Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-070  (Read 5282 times)

June 22, 2026, 06:09:05 pm
Read 5282 times

RiJiA

கவிதையும் கானமும்-070
« on: June 22, 2026, 06:09:05 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-070


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: June 22, 2026, 07:26:29 pm by RiJiA »

June 23, 2026, 01:19:24 pm
Reply #1

Ladybugs

Re: கவிதையும் கானமும்-070
« Reply #1 on: June 23, 2026, 01:19:24 pm »
சில உறவுகள் நம் வாழ்க்கையில் வரும்...
மழையைப் போல வந்து மறைந்து விடும்... ☔

ஆனால் சில உறவுகள் மட்டும்...
நிழலைப் போல நம்மோடு நடந்தே வரும்... ❤️

உன் தோளில் சாயும் அந்த ஒரு நிமிடம்...
என் மனதிற்கு கிடைக்கும் அமைதியை,
இந்த உலகத்தில் வேறு எதுவும் தர முடியாது... 🥰

என் சிரிப்பின் பின்னால் நீ இருக்கிறாய்...
என் கண்ணீரின் பின்னாலும் நீ இருக்கிறாய்... 💞

நான் பேசாமல் இருந்தாலும்,
என் மௌனத்தின் அர்த்தம் புரிந்துகொள்வது நீ... 🌹

வாழ்க்கை என்னும் கடலில்,
அலைகள் பல வந்தாலும்,
என் கையை விடாமல் பிடித்து நிற்பது
உன் அன்புதான்... 🤝❤️

காலம் மாறலாம்...
சூழ்நிலைகள் மாறலாம்...
மனிதர்கள் கூட மாறலாம்...

ஆனால் உன்னுடன் உருவான நினைவுகள்,
என்றும் மாறாத பொக்கிஷங்கள்... ✨

சில நேரங்களில் நான் பலவீனமாக இருப்பேன்...
சில நேரங்களில் நான் உடைந்து போவதைப் போல இருக்கும்...

அந்த நேரத்தில்,
 நான் இருக்கிறேன்... என்ற உன் ஒரு வார்த்தை போதும்...
மீண்டும் எழுந்து நடக்க... 💪❤️

காதல் என்பது பெரிய வார்த்தைகளில் இல்லை...
தினம் தினம் காட்டும் சிறு சிறு பாசங்களில் தான் இருக்கிறது... 🌸

தோள் சாயும் இடமாக...
நம்பிக்கை தரும் நெஞ்சமாக...
கண்ணீரை துடைக்கும் கரங்களாக...
வாழ்க்கை முழுவதும் துணையாக...

நீ இருந்தால் போதும்... ❤️

உன் அருகில் இருக்கும் போது,
எல்லா கவலைகளும் மறைந்து போகின்றன...
உன் அன்பில் நான் என்னை மறந்து,
ஒரு புதிய உலகத்தை காண்கிறேன்... 💫

காதல் என்பது ஒருவரை நேசிப்பது மட்டுமல்ல...
அவரிடம் நம் மனதை நிம்மதியாக ஒப்படைப்பதுதான்...🕊️💞

June 23, 2026, 01:24:21 pm
Reply #2

AzhaGi

Re: கவிதையும் கானமும்-070
« Reply #2 on: June 23, 2026, 01:24:21 pm »
அன்பே...
உன் தோளில் சாயும் அந்த ஒரு நொடி,
உலகமே மறந்து போகிறது.
உன் கண்கள் பார்த்த நொடியே,
என் உலகம் புதிதாய் மலர்ந்தது.
உன் சிரிப்பு கேட்ட போதெல்லாம்,
என் இதயம் இசையாய் மாறியது.
கைகளை பிடிக்காமல் இருந்தாலும்,
மனதை பிடித்தவன் நீயே... ❤️

தூரத்தில் இருந்தாலும்,
துணையாக உணர்ந்தவன் நீயே.
சில நேரம் சிரிக்க வைத்தாய்,
சில நேரம் அழவும் வைத்தாய்.
ஆனால் அந்த கண்ணீரிலும் கூட,
உன் நினைவுகள் இனிமை தந்தது.
சண்டைகள் வந்த நாட்களும் உண்டு,
சமாதானம் தேடிய இரவுகளும் உண்டு.
"போகிறேன்" என்ற வார்த்தையில் வலி இருந்தது,
"இருக்கிறேன்" என்ற நம்பிக்கையில் உயிர் இருந்தது...

உன் அன்பு எனக்கு சொர்க்கம்,
உன் மௌனம் எனக்கு நரகம்.
சேர்ந்து நடந்த பாதைகள் மகிழ்ச்சி,
பிரிந்து நின்ற தருணங்கள் வேதனை.
இருந்தாலும் காதல் தோற்கவில்லை,
ஏனெனில் உண்மை காதல் மறைவதில்லை...

சிரிப்பிலும் நீ இருந்தாய்,
கண்ணீரிலும் நீ இருந்தாய்.
என் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்திலும்,
எழுதப்பட்ட பெயர் நீயே.
இன்று சந்தோஷம் வந்தாலும்,
உன்னோடு பகிர ஆசை.
நாளை சோகம் வந்தாலும்,
உன் தோளில் சாய ஆசை.
வாழ்க்கை முழுவதும் மாறினாலும்,
மாறாத என் காதல் நீயே,
என் அழகனே... ❤️❤️❤️


I dedicate this to my CUTE BOY AZHAGAN😊 ❤️😊
« Last Edit: June 23, 2026, 01:30:45 pm by AzhaGi »

June 23, 2026, 01:35:55 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-070
« Reply #3 on: June 23, 2026, 01:35:55 pm »
காதலில் பிரச்சனை இல்லாத நாள் இருக்கலாம்…
ஆனா உணர்வு இல்லாத நாள் இருக்காது… ❤️

அவளுக்கு phone silentனா tension…
அவனுக்கு அவள் reply lateனா tension… 😅

அவள் “என்ன ஆச்சு?” என்று யோசிப்பாள்…
அவன் “எப்படி சொல்வது?” என்று யோசிப்பான்…

அவள் அதிகம் யோசிப்பாள்…
அவன் அதை புரியாமல் அமைதியாக இருப்பான்…

ஆனா…
இருவருக்கும் ஒன்று common…
ஒருவரை ஒருவர் miss பண்ணுவது… ❤️

அவளுக்கு அவன் online வந்தால் சந்தோஷம்…
அவனுக்கு அவள் “ஹாய்” என்ற message வந்தால் சந்தோஷம்… 😄

அவள் அவன் தோளில் சாய்ந்தால்
மனம் லேசாகி விடும்…

அவன் அவள் கையை பிடித்தால்
உலகமே சரியாகிவிட்டது போல தோன்றும்… ❤️

சில சமயம் சண்டை வரும்…
அவள் கோபத்தில் முகம் திருப்புவாள்…
அவன் கோபத்தில் பேசாமல் இருப்பான்… 😅

ஆனா…
இருவரும் காத்திருப்பார்கள்…
யார் முதலில் பேசுவார்கள் என்று… 😄

ஒரு “சாப்பிட்டாயா?” என்ற கேள்வி போதும்…
அந்த சண்டைக்கு full stop ஆகிடும்… ❤️

அவள் அழுதால்
துடைக்க அவன் இருப்பான்…

அவன் உடைந்தால்
சேர்க்க அவள் இருப்பாள்…

அவளுக்கு அவன் தோள்
பாதுகாப்பான இடம்…

அவனுக்கு அவள் சிரிப்பு
அமைதியான உலகம்… ❤️

பணம் பிரச்சனை இருந்தாலும்…
வாழ்க்கை சோதனை இருந்தாலும்…
இருவரும் சேர்ந்தால்
அது எளிதாகி விடும்…

அவள் பயந்தால்
அவன் தைரியம் கொடுப்பான்…

அவன் சோர்ந்தால்
அவள் நம்பிக்கை கொடுப்பாள்…

காதல் பிரச்சனையை தீர்க்காது…
ஆனா பிரச்சனையை எதிர்கொள்ளும் சக்தியை தரும்… ❤️

ஏனெனில்…
உண்மையான காதலில்
ஒருவர் ஒருவருக்கு
மருந்தும்…
ஆறுதலும்…
உயிரும் ஆகி விடுவார்கள்… ❤️
« Last Edit: June 23, 2026, 02:03:50 pm by Peacemaker »

June 23, 2026, 02:24:29 pm
Reply #4

Heartkiller

Re: கவிதையும் கானமும்-070
« Reply #4 on: June 23, 2026, 02:24:29 pm »
உன் தோளில் சாயும் அந்த நிமிடம்… 🤍
என் வாழ்க்கையில் கிடைத்த அமைதியின் உச்சம் 🌙

உன் அருகில் இருக்கும் போது மட்டும் 🫂
என் மனசு எல்லா சுமையையும் மறந்து விடுகிறது 💙

உன்னை பார்த்து பேசும் வார்த்தைகளை விட 🤍
உன்னோடு இருக்கும் மௌனம் தான் அதிகம் பேசுகிறது 🌿

உன் அருகாமை ஒரு உணர்வு அல்ல…
அது என் மனசுக்கு கிடைத்த ஒரு நிம்மதி 🫂

எத்தனை பேர் இருந்தாலும் இந்த உலகத்தில் 🌎
சிலர் மட்டும் தான் மனசுக்கு வீடு போல ஆகிறார்கள் 🤍

அந்த வகையில் நீ ஒரு அழகான உணர்வு 💙
என் நாளை மெதுவாக ஒளிர வைக்கும் அமைதி 🌙

உன் தோளில் சாயும் போது 🫂
என் மனசு முழுவதும் லேசாகி விடுகிறது 🤍

நான் சிரிக்க காரணம் கேட்காதே 😊
அந்த சிரிப்புக்குள் நீயே இருக்கிறாய் 💙

உன் அருகில் இருக்கும் சில நொடிகள் ✨
நேரமே நின்றது போல ஒரு உணர்வு தருகிறது 🌿

உன்னை நினைத்தாலே கூட 🥺
மனசு அமைதியாகி விடுகிறது 🤍

நீ அருகில் இருந்தால் போதும் 🫂
எல்லாம் சரியாகி விடும் போல தெரிகிறது 🌙

இது வார்த்தைகளால் சொல்ல முடியாத பாசம் 💙
மனசால் மட்டும் உணர முடியும் ஒரு அழகு 🤍

உலகம் முழுவதும் மாறினாலும் 🌎
இந்த உணர்வு மட்டும் மாறாமல் இருக்க வேண்டும் 🫂

ஏனெனில்…
சில மனிதர்கள் வாழ்க்கையில் வருவது சாதாரணம் இல்லை 💙
அவர்கள் வந்த பிறகு வாழ்க்கையே அழகாக மாறுகிறது 🤍

நீயும் அப்படித்தான்… 🫂
என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு அமைதியான புன்னகை 🌙

✨ இந்த ஒரு நொடி நீடித்தால் போதும்… அது மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று மனசு மட்டும் ஆசைப்படுகிறது 🤍🫂💙

June 23, 2026, 04:45:35 pm
Reply #5

MDU

Re: கவிதையும் கானமும்-070
« Reply #5 on: June 23, 2026, 04:45:35 pm »
தோளில் சாய்ந்த தருணம்

என் தோளோடு சாய்ந்திருந்த
அந்த ஒரு நொடியில் தான்,
என் மொத்த உலகமும்
உறைந்து போயிருந்தது!
இப்போது.
என் விழி மூடினாலும்
அதே முகம், அதே கதகதப்பு.

ஆனால் விழி திறந்து பார்த்தால்,
நீ இல்லை.உன் நினைவுகள் மட்டுமே.
காற்றின் இசையும் காதல் பாட,
என் இதயம் உன் பெயரை மட்டுமே பாடியது.

கண்களை மூடினாலும் நீயே,
கனவுகளைத் திறந்தாலும் நீயே.
என் வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும்,
உன் அன்பே என் உயிரின் அர்த்தம்.

வார்த்தைகள் பேசாத மௌனத்தில் கூட,
ஆயிரம் காதல் கதைகள் எழுதுகிறது என் இதயம்.
உன் அருகில் இருக்கும் ஒவ்வொரு நொடியும்,
சொர்க்கம் எனக்காக பூமியில் இறங்கிய தருணம்.

என் தோளில் சாய்ந்த இந்த இதயம்,
காலம் முழுவதும் அங்கேயே தங்கிவிட ஆசைப்படுகிறது.
ஆனால் நீ என் அருகில் இருக்கும் வரை,
என் வாழ்க்கை முழுவதும் காதலின் வசந்தமே.
தொலைதூரத்தில் இருந்தாலும்
என் இதயத்திற்கு அருகில்தான் இருந்தாய்.
இன்று அருகில் இருந்த நினைவுகள்கூட
என்னை விட்டு தொலைந்து போய்விட்டன.

காத்திருந்த நாட்கள் எல்லாம்
காலண்டரில் தேதிகளாக மாறிவிட்டன.
ஆனால் உனக்காக காத்திருந்த
என் காதல் மட்டும் இன்னும் மாறவில்லை.

நீ மறந்துவிட்டாய்.
நான் மறக்க முயற்சிக்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு இரவும்
உன் நினைவுகள் என்னைத் தேடி வந்துவிடுகின்றன.

தொலைதூரக் காதல் வலிக்கிறது
ஆனால் தொலைந்து போன காதல்
உயிரையே மெதுவாகக் கொல்கிறது.

ஒருநாள் நீ திரும்பி வந்தாலும்,
அன்று நான் சிரிக்கலாம்.
ஆனால் இன்று நீ விட்டுச் சென்ற காயங்கள்
என்றும் என் இதயத்தில் மௌனமாக அழுதுகொண்டே இருக்கும்.

இருண்டு கிடந்த என் இதயத்தில்
எதிர்பாராமல் வந்து ஒளியாக மலர்ந்தவள் நீ.

நீ எதுவும் செய்யவில்லை.
என்னிடம் காதல் என்று கூட சொல்லவில்லை.
ஆனால் ஏனோ என் இதயம்
உன்னை மட்டும் நேசிக்கக் கற்றுக்கொண்டது.

என் அன்பு உனக்குப் புரியவில்லை.
புரிந்த பிறகும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அமைதியாக என்னை விட்டு
விலகிச் சென்றுவிட்டாய்.

மறக்க நினைக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறேன்.
ஆனால் உன் நினைவுகள் மட்டும்
என் இதயத்தை விட்டு செல்ல மறுக்கின்றன.

ஒருநாள் உன்னை மறந்துவிடலாம்.
அன்று இந்த உயிரும் என்னை மறந்துவிடும்.
ஏனென்றால், உன்னை மறந்த வாழ்க்கை
எனக்கு வாழ்க்கையாகத் தோன்றாது.

உனக்கு என்னால்
எந்தத் தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காகத்தான்
விலகிச் செல்கிறேன்.

நீ சந்தோஷமாக வாழ வேண்டும்,
அதுவே என் காதலின் கடைசி ஆசை.

உனக்கு நூறு பேரில் ஒருவன் நானாக இருக்கலாம்.
ஆனால் எனக்கு.
இந்த உலகமே எதிர்த்தாலும்,
என் இதயம் தேர்ந்தெடுத்த ஒரே பெண் நீதான்.

நீ என் வாழ்க்கையில் இல்லாமல் போயிருக்கலாம்.
ஆனால் என் இதயத்திலிருந்து
உன்னைப் பிரிக்கும் சக்தி
காலத்திற்குக் கூட இல்லை.

இதயத்தின் ஓரத்தில்
நீ செதுக்கிவிட்டுப் போன காதலை,
மரணத்தால் கூட
மறைக்க முடியாது.
காதுகளில் இன்னும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மறுபடி கேட்க வாய்ப்பே இல்லாத
உன் அன்பின் கடைசி வார்த்தைகள். 

இந்த கவிதை உங்களுக்கு  பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன் இப்படிக்கு உங்கள் MDU ❤️🫶
« Last Edit: June 24, 2026, 12:18:46 am by MDU »

June 23, 2026, 05:56:30 pm
Reply #6

Wings

Re: கவிதையும் கானமும்-070
« Reply #6 on: June 23, 2026, 05:56:30 pm »
🤍 என் ஓய்வு எடுக்கும் இடம் 🤍

பெரிய காதல் கதைகள் எனக்கு வேண்டாம்...

திரைப்படங்களில் வரும் அழகான காட்சிகளும் வேண்டாம்...

புத்தகங்களில் மட்டும் வாழும் வார்த்தைகளும் வேண்டாம்...

எனக்கு வேண்டியது...

உன்னுடன் ஒரு அமைதியான மாலைப் பொழுது மட்டும்...

பேசலாம்...

பேசாமல் இருக்கலாம்...

அல்லது,

வானம் மெல்ல மெல்ல தன் நிறங்களை மாற்றிக் கொள்வதை

சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கலாம்...

உலகம் வழக்கம் போல நகர்ந்து கொண்டிருக்கட்டும்...

ஆனால் அந்த சில அமைதியான நிமிடங்களுக்குள்,

நான் ரகசியமாக சிரித்துக்கொண்டிருப்பேன்...

ஏனென்றால்,

உன் அருகில் இருப்பதே

எனக்கு மிகவும் பிடித்த இடமாக மாறிவிட்டது...

நீ எப்போது என் நினைவுகளின் ஒரு பகுதியாக ஆனாய் என்று

எனக்கு ஞாபகம் இல்லை...

ஆனால் எப்படியோ,

மெல்ல...

அமைதியாக...

மூடி இருந்த ஜன்னல் வழியாக

வெளிச்சம் உள்ளே வருவது போல,

நீ என் மனதுக்குள் வந்துவிட்டாய்...

இன்று,

ஒவ்வொரு சிறு விஷயத்திலும் உன் நினைவு இருக்கிறது...

ஒவ்வொரு காதல் பாடலும்

புதிதாக ஒலிக்கிறது...

ஒவ்வொரு அழகான சாயங்காலமும்,

யாரோடோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையைத் தருகிறது...

சில நேரங்களில்,

உன் தோளில் சாய்ந்து இருப்பதை கற்பனை செய்வேன்...

களைப்பின் காரணமாக அல்ல...

என் இதயம் அங்கே அமைதியைக் கண்டுபிடிக்கிறது என்பதால்...

கொஞ்சம் நேரம் அப்படியே இருக்க வேண்டும் போலத் தோன்றும்...

உன் இதயத்தின் ஓசையைக் கேட்டுக்கொண்டே,

உலகம் முழுவதும் அமைதியாக மறைந்துவிட வேண்டும் போல...

பெரிய வாக்குறுதிகள் இல்லை...

நாடகத்தனமான காதல் வெளிப்பாடுகளும் இல்லை...

ஒரு சிறு சந்தோஷம் மட்டும்...

அது வீடு போல உணரவைக்கும் ஒரு சந்தோஷம்...

நீ என்ன செய்தாய்?

ஏன் என் மனம் எப்போதும் உன்னிடமே திரும்பி வருகிறது?

ஏன் சாதாரண நாட்கள் கூட,

உன் நினைவு இருந்தால் அழகாக மாறிவிடுகின்றன?

ஏன் உன் அருகாமை,

தூரத்தில் இருந்தாலும் அமைதியைத் தருகிறது?

நீ அறியாமல்,

எத்தனை முறை இந்தச் சிறு கனவுகளை நான் வாழ்ந்திருக்கிறேன்...

எத்தனை சிரிப்புகளை நீ திருடிச் சென்றிருக்கிறாய்...

எத்தனை சாதாரண நிமிடங்களை,

நினைவுகளாக மாற்றியிருக்கிறாய்...

இந்த இதயம் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால்,

அது ஒரு நகரமாக இருக்காது...

ஒரு கடற்கரையாக இருக்காது...

அல்லது அழகான காட்சியாக இருக்காது...

அது வெறும்...

உனக்கு இன்னும் கொஞ்சம் அருகில்...

உன் தோளில் என் தலை சாய்ந்து...

உன் விரல்களோடு என் விரல்கள் கோர்த்து...

என் இதயம்,

தன் வீட்டைக் கண்டடைந்த அமைதியில்...

உன்னிடம் இருக்கும்... ❤️

June 24, 2026, 02:19:12 am
Reply #7

Deepa

Re: கவிதையும் கானமும்-070
« Reply #7 on: June 24, 2026, 02:19:12 am »
​தொலைதூரக் காதலின் தவிப்புகள்
அத்தனையுமாய் முடிந்து,
பலநாள் பிரிவின் துயரங்கள்
யாவும் ஒரு நொடியில் மறந்து,
உன் முகம் காணும்
 இந்த இனிய நெஞ்சார்ந்த நொடியில்,
நம்மைச் சுற்றியுள்ள காலமும்
சற்றே உறைந்து போனதே!

​அலைபேசித் திரையோடு மட்டுமே
 தவித்திருந்த என் கண்கள்,
நேரில் உன்னைக் கண்டு
 பேரானந்தத்தில் திளைக்க,
மெல்ல வந்து உன் அகன்ற அன்பான தோள்களில்
என் தலை சாய்த்துக் கொள்ளும்
வரப்பிரசாத தருணமிது!

​உன் மூச்சுக்காற்று என் நெற்றியில்
 மெதுவாய்ப் படர,
நெஞ்சில் இருந்த பாரமெல்லாம்
சட்டென உருகிக் கரைய,
உன் தோளின் கதகதப்பில்
என் மொத்த உலகமும் அடங்க,
இத்தனை காலக் காத்திருப்புக்கும்
 பேரழகாய் விடை கிடைத்ததே!

​உன் கடந்த காலப் பக்கங்களில்
 நான் இல்லாமல் இருக்கலாம்,
உன் முதல் காதல் நானில்லை
என்ற உண்மை அறிந்திருந்தாலும்,
உன் இறுதி மூச்சு வரை
உன்னை ஆளப்போகும் பேரன்பு,
உன் கடைசி காதல் நானே
என்பதில் எனக்குள் பெரும் பெருமிதமே!

​யார் யாரோ வந்து போன
பாதையெல்லாம் மாறிப் போகட்டும்,
இனி என் காலடித் தடம் மட்டுமே
 உன்னோடு என்றும் பதியும்
உன் இதயத்தின் இறுதிப் புகலிடமாய்
 நான் மாறிவிட்டதால்,
உன் விழி மூடும் வரை
 உன்னவளாய் மட்டுமே நான் இருப்பேன்!

​நமக்குள் இனி தூரங்கள்
என்ற வார்த்தைக்கே இடமில்லை,
இந்தத் தோள் சாய்வு ஒருபோதும்
தற்காலிகமானதும் இல்லை...
கடந்த காலக் கதைகளை
நாம் கடந்து வந்துவிட்டோம் அன்பே,
இனி உன் எதிர்காலத்தின் இறுதி
அத்தியாயமாய் நானே வாழ்வேன்!..

என்றென்றும் உன்னவளாய் நான்...❤️
« Last Edit: June 24, 2026, 02:22:55 am by Deepa »

June 24, 2026, 08:56:15 pm
Reply #8

ChuttiGurl

Re: கவிதையும் கானமும்-070
« Reply #8 on: June 24, 2026, 08:56:15 pm »
உன் தோளில் சாய்ந்த அந்த நொடியில், எளிமையான ஒரு அமைதியை கண்டேன். கதைகள் நிறைந்த ஒரு நாள் முடிந்த பிறகு மெதுவாக வீட்டுக்கு திரும்பும் மாலைப் பொழுது போல. அந்த தோளில்தான் என் சோர்வெல்லாம் ஓய்வெடுக்கிறது, என் கவலைகள் சொல்லாமலே கரைந்து போகின்றன. சத்தம் நிறைந்த இந்த உலகமே ஒரு நொடியில் அமைதியாகி விடுகிறது; உன் வெப்பம் மட்டும் என் நெஞ்சில் உண்மையாக உணரப்படுகிறது.
அதிகமான வாக்குறுதிகள் தேவையில்லை, அழகான வார்த்தைகளும் எப்போதும் அவசியமில்லை. நீ என் அருகில் இருந்தாலே போதும் — என் இதயத்துக்கு திரும்பும் ஒரு வீடு போல இருக்கிறது.
“உன் தோளில் சாயும் ஒவ்வொரு நொடியும், அமைதியும் அன்பும் சேர்ந்த ஒரு அழகான உலகமாக மாறுகிறது. சொல்லாமல் வைத்த உணர்வுகள் புரிந்துகொள்ளப்படும் இடம்; வார்த்தைகள் இல்லாமலும்கூட அன்பு நிறைந்து பேசும் ஒரு உலகம்.”❤️🫰 (for u Mr 🐻)
🤓Nan ungal chutti🤓