Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-067  (Read 10027 times)

April 13, 2026, 06:13:14 pm
Read 10027 times

RiJiA

கவிதையும் கானமும்-067
« on: April 13, 2026, 06:13:14 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-067


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.






மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: May 18, 2026, 09:40:48 am by RiJiA »

April 14, 2026, 05:40:42 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-067
« Reply #1 on: April 14, 2026, 05:40:42 am »
ஒரு கவிதை எழுத ஆசை...



உன் கார் குழலின் கருப்பு மை தனை
கொஞ்சம் கடன் வாங்கி ..
உன் கருப்பு பொட்டு
தனை தலைப்பாய் இட்டு..
உன் கண்கள் இரண்டை கொண்டு
உலகை கண்டு .....
உன் மூக்கின் நுனியில்
மூச்சு தனை கடன் வாங்கி....
உன் செவ்விதழின்
வரிகளை வசனமாக்கி....
உன் வெண் சங்கு கழுத்து தனை
வெள்ளை காகிதமாக்கி.....
உன் கன்னம் இரண்டில்
வண்ணம் குழைத்து....
உன் மார்பின் மீது
கொஞ்சம் உறங்கி....
உன் கைகள் இரண்டை
பிடித்து கொண்டு
பத்து விரலில்
முளைத்த குட்டி நகங்களைப் பற்றி ....
உன் பிஞ்சு பாதம்
நடக்க
பூமி புனிதம் அடையும் இரகசியத்தை ....
அந்த வருணபகவான் அளித்த மழையெனும் பரிசில் நீ கையில் குடையுடனும் அந்த செல்ல சிரிப்பில்
பல வெள்ளை மனதை
கொள்ளை கொண்ட அழகை கண்டு ...
குட்டி தேவதையே உன்னை பற்றி
ஒரு கவி எழுத கோடி ஆசைக் கண்மணியே....

கால் முளைத்த வண்ணத்துப் பூச்சிகள்
மனதுக்குள் தேன் குடிக்குது...

சின்னஞ்சிறிய இதயத்திற்குள்ளே
சிறகடித்துப் பறக்குது.

இறகு இல்லா வான்பறவைகள்
மழலையாய் இங்கு வந்ததோ?
இதயம் கவரும்
மனம் கொத்திப்பறவைகள்
நம்மையும் கவர வந்ததோ?

குட்டி குட்டி சேட்டைகளில் தான்
எத்தனையோ அழகு இருக்கு.
நீ செய்யும் குறும்பிலே தான்
எல்லையில்லா அன்பும் இருக்கு.

மானிடப் பிறவியில்
மகிழ்ச்சியை மட்டுமே
தந்திடும் பருவம் இதுதானே!

மகிழ்ச்சி தேனை அள்ளிப் பருகிட
மனமும் ஏங்குது தானே!

ஆதவனும் உன்னுடன் போட்டியிட்டு
ஓய்ந்தே போகிறான் மாலையில்.
நீ உறங்கிய பின்னே சந்திரனும்
மெதுவாய் வந்து போகிறான்.

உந்தன் முகத்தில் காணும் சிரிப்பில்
கடவுளும் அடிமை தான்.
நீ சொல்வதை செய்ய என்னை மாற்றிடும்
நீயும் கடவுள் தான்.

பிஞ்சு இதயத்திற்குள் நஞ்சு சேராது
நாமும் காத்திடுவோம்.
மழலையோடு சேர்ந்து மகிழ்ச்சியை
நாளும் பகிர்ந்திடுவோம்......

என்றும் உங்கள் நட்பில்

April 14, 2026, 10:27:50 pm
Reply #2

Shahidm

Re: கவிதையும் கானமும்-067
« Reply #2 on: April 14, 2026, 10:27:50 pm »
“குட்டியின் குடை :  சிரிப்பும் கண்ணீரும்”

மழைத் துளிகள் விழும் ஒவ்வொரு முறையும்,
 அவனின் மனதில் ஓர் இசை ஒலித்தது.
அம்மாவின் குரல், அப்பாவின் சிரிப்பு,
இன்று நினைவுகளின் நிழலாக மட்டுமே இருந்தது.


குட்டி கைகளில் குடை பிடித்தான்,
ஆனால் அந்த குடை அவனுக்கு நிழல் கொடுத்தது மட்டும்,
அன்பின் அரவணைப்பு தரவில்லை.

குடையின் கீழ் அவன் தனிமையில் நின்றான்,
 மழைத் துளிகள் வெளியில் விழுந்தாலும்,
உள்ளத்தில் கண்ணீர் துளிகள் பெருகின.

குடை அவனை காத்தது மழையிலிருந்து,
ஆனால் பெற்றோரின் பாசமின்றி,
அவனின் உள்ளம் வெறுமையால் மூழ்கியது.


மழை நாளில் நண்பர்கள் சிரித்துக் கொண்டாட,
அவன் மட்டும் குடையின் கீழ் அமைதியில் நின்றான்.
விளையாட்டுப் பொம்மைகள் சிதறின,
ஆனால் அவனின் சிரிப்பு தொலைந்தது.

மழைத் துளிகள் அவனின் தோளில் விழுந்தாலும்,
 அம்மாவின் கைகள் பிடித்த உணர்வு இல்லை.
 அப்பாவின் தோளில் கிடந்த அமைதி,
இன்று வெறும் நினைவுகளாக மட்டுமே இருந்தது.


மழை நின்ற பின் வானவில்,
அவனின் நினைவுகளை வண்ணமிட்டது.
 அன்பின் சுவாசம் தொலைந்தாலும்,
நினைவுகள் அவனின் உயிராய் வாழ்ந்தது.


ஒவ்வொரு மழைத் துளியும்,
அவனின் கண்ணீரை பிரதிபலித்தது.
 ஒவ்வொரு வானவிலும், அவனின் கனவுகளை மீண்டும் எழுப்பியது.

குடையின் கீழ் தனிமையில் நின்ற குட்டி,
அன்பின் தடம் அழியாது, நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.

மழைத் துளிகள் போல வாழ்வின் பாதையில்,
அன்பின் தடம் என்றும் அழியாது.
குட்டியின் மனதில் தொலைந்த பெற்றோர்,
 நினைவுகளாய் என்றும் நிலைத்தனர்.


By
Shahidm
« Last Edit: April 14, 2026, 10:31:47 pm by Shahidm »

April 17, 2026, 06:41:33 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-067
« Reply #3 on: April 17, 2026, 06:41:33 pm »
சின்ன வயசுல
வானம் கருக்கிக் கொண்டு வந்தாலே
“இன்னைக்கு பள்ளிக்கூடம் இல்லடா!”ன்னு
மனசு முன்னாடியே குதிச்சாடும்.

மழை வரலன்னா கூட
வாசல் முன்னாடி நின்னு
“மேகத்தாயி… ரெண்டு குடம் ஊத்து!”ன்னு
மேலே பார்த்து வேண்டுவோம்.

மழை கொட்ட ஆரம்பிச்சா
புத்தகத் தாளை கிழிச்சு
கப்பல் ஒட்டி விடுறதுக்காக
நாம பெரிய சாமர்த்தியக்காரன் ஆகிடுவோம்.
அந்த காகிதக் கப்பல்
தண்ணீரோட போக ஆரம்பிச்சா
நாம பின்னால ஓடி
“டேய் பிடிங்கடா… கடல் தாண்டி போயிரும்!”ன்னு கத்துவோம்.

இரவு முழுக்க மழை பெய்தாலே
காலைல கண் திறந்த உடனே
ஜன்னல் திறந்து பார்த்து
“தெரு நனைஞ்சிருக்கு… இன்று லீவு தான்டா!”ன்னு சந்தோஷப்படுவோம்.
பிறகு தொலைக்காட்சி செய்தியில
“பள்ளிகளுக்கு வழக்கம்போல் வகுப்பு”ன்னு கேட்டதும்
முகம் மட்டும் சுருங்கி
“இவ்வளவு மழை பெய்தும் திறந்திருக்குதா!”ன்னு பள்ளியையே திட்டுவோம்.

சினிமா பார்த்த ஆசையில
மழை வந்தா ஆடணும்னு
சருக்குல விழுந்தாலும்
எழுந்து ஹீரோ மாதிரி சிரிச்சுக்கிட்டு நிற்போம்.
கிரிக்கெட் வேற கதை…
பந்து சேற்றுல விழுந்தா
அதை எடுக்கப் போனவனே
முதல்ல வழுக்கி விழுவான்.

“இது பெரிய மைதானம் டா!”ன்னு
வீதி நடுவுலயே போட்டி வைப்போம்.

அதுக்குள்ள
மழை வந்தா பஜ்ஜி, போண்டா தின்னணும்னு
வாசனைக்கு நாக்கு ஊறிடும்.
கடை முன்னாடி நின்னு
காசு இல்லாம pockets தட்டி பார்த்து
வாசனைதான் வாங்கிக்கிட்டு திரும்புவோம்.

மறுநாள் தும்மல் வந்தா
“அம்மா… உடம்பு சோர்ந்து போச்சு…”ன்னு
சுவரை பிடிச்சு நடிப்போம்.
பள்ளி வண்டி சத்தம் கேட்ட உடனே
போர்வைக்குள்ள புகுந்து
பெரிய நோயாளி மாதிரி கிடப்போம்.
அம்மா “சாப்பிடுவியா?”ன்னு கேட்டா
நோய் பாதி ஓடிடும்…
“பள்ளிக்கூடம் போடா!”ன்னு சொன்னா
மீதி நோயும் உடனே வந்து சேரும்!

எப்படி பார்த்தாலும்
நம்ம சின்ன வயசுல
மழை வந்தா மட்டும் போதும்…
நம்ம மனசு மீண்டும் குழந்தையா மாறிடும். ☔🥹

April 18, 2026, 07:11:52 am
Reply #4

Crowny

Re: கவிதையும் கானமும்-067
« Reply #4 on: April 18, 2026, 07:11:52 am »
மழைத் துளியும்... மலர் புன்னகையும்!

மின்னல் வெட்டி மேகம் கறுக்க,
மண்ணில் விழுந்தது மழைத் துளிகள்!
சின்னஞ்சிறு பாதங்கள் துள்ளித் குதிக்க,
சிதறிப் போனது கவலை வரிகள்...

வானவில்லின் வர்ணங்கள் உன் பின்னே,,,,
உன் சிரிப்பின் வண்ணங்கள் என் முன்னே,,,
மழைநீரில் நனைவது உடலல்ல  உன்...
மழலைச் சிரிப்பில் நனைவது என் மனதல்லவா...

மழை நீரில் துள்ளி குதிக்கும் பிஞ்சு கால்கள்....
பிஞ்சு கையில் பட்டு விழும் மழைத்துளிகள்....
ஒரு கையில் மஞ்சள் குடை ,,
அதுக்குள்ளே ஒழிந்து கொண்டு,,,
மழை நீரை தொட்டு  தொட்டு...
மொழி இல்லா வார்த்தை பேசுகிறாள்...
வானவில்லும் அவள் விளையாடும் அழகை கண்டு...
பல வண்ணங்களில் முகம் சிவக்கிறது...

மழையின் சங்கீதத்தில் மனம் தொலைந்து... 
கவலை இல்லா அந்த நொடிப்பொழுது...
வானுக்கும், பூமிக்கும் காதலை சொல்லும் அன்பு மழையில்
துள்ளி குதித்து விளையாடும் உன் அழகை கண்டு,
இந்த பூமியும் நாணம் கொள்கின்றது...

நேற்றைய கவலைகள் நிழலாய் தொடரட்டும்,
நாளைய பயங்கள் வழியில் மறையட்டும்.
ஆனால் உன் மஞ்சள் குடைக்குள் கீழே,
இந்த நிமிடம் மட்டுமே நித்தியமானது

ஆயிரம் கவலைகள் அலை மோதும் உலகில்,
ஒரு துளி மழையில் இத்தனை இன்பமா?
செருப்புகள் நனையட்டும்... ஆடை நனையட்டும்...
மனம் மட்டும் கறையின்றி வெண்மையாய் இருக்கட்டும்!

April 18, 2026, 08:38:00 am
Reply #5

Nilla

Re: கவிதையும் கானமும்-067
« Reply #5 on: April 18, 2026, 08:38:00 am »
       



                                           

                   .       ..           "மழை பேசும் என் மழலை நாட்கள்"



      வானம் லேசா இருட்ட ஆரம்பிக்கும்...
என் மனசுக்குள்ள குஷி பூக்க ஆரம்பிக்கும்!
தூறல் போட்டா போதும் தட்டுல வரும் சுடச் சுட பஜ்ஜி,
அம்மா கண்ணுல மண்ணைத் தூவிட்டு நனைய ஓடுவேன், நான் தான் எங்க வீட்டு செல்ல புஜ்ஜி!
​"மாடியில துணி காயுது ஓடிப் போய் எடுடி",
அப்படின்னு பாட்டி தரும் பாசமான குரலடி!
"மின்னல் அடிக்குது மரத்துக்கடியில நிக்காத பாப்பா",
அப்படின்னு பதட்டமா அதட்டுவார் எங்க அப்பா!
​"மழையில ஒளிஞ்சு பிடிச்சு விளையாடலாமா?"ன்னு கேட்கும் அண்ணன்,
குறும்பு ஐடியா கொடுப்பதில் அவன் தான் எங்க வீட்டு மன்னன்!
"அய்யோ அம்மா! தம்பியும் பாப்பாவும் நனைய பிளான் போடுறாங்க",
அப்படின்னு அக்கா நடுவுல ஓடி வந்து போட்டுக் கொடுப்பாங்க!
​யார் சொன்னது மழை தரும் வெறும் அமைதி?
எங்க வீட்ல அது தரும் ஒரு அழகான பரபரப்பு செய்தி!
மெதுவா நழுவி முற்றத்துல குதிச்சுப் பார்ப்பேன்,
மழைத் துளியை "ஆ"ன்னு வாயைத் திறந்து குடிப்பேன்!
​மழைத் துளி ஒவ்வொன்னும் ஒரு தாளம் போடும்,
என் கால் சலங்கையும் அதற்கேற்ப ஜதி பாடும்!
தகிடததிமி என நான் ஆடும் அந்த அபிநயம்,
மழைத் தூறலோடு சேரும்போது அதுவே ஒரு காவியம்!
​பேப்பர்ல கப்பல் செஞ்சு கால்வாயில விடுவேன்,
அது "டைட்டானிக்" மாதிரி கவுந்தா ஓன்னு அழுவேன்!
தெருவுல தேங்குமே குட்டி குட்டி குட்டை,
அதுல குதிச்சுத் தெளிப்பேன், ஏன்னா நான் ஒரு அழுக்கு மூட்டை!
​நைசா வீட்டுக்குள்ள நுழையப் பார்ப்பேன்,
அம்மா முன்னாடி வந்து நின்னா 'ஸ்டேச்சு' மாதிரி நிப்பேன்!
"சொன்னா கேக்க மாட்ட"னு முதுகுல விழும் ரெண்டு அடி,
"காய்ச்சல் வரும்"னு திட்டிட்டே தலையைத் துடைப்பாங்க மறுபடி!
​திரும்பி வர வழியில்லாத மாய நிலம் - என் "சிறுவயது",
இருந்தும் உயிரைத் தீண்டிப் போகுதே - இந்த "மழைப்பொழுது"!
​நாட்கள் நகர்ந்து போனாலும் தீராத - என் மழையின் ராகம்,
தூறல் விழுந்தா போதும் உயிர்த்தெழுமே - என் குழந்தை வேஷம்!
​காலம் என்னைக் கூட்டிச் சென்றாலும் மழையின் நேசம் போவதில்லை,
மேகம் முத்துக்களைச் சிந்தினால் போதும்... என் 'சின்ன வயசு' தொலைவதில்லை!

April 18, 2026, 08:43:43 am
Reply #6

Wings

Re: கவிதையும் கானமும்-067
« Reply #6 on: April 18, 2026, 08:43:43 am »
இன்று… மழை…
துளி துளியாக பாடும் ஒரு பாட்டு,
மண் மணம் தரும் ஒரு நினைவு,
இதயம் சிறு சிரிப்பில் இழுக்கும் நேரம்…

மழை வந்தாலே…
நினைவுகளும் சேர்ந்து வரும்,
சிறு சந்தோஷங்கள்
குழந்தை போல துள்ளி ஆடும்…

மழைத்துளிகள் நடுவே…
மெல்ல மெல்ல
மஞ்சள் நிறச் சிரிப்பாய்
ஒரு சின்ன உலகம் துளிர்க்கிறது…

வானத்தின் கீழ்
சுற்றி ஆடும் அந்த நொடியில்,
ஒவ்வொரு துளியும்
ஒரு சிரிப்பைத் தொட்டுச் செல்லும்…
மழை அவளோடு விளையாடும் போல…

அந்த அழகான நேரத்தில்…
நான் என்னையே மறந்து போகிறேன்…

சின்ன நான்—
அம்மா கையின் சுகம்,
அப்பா குடையின் நிழல்,
உலகம் சிறியது…
ஆனால் அன்பு பெரியது…

ஒரு சிறு தைரியத்துடன்
அந்த கையை நான் விடுகிறேன்,
மழையைத் தொட நான் முன்னே செல்கிறேன்…

பின்… ஒரு சிறு விழுதல்…
மண்ணின் குளிர் என்னைத் தழுவும்,
மழைத்துளி என் கண்ணீரில் கலந்தே
சிறு அமைதியை தரும்…

அதற்கு முன்…
அந்த கைகள் மெதுவாக என்னை சேர்க்கும்,
அந்த குடை நிழல் போல
மறுபடியும் என்னை சுற்றி கொள்ளும்…

அன்பு என்பது
மழையிலும் கூட
ஒரு சுகமான நிழல் தான்…

இன்று…
அந்த மழையின் கீழ் நின்று,
அந்த சின்ன உலகத்தை பார்க்கிறேன்…

நான் தான் அவள்…

ஆனால் இப்போது—
மழை இன்னும் அழகாக தான் இருக்கிறது…
நான் மட்டும் கொஞ்சம் அமைதியாகி விட்டேன்…

அதில் ஆடாமல்,
அதைப் பார்த்து சிரிக்கிறேன்…

ஏனெனில்…
அந்த சின்ன நான் இன்னும்
அந்த மழையில்தான் ஆடி கொண்டிருக்கிறாள்…

அவள் மழையில் சிரிக்கிறாள்…
நான் அவளை பார்த்து சிரிக்கிறேன்

April 18, 2026, 12:38:54 pm
Reply #7

MDU

Re: கவிதையும் கானமும்-067
« Reply #7 on: April 18, 2026, 12:38:54 pm »
சின்னச் சிறு வயதில் மழைத்தூறல் பொழியும் நேரம் வந்தால்,
மலையில் நனைவேன் என்ற ஆசை மனசுக்குள் முளைத்துக் கொண்டே இருந்தது.

மழையில் நனைக்கூடாது, என்று அம்மா குடையைத் திறந்து
என் நடைப்பாதையை மறைத்தாள்.

ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் அந்தக் குடை மெதுவாக மடங்கி,
என் கைகள் வானத்தைத் தேடி நீண்டு மழைத்துளிகளைப் பிடிக்க முயன்றது.

அந்த நொடியில் நான் மட்டும் இல்லை,
என் சிரிப்பும் மழையோடு சேர்ந்து சிறு ஆட்டம் ஆடியது.

அந்த நினைவுகள் இன்று கூட நனைக்கின்றன,
மழை இல்லாத நேரங்களிலும் கூட நினைவுகளாகா.

மழை வந்தாலே என் குழந்தை பருவம் கதவு தட்டும்
மழைத்தூறல் மட்டும் இல்லை அது என் நினைவுகளின் இசை

ஒவ்வொரு துளியும் அம்மாவின் அன்பை நினைவூட்டும்.
நனைந்த உடம்பை விட அந்த நாளின் சிரிப்பு தான் இன்னும் என் உள்ளத்தில் ஈரமாக இருக்கிறது.

சிறு வயதில் மழை விளையாட்டு தான் இன்று அது நினைவுகளின் துயரம்.
அப்போது குடையை மறைத்து ஓடிய நான் இப்போது அந்த நொடிகளைத் தேடி மழைக்காக காத்திருக்கிறேன்.

மழையில் நனைந்த கால்கள் மண்ணைத் தொடும் போது,
என் மனசு வானத்தைத் தொட்டது. அம்மா கூப்பிட்ட குரல் தொலைவில்,

மழை மட்டும் அருகில் அதுவே என் சிறு உலகம் மழை துளிகள் விழும் ஒலி
என் இதயத்தின் பழைய ராகம் குடை இருந்தாலும்,நனைந்தது என் உடல் மட்டும் இல்லை என் ஆனந்தமும் கூட.

மழையில் உயரமான இடம் தேடி அலையும் மனசு,
ஏன் என்றால் அங்கிருந்து இறங்கும் அந்த ஒரு பயணம்,

சிறு சுதந்திரத்தின் சிறகு போல இருந்தது கைகளை இரண்டையும் விடுத்து,
காற்றோடும் மழைத்துளியோடும் கலந்து சைக்கிள் ஓட்டிய அந்த நொடிகள்.

பயம் இல்லாத பரவசம் மழைத்துளிகள் முகத்தில் விழ,
கண்கள் பாதையைப் பார்க்காமல் கனவுகளைத் தான் பார்த்தன

சறுக்கி ஓடும் சக்கரம் சிரித்துக் கொண்டே பாயும் இதயம்,
அந்த இறக்கம் மட்டும் இல்லை என் குழந்தைப் பருவம் முழுவதும் ஓடியது.

இன்று நினைத்தாலே அந்த சின்ன சைக்கிள் பயணம்
என் வாழ்வின் பெரிய ஆனந்தம் போல தெரிகிறது.

மழை பொழியும் நேரத்தில் காற்றோடு கலக்கும் அந்த மண்ணின் வாசனை
அதற்கு ஈடு எனக்கு எதுவும் இல்லை…

முதல் துளி விழும் நொடியில் பூமி மூச்சு விடும் போல
அந்த வாசனை பரவுகிறது அதை சுவாசிக்கும் போது,

என் மனசு ஏதோ பழைய நினைவுகளைத் தேடி,
தானாகவே ஓடத் தொடங்குகிறது அந்த மண்வாசனை சொல்ல முடியாத ஒரு அமைதி,

புரியாத ஒரு ஆனந்தம் மழை நின்றாலும்,
அந்த வாசனை மட்டும் என் உள்ளத்தில் நீண்ட நேரம் தங்குகிறது

April 20, 2026, 10:11:03 am
Reply #8

Neelavaanam

Re: கவிதையும் கானமும்-067
« Reply #8 on: April 20, 2026, 10:11:03 am »
மழையும் குழந்தையும் குடையும்

மழை மேகம் மெதுவாக வந்து சேரும் நேரம்
வானம் தன் கதையை பூமிக்கு சொல்லும்
துளி துளியாக விழும் அந்த ஒலி
குழந்தையின் இதயத்தில் இசை உருவாக்கும் வழி

சின்ன கண்கள் வியப்பில் திறந்து
மழைத்துளிகளை எண்ணிக் சிரிக்கும்
வீதியெங்கும் நீர் ஓடையாகி
அதில் அவள்  கனவுகள் ஓடிச் செல்லும்

கால் தடங்கள் நீரில் மலர்ந்து
மீண்டும் மறைந்து விளையாடும்
சின்ன சிரிப்பு மழையோடு கலந்து
உலகமே மகிழ்ச்சியில் நனைந்து போகும்

கையில் குடை ஒன்று விரிகிறது
அது மழையில் இருந்து காத்துக்கொள்ள அல்ல
அதன் கீழ் ஒரு உலகம் பிறக்கிறது
அங்கு கவலைகள் யாருக்கும் இடமில்லை

துளிகள் குடையில் தட்டும் சத்தம்
மெல்லிசை போல காதில் முட்டும்
அந்த ஒலியில் குழந்தை மனம்
தன் கற்பனையை திட்டும்  வர்ணம்

காற்று வீசும் போது குடை ஆடும்
அதை பார்த்து குழந்தை மனம் கூத்தாடும்
சின்ன பயமோ மகிழ்ச்சியாக மாறும்
அது தான் வாழ்க்கையின் பாடமாக ஆகும்

மழை நனைத்தாலும் மனம் குளிரும்
அன்பின் தொடுதல் போல அது இருக்கும்
பூமி முழுவதும் புதுமை தரும்
பசுமை வாசம் மனதை நிரப்பும்

குடையின் கீழ் ஒரு சிறு பிரபஞ்சம்
அதில் சிரிப்புகள் பூக்கும் மலராகும்
மழை நாளும் ஒரு திருவிழா கோலம்
குழந்தைக்கு எதோ ஒரு புதிய  உலகம்

இந்த நினைவுகள் வாழ்நாள் முழுவதும்
இதயத்தில் மழையாகப் பொழியும்
அந்த அரும்பின் இதயத்தில்
இணையில்லா சந்தோஷம்


என்றும் அன்புடன்

நீலவானம்