Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-059  (Read 23881 times)

September 15, 2025, 06:48:19 pm
Read 23881 times

RiJiA

கவிதையும் கானமும்-059
« on: September 15, 2025, 06:48:19 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-059


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: September 15, 2025, 07:35:54 pm by RiJiA »

September 16, 2025, 11:20:30 pm
Reply #1

Niharv

Re: கவிதையும் கானமும்-059
« Reply #1 on: September 16, 2025, 11:20:30 pm »
மழை துளிகள் மெதுவாக விழும் இரவில்,
நினைவுகளின் நிழல் தன் கதையை சொல்லும்.

உன் மென்மையான கண்கள் பேசாத மொழியில்,
என் உள்ளத்தை உருக்கும் ஒரு ரகசியம் போல.

சொல்லப்படாத வார்த்தைகள் மௌனமாகவே
என் இதயத்துள் நனைந்த கனவுகளாய்.

ஒரு நிழல் போல மறைந்து நின்றாய் நீ,
என் உயிரின் ஓரத்தில் விரிந்து நிலைக்கின்றாய்.

உன் சிரிப்பு, மறைக்கப்பட்ட புன்னகை,
மழை நதியில் ஒளிரும் ஒற்றை துளி மாதிரி.

மௌனத்தின் இசையில் உரையாடும்
உன் நினைவுகள் என் நெஞ்சில் ஒளிர்கின்றன.

மழைக்காலத்தின் மென்மையான காற்று
நம் ரகசிய அன்பின் வாசல்களை திறக்கின்றது.

ஒரு வஞ்சனை போல மறைந்த உன் வார்த்தை,
என் இதயத்தின் விரக்தியை எழுதிக் கொண்டு வருகிறது.

மழைதுளிகளின் அழகில் நமக்குள் ஒளிரும்
மறைக்கப்பட்ட பாசத்தின் அழகு.

உன் பார்வை மௌனத்தில் புனைந்த
அன்பின் மென்மை மொழியாகக் கருதப்படும்.

மறைந்த அன்பின் நதி போல
என் நினைவுகள் மெதுவாக ஓடுகின்றன.

ஒரு நிழலாய் உன் இசை என் உயிரில்
மௌனத்தின் தனிமையைத் தொட்டு செல்கிறது.

நீ பேசாத இந்த ரகசிய மொழி
என் இதயத்தின் கோணங்களில் எப்போதும் உயிரோடு நிற்கிறது.

மழைமழையில் மறைந்தது காதல்,
என் உள்ளத்தின் ஒரு மென்மையான வெறுமை.

ஒரு காலம் போல் மறைந்து,
மறைக்கப்பட்ட அந்த அன்பின் கவிதை
என் உயிரின் சுவையாக வளரும்…

🌧️🌹

September 17, 2025, 05:51:36 am
Reply #2

iamcvr

Re: கவிதையும் கானமும்-059
« Reply #2 on: September 17, 2025, 05:51:36 am »
காதல் ஓர் மென் உணர்வு - ஆனால் அதன்
வடுக்கள் ஏனோ ஆழமானவை.
உதிர்த்த சொற்கள் உயிரை குத்தி கிழிக்கும்,
இழைத்த பிழைகள் நெஞ்சை அழுத்தி துளைக்கும்,
இனித்த நினைவுகள் இரவை உறுத்தி விழுங்கும்,
காலம் போக காயம் மேலே ஆறினாலும்
உள்ளே வலி துருத்தியே நிற்கும்.

அதீத நீரில் பூக்கள்
அழுகிடாமல் குடை பிடிக்கும் பக்குவம் அண்மையில் தான் வந்ததடி.
அதீத காதலில் உனை தொலைத்து
அஸ்தமித்த எம் உறவின்
அர்த்தம் தொலைத்த பின்பு தானடி
அகம் உணர்ந்தது அப் பக்குவத்தை.

முன்பே உணர்ந்திருக்கலாம் - உன் இழப்பை
முழுதாய் தவிர்த்திருக்கலாம்.
என்னை நானே மாற்றி இருக்கலாம்
என் காதல் உன்னை வதம் செய்யாமல் பார்த்திருக்கலாம்.
துரத்தாமல் உனை நான்
தூரத்தில் இருந்தே ரசித்திருக்கலாம்.

நான்
உன் வாழ்வில்
வராமலே இருந்திருக்கலாம்.

வந்த காயங்கள் சீக்கிரமே ஆறிவிடும்.
உள்ளே துருத்தும் வலிகள் தான் - என்னை
காலம் முழுதும் நின்று கொல்லும்.
கொல்லட்டும்.
உன்னை தொலைத்த என்னை
என் மனம் ஒரு நாளும் மன்னிக்காது.
கொல்லட்டும்.
« Last Edit: September 17, 2025, 05:54:00 am by iamcvr »

September 18, 2025, 06:23:09 pm
Reply #3

Tobi

Re: கவிதையும் கானமும்-059
« Reply #3 on: September 18, 2025, 06:23:09 pm »
பறிக்கப்பட்டதே தூக்கி
எறிய தான் என்றால்🤨
எதற்காக பறிக்க
வேண்டும்...........🥺
சுவாசிக்க வழியில்லாமல்
யாரின் ஆசையால்
பறிபோனது அந்த ரோஜாவின்🌷
உயிர்🫀 வாடி நிற்கும்
ரோஜாவிற்கு வாழ்க்கை😔
இல்லை சாலையோரம்🛣️

ஆம் அது உண்மை என்று நாம் நினைக்கலாம்🧐 ஆனால் அது உண்மை இல்லை🚫
யாரோ ஒருவர் தூக்கி எறியப்பட்ட ரோஜாவின் மீதும் காதல் கொண்டது ரோஜாவினை தாங்கி கொண்டு இருக்கும் நாற்காலி🪑 இருட்டிலும் நீ அழகுதான் என்று உணர்த்தியது விளக்கின் வெளிச்சம்🏮 சிதைந்து போன  இதழை சுத்தம் செய்தது மழை🌧️ ரோஜாவின் பல கவலைகளை மறக்க செய்தது மழையின்🌧️ அழகிய துளிகல்
யேரேனும் நம்மை தூக்கி போட்டுவிட்டு சென்றாலும் தனக்காகவும் ஒரு உயிர் துடிக்கும் என்பதை உணர்த்தியது குடை⛱️

September 19, 2025, 09:41:36 pm
Reply #4

Shaswath

Re: கவிதையும் கானமும்-059
« Reply #4 on: September 19, 2025, 09:41:36 pm »
காடெங்கும் ஒளி கூட,
கூடி மகிழ்ந்து உரையாட

குயில் பாட்டின் குரலாட,
ஒத்திசைத்து நீ போட்டியிட

படபடக்கும் உன் இமை திறக்கவெ,
கதிரவனின் கரங்கள் கண்ட இடுக்குகள் அனைத்தையும் தகர்க்கவே

ஆடும் அசையா மரங்கள் வழி வகுக்கவே,
திரண்ட கரங்கள் யாவும் உன் பாதம் தொடும் அளவில் மண்டியிடுகின்றன

இது போன்ற உலகினில் அத்தகைய வடிவத்தில் உன்னை பேணிக்காக்கவே நான்

நான்…
சுழலும் ஒண்முகில்,
கைவீச்சடித்து உன்னை காக்க

தீண்டும் கதிரவனின் பாதுகாப்பின் அப்பால் எட்டாத உயிரத்தில் பிரகாசிக்கும் சுடரே…உன் கவனத்தை ஈர்க்க


சுற்றும் பூமியில் பின்தொடரும் நம் கற்பனை உலகை கண்டறிவோம் வா!

ஈரமற்ற பூமியில் தற்காலிக நனைதல்,
கானல் நீராய் பேயும் மழையை நம்பிவிடாதே!

வேரோடு பிடுங்க பிரியவே துயரம்,
நிலம் காய்த்த என் கைகளை பிடித்துக்கொள்,
குடை நிழலில் பரந்து செல்ல

பாட்டொன்று பாடு ரோஜாவே,
இசை மழையில் பொழிந்து மகிழவே,
இடம் சேரும் வரை உன் தாகம் தனியவே…
« Last Edit: September 19, 2025, 09:54:31 pm by Shaswath »

September 19, 2025, 10:10:32 pm
Reply #5

MDU

Re: கவிதையும் கானமும்-059
« Reply #5 on: September 19, 2025, 10:10:32 pm »
மழை துளிகள் பாடும் ஓர் இசை என் காதில் கேட்டது.
அந்த மழைத்துளிகலின் இசை.
என் மனதில் ஒளிந்து கொண்டு இருக்கும் உன் நினைவுகளின் இசை ஆனது.

மழைத்துளிகளின் நடுவினில் எரியும் அந்த விளக்கின் மென்மையான ஒளி போல.
என் உள்ளமும் உன் பெயரை மட்டுமே சொல்லுகிறது தாலாட்டும் ஓசை போல.

நாற்காலியில் இருக்கும் மலர்களை பார்க்கும் போது.
என் கண்ணீரில் நனைந்த கனவுகள் கண் முன்னே தோண்றுகிறது.

மழைத்துளிகள் வானத்தில் இருந்து விழும் போது
அந்த ரோஜா பூவை
குடை எப்படி  நனையவிடாமல் காக்குன்றதோ
அதை போல.
நான் உன்னை  என் இதயத்தில் வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன்

எத்தனை முறை மழை வந்தாலும்  குடை ரோஜா மலரை காப்பது போல்.
நீ நனைந்து போகாமல் உன்னை.
என் இதயத்தில் வைத்து காத்து கொண்டு இருக்கிறேன்.

நாற்காலி காலியாக இருக்கலாம் இன்று,
ஆனால் அந்த நிமிடங்களை நான் மறக்கவில்லை .

என் நினைவுகளில் எப்போதும் நீயும் நானும்.
இருக்கையில் அருகருகே  இருந்த அந்த தருணத்தை மறக்கவும் இல்லை.

மழை மறைக்கவில்லை என் கண்ணீரை
நிழல் மறைக்கவில்லை என் நினைவுகளை,

கையில் குடை இருந்தும்
இதயம் மட்டும் நனைந்து போகின்றது.

ரோஜா மலர் அழகாய் இருந்தும் மனம் போலவே வாடிப்போனது,
உன் வருகைக்காக காத்திருந்த என் கனவும் கரைந்து போனது
 
மலர்கள் குளிர்ந்து கொண்டிருக்க இதயம் மட்டும் தீயாய் எரிகிறது,
நினைவுகளோ தெருவிளக்கைப் போல இன்னும் நம்மை ஒளி காட்டுகிறது,

ஆனால் அந்த ஒளியில் நான் மட்டும் தான்,
நீ இல்லாமல் அந்த இடத்தில் இருள் மட்டும் என்கூட.

நீ என்னை மறந்து போனாலும் நான் உன்னை நினைக்காமல் இருந்தது இல்லை.

மலர் வாடும் முன்பே நான் புன்னகைப்பேன்
என் பாதை என் நம்பிக்கை நோக்கி
மழையில் ஒளிரும் தெருவிளக்கைப் போல
உன் நினைவுடன் வாழ்க்கையைத் தேடி நடந்து போகிறேன்.


MDU
« Last Edit: September 20, 2025, 12:05:14 pm by MDU »

September 19, 2025, 10:15:57 pm
Reply #6

Wings

Re: கவிதையும் கானமும்-059
« Reply #6 on: September 19, 2025, 10:15:57 pm »
அவர்கள் திரும்புவார்களா?” 🌧️

மழையில் நனைந்து அமைதியாக நின்ற இருக்கை,
மலர்களின் துயரத்தை தாங்கி இருக்கும்   சாட்சி.
குடை சாய்ந்து நின்றது மென்மையாக,
மறைந்த காதலை காப்பதுபோல்  அமைதியாக.

ஒரு காலத்தில் இரண்டு ஆன்மாக்கள் சேர்ந்த
சிரிப்பால் மலர்ந்தது அந்த இரவு.
இன்று அவர்கள் விலகி சென்றாலும்,
நினைவுகள் மட்டும் மனதில் நிற்கின்றன.

ஒருநாள் பரிசாக அளித்த ரோஜா,
இன்று தரையில் சிதறிக் கிடக்கிறது.
காதலின் குரல்கள் அதில் நிறைந்தும்,
உடைந்த இதயம் போல மௌனமாகவும்.

ஒருவருக்கொருவர் பிடித்த குடை,
இன்று காத்திருக்கும் வெறுமையாக.
அந்த மென்மையான கைகளின் வெப்பம்,
மீண்டும் திரும்புமா என ஏங்குகிறது.

அந்த நாளில் ஆனந்தமாய் முத்தமிட்ட மழை,
இன்று மீண்டும் விழுகிறது நினைவாய்.
மெல்லிசை போல கேட்கிறது காற்றில்—
“மீண்டும் நீங்கள் திரும்புவீர்களா?”

தீபம் எரிகிறது மெதுவாய்,
ரகசியங்களை காக்கும் காவலனாய்.
அவர்களின் சிரிப்பையும் கண்ணீரையும் கண்டு ,
மீண்டும் சந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில் நிற்கிறது.

இருக்கை நினைவில் வைத்திருக்கிறது இரண்டு உயிர்கள்,
“நான் உன்னை காதலிக்கிறேன்” என்ற சொற்களை.
இன்று வெறுமையாய் இருந்தாலும் உள்ளத்துக்குள்,
மீண்டும் அவர்கள் சேர்வார்கள் என்று கனவுகாண்கிறது.

தெரு அமைதியாக, நேரம் நீண்டாலும்,
நம்பிக்கை மட்டும் மென்மையாய் பாடுகிறது.
ஏனெனில் மழைக்குப் பின் வானம் தெளிகிறது,
அமைதி வரும், காதல் மலர்கிறது.

ரோஜாக்கள் காத்திருக்கின்றன, தீபம் ஒளிர்கிறது,
குடை சாய்கிறது, மழை சொல்கிறது.
அனைத்தும் கேட்கின்றன இதே கேள்வி—
அந்த இரு ஆன்மாக்கள்  திரும்புமா?

அல்லது அந்த இருக்கை என்றென்றும்,
காதலின் சாட்சியாய் மழையில் நின்றுவிடுமா?

September 20, 2025, 09:03:16 am
Reply #7

Sivarudran

Re: கவிதையும் கானமும்-059
« Reply #7 on: September 20, 2025, 09:03:16 am »
என்னவளுக்காய் நான் எடுத்து வைத்த ரோஜா இது !
என்னைப்போல் அவளுக்காய் தனியே காத்து நிற்கிறது இங்கே !
என்று வருவாள் தெரியவில்லை!
எப்போது ரோஜாவை எடுத்து செல்வாள் புரியவில்லை !
ஏங்கி தவிக்கிறோம் இந்த ராஜாவும்
அந்த ரோஜாவும் !
விடாமல் பெய்யும் மழையே !
உனக்கு விடை கொடுக்க குடை பிடிக்கிறேன் நான் !
தடைவிதிப்பது நான்
தனியே சென்று விடு நீ !
நீயோ பன்னீர் தூவுகிறாய்
நானும் கண்ணீர் சிந்துகிறேன் !
அவளுக்காய் நான் வைத்த ரோஜாவின் அங்கங்களை !
சாரலை அள்ளி தெளித்து நனைக்காதே !
அவள் இதழிலிருந்து வடியும் அமுதத்தேனே முதலில் நனைக்க வேண்டும் அந்த ரோஜாவை !
ஆதங்கம் தான் உன்மேல்
அவள் கைப்படும் ரோஜாவை நீ
கரைப்படுத்தக் கூடாது !
என் தேவதையின் தேகம் தொடும் ரோஜாவே
தேவையில்லாமல் நீ தொடர்வது ஏனோ !
ஏய் மேகத்தூரலே
உனக்கென்ன மோகம் !
என் காதலிக்காய் நான் வைத்திருக்கும் ரோஜா பூங்கொத்தின் மீது உனக்கென்ன மோகம் !
அவளை எண்ணி எனக்குத்தான் சோகம்!
அவளுக்காய் நான் வைத்திருக்கும் இந்த ரோஜாவை தொடுவதில் உனக்கென்ன இத்தனை வேகம் !