Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-061  (Read 308 times)

December 15, 2025, 05:45:13 pm
Read 308 times

RiJiA

கவிதையும் கானமும்-061
« on: December 15, 2025, 05:45:13 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-061


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: December 15, 2025, 07:22:01 pm by RiJiA »

December 16, 2025, 10:53:36 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-061
« Reply #1 on: December 16, 2025, 10:53:36 am »
வேங்குழலில் இழைந்தாயடி....!


வெண்பாவில் கவிதையின் அழகு மிளிரும்
பெண் என்பாவால் உன்னழகை நான்
மிளிரச் செய்வேன் என் கவி வரிகளால்....

நதிக்கு நெளிவு அழகு
நிலவுக்குப் பிறை அழகு
கன்னத்தில் உன் குழிவு அழகு
கவிதைக்கு என் தமிழ் அழகு !
இந்த தமிழின் கவி வரிகளுக்கு அவன் அம்முவே அழகு!

அழகிய‌ நிலவை அருகில் கண்டேன் இன்று..
விளக்கின் ஒளியை உள்வாங்கி பிரகாசித்த அவள் முகத்தை என் கையில் ஏந்தி..

நீல வானத்தில்...!!!!
வெண்ணிற வான்மேகத்தின் உன் விழிகளும்...!!!

மலைச் சாரலுக்கு
முன் அந்தியில் தோன்றும்
கார்மேகத்தின் உன் கண் இமைகளும்...!!!

அதில்

சட்ரென மின்னலைப் போன்ற ஒளிவிசும்
உன் பார்வையும்
எப்பொழுதும் இயற்கையின் அழகுதான்...!!!

தாமரைக்கு போட்டியாய் நீரில் நிற்கும்
உன்னைக் கண்டதும்
தாமரைகள் தற்கொலை செய்தனவோ
செத்தமீனாய் மிதக்கிறதே...

எதிர்பாராத என் வாழ்வில்
எதிரே நீ தோன்றினாய்!

கண்களால் உன்னை கண்ட நொடியே
கண்மணிகளில் விழுந்தேன்...!

நிமிர்ந்து பார்க்க நேரமின்றி
நிழல் அதில்
நிலை மாறி விழுந்தேன்...!

சிரித்த நேரமே சிந்திக்க நேரமின்றி
சின்ன சிரிப்பில் விழுந்தேன்...!

அழகிய உன் முகம் அது
அங்கும் இங்கும் ஆட!
அசைய மறந்து ஆசையில் விழுந்தேன்...!

ஒருபுறம் ஒதுங்கிய கூந்தலில்
மறுபுறம் பார்க்க மனமின்றி
மயங்கி விழுந்தேன்...!

கட்டிய கைகளைக் கண்டு கண் விழிக்க முடியாமல் கறைந்து நின்றேனடி!
உயிரே
உன்னைக் கண்ட நொடியில்...!
சிலை அழகின் கலை மகளே
உனை படைத்து !

பிரம்மனும் தற்பெருமை
கொண்டானோ...!!!!

சிலையென வடிக்க தான்
நினைத்தான்!

சிந்தையில் உதிர்த்ததால்
உயிர் தந்து பூமியில்
விதைத்தானோ...!!!!

உயிர் கொண்ட ரோஜாவே
உனை அன்றி வேறொன்றும்
அழகாகதோன்றவில்லை இப்பூமியிலே...

உந்தன் இதழ்களில் ஒட்டிய சிவந்த சாயத்தின் வாசத்தை கேட்டுப்பார்
அது உன் மேல் நான்கொண்ட
காதலை சொல்லும்...

உந்தன் விழிகளில் குளிர்ச்சி காற்றை அள்ளி பூசும் கண்மையை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் வெட்டிய கூந்தலோடு உறவாடும் ஜன்னலோர காற்றை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் பாதங்களின் அழகை கூட்டும்
மருதாணியின் ஈரத்தை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்

உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் வீட்டு வெள்ளை நாய்குட்டியை
கேட்டுப்பார் அது என் காதலை சொல்லும்

ஏன் இவ்வளவு ஒரே ஒருமுறை என்
இதயத்துடிப்பை கேட்டுப்பார்
அது உன் பேரையே
சொல்லி துதிக்கும்...

தினமும் அவளுக்காக நான் காத்திருந்த நிமிடங்கள் என் அகராதியில் யுகங்கள்...

அவள் பார்வை என்மீது பட்டபோதெல்லாம் என் வாலிபம் உல்லாச
ஊஞ்சலாடியது...

அவள் என்பேரை
உச்சரிக்கும்போதெல்லாம் எனக்கு
மீண்டும் ஒருமுறை
இறந்து பிறக்க தோன்றுகிறது...

நான் அவளின் பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
என் மனதில் தேனருவி பாய்கிறது...

வண்ணம் தீட்டிய அவளின்
இதழின் கோடுகளில் சிக்கிய
என் இதயம் வழிதவறிய
ஆடுப்போல் அலைகிறது...

அவளின் புன்னகையில் மயங்கி என் இளமையும் மழலை பேசுகிறது...

அவளின் மௌனத்தை கண்டால் கடலலையும் ஊமையாகிவிடும்...

முன் யோசனையோடு எல்லாம்
படைத்தான் இறைவன்..
முக்கிய உறுப்பாய் கண்ணை
படைத்தான்..
படைத்தவன் அறிந்த என்னவளின்
ரகசியம் பற்றி கவலையில்லாது
படைப்பானவன் நான் படைக்க முனைந்தேன் எனக்கேற்றபடி...

படைத்தவனுக்கு அடுத்தபடி

வார்த்தைகள் என் படைப்பில் மொழியானது

மொழியில் உள்ள அழகு என்ற வார்த்தை

மொழிகள் அனைத்தையும் ஆராதித்தது

கண்ணை கவரும் அனைத்தும்
அழகு என்ற விதியானது

காதலுக்கும் அழகு என்ற
வார்த்தை அடிப்படையானது

இவையனைத்தும் கண்ணால் காண்பது

கண்ணால் காணாத அழகும் உள்ளது

அது மனதால் மட்டும் உணர்ந்துக்
கொள்வது

அழகு என்ற வார்த்தை சுகமானது

அது ரசிப்பவர்களின் சொத்தானது..,

போவதாய் சொல்லி விட்டு
உடனே போய் இருக்கலாம் !
இப்போது பார் !
நீ மெதுவாய் நடந்து போகும்
அழகை பார்த்து !

இன்னொரு "கவிதை " எழுத
வேண்டியதாய் போயிற்று !

அவளை கடந்துப்போகும் நொடியில்
என் ஐம்புலனும் மயங்க கண்டேன்...

அவள் கண்கள் பார்த்து நின்றேன்
என் உயிரை அள்ளிச்சென்றாள்...

அவள் உறவை நாடிச்சென்றேன்
என் இரவை இறவல் கேட்டாள்...

அவள் நெஞ்சில் ஒலிந்துக்கொண்டேன்
என் உயிரில் கலந்துக்கொண்டாள்...

அவளின் அடர்ந்த கூந்தலில்
என் இரவை பதுக்கிவைத்தேன்...

அவள் மடிக்கு ஏங்கிய என் மனதை
துடிக்க வைத்து துதிக்க வைத்தாள்...

என் தனிமைக்கு துணையாக
அவளின் நினைவை அனுப்பி வைத்தாள்

அவள் நினைவும் என் நினைவும்
உரசிக்கொண்டு பூக்கள் பூத்தன..

« Last Edit: December 16, 2025, 01:51:34 pm by Limat »

December 16, 2025, 08:08:49 pm
Reply #2

Shahidm

Re: கவிதையும் கானமும்-061
« Reply #2 on: December 16, 2025, 08:08:49 pm »

அன்பின் மௌனக் கவிதை

அன்பே உன் கண்கள் என் கனவின் வாசல், 
உன் பார்வை மட்டும் போதுமே, என் வாழ்வை மாற்ற… 

மௌனத்தில் பேசும் உன் விரல்கள், 
என் முகம் தொடும் போது, பூமி சுழல்கிறது போல… 

உன் சிரிப்பில் என் சுவாசம் மலர்கிறது, 
உன் நிழலில் என் நிம்மதி தங்குகிறது…

நாம் பேசாத வார்த்தைகள் கூட, 
இதயத்தில் இனிய கவிதையாக பிறக்கின்றன…

உன் பார்வையில் என் புலம்பல் கரைந்து, 
உன் மௌனத்தில் என் உயிர் உருகி பேசுகிறது…

உன் சுவாசம் என் சுவாசத்தில் கலந்தால், 
உலகமே நின்று நம்மை கேட்கிறது போல…

உன் கைகளில் என் கனவுகள் தங்கும் போது, 
என் வாழ்வு ஒரு புனிதக் கவிதை ஆகிறது…

உன் சிரிப்பில் என் உலகம் புதிதாய் மலர்கிறது, 
உன் மௌனத்தில் என் ஆன்மா முழுதாய் நிறைகிறது…

நீ என் கவிதையின் உயிர், 
நான் உன் கனவின் நிறம், 
நாம் இருவரும் சேர்ந்து,
காதலின் நித்திய வரிகள்…
« Last Edit: December 16, 2025, 08:12:40 pm by Shahidm »

December 16, 2025, 09:02:47 pm
Reply #3

MDU

Re: கவிதையும் கானமும்-061
« Reply #3 on: December 16, 2025, 09:02:47 pm »
உன் விழிகளில் விழுந்த என் பார்வை.
உயிரின் மொழி பேசத் தொடங்கியது.

கன்னம் தொடும் அந்த மென்மையான கை.
காலமெல்லாம் எனக்கு காவலானது.

ஒரு நொடிப் பார்வையில்
ஆயிரம் கனவுகள் விதைத்தாய்,

உன் மௌன சிரிப்பில்
என் காதல் கரை புரண்டு ஓடியது.

உன் கன்னத்தில் என் விரல்கள் பதித்த அந்த நொடியில்,
உலகமே நின்றுவிட்டது போல இருந்தது

பேசாத உன் கண்களில்
என் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்க ஆசைப்பட்டேன்.

உன் மூச்சின் சூட்டில் என் உயிர் , உயிர் பெற்றது,
என் பெயரை விட நீ அழைத்த ஒரு பார்வைதான் எனக்கு அடையாளமானது.

நீ அருகில் இருந்தால் போதும் என் கவலை எல்லாம் மறந்து
நான் உன் காதலன் ஆகி விடுகிறேன்.

ஒரு காலத்தில் உன் கைகள் என் முகத்தைத் தாங்கின,
இன்று அதே நினைவுகள் என் கண்ணீரைத் தாங்குகின்றன.

உன் முகத்தை தாங்கிய என் கை,
இன்று உன் நினைவுகளை கூட
தாங்க முடியாமல் நடுங்குகிறது.

நீ பார்த்த அந்த பார்வை இன்னும் உயிருடன்,
ஆனால் நீ இல்லை.அணைத்த அந்த கைப்பிடிப்பு மட்டும்
என் மனதை விட மறுக்கிறது.

நீ பார்த்த அந்த பார்வை
இன்னும் என் மனதில் உறைந்து கிடக்கிறது,
ஆனால் நீ இல்லை என்பதே என் உயிரின் தினசரி மரணம்

என்றென்றும், என்று சொன்ன அந்த வார்த்தைகள்
இன்று காற்றிலும் இல்லை நினைவிலும் இல்லை

ஆனால் அதை நம்பிய என் இதயம் மட்டும்
இன்னும் அன்றே நின்று துடிக்கிறது.

என் விரல்கள் தொட்ட உன் முகத்தை,
மீண்டும் ஒரு முறை கூடதொட்டுவிட முடியாமல் போன நாளிலிருந்து…

இரண்டு கைகள் இருந்தும் எல்லாவற்றையும் இழந்தவன் போல
நான் வாழ கற்றுக்கொண்டேன்.

அழ முடியாத வலியோடு
ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்,

நான் உயிரோடு இருப்பது
நீ திரும்ப வருவாய் என்பதற்காக அல்ல

நீ விட்டுச் சென்ற காதல் பார்வை,
கடைசி மூச்சு வரை

நான் உணர வேண்டும் என்பதற்காகத்தான்
என்னை உயிரோடு விட்டுச் சென்றதோ.

அந்த ஒரு பார்வையின் நினைவே
என் வாழ்க்கை முழுக்க வலியாகவும் வாழ்க்கையாகவும் மாறிவிட்டது.

December 16, 2025, 10:59:29 pm
Reply #4

Vedhika

Re: கவிதையும் கானமும்-061
« Reply #4 on: December 16, 2025, 10:59:29 pm »
   உன் விழிகளில் தொலைந்தவள்

காற்றைக் கண்டவுடன் நடனமாடும் மரங்களைப் போல, அவன் கண்களைக் கண்டதும் என் மனமும்  நடனமாடுகிறது.

அந்தக் கண்களின் ஓரத்தில் ஒரு கவிதை

என்னுள்ளே தினமும் வாசிக்கிறது..

என் உலகம் முழுவதும் அவன் விழிகளின் பிம்பமாய்..
அந்த பிம்பங்கள் மௌனமாய் என்னிடம் பேசுகின்றன..

மௌனங்கள் முதன் முதலாய் சத்தம் போடுகின்றன..

மௌனமாய் பேசியே வார்த்தைகளை தின்றாய்..

மெல்லமாய் வீசியே என்னை நீ கொன்றாய்..

உன் விழியின் கருவிழிக்குள் நான் தொலைந்த தருணம் தான் எனக்குள் காதல் பிறந்தது..

அது நீ இட்ட இமைகளின் சிறை, அந்த சிறை வானம் போல அளவற்ற ஆழம்....

அதில் மூழ்கிப் போகவும் சம்மதம் மீண்டும் கரை சேரவும் விருப்பமில்லை..

இனிப்பை விட சுவை மிகுந்ததாய் நம் கனவுகள் மாறியிருக்கின்றன..

நந்தவனங்களும் பூஞ்சோலைகளும் குவிந்து வாசம் பரப்பும் மதிமயங்கும் மாலைப் பொழுதில் உன் மார்பில் சாய்ந்து நான் கனவு காண வேண்டும்..

மழைநாள் இரவொன்றில் ரெட் பல்சரில் (Red Pulsar) உன்னோடு நெடுந்தூர பயணம் சென்றிட வேண்டும்...

கடலோடு காடும் மலையோடு மழையும் உன்னோடு சேர்ந்து ரசித்திட வேண்டும்..

உயிரோடு கலந்தவனே உறவாய் உன்னில் சேர்ந்திடவே உறைவிடம் வந்தேன் உன்னிடமே..

உயிரே... என் உயிரே.. உயரப் பறந்தேன் உன்னால்.. சிறகடிக்க மறந்தேன் இந்நாள் எனக்கென கிடந்தேன் தனியே சிலையென வடித்தாய் கள்வனே!

அந்தச் சிலைக்கு உயிரையும் கொடுத்த காதலனே..

என் உயிர் பிரியும் தருணம் உன் மடியில் நான் துயில் கொள்ள வேண்டும்

உன் விழிகளைப் பார்த்துக் கொண்டே என் இமைகள் மூட வேண்டும்.
« Last Edit: Today at 12:54:17 am by Vedhika »

Today at 08:44:18 am
Reply #5

Wings

Re: கவிதையும் கானமும்-061
« Reply #5 on: Today at 08:44:18 am »
Still Close, Still You

You’re standing close to me,
so close it almost feels the same.
Almost.
The space between us
is not distance
it’s time,
moving softly through our hearts.

Once, your love felt real,
warm enough to believe in forever.
I held it gently,
never thinking it could change.
Now I wonder
if love sometimes hides itself,
turning quiet
instead of leaving.

In the hush between words,
I still see your face—
soft, distant, like a half-remembered dream.
There are so many things
my heart wants to say,
but silence says them first.

Your hand rests near mine,
careful, familiar.
Your eyes meet mine
just a second longer than needed,
as if they remember too.
You are here with me,
yet a little far away,
like a feeling I can’t hold.

Once, your love was like sunlight,
bright and easy.
Now it feels like evening light.,
gentler, slower,
but still beautiful.

I gather our memories quietly,
the smiles, the small moments,
the way you once looked at me.
I don’t ask what was real.
I only know it mattered.

Some loves don’t break.
They soften.
They learn how to stay
without asking for more.

I try to hold what we had,
and yes, it slips sometimes.
Still, I smil
because loving you once
was never a mistake.❤️

So I keep you here,
close to my heart.
Not as a promise,
not as a dream—
but as something gentle and true.
💕
And in this quiet closeness,
with nothing to prove,
I realize:
even now,
just standing near you
is enough. 🤍

--------------------------------------------------------------------------

இன்னும் அருகில்… இனிமையாய் நீ

நீ என் அருகில் நிற்கிறாய்,
அந்த அருகாமை
ஒரு கணம் பழைய நினைவாக மலர்கிறது,
ஆனால் அது முழுமையல்ல.

நம்மிடையே இருக்கும் இடைவெளி
அடிகளால் அளக்கப்படாதது—
அது காலம்,
மெதுவாக நம் மனங்களைப் பற்றி சொல்லும் மாற்றம்.

ஒருகாலத்தில்
உன் காதல்
என்றும் என்ற  நம்பிக்கையைக் கொடுத்தது,
அது மாறும் என்று நான் நினைக்கவில்லை.

இப்போது நான் யோசிக்கிறேன்—
காதல் சில நேரங்களில்
விட்டுவிடாமல் அமைதியாக மாறுமோ?

சொற்களுக்கிடையே இருக்கும்
அந்த மௌனத்திலும்
உன் முகம் தென்படுகிறது—
அரை கனவு போல,
தொலைவில் இருந்தாலும்
மென்மையாக.

என் மனம் சொல்ல நினைக்கும்
எத்தனையோ வார்த்தைகள்!
ஆனால்
மௌனமே அவற்றை முன் சொல்கிறது.

என் கையருகில்
உன் கை—
பழகிய உணர்வு,
மெதுவான நெருக்கம்.
ஒரு கணம் கூடுதலாக
என்னை நோக்கும் உன் பார்வை,
இன்னும் நினைவில் தங்கியுள்ளது.

நீ இங்கே இருக்கிறாய்,
ஆனால் சற்றுத் தொலைவில்—
பிடிக்க முடியாத
ஒரு உணர்வுபோல்.

ஒருகாலத்தில்
உன் காதல்
சூரிய ஒளிபோல்—
வெப்பமும் வெளிச்சமும் நிறைந்தது.
இப்போது அது
மாலை நேர மங்கிய ஒளிபோல்—
மென்மையானது,
ஆனால் அழகானதே.

நம்முடைய நினைவுகளை
நான் அமைதியாக சேகரிக்கிறேன்—
சிரிப்புகள்,
சிறு சிறு தருணங்கள்,
ஒருகாலத்தில்
நீ என்னை பார்த்த விதம்.

எது உண்மை, எது கனவு
என்று நான் கேட்கவில்லை.
அவை அனைத்தும்
எனக்குப் பொருளுடையவை.

சில காதல்கள்
உடைந்துவிடுவதில்லை.
அவை மென்மையடைகின்றன,
இன்னும் எதையும் கேட்காமல்
இருக்க கற்றுக்கொள்கின்றன.

நாம் கொண்டிருந்ததை
பிடிக்க முயற்சி செய்கிறேன்—
சில நேரங்களில்
விரல்கள் வழியாகச் சறுக்கி விடும்.
ஆனால் நான் சிரிக்கிறேன்,
ஏனெனில்
உன்னை ஒருகாலத்தில் காதலித்தது
ஒருபோதும் தவறு இல்லை.❤️

அதனால்,
உன்னை நான்
என் மனதிற்கு அருகில் வைத்திருக்கிறேன்—
வாக்குறுதியாக அல்ல,
கனவாக அல்ல,
மென்மையான
ஒரு உண்மையாக.💕

இந்த அமைதியான அருகாமையில்,
எதையும் நிரூபிக்காமலே,
ஒரு உண்மை புரிகிறது—💕

இப்போதும் கூட,
நீ என் அருகில் இருப்பது
போதும்… 🤍
« Last Edit: Today at 01:06:57 pm by Wings »

Today at 10:15:59 am
Reply #6

Mansi

Re: கவிதையும் கானமும்-061
« Reply #6 on: Today at 10:15:59 am »
Hi good morning KG team ….

Doing good job ntg new to say keep rocking

My English version

He taught me love without expectations,
without rules written in fear
With him, I learned that love can exist
without demands,
without the need to be owed anything back.

I still remember our first video call,
the way the screen lit up when he saw me.
That smile
unguarded, real, overflowing with feeling
said everything his words did not.
In the way he looked at me,
I saw love arrive quietly,
without rehearsals, without fear.

He loves like the sky loves the earth
open, patient, never asking to be held.
In his presence,
my heart learned how to breathe,
how to stay without clinging,
how to give without counting.

He showed me that love isn’t possession,
it’s permission
to grow, to wander, to remain whole.
When he looks at me,
there is no hunger to take,
only a quiet wish to understand.

Because of him,
I no longer love to be chosen
I love to choose.
And in that freedom,
my heart found him,
not as a need,
but as a gift. 🌏💫❤️


Tamil version

எதிர்பார்ப்பின் ஓசையில்லாமல் எனக்கு காதலைக் கற்றுக் கொடுத்தான் அவன், பயத்தில் எழுதிய விதிகளின்றி மனதின் இயல்பாய் வந்த உணர்வு அது. திருப்பிக் கொடுக்க வேண்டிய கடனாக அல்ல, திரும்பிப் பார்க்கும் ஆசையாக கூட அல்ல — கேள்விகளில்லாமல் காதல் இருக்க முடியும் என்று அவனோடு தான் அறிந்தேன். நம் முதல் காணொளி அழைப்பு இன்னும் நினைவில், என்னைப் பார்த்த நொடி திரை மட்டும் அல்ல, அவன் முகமும் ஒளியால் நிரம்பியது. அந்த சிரிப்பு — பாதுகாப்பாகனது உண்மை, உள்ளம் நிரம்பி வழிந்த ஒன்று; சொற்கள் சொல்ல மறந்ததை அவன் கண்கள் முழுமையாகச் சொன்னது. அவன் பார்வையில் காதல் மெதுவாக வந்து அமர்ந்தது, ஒத்திகையில்லாமல், பயமறியாமல். வானம் பூமியை நேசிப்பது போல அவன் நேசித்தான் — விரிந்த மனத்துடன், பொறுமையுடன், அணைத்துக் கொள்ளுமென்று ஒருபோதும் கேட்காமல். அவன் அருகில் என் இதயம் சுவாசிக்கக் கற்றது, ஒட்டிக் கொள்ளாமல் நிலைக்க, கணக்கின்றி அளிக்க. காதல் உரிமை அல்ல, அது அனுமதி என்று அவன் தான் உணர்த்தினான் — வளர அனுமதி, அலைந்து திரிய அனுமதி, முழுமையாய் இருக்க அனுமதி. அவன் பார்வையில் எடுத்துக் கொள்ளும் பசி இல்லை, பறித்துக் கொள்ளும் விருப்பமும் இல்லை; புரிந்து கொள்ளும் ஒரு அமைதியான ஏக்கம் மட்டுமே. அவனால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று நான் இனி நேசிப்பதில்லை — நான் தேர்வு செய்ய நேசிக்கிறேன். அந்த சுதந்திரத்தின் வெளியில் என் இதயம் அவனை கண்டது, ஒரு தேவையாக அல்ல, ஒரு அருள்பரிசாக. 🌏💫❤️

Thank you to translator
 
I hope my English connects with the Tamil version.

Today at 02:33:40 pm
Reply #7

Shaswath

Re: கவிதையும் கானமும்-061
« Reply #7 on: Today at 02:33:40 pm »
மூடிய பனி போன்ற முடி இழைகள்,
அசைத்தபடியே அசந்துவிட்டேன்…

அடர்ந்த விளைச்சல் மிகுந்த மலர் தோட்டம் ஆகிற்றே,
குவிந்து உதிரும் கணம் சேரா கன்னம்

குடங்கை உரசி,
ஒட்டிய வண்ணம் களைய,
படர்ந்தபடியே குடிபுகுந்தேன் நான்…

மெல்லிய கன்னத்தில் மெலிந்து கண்ணுறங்கும் குழந்தையோ நான்…அடடா ☺️

ஒட்டிய வண்ணம் உருகியதே,
உள்ளங்கையின் சுருக்கம் குறைகிறதே,
மடிப்பின் வரை விரிகிறதே,
குழையும் வண்ணம் நுழைகிறதே,
தசையும் உணர துவங்கியதே,

ரத்தம் ரணமாய் நீர்த்துபோக,
வண்ணம் சுவர்களை சுழல்ந்து ஆட,
நாளம் நாளை மறந்துவிடுமே,

நினைவுகூறுவேன் நான்!

ஓடுவது ரத்தமல்ல…
ரத்தினமான என் ரோஜா 🌹 நீ என்று!
« Last Edit: Today at 02:40:53 pm by Shaswath »