Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-069  (Read 81 times)

June 08, 2026, 06:42:01 pm
Read 81 times

RiJiA

கவிதையும் கானமும்-069
« on: June 08, 2026, 06:42:01 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-069


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: June 08, 2026, 07:33:35 pm by RiJiA »

Today at 07:35:47 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-069
« Reply #1 on: Today at 07:35:47 am »
யார் இவர்கள்....?

[/color]

எங்களின் காதலுக்கு கிடைத்த உன்னதமான பரிசு நீங்கள் இருவரும்..

உங்கள் ஒரு நொடி பிரிவிலும் துடித்திடுவேன் ...
உங்களை அள்ளி எடுத்து என் மார்பில் பூட்டிக்கொள்வேன் ...
தாலாட்டு பாடி என் நெஞ்சறையில் உறங்க வைப்பேன் ...
என் இதயத்துடிப்பை அடக்கிடுவேன் உங்கள் உறக்கம் கலையாதிருக்க...
முதல் முறை உங்களை பார்த்து உங்கள் விரலுக்குள் என் விரல் பதித்து உங்களை தூக்கி முத்தமிட்டதை எந்த நாளிலும் மறக்க முடியாது ...
அழகான வலியை தந்து என்னை தாயாக்கி சென்ற என் உயிரே ...
உந்தன் பனிக்குடம் உடைய இருவரின் வருகைக்காக வலியெல்லாம் கடந்து
இருவரையும் பார்க்க ஆவலாய் காத்திருந்த நாள் ....
உந்தன் பெண்மையின் தாய்மை பொருளை உன் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்த நாள் ....
உந்தன் வாழ்க்கையில் உன்னால் மறக்கமுடியா உன் தாய்மையின் நாள் ...
இவர்கள் இருவரின் பிறந்த நாள் ...
முதல் முறை உன் மார்பில் இவர்களை வைக்கும் பொழுது தானாக பால் சொரிய இருவரும் பால் குடித்த ஞாபகம் மறக்கவில்லை ...
உன் அன்போடு உன் உதிரத்தை பாலாக்கி இருவரின் பசி போக்கினாய் ....
கொஞ்சம் நகம் வளர்ந்ததும் மார்பில் நகத்தால் கீறிய வலி ...
சுகமான வலி ...
இருவரும் பால் குடிக்கும் பொழுது நீ இருவரின் நகம் கடித்து துப்புவாய் ...
ஆனாலும் இருவருக்கும் அவ்வளவு சீக்கிரமாக நகம் வளர்ந்துவிடும் ...
ஒருவர் பின் ஒருவராக உந்தன் காலில் போட்டு குளிப்பாட்டும் பொழுது ....
ஒன்றுக்கு மூன்று முறை நீர் சரியாக விளாவியுள்ளதா எனப்பார்ப்பாய் ....
இருவரின் கண்ணில் நுரை படும் பொழுது ...
அவர்களோடு நீயும் சேர்ந்து அழுவாய் ....
இருவரும் அம்மா என்று அழைக்கும் பொழுது ஆர்ப்பரிக்கும் ஆனந்தத்தோடு நன் உலகம் பிறக்கிறது ...
இருவரையும் வாரி அணைத்து உச்சி முதல் பாதம் வரை மகிழ்ச்சியின் எல்லையில் ஆயிரம் ஆயிரம் முத்தமிட்டோம் ...
இருவரும் தவழும் பொழுது அவர்களோடு நன் மனமும் தவழ்ந்தது ...
இருவரும் தத்தி தத்தி முதல் நடை நன் மார்பு கூட்டில் நடக்கும் பொழுது மனதின் உணர்வை சொல்ல வார்த்தை இல்லை ...
இருவரும் நடை பயிலும் பொழுது அவர்களோடு சேர்ந்து நாமும் நடை பயின்றோம்...
அவர்கள் தவறி விழும்பொழுது நாம் பதறி போனோம் ...
ஓடி வந்து  தூக்கி வைத்து வேடிக்கை காட்டினோம் ...
ஆராரோ தாலாட்டு பாடி மடியினில் தூங்க வைப்போம் ...
உன் கூரை புடவையில் ஆனை கட்டி ஊஞ்சலில் கண்ணுறங்க வைப்போம் ...
நாம் ஓடி ஒளிந்து அவர்கள் முகத்தை பார்த்து சிரிப்போம் ...
 அவர்களுனுடனே ஓடி ஒளிந்து எட்டிஎட்டி பார்த்து புன்னைகை பூப்தோம் ...
ஆனால் அவர்கள் இருவர் போல் அழகாய் யாராலும் சிரிக்க முடியாது ....
அவர்களின் கன்னக்குழி சிரிப்பில் நம்மை மறந்தோம் ....
நம் வலிகளை மறந்தோம் ...
நம் கண்ணே பட்டு விடும் என்றே சொல்லி கண் மையில் திருஷ்டி பொட்டு வைத்திடுவோம் ...
இருவருக்கும் பல் முளைக்க ஆரம்பித்ததும் உந்தன் மார்பில் முதலில் கடித்தார்கள் ...
வலிக்கவில்லை ...
மாறாக மகிழ்ச்சி பொங்கியது ....
சோறு ஊட்டிவிடும் பொழுது ...
விரலை கடித்திடுவார்கள் ...
சிரித்துக்கொண்டே இருவரின் தலையை வருடிவிட்டு ரசித்தோம் .....
வெளியே செல்லும் பொழுது
வெயில் மழை தூசு மாசு இருவரையும் அண்டாதிருக்க தோளோடு அணைத்துக்கொண்டோம்.....
பின்னாளில் இருவரையும் என் கையில் கொடுத்து சென்று விட்டாய்...
இன்று நானோ உனை பிரிந்த தனிமையில் இருவரின் கை பிடித்து நடக்கிறேன் வானில் உன் உருவம் கண்டு..

இவர்கள் கொஞ்சுகிறார்களா பேசுகிறார்களா
எனப் பிரித்தறியலாது?
ஆனால் என் கண்ணங்களை கெஞ்சிடச் செய்திடுகிறார்கள்!
நஞ்சு புகா இனிய மழழை மொழி கற்றுக் கொடுக்கிறார்கள்
என்னை மழலையாகவே ஆக்கி விளையாடுகிறார்கள்!
பூக்களோடு பூக்களாகக் கலந்திருப்பார்கள்
அந்த பூக்களுக்கே புன்னகை சிந்தக் கற்றுக் கொடுக்கிறார்கள்!
தத்தி தத்தி நடந்திடுவார்கள்
கிள்ளை மொழி பேசிடுவார்கள்
வஞ்சமிலா புன்னகையில் என்னை கவர்ந்திடுவார்கள்!
மண்ணைப் பிசைந்து அதை இசைந்து
தன் பிஞ்சு விரல்களிலே செதுக்கிடுவார்கள் மணற் சிற்பங்களை!
இவர்கள் பஞ்சு விரல் பட்டால் உயிரிலா
பொருளெல்லாம் உயிர்த்தெழுந்திடுமே!
பார்ப்ப தெல்லாம் கை நீட்டிடுவார்கள்
வாங்கிதரச் சொல்லி என்னைக் கேட்டிடுவார்கள்!
நான் ரசித்த உலகத்தை பாரடாயென்றால்
அவர்கள் உலகிற்கு என்னை கவர்ந்து சென்றிடுவார்கள்!
இவர்களை கண்டால் என் துன்பமெல்லாம் பறந்திடுமே
புத்தம் புதிதாய் பிறந்திடுவேனே!
பிறர் இவர்களை கண்டால் வசிய முகத்தில் மயங்கிடுவர்
மரண மில்லா இன்பம் பெற்றிடுவர்!
இவர்கள் என்னைக் கண்டால் காற்றினிலே மிதந்திடுவேன் ஆரத்தழுவிடுவான் என் கண்ணங்களில் முத்த மழை பொழிந்திடுவார்கள்!

யார் இவர்கள்?

இவன் எனது மகனா இல்லை என் தந்தையா..?

இவள் எனது மகளா இல்லை என் அன்னையா..?

என்றும் உங்கள் நட்பில்.....

Today at 08:28:54 am
Reply #2
Re: கவிதையும் கானமும்-069
« Reply #2 on: Today at 08:28:54 am »
மாலையும் வந்தாச்சு...
சூரியனும் போயாச்சு...
ஆனா இந்த photo எடுக்குறதுக்காக 47 take ஆயாச்சு...
"நேரா பாருங்க..."
"கீழ பாக்காதீங்க..."
"சிரிங்க..."
"அவ்வளவு சிரிக்காதீங்க..."
"நடங்க..."
"வேகமா நடக்காதீங்க..."

😭😭😭
பாருமா...
கேமராமேன் இவ்வளவு பாடா படுத்துறானே...
நீ எதுக்கு இப்படி ஒரு photo கேட்டேன்னு மகளிடம் கேட்டேன்...

அவள் சிரிச்சுக்கிட்டே சொன்னாள்...

"அப்பா... இந்த photo future-க்கு தேவை..."

"ஏன்?"

"நாளைக்கு நான் கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போயிட்டா..."

"Status போடணும்..."
"என்ன status?"

'Miss those days when my ATM card used to walk beside me...' 🤣🤣

நான் அதிர்ச்சில நின்னுட்டேன்...
உடனே பக்கத்துல இருந்த பையன்
"அக்கா... ATM card மட்டும் இல்ல...
Unlimited recharge...
Swiggy coupon...
Amazon Prime membership...
எல்லாமே அப்பாதான்..." 🤣

அதுக்கு அவள்,
"அதான் ஒரு photo-ல எல்லாத்தையும் capture பண்ணிக்கணும்னு நினைச்சேன்..."
😭😭😭


 
அந்த நேரத்துல,
camera man மெதுவா சொன்னான்...
"சார்... 48th take ready..."
நான் கேட்டேன்...
"ஏன்?"
அவன் சொன்னான்...
"சார்... இந்த expression-தான் natural-ஆ இருக்கு!" 🤣🤣🤣
அந்த கணம் உணர்ந்தேன்...
இவர்கள் என் பிள்ளைகள் இல்லை...
என் monthly expenses-க்கு மனித உருவம் என்று... 🔥🤣