....
உன்னை நான் மீண்டும் சந்திக்க வருகிறேன்....
என் உறங்காத இரவில்....  💚

August 25, 2026, 09:39:26 am
Reply #8

Shahidm

Re: கவிதையும் கானமும்-073
« Reply #8 on: August 25, 2026, 09:39:26 am »
இயற்கையின் மேடையில் இசை :


இசை என்பது உயிரின் மருந்து, 
இதயம் துடிக்கும் ஒவ்வொரு தாளமும், 
காதல் குரல் போல நம் உள்ளத்தில் ஒலிக்கும், 
நட்பின் சிரிப்பு போல நம் வாழ்வை நிறைக்கும். 

மரங்களின் நிழலில் பாடும் பறவைகள், 
அவை நம் நட்பின் சிரிப்பைப் போல, 
மழைத்துளி விழும் தருணத்தில், 
வீணையின் ஓசை போல காதல் மலரும். 

காற்றின் சலசலப்பில் புல்லாங்குழல், 
நதி ஓசையில் தபேலா, 
சூரியன் ஒளியில் கிதார், 
நிலவின் மென்மையில் பியானோ
இயற்கையே ஒரு இசைக்கருவி. 

நட்பு என்பது சங்கீதத்தின் ராகம், 
காதல் என்பது அந்த ராகத்தின் தாளம், 
இயற்கை என்பது மேடை, 
இசை என்பது அந்த மேடையின் உயிர். 

இசை நம் கண்ணீரை கவிதையாக்கும், 
இசை நம் சிரிப்பை வானவில் ஆக்கும், 
இசை நம் தனிமையை தோழனாக்கும், 
இசை நம் காதலை நித்தியமாக்கும். 

மலரின் மணம் போல பரவும் பாசம், 
காற்றின் ஓசை போல பறக்கும் நினைவுகள், 
நதி ஓசை போல ஓடும் சிரிப்பு, 
சூரியன் ஒளியில் மலரும் காதல், 
நிலவின் மென்மையில் பகிரும் ரகசியங்கள். 

இசை, காதல், நட்பு, இயற்கை
அனைத்தும் ஒன்றாகக் கலந்தால், 
உலகமே ஒரு கவிதை, 
வாழ்க்கையே ஒரு கானம். 

நட்பு நம் வாழ்வின் சிரிப்பு, 
காதல் நம் இதயத்தின் துடிப்பு, 
இயற்கை நம் ஆன்மாவின் சாந்தி, 
இசை நம் உயிரின் சுவாசம். 

இசை இல்லாமல் காதல் முழுமையில்லை, 
காதல் இல்லாமல் நட்பு இனிமையில்லை, 
நட்பு இல்லாமல் இயற்கை அழகில்லை, 
இயற்கை இல்லாமல் இசை உயிரில்லை. 

இவை அனைத்தும் சேர்ந்து, 
நம் வாழ்வை ஒரு கவிதை போல, 
நம் ஆன்மாவை ஒரு இசை போல, 
நம் உலகை ஒரு கனவு போல அழகாக்குகின்றன....


என்றும் அன்புடன் ஷாஹித்
« Last Edit: August 25, 2026, 09:42:18 am by Shahidm »

August 25, 2026, 01:23:39 pm
Reply #9

Wings

Re: கவிதையும் கானமும்-073
« Reply #9 on: August 25, 2026, 01:23:39 pm »
என் மனம் பேசும் இசை

எப்போது இசை
எனக்குள் ஒரு உயிராய் கலந்தது என்று
எனக்குத் தெரியவில்லை…

வார்த்தைகளுக்கு முன்னால்,
என் மனதின் மொழியாக
இசை வந்திருந்தது.

நான் பேச மறந்த உணர்வுகளை,
என் விழிகள் மறைத்த ரகசியங்களை,
இசை மட்டும் அழகாக அறிந்திருந்தது.

மனம் சோகத்தில் நனைந்தால்,
ஒரு மெல்லிசை போதும்—
என்னை நானே தேடுவதற்கு.

மனம் பாரமான போது,
“என்ன ஆனது?” என்று
இசை கேட்பதில்லை…

என் அருகில் அமைதியாக அமர்ந்து,
என் மௌனத்தையே
ஒரு மொழியாகப் படிக்கிறது.

சந்தோஷம் வந்தால்,
என் சிரிப்புக்குத் தாளம் போடுகிறது.

உலகம் சத்தமாக மாறும்போது,
என் மனதுக்குள் மட்டும்
ஒரு சிறு அமைதித் தீவை
இசை உருவாக்குகிறது.

தனிமை வந்து
என் அருகில் அமரும்போது,
இசை மட்டும்
என்னைத் தனியாக விடாமல்
துணையாக இருக்கிறது.

ஒரு பாடல்…

அது வெறும் பாடல் அல்ல.

ஒரு முகத்தை நினைவுபடுத்தும்,
ஒரு இடத்தை மீண்டும் பார்க்க வைக்கும்,
மறந்து போன ஒரு காலத்தை
மீண்டும் கையில் கொண்டு வந்து கொடுக்கும்
ஒரு சிறு நினைவுப் பெட்டி.

சில நேரம்
இசை காதலைப் பேசும்.

உதடுகள் சொல்லத் தயங்கும்
வார்த்தைகளுக்கு
அது மெட்டாகும்.

சொல்லத் துடிக்கும் மனதை
சொல்லாமல் புரிந்துகொள்ளும்
ஒரு அழகிய வழி—
இசை.

சில நேரம்
அது அமைதி.

சில நேரம்
அது சந்தோஷம்.

சில நேரம்
கண்ணீருக்கும் கூட
ஒரு இடம் கொடுக்கும்
மெல்லிய துணை.

வலியை அழிக்க
இசையால் முடியாமல் இருக்கலாம்…

ஆனால்,
அந்த வலியைச் சுமக்கும்
மனதுக்கு
கொஞ்சம் பலம் கொடுக்க
அதற்குத் தெரியும்.

என்னைப் பலமாக நடிக்கச் சொல்லாது.

என் சோகத்தையும்,
என் சந்தோஷத்தையும்,
என் காதலையும்,
என் மௌனத்தையும்—

எல்லாவற்றையும்
அப்படியே ஏற்றுக்கொள்ளும்.

அதனால்தான்
இசையை நான் நேசிக்கிறேன்.

ஏனென்றால்…

இசை எனக்கு
கேட்கும் ஒரு ஒலி அல்ல.

உணரும் ஒரு உயிர்.

என் சந்தோஷத்தின் சிரிப்பு,
என் சோகத்தின் நிழல்,
என் காதலின் ரகசியம்,
என் நினைவுகளின் தாளம்,
என் மனம் தேடும் அமைதி—

எல்லாமே இசை.

சில நேரங்களில்,
ஒரு பாடலைக் கேட்கும்போது,
எனக்குள் ஒரு உலகமே
அமைதியில் பேசுவதை உணர்கிறேன்.

நான் கேட்பதோ
ஒரு பாடல் மட்டும்…

ஆனால் என் மனம் கேட்பதோ—

ஒரு காதல்,
ஒரு நினைவு,
ஒரு ஏக்கம்,
ஒரு சந்தோஷம்,
ஒரு கனவு…

ஆயிரம் உணர்வுகள்.

என்னால் சொல்ல முடியாத
எல்லாமே
இசையாக வெளிவருகிறது.

என் மனதுக்கு
ஒரு மொழி இருந்தால்—

அது தமிழ் அல்ல,
அது வார்த்தை அல்ல…

அது இசை.

யாராவது என்னைப் பார்த்து
“இசை உனக்கு என்ன?” என்று கேட்டால்,

நான் நீண்ட விளக்கம்
எதுவும் சொல்ல மாட்டேன்.

ஒரு சிரிப்புடன்
இப்படி மட்டும் சொல்வேன்—

**“என்னால் பேச முடியாத போது
எனக்காகப் பேசுவது இசை.

என்னால் தாங்க முடியாத போது
என்னைத் தாங்குவது இசை.

என்னால் மறக்க முடியாத
நினைவுகளைச் சுமப்பது இசை.

என் மனம் சொல்ல நினைக்கும்
எல்லாவற்றையும்
ஒரு பாடலாக மாற்றுவது இசை.”**

அதனால்…

இசை எனக்கு
வெறும் பாடல் அல்ல.

என் மனதின் குரல்.
என் மௌனத்தின் மொழி.
என் நினைவுகளின் தாளம்.
என் உயிரின் மெல்லிசை.

என் மனம்
வார்த்தைகளில் பேச முடியாத போதெல்லாம்…

இசையாகப் பேசுகிறது.