Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-072  (Read 491 times)

August 03, 2026, 06:17:32 pm
Read 491 times

RiJiA

கவிதையும் கானமும்-072
« on: August 03, 2026, 06:17:32 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-072


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.





மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: August 03, 2026, 07:35:20 pm by RiJiA »

August 03, 2026, 11:29:15 pm
Reply #1

XAUUSD_

Re: கவிதையும் கானமும்-072
« Reply #1 on: August 03, 2026, 11:29:15 pm »
சாலையோரம் தான்...
ஆனால்,
என் வாழ்க்கையின் மிக அழகான இடம் அது.
இந்த இரவுக்கு நிலவு இல்லை,
ஆனால், உன் முகம் இருந்தது.
அதனால் தான்,
என் இருள் கூட ஒளியாகி இருந்தது.
உன் நெற்றியில் என் நெற்றி சாய்ந்த அந்த நொடி,
நேரம் நின்றுபோனது.
உலகம் சத்தமிட்டது,
ஆனால், நாம் மட்டும்
காதலாக பேசிக்கொண்டிருந்தோம்.
நான் சொர்க்கம் போகவேண்டும்
என்று ஆசைப்படவில்லை.
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
சொர்க்கத்தைவிட அழகாக
தோன்றிக்கொண்டே இருந்தது.
நீ என் அருகில் இருந்தால்,
நேரம் நின்றுவிடும்...
நீ சற்றே தூரமானால்,
மனசு முழுக்க
நீ மட்டுமே நிறைந்துவிடுகிறாய்.!! 💜

August 04, 2026, 07:54:21 am
Reply #2

Ladybugs

Re: கவிதையும் கானமும்-072
« Reply #2 on: August 04, 2026, 07:54:21 am »
🌙 இரவு சாட்சியாக❤️

இரவு தன் அமைதியை போர்த்திக்கொண்டு நின்றது...
தெரு விளக்குகள் மட்டும் நம் காதலுக்கு சாட்சியாக எரிந்துகொண்டிருந்தன...
சுற்றிலும் ஆயிரம் மனிதர்கள் இருந்தாலும், அந்த நொடி மட்டும் இந்த உலகத்தில் நீயும்... நானும்... மட்டுமே இருந்தோம்.

நெற்றி நெற்றியோடு சாய்ந்த அந்த ஒரு கணம்...
வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆயிரம் உணர்வுகளை நம் இதயங்கள் அமைதியாகப் பகிர்ந்து கொண்டன.

காதல் என்பது "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று சொல்வதில் இல்லை... "நான் உன்னுடன் இருக்கிறேன்" என்று எந்த வார்த்தையும் இல்லாமல் உணர வைப்பதில்தான் இருக்கிறது.

உன் கண்களை நான் பார்க்கவில்லை... ஆனால் உன் மனதை உணர்ந்தேன்... என் கைகளை நீ இறுக்கமாகப் பிடிக்கவில்லை... ஆனால் என் உயிரை நீ என்றோ பிடித்துவிட்டாய்.

அந்த இரவின் குளிரிலும், உன் அருகாமை மட்டும் என் இதயத்திற்கு வெப்பமாக இருந்தது... உலகம் முழுவதும் மாறிவிட்டாலும், உன் அருகில் கழியும் ஒரு நொடி மட்டும் என்றும் மாறாத சொர்க்கம்.

நம் அருகில் நின்ற அந்த நாய் கூட, நம்மை பார்த்துக்கொண்டிருந்தது... சில காதல்களுக்கு சாட்சியாக மனிதர்கள் தேவையில்லை... இயற்கையே போதும்.

வாழ்க்கை நாளை நம்மை எந்த திசைக்கு அழைத்துச் செல்லும் என்று தெரியாது... நேரம் நம்மை சேர்த்து வைக்குமா, பிரித்து விடுமா என்பதும் தெரியாது... ஆனால் இந்த ஒரு இரவு... இந்த ஒரு நிமிடம்... இந்த ஒரு நெற்றி சாய்ந்த தருணம்... என் உயிர் இருக்கும் வரை என் நினைவில் அழியாத ஓர் அத்தியாயமாக வாழும்.

காதல் சில நேரங்களில் சிரிப்பில் தொடங்காது... அது ஒரு அமைதியில் தொடங்கும்... ஒரு நம்பிக்கையில் வளரும்... ஒரு அணைப்பில் உயிர் பெறும்... ஒரு நினைவில் ஆயுள் முழுவதும் வாழும்.

"உன் நெற்றி என் நெற்றியைத் தொட்ட அந்த ஒரு நொடி...
என் வாழ்நாள் முழுவதும்
என் இதயத்தின் துடிப்பாகவே வாழும்..." ❤️

August 04, 2026, 09:12:32 am
Reply #3

ChuttiGurl

Re: கவிதையும் கானமும்-072
« Reply #3 on: August 04, 2026, 09:12:32 am »
நமக்குச் சொந்தமாகாத காதல் 💔

நாம் ஒருநாள் சந்தித்தோம். ஆனால் ஒருபோதும் உண்மையாக ஒருவருக்கொருவர் சொந்தமாகவில்லை. விதி நம் இதயங்களைச் சந்திக்க வைத்தது; ஆனால் ஒன்றாக வாழ்வதற்காக அல்ல.

நான் உன்னை அமைதியாக நேசித்தேன். என் ஒவ்வொரு பிரார்த்தனையிலும் உன் பெயரை சுமந்தேன். ஆனால் நீ எனக்காக எழுதப்பட்ட விதி அல்ல என்பதை நான் அறிந்திருந்தேன்.

காயமடைந்த இதயத்துடன் கூட சிரிக்கக் கற்றுக்கொண்டேன். ஏனெனில், உன் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம். அந்த மகிழ்ச்சியில் நான் இல்லாவிட்டாலும்.

இந்தக் காதல் தோல்வியடையவில்லை. அது தவறான நேரத்தில், என்னால் சொந்தமாக்க முடியாத ஒருவரிடம் மலர்ந்தது.

இப்போது நான் உன்னை விடுவிக்கிறேன். நான் உன்னை நேசிப்பதை நிறுத்திவிட்டதால் அல்ல; உண்மையான காதல் சில நேரங்களில் விட்டுக்கொடுப்பதில்தான் இருக்கிறது.

ஒருநாள் நீ என்னை ஒரு கணமாவது நினைத்தால், நினைவில் கொள்... உன்னை முழு மனதுடன் நேசித்த ஒருவர் இருந்தார். ஆனால் அந்தக் காதல் நமக்குச் சொந்தமாகவில்லை.

ஏனெனில் நான் அறிந்தேன்...
எல்லா காதல்களும் சொந்தமாகுவதற்காக விதிக்கப்படுவதில்லை.

அடிக்கடி நான் விதியிடம் கேட்கிறேன்...
இறுதியில் பிரிவைக் கற்றுக்கொடுக்கவே என்றால்,
ஏன் நம்மை சந்திக்க வைத்தது?

ஒருவேளை நான் உன் வாழ்க்கையில் ஒரு தற்காலிகப் பயணியாக இருந்திருப்பேன்.
ஆனால் நீ, உனக்காக விதிக்கப்பட்ட ஒருவரை நோக்கி சென்றுகொண்டிருந்தாய்.

விட்டுக்கொடுப்பது என்பது நேசிப்பதை நிறுத்துவது அல்ல என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
சில நேரங்களில் காதலைத் தூய்மையாக வைத்திருக்க,
விட்டுவிடுவதுதான் கடைசி வழி.

இன்று ஒவ்வொரு நினைவும் எனக்குத் துணையாக உள்ளது.
ஒவ்வொரு கண்ணீரும் ஒரு சாட்சியாக உள்ளது.
ஒரு காலத்தில் மிக அழகாக மலர்ந்த காதல்,
ஆனால் ஒருபோதும் நமக்குச் சொந்தமாகாத காதலின் சாட்சியாக.

என் பிரார்த்தனையில் நான் எப்போதும் உன் பெயரைச் சொல்கிறேன்.
ஆனால் உன்னை "என்னுடையவன் / என்னுடையவள்" என்று அழைக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்கவில்லை.

ஏக்கம் இன்னும் உயிரோடு இருக்கிறது.
நம்பிக்கை நீண்ட காலத்திற்கு முன்பே மறைந்திருந்தாலும்.

நீ காலையின் சூரியனைப் போல வந்தாய்.
தனிமையில் இருந்த என் இதயத்திற்கு வெப்பம் தந்தாய்.
ஆனால் மாலை வந்தபோது,
மீண்டும் திரும்பாத ஒரு நிழலை விட்டுவிட்டு நீ சென்றுவிட்டாய்.

ஒருநாள்,
உன்னை மிகவும் உண்மையாக நேசித்தவர் யார் என்று நீ கேட்டால்,
என் பெயர் உனக்கு நினைவில் இல்லாமல் போகலாம்.

ஆனால் என் இதயம் எப்போதும் அறிந்திருக்கும்...
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு
நான் உன்னை நேசித்தேன்.

ஏனெனில் சில காதல்கள்
ஒருபோதும் சொந்தமாகாது.
ஆனால் அவை
வாழ்க்கையின் இறுதி வரை
இதயத்தின் ஒரு மூலையில்
என்றென்றும் உயிரோடு வாழும்.

நீ எப்போதும் என் நினைவிலும், என் இதயத்திலும் இருப்பாய். ❤️
« Last Edit: August 04, 2026, 11:19:26 am by ChuttiGurl »
🤓Nan ungal chutti🤓

August 04, 2026, 10:28:09 am
Reply #4
Re: கவிதையும் கானமும்-072
« Reply #4 on: August 04, 2026, 10:28:09 am »
💞 சாலையோரச் சாயங்காலம் 💞

சாலை ஓரச் சாயங்காலம்,
சாரல் பூத்த பொற்காலம்,
சாய்ந்த நெற்றி சேர்ந்த நேரம்,
சங்கீதம் பாடும் பேரின்பம்.

கண்ணும் கண்ணும் கதை பேச,
காதல் காற்றும் கவிப் பேச,
காலம் கூட நின்று பார்க்க,
கனவின் வாசல் திறந்ததம்மா.

மின்னும் விளக்கின் வெளிச்சமெல்லாம்,
மென்மை தீட்டும் ஓவியமாம்,
மெல்ல நடக்கும் வாகனங்கள்,
மௌன ராகம் மீட்டிடுமே.

தோளில் சாய்ந்த துளிநேரம்,
தொல்லை யாவும் தூரம் போகும்,
தொட்டு நிற்கும் இதயமெல்லாம்,
தோன்றும் சொர்க்கம் பூமியிலே.

பின்னே நின்ற இரண்டு நாய்கள்,
பிரியா பாசம் பேசுகின்றன,
வாலை ஆட்டி வாழ்த்துகின்ற,
வாயில்லா அன்பின் தூதர்களே.

நிலவு நாணி மேகம் சேர,
நிழல்கள் நம்மைத் தாலாட்ட,
நெஞ்சின் ஓசை மட்டும் கேட்டு,
நேரம் கூட நின்றதம்மா.

பாதை நீளும் வாழ்க்கை போல,
பாசம் நீளும் நதி போல,
பக்கம் நீயே இருந்தாலே,
பயணம் எல்லாம் பண்டிகையே.

மூச்சும் உன்னை மொழி பேசும்,
மௌனமும் உன்னை இசை பாடும்,
மண்ணில் பிறந்த காதலென்றால்,
மறையும் காலம் வெல்லாதே.

நெற்றி சேர்ந்த நொடி ஒன்றே...
நெஞ்சம் வாழும் நூறு ஆண்டே...
சாலையோரம் சாட்சி நின்று...
சாகா காதல் வாழ்த்தட்டுமே...  ❤️


Saalaiyoram Saayangaalam

Saalaiyoram saayangaalam,
Saaral pootha porkaalam,
Saayndha netri serndha neram,
Sangeetham paadum perinbam.

Kannum kannum kadhai pesa,
Kaadhal kaatrum kavi pesa,
Kaalam kooda nindru paarka,
Kanavin vaasal thirandhadhamma.

Minnum vilakkin velichamellaam,
Menmai theettum oviyamaam,
Mella nadakkum vaaganangal,
Mouna raagam meettidume.

Tholil saayndha thuli neram,
Thollai yaavum dhooram pogum,
Thottu nirkum idhayamellaam,
Thondrum sorgam boomiyile.

Pinnae nindra rendu naaigal,
Piriyaa paasam pesugindrana,
Vaalai aatti vaazhthugindra,
Vaayillaa anbin thoodhargale.

Nilavu naani megam sera,
Nizhalgal nammai thaalaatta,
Nenjin osai mattum ketu,
Neram kooda nindradhamma.

Paadhai neelum vaazhkai pola,
Paasam neelum nadhi pola,
Pakkam neeye irundhaale,
Payanam ellaam pandigaiye.

Moochum unnai mozhi pesum,
Mounamum unnai isai paadum,
Mannil pirandha kaadhal endraal,
Maraiyum kaalam vellaadhe.

Netri serndha nodi ondre...
Nenjam vaazhum nooru aande...
Saalaiyoram saatchi nindru...
Saagaa kaadhal vaazhthattume...




« Last Edit: August 04, 2026, 04:06:23 pm by YaazhVeena »

August 04, 2026, 11:14:52 am
Reply #5

Arivu008

Re: கவிதையும் கானமும்-072
« Reply #5 on: August 04, 2026, 11:14:52 am »
வானம் வெவ்வேறு இல்லை பூமியும் வெவ்வேறில்லை 
மனித ருக்குள் வெவ்வேறு எண்ணங்கள் உள்ளன
எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேரட்டும்
அது சங்கீதமாய் சங்கமிக்கட்டும்
பொய் இல்லாத உறவாய் இருக்கட்டும்
உன்னை பார்க்காமலே எனக்கானவளே
 உன்னை நான் காதலிக்கிறேன்.

 என்னை விட என் காதல் தான் சிறந்ததாய் இருக்கும்
வாழ்க்கையில் பரிசு கொடுக்க காத்திருப்பார்கள்
நான் உனக்கு என் வாழ்க்கையை பரிசாய் கொடுக்க காத்திருக்கிறேன்
அன்பே அருகில் வா
உன்னை மட்டும் நினைக்கும் மனம்
உன்னிடம் மட்டும் உறவாட நினைக்கும் மனம்
 உன் மனதை மட்டும் கவர நினைக்கும் மனம்
உன்னுடனே உயிராய் கலக்க நினைக்கும் மனம்
என் மனதிற்கு உயிர் கொடுக்கும் தேவதையே
சிறு புன்னகையை மெய்யிலே என்னை வாழ்க்கை நடத்த வைப்பவளே
 என் பிறவி கடனை முடிக்க உன் தோள் சாய்ந்து நடக்க
உன் கண்ணின்இமையில் என் காதலை பார்க்க
 நான் காத்திருக்கிறேன்
 இறைவி வா என்னை இறைவன் ஆக்கித் தா.

நீ வருவதை பார்க்காமலே நீ நடக்கும்
அசைவின் இசையில் என் உயிர்
உன்னோடு கலக்கும் என் மனது சிரிக்கும்
நீ என் அருதில் வந்து என் கண்ணம் தொட்டால்
நான் பிறந்ததற்கான கடனை எல்லாம் அடைத்து விடுவேன
 உன் ப பூவிதழ் விரல்களில் என் முகழ் பதிக்க வேண்டும்
 உன் புன்னகையோடு கலந்து நானும் சிரிக்க வேண்டும்
 உன் தலை முடியை நான் கோக வேண்டும் அது தாணி எல்லாம்
காவியமாய் மாற வேண்டும்
தலைவனும் தலைவியம் தந்திப்பது இயற்கை தான்
மயிலிறகே என் மனம் வருடியவளே
உன் விரல் வருட வருடம் பல காத்திருக்கிறேன்
 கற்பனைக்கு எட்டாத காதல் காத்து கிடக்கிறது
கொஞ்சம் கவிதையில் சொல்லி விட்டேன்
 மீதி  உன் காதில் சொல்லுகிறேன் வா
 விழி மூடும் போதும் விழி திறக்கும் போதும்
நீ இருக்க வேண்டும் வா உயிர் அன்பே வா
 
« Last Edit: August 04, 2026, 12:37:03 pm by Arivu008 »

August 04, 2026, 11:16:29 am
Reply #6
Re: கவிதையும் கானமும்-072
« Reply #6 on: August 04, 2026, 11:16:29 am »
நான் மறுத்த காதல்... என்னை வாழக் கற்றுக்கொடுத்தது!

சில காதல் தோல்விகள்...

காதலித்தவளை இழந்ததால் வருவதில்லை...

உயிராய் நேசித்த ஒரு மனதை,
தாமதமாக புரிந்ததால்தான் வருகிறது.

அந்த வலியின்
மறுபெயர்...

நான்.

ஒரு நாள்...

நீ என்னைக் காதலித்தாய்.

நானோ...

"நீ வேண்டாம்..."

என்ற ஒரு வார்த்தையில்
உன் இதயத்தை
உடைத்துவிட்டேன்.

நீ விலகினாய்...

நான் மறந்தேன்...

காலம் மட்டும்
எதையும் மறக்கவில்லை.

நீ இல்லாத
ஒவ்வொரு நாளும்,

நான் இழந்தது
ஒரு காதலை அல்ல...

என்னை உயிராய் நேசித்த
ஒரு நல்ல மனசை.

நான் உன்னைக்
காதலிக்க ஆரம்பித்தபோது...

நீ ஏற்கனவே,
உன் இதயத்தைப் புரிந்துகொண்ட
ஒரு உயிரோடு
பயணிக்க ஆரம்பித்துவிட்டாய்.

அன்று புரிந்தது...

காதல் தோற்கவில்லை...
என் தாமதம்தான் தோற்றது.

நான் தனிமையில்
தொலைந்து போனபோது,

நீ மீண்டும் வந்தாய்...

காதலாக இல்லை...

ஒரு நல்ல மனசாக.

உன்னால் ஏற்பட்ட
ஒரு சிறிய அறிமுகம்,

என் வாழ்க்கையில்
ஒரு அழகான நட்பாக
மலர்ந்தது.

அப்போது புரிந்தது...

உண்மையான காதல் என்பது,
சேர்ந்து வாழ்வது அல்ல...

நாம் இல்லாவிட்டாலும்,
அவர் நன்றாக வாழ வேண்டும்
என்று நினைப்பதுதான் காதல்.

நான் மறுத்த காதல்...
இன்று என்னை
வாழக் கற்றுக்கொடுத்தது.
« Last Edit: August 04, 2026, 11:18:25 am by Peacemaker »

August 04, 2026, 11:24:16 am
Reply #7

AzhaGi

Re: கவிதையும் கானமும்-072
« Reply #7 on: August 04, 2026, 11:24:16 am »
❤️ உன் அருகில் இருக்கும் ஒவ்வொரு நொடியும்...

இரவு தெருவின் அமைதியில் இரு இதயங்கள் சந்தித்தன…
வார்த்தைகள் இல்லாமல் காதல் பேசத் தொடங்கியன…
உன் நெற்றியை என் நெற்றியோடு சாய்த்த அந்த நொடி,
உலகமே நமக்காக நின்ற நொடி.

கைகளைப் பிடிக்கவில்லை, ஆனால் நம் இதயங்கள் இறுக்கமாக அணைத்துக்கொண்டன.
உன் கண்களில் தெரிந்த அந்த அன்பு, என் வாழ்நாள் முழுவதும் போதுமான வெளிச்சம்.
உன் கண்களில் நான் என்னைப் பார்க்கவில்லை, என் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்.
உன் கனவுகளில் நான் ஒரு மனிதனல்ல, உன் வாழ்வின் முழு அர்த்தமாக இருக்க விரும்புகிறேன்.

நீ அருகில் இருந்தால், நிலவுக்கே பொறாமை.
நீ சிரித்தால், என் துக்கங்களுக்கெல்லாம் விடுமுறை.
உன் தோளில் சாய்ந்த அந்த நிமிடம், ஆயிரம் கனவுகளின் தொடக்கம்.
உன் மூச்சின் வெப்பம், என் உயிரின் இசையாக மாறியது.

காதல் என்றால் கைகளைப் பிடிப்பதல்ல,
கண்களைப் பார்த்து மனதை வாசிப்பதுதான்,
நீ பேசாமல் சொன்ன ஒவ்வொரு உணர்வும்,
என் இதயத்தில் கவிதையாக பதிந்துவிட்டது.

நேரம் நின்றாலும் பரவாயில்லை, நீ மட்டும் என் அருகில் இருந்தால் போதும்.
தூரங்கள் வந்தாலும் பயமில்லை, உன் நினைவுகள் என்னை விட்டு போவதில்லை.
உன் பெயரை நான் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும், என் இதயம் புதிதாக துடிக்கிறது.
முதல் முறை காதலித்த அந்த உணர்வு, இன்றும் அதே புதுமையோடு மலர்கிறது.

நீ என்னைப் பார்த்து சிரிக்கும் அந்தச் சிறு நொடி, என் வாழ்க்கையின் பெரிய திருவிழா.
அந்த சிரிப்புக்காகவே, ஆயிரம் பிறவிகள் வாழத் தயார் நான்.
உன் கையைப் பிடிக்காத நாட்களிலும், உன் நினைவை மட்டும் இறுக்கமாக பிடித்திருக்கிறேன்.
ஏனென்றால் என் விரல்களை விட, என் இதயம் உன்னை வலிமையாகத் தழுவியுள்ளது.

மழைத்துளிகள் பூமியைத் தேடுவது போல, என் பார்வை எப்போதும் உன்னையே தேடுகிறது.
காற்று எங்கு சென்றாலும் திரும்பி வருவது போல, என் மனமும் உன்னிடமே வந்து சேர்கிறது.
நீ அருகில் நடக்கும் போது, என் உலகமே மெதுவாக மலர்கிறது.
பூக்கள் மணம் வீசுவதில்லை, உன் வருகையே என் வாழ்க்கைக்கு மணமாகிறது.

நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு,
தனிமைக்கும் ஒரு முடிவு கிடைத்தது.
சோகத்திற்கும் ஒரு எல்லை தெரிந்தது,
சந்தோஷத்திற்கோ எல்லையே இல்லை.

உன் இதயத் துடிப்பை கேட்கும் அந்த நொடி,
இசை என்றால் இதுதான் என்று புரிகிறது.
உன் அமைதியைக் கூட நான் கேட்கிறேன்,
அதில் என்னை நேசிக்கும் ஆயிரம் வார்த்தைகள் இருக்கின்றன.

காதல் என்பது பெரிய வாக்குறுதிகள் அல்ல,
சின்ன சின்ன அக்கறைகளின் கூட்டுத்தொகை.
"சாப்பிட்டாயா?" என்ற ஒரு கேள்விக்குள் கூட,
ஒரு ஆயுள் முழுக்க அன்பு மறைந்திருக்கிறது.

உன் கண்ணீரை நான் துடைக்க முடியாத நாள் வந்தாலும்,
அது விழாதபடி என் தோள் தருவேன்.
உன் சிரிப்பு மங்கும் நேரம் வந்தாலும்,
என் உயிரையே கொடுத்து அதை மீண்டும் மலரச்செய்வேன்.

வாழ்க்கை எத்தனை சோதனைகள் கொடுத்தாலும்,
நீ என் பக்கம் இருந்தால் அது வெறும் பாதைதான்.
நீ இல்லாத ஒரு வெற்றியை விட,
நீ இருக்கும் ஒரு சாதாரண நாளே எனக்கு சொர்க்கம்.

ஒருநாள் நம் தலைமுடி வெண்மையாகலாம்,
நம் முகத்தில் சுருக்கங்கள் வரலாம்,
ஆனால் நான் உன்னைப் பார்க்கும் பார்வை மட்டும்,
முதல் காதலின் அதே வெட்கத்தோடும் அதே துடிப்போடும் இருக்கும்.

என் கடைசி மூச்சு வரை,
நான் உன்னைக் காதலிப்பேன் என்பதல்ல வாக்குறுதி,
அதற்குப் பிறகும், உன் நினைவாக காற்றில் கலந்திருந்து
உன்னைச் சுற்றி வாழ்வேன் என்பதுதான் என் காதல்.

இந்த உலகம் நம்மை மறந்தாலும், நம் காதல் நம்மை மறக்காது.
உன் பெயர் என் இதயத்தின் துடிப்பு, என் பெயர் உன் சுவாசத்தின் நம்பிக்கை…
உண்மையான காதல் காலத்தை வெல்லும், மௌனத்தை பேச வைக்கும்,
இரு உயிர்களை ஒரே இதயமாக மாற்றும்.

ஏனென்றால்…
உன்னை நேசிப்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல…
அதுவே என் முழு வாழ்க்கை...! ❤️

« Last Edit: August 05, 2026, 02:38:17 am by AzhaGi »

August 04, 2026, 09:17:23 pm
Reply #8

iamcvr

Re: கவிதையும் கானமும்-072
« Reply #8 on: August 04, 2026, 09:17:23 pm »
அவனைத் தேற்றி விட வேண்டும் என்று அவளும்
அவளைத் தேற்றி விட வேண்டும் என்று அவனும்

தன்னை எப்போதும் சிரிக்க வைப்பவன்,
அவன் மனதுள்ளே சிதறுண்டு போய் நெடுங்காலம் ஆகிறது.
வெளிச்சிரிப்பை நிஜம் என்று இவள் ஏன் நினைத்தாள்?
அவன் தன் இயல்பை தொலைத்து திரிவதை இவள் கண்கள் ஏன் காண மறந்தன?

தன்னை எப்போதும் ரசித்து பார்த்தவள்,
அந்த ரசனையை தனக்கு ஏன் சொல்லித் தர மறந்தாள்?
தன்னோடே இருந்து அவள் இருப்பை ஆழப் பதிய வைத்தவள், அவள் இல்லாமல் போனால் இவன்
என்ன ஆவான் என ஏன் எண்ணாதிருந்தாள்?

மெளனத்தில் சங்கமித்து நிற்கின்றன அந்நான்கு கண்களும், கேள்விகளும்.

தலை கோதி, இதழ் சேர்த்து,
இதயங்களால் இடம் மாற வேண்டியவர்கள்,
ஒருவரில் ஒருவர் தலை சாய்த்து நிற்கின்றனர்.

பாதைகள் மாறி விட்டன,
காதலும் எங்கேயோ காணமலேயே போய்விட்டது.

காதல் சில வேளைகளில்
கருணையற்றது.
இருக்கும் போது சிலருக்கு புரிவதில்லை,
புரியும் போது மறுபுறம் காதலே இருப்பதில்லை.

அவனைத் தேற்றி விட வேண்டும் என்று அவளும்
அவளைத் தேற்றி விட வேண்டும் என்று அவனும்

கையறு நிலையில் கொண்டு வந்து இருத்தி
என்ன காணப்போகிறது இந்த காதல்?
« Last Edit: August 04, 2026, 09:40:48 pm by iamcvr »