Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-069  (Read 497 times)

June 08, 2026, 06:42:01 pm
Read 497 times

RiJiA

கவிதையும் கானமும்-069
« on: June 08, 2026, 06:42:01 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-069


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: June 08, 2026, 07:33:35 pm by RiJiA »

June 09, 2026, 07:35:47 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-069
« Reply #1 on: June 09, 2026, 07:35:47 am »
யார் இவர்கள்....?

[/color]

எங்களின் காதலுக்கு கிடைத்த உன்னதமான பரிசு நீங்கள் இருவரும்..

உங்கள் ஒரு நொடி பிரிவிலும் துடித்திடுவேன் ...
உங்களை அள்ளி எடுத்து என் மார்பில் பூட்டிக்கொள்வேன் ...
தாலாட்டு பாடி என் நெஞ்சறையில் உறங்க வைப்பேன் ...
என் இதயத்துடிப்பை அடக்கிடுவேன் உங்கள் உறக்கம் கலையாதிருக்க...
முதல் முறை உங்களை பார்த்து உங்கள் விரலுக்குள் என் விரல் பதித்து உங்களை தூக்கி முத்தமிட்டதை எந்த நாளிலும் மறக்க முடியாது ...
அழகான வலியை தந்து என்னை தாயாக்கி சென்ற என் உயிரே ...
உந்தன் பனிக்குடம் உடைய இருவரின் வருகைக்காக வலியெல்லாம் கடந்து
இருவரையும் பார்க்க ஆவலாய் காத்திருந்த நாள் ....
உந்தன் பெண்மையின் தாய்மை பொருளை உன் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்த நாள் ....
உந்தன் வாழ்க்கையில் உன்னால் மறக்கமுடியா உன் தாய்மையின் நாள் ...
இவர்கள் இருவரின் பிறந்த நாள் ...
முதல் முறை உன் மார்பில் இவர்களை வைக்கும் பொழுது தானாக பால் சொரிய இருவரும் பால் குடித்த ஞாபகம் மறக்கவில்லை ...
உன் அன்போடு உன் உதிரத்தை பாலாக்கி இருவரின் பசி போக்கினாய் ....
கொஞ்சம் நகம் வளர்ந்ததும் மார்பில் நகத்தால் கீறிய வலி ...
சுகமான வலி ...
இருவரும் பால் குடிக்கும் பொழுது நீ இருவரின் நகம் கடித்து துப்புவாய் ...
ஆனாலும் இருவருக்கும் அவ்வளவு சீக்கிரமாக நகம் வளர்ந்துவிடும் ...
ஒருவர் பின் ஒருவராக உந்தன் காலில் போட்டு குளிப்பாட்டும் பொழுது ....
ஒன்றுக்கு மூன்று முறை நீர் சரியாக விளாவியுள்ளதா எனப்பார்ப்பாய் ....
இருவரின் கண்ணில் நுரை படும் பொழுது ...
அவர்களோடு நீயும் சேர்ந்து அழுவாய் ....
இருவரும் அம்மா என்று அழைக்கும் பொழுது ஆர்ப்பரிக்கும் ஆனந்தத்தோடு நன் உலகம் பிறக்கிறது ...
இருவரையும் வாரி அணைத்து உச்சி முதல் பாதம் வரை மகிழ்ச்சியின் எல்லையில் ஆயிரம் ஆயிரம் முத்தமிட்டோம் ...
இருவரும் தவழும் பொழுது அவர்களோடு நன் மனமும் தவழ்ந்தது ...
இருவரும் தத்தி தத்தி முதல் நடை நன் மார்பு கூட்டில் நடக்கும் பொழுது மனதின் உணர்வை சொல்ல வார்த்தை இல்லை ...
இருவரும் நடை பயிலும் பொழுது அவர்களோடு சேர்ந்து நாமும் நடை பயின்றோம்...
அவர்கள் தவறி விழும்பொழுது நாம் பதறி போனோம் ...
ஓடி வந்து  தூக்கி வைத்து வேடிக்கை காட்டினோம் ...
ஆராரோ தாலாட்டு பாடி மடியினில் தூங்க வைப்போம் ...
உன் கூரை புடவையில் ஆனை கட்டி ஊஞ்சலில் கண்ணுறங்க வைப்போம் ...
நாம் ஓடி ஒளிந்து அவர்கள் முகத்தை பார்த்து சிரிப்போம் ...
 அவர்களுனுடனே ஓடி ஒளிந்து எட்டிஎட்டி பார்த்து புன்னைகை பூப்தோம் ...
ஆனால் அவர்கள் இருவர் போல் அழகாய் யாராலும் சிரிக்க முடியாது ....
அவர்களின் கன்னக்குழி சிரிப்பில் நம்மை மறந்தோம் ....
நம் வலிகளை மறந்தோம் ...
நம் கண்ணே பட்டு விடும் என்றே சொல்லி கண் மையில் திருஷ்டி பொட்டு வைத்திடுவோம் ...
இருவருக்கும் பல் முளைக்க ஆரம்பித்ததும் உந்தன் மார்பில் முதலில் கடித்தார்கள் ...
வலிக்கவில்லை ...
மாறாக மகிழ்ச்சி பொங்கியது ....
சோறு ஊட்டிவிடும் பொழுது ...
விரலை கடித்திடுவார்கள் ...
சிரித்துக்கொண்டே இருவரின் தலையை வருடிவிட்டு ரசித்தோம் .....
வெளியே செல்லும் பொழுது
வெயில் மழை தூசு மாசு இருவரையும் அண்டாதிருக்க தோளோடு அணைத்துக்கொண்டோம்.....
பின்னாளில் இருவரையும் என் கையில் கொடுத்து சென்று விட்டாய்...
இன்று நானோ உனை பிரிந்த தனிமையில் இருவரின் கை பிடித்து நடக்கிறேன் வானில் உன் உருவம் கண்டு..

இவர்கள் கொஞ்சுகிறார்களா பேசுகிறார்களா
எனப் பிரித்தறியலாது?
ஆனால் என் கண்ணங்களை கெஞ்சிடச் செய்திடுகிறார்கள்!
நஞ்சு புகா இனிய மழழை மொழி கற்றுக் கொடுக்கிறார்கள்
என்னை மழலையாகவே ஆக்கி விளையாடுகிறார்கள்!
பூக்களோடு பூக்களாகக் கலந்திருப்பார்கள்
அந்த பூக்களுக்கே புன்னகை சிந்தக் கற்றுக் கொடுக்கிறார்கள்!
தத்தி தத்தி நடந்திடுவார்கள்
கிள்ளை மொழி பேசிடுவார்கள்
வஞ்சமிலா புன்னகையில் என்னை கவர்ந்திடுவார்கள்!
மண்ணைப் பிசைந்து அதை இசைந்து
தன் பிஞ்சு விரல்களிலே செதுக்கிடுவார்கள் மணற் சிற்பங்களை!
இவர்கள் பஞ்சு விரல் பட்டால் உயிரிலா
பொருளெல்லாம் உயிர்த்தெழுந்திடுமே!
பார்ப்ப தெல்லாம் கை நீட்டிடுவார்கள்
வாங்கிதரச் சொல்லி என்னைக் கேட்டிடுவார்கள்!
நான் ரசித்த உலகத்தை பாரடாயென்றால்
அவர்கள் உலகிற்கு என்னை கவர்ந்து சென்றிடுவார்கள்!
இவர்களை கண்டால் என் துன்பமெல்லாம் பறந்திடுமே
புத்தம் புதிதாய் பிறந்திடுவேனே!
பிறர் இவர்களை கண்டால் வசிய முகத்தில் மயங்கிடுவர்
மரண மில்லா இன்பம் பெற்றிடுவர்!
இவர்கள் என்னைக் கண்டால் காற்றினிலே மிதந்திடுவேன் ஆரத்தழுவிடுவான் என் கண்ணங்களில் முத்த மழை பொழிந்திடுவார்கள்!

யார் இவர்கள்?

இவன் எனது மகனா இல்லை என் தந்தையா..?

இவள் எனது மகளா இல்லை என் அன்னையா..?

என்றும் உங்கள் நட்பில்.....

June 09, 2026, 08:28:54 am
Reply #2
Re: கவிதையும் கானமும்-069
« Reply #2 on: June 09, 2026, 08:28:54 am »
மாலையும் வந்தாச்சு...
சூரியனும் போயாச்சு...
ஆனா இந்த photo எடுக்குறதுக்காக 47 take ஆயாச்சு...
"நேரா பாருங்க..."
"கீழ பாக்காதீங்க..."
"சிரிங்க..."
"அவ்வளவு சிரிக்காதீங்க..."
"நடங்க..."
"வேகமா நடக்காதீங்க..."

😭😭😭
பாருமா...
கேமராமேன் இவ்வளவு பாடா படுத்துறானே...
நீ எதுக்கு இப்படி ஒரு photo கேட்டேன்னு மகளிடம் கேட்டேன்...

அவள் சிரிச்சுக்கிட்டே சொன்னாள்...

"அப்பா... இந்த photo future-க்கு தேவை..."

"ஏன்?"

"நாளைக்கு நான் கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போயிட்டா..."

"Status போடணும்..."
"என்ன status?"

'Miss those days when my ATM card used to walk beside me...' 🤣🤣

நான் அதிர்ச்சில நின்னுட்டேன்...
உடனே பக்கத்துல இருந்த பையன்
"அக்கா... ATM card மட்டும் இல்ல...
Unlimited recharge...
Swiggy coupon...
Amazon Prime membership...
எல்லாமே அப்பாதான்..." 🤣

அதுக்கு அவள்,
"அதான் ஒரு photo-ல எல்லாத்தையும் capture பண்ணிக்கணும்னு நினைச்சேன்..."
😭😭😭


 
அந்த நேரத்துல,
camera man மெதுவா சொன்னான்...
"சார்... 48th take ready..."
நான் கேட்டேன்...
"ஏன்?"
அவன் சொன்னான்...
"சார்... இந்த expression-தான் natural-ஆ இருக்கு!" 🤣🤣🤣
அந்த கணம் உணர்ந்தேன்...
இவர்கள் என் பிள்ளைகள் இல்லை...
என் monthly expenses-க்கு மனித உருவம் என்று... 🔥🤣

June 10, 2026, 07:54:28 am
Reply #3
Re: கவிதையும் கானமும்-069
« Reply #3 on: June 10, 2026, 07:54:28 am »
அப்பா – என் வாழ்வின் முதல் ஹீரோ

கருவறையில் அம்மா என்னை சுமந்தாள்,
காலமெல்லாம் அப்பா என் வாழ்க்கையை சுமந்தார்.

வெயிலில் வியர்வை சிந்திய கைகள்,
என் எதிர்காலத்தை செதுக்கிய சிற்பியின் கைகள்.

மழையில் நனைந்த தோள்கள்,
என் கனவுகள் சாயாமல் தாங்கி நின்ற உறுதியான தூண்கள்.

பசியால் வயிறு வாடிய போதும்,
என் பசியை மட்டும் போக்க நினைத்த இதயம்.

தூக்கத்தை தொலைத்த இரவுகள்,
என் நிம்மதியான உறக்கத்திற்காக கழிந்த இரவுகள்.

கிழிந்த சட்டை அணிந்த உடல்,
எனக்கு புதிய ஆடை வாங்கி மகிழ்ந்த உடல்.

தேய்ந்து போன கால்கள்,
என் வாழ்க்கைப் பாதையை அமைத்த உழைப்பின் கால்கள்.

நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகள்,
என் வெற்றியின் விதைகளை விதைத்த துளிகள்.

தன் ஆசைகளை மறந்த மனம்,
என் ஆசைகளை நிறைவேற்ற வாழ்ந்த மனம்.

தன் சோகங்களை மறைத்த முகம்,
என் சிரிப்பை மட்டுமே காண விரும்பிய முகம்.

வலிகளை விழுங்கிய இதயம்,
என் மகிழ்ச்சியை மட்டும் சுமந்த இதயம்.

கஷ்டங்கள் கதவைத் தட்டிய போதும்,
எங்கள் வீட்டில் சிரிப்பை மட்டும் வைத்தவர்.

வாழ்க்கை பலமுறை சோதித்த போதும்,
குடும்பத்தை சோர்ந்து போக விடாதவர்.

நான் விழுந்த ஒவ்வொரு முறையும்,
என்னை விட அதிகமாக வலித்தவர்.

நான் அழுத ஒவ்வொரு முறையும்,
அமைதியாக கண்ணீர் சிந்தியவர்.

உலகம் என்னை நம்பாத நேரத்தில்,
உயிரையும் விட அதிகமாக நம்பியவர்.

என் கைகளில் புத்தகம் இருக்க வேண்டும் என்பதற்காக,
தன் கைகளில் காயங்களை சுமந்தவர்.

என் வாழ்க்கை உயர வேண்டும் என்பதற்காக,
தன் வாழ்க்கையை படிக்கட்டாய் மாற்றியவர்.

அம்மா அன்பை கற்றுக் கொடுத்தாள்,
அப்பா வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார்.

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்,
அப்பாவின் அன்பை யாரும் தர முடியாது.

இன்று நான் தலைநிமிர்ந்து நிற்கிறேன் என்றால்,
அது என் அப்பா தலைகுனிந்து உழைத்ததால்தான்.

என் வாழ்வின் முதல் ஆசிரியர் அவர்,
என் வெற்றியின் முதல் காரணம் அவர்.

என் இதயத்தின் கடைசி துடிப்பு வரை,
என்றும் என் ஹீரோ... என் அப்பா மட்டுமே! ❤️

June 10, 2026, 01:38:16 pm
Reply #4

Ladybugs

Re: கவிதையும் கானமும்-069
« Reply #4 on: June 10, 2026, 01:38:16 pm »
♥️️ சொர்க்கத்தில் இருக்கும் அப்பாவுக்காக ♥️️

வானத்தைப் பார்க்கும் ஒவ்வொரு நேரமும்,
உன் முகம்தான் என் நினைவில் வருது அப்பா. ♥️️

இன்று நீ என் பக்கத்தில் இல்லை என்றாலும்,
உன் அன்பும் ஆசீர்வாதமும் என்னோடுதான் இருக்கு. ♥️️

உன் குரல் கேட்க ஆசையா இருக்கு,
உன் கை பிடிக்க மனசு ஏங்குது. ♥️️

காலம் உன்னை என்னிடம் இருந்து பிரித்தாலும்,
என் நெஞ்சில் இருந்து உன்னை பிரிக்க முடியவில்லை. ♥️️

வானத்தில் ஒரு நட்சத்திரம் போல நீ மின்னும் போதெல்லாம்,
"என் அப்பா என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்" என்று நான் நம்புகிறேன். ♥️️

மிஸ் யூ அப்பா...

உன் நினைவுகள் என்றும் என் மனதில் வாழும்,
உன் மகள் நான் என்றும் உன்னை நேசிப்பேன். ❤️️

மரணம் உடல்களை மட்டும் பிரிக்கும்,
அன்பும் நினைவுகளும் என்றும் பிரியாது. ♥️️

️♥️

வானம் தூரம் என்றாலும்,
அப்பா நினைவுகள் தூரம் அல்ல♥️️

கண்கள் தேடும் ஒவ்வொரு நேரமும்,
நெஞ்சம் அவரை கண்டுபிடிக்கும். ♥️️

என்றும் உன்னை நினைத்து ஏங்கும் உன் மகள்... ❤️️
« Last Edit: June 10, 2026, 05:41:44 pm by Ladybugs »

June 11, 2026, 04:20:58 pm
Reply #5

Shahidm

Re: கவிதையும் கானமும்-069
« Reply #5 on: June 11, 2026, 04:20:58 pm »
கைகளில் கனவுகள், இதயத்தில் கடமை:

சூரியன் மறையும் நேரம்,
வானம் சிவந்த சாயலில்,
என் நிழல் நீள்கிறது
இரு சிறு கைகளின் வெப்பத்தில்.அவர்கள் சிரிப்பு,
என் விழுந்த நண்பர்களின் நினைவுகள்,
அவர்களின் உயிரின் தொடர்ச்சி,
என் வாழ்வின் பொறுப்பு.
2019-இல் விழுந்த வீரர்கள்,
அவர்களின் குழந்தைகள் இன்று என் பக்கம்,
அவர்களின் கடிதங்கள்,
அவர்களின் சிறு ஆசைகள்
என் மார்பில் பொறிக்கப்பட்ட வாக்குறுதிகள்.“அப்பா எங்கே?” என்று கேட்கும் கண்கள்,
என் உள்ளம் கிழிக்கிறது,
ஆனால் என் கைகள் பதிலளிக்கின்றன:
“உன் அப்பா என் தோழன்,
இனி நான் தான் உன் காவலன்.”
பறவைகள் பறக்கும் வானம்,
அவர்களின் ஆன்மாவின் சின்னம்,
என் நடை ஒவ்வொரு அடியிலும்,
அவர்களின் கனவுகளை தாங்கி செல்கிறது.குழந்தைகளின் சிரிப்பு
என் போரின் வெற்றி,
அவர்களின் கண்ணீர்
என் கடமையின் சோதனை.நான் ஒரு வீரன்,
ஆனால் இன்று ஒரு தந்தை,
என் தோழர்களின் பிள்ளைகளுக்கு,
என் உயிரின் அர்த்தம்.
அவர்களின் சிறு ஆசைகள்
ஒரு புத்தகம், ஒரு விளையாட்டு,
ஒரு பள்ளி பை, ஒரு கனவு,
அவர்களின் சின்னச் சின்ன தேவைகள்
என் இதயத்தில் ஒளியாக மாறின.அவர்களின் சிரிப்பில்,
என் தோழர்களின் உயிர் இன்னும் வாழ்கிறது,
அவர்களின் கண்ணீரில்,
என் கடமையின் சோதனை தொடர்கிறது.ஒவ்வொரு இரவும்,
அவர்களின் கனவுகளை நான் காக்கிறேன்,
ஒவ்வொரு காலையும்,
அவர்களின் நாளை ஒளியால் நிரப்புகிறேன்.என் தோழர்களின் உயிர்
நாட்டின் மண்ணில் கலந்தாலும்,
அவர்களின் குழந்தைகள்
என் உயிரின் அர்த்தமாக மாறினர்.அவர்களின் சிரிப்பு
என் வெற்றியின் சின்னம்
அவர்களின் நாளை
என் வாழ்நாள் வாக்குறுதி.

By Shahidm

June 11, 2026, 04:29:46 pm
Reply #6

Wings

Re: கவிதையும் கானமும்-069
« Reply #6 on: June 11, 2026, 04:29:46 pm »
he Love That Never Lets Go ❤️
One of your hands held my little finger,
The other held my sister’s hand.
Between those two hands, Appa,
You were our entire world.
The paths we walked with you under the evening sun
Were not just roads;
Today, they are a beautiful garden blooming with memories.
More than the world you showed us,
The smile that lit up your face when you said, "Look over there..."
Is still my favorite memory.
While the world chased after treasures,
You just smiled and proudly said,
"Both my treasures are right here at home."
When we laughed, your eyes brightened.
When we were happy, that became your happiness.
You were the hands that taught me how to ride a bicycl
You were the courage that caught and lifted me when I fell.
Even when I made mistakes, you didn't judge;
You were the love that only asked, Are you okay
On days when my marks were low,
You chose to give me chocolates instead of anger.
When the world judged and measured me,
You were the eyes that saw me simply as, a kid
Beyond grades, beyond wins and losses,
You were the very first heart to love me just for who I am.
Even when I bowed my head in failure,
You were the shadow standing faithfully by my side.
Like an umbrella before the rain,
Like a light before the darkness,
Like strength before fear...
You were the constant reassurance always by my side.
Time moved on, and we grew up.
But to this day, you are our strength.
Tomorrow, even if old age slows your steps,
And time takes away a bit of your strength,
The hands that once supported us—we will hold them today.
You, who stood as our strength back then—we will stand as your strength tomorrow.
Because...
No matter how far life takes me,
The moment I walk by your side,
I am still your little girl.
A love that never lets go...
An affection that never fades...
An endless protection...
That is you, Appa❤️