Advanced Search

Author Topic: தமிழின் கவி  (Read 1923 times)

October 21, 2024, 07:31:51 am
Read 1923 times

Limat

தமிழின் கவி
« on: October 21, 2024, 07:31:51 am »
மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்

நீ மாமா  வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்

உன்னை காணாத வரை இன்பத்தையே அறியாதவன் நான்

நீ மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்

மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு

மாமா  வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி

நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்

மாமா  வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி

உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் உன்னுடன் நான் வாழ என் அம்மு தர்ஷினியே..!!

October 21, 2024, 09:06:16 am
Reply #1

RiJiA

Re: தமிழின் கவி
« Reply #1 on: October 21, 2024, 09:06:16 am »
மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்

நீ மாமா  வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்

உன்னை காணாத வரை இன்பத்தையே அறியாதவன் நான்

நீ மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்

மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு

மாமா  வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி

நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்

மாமா  வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி

உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் உன்னுடன் நான் வாழ என் அம்மு தர்ஷினியே..!!

அழகு 👏👏👏

October 23, 2024, 07:07:28 pm
Reply #2

Limat

Re: தமிழின் கவி
« Reply #2 on: October 23, 2024, 07:07:28 pm »
அழகான இரவுக்கு இனிமை நீ

பல இதயத்திற்கு கற்பனை காதலும் நீ

கவிஞர்களின் தேடல் காகிதத்தின் கீறல்

எண்ணத்தின் மோதல் மறைமுக காதல்

உன்னை தேடும் என் ஆவல்

வெள்ளி நிலவே நீ சிரிக்க

தொலைதூரத்தில் நான் நின்று

இருக்க

மாலை நேரத்தில் நீ மலர்ந்து

மௌனமாய் என்னை நீ கவர்ந்து

மனதிற்கு உள்ளே அழகாய் நுழைந்து

உன் அழகை கண்டு வியந்து

காதல் வளர்த்தது எண்ணற்ற மனது..!

October 23, 2024, 07:12:57 pm
Reply #3

Limat

Re: தமிழின் கவி
« Reply #3 on: October 23, 2024, 07:12:57 pm »
கண்ணுக்குள் என்னவளை

வர்ணிக்கிறேன் உன் நினைவை

வாசல் தேடி வந்த பெண் அவளை

என் வாழ்க்கை துணையான

என்னவளை

கல் ஆனா இதயம் கரைந்து விட்டது

உன் அன்பு என்னை மாற்றி விட்டது

இதயத்திற்கு உள்ளே நீ வந்தது

இறைவன் புது வாழ்க்கை தந்தது

வசந்தம் என் வாசல் வந்தது

அம்மு நீ என் வாழ்வினில் வந்தது..!

October 24, 2024, 02:50:26 pm
Reply #4

Shruthi

Re: தமிழின் கவி
« Reply #4 on: October 24, 2024, 02:50:26 pm »
Limat super  pa 3 kavithai super  a elutirkeal👍

October 31, 2024, 06:35:54 am
Reply #5

Limat

Re: தமிழின் கவி
« Reply #5 on: October 31, 2024, 06:35:54 am »
தித்திக்கும் புன்னகையில்
தீபங்களின் சுடரொளியில்
தீபாவளியை ஒளிரச்செய்வோம்...!

அயாலாருடன் நட்பு கொள்வோம்..
ஆக்கியதை பகிர்ந்து உண்ணுவோம்..
இல்லாதவர்களிடம் உறவு பேணுவோம்..
ஈகையுடன் புத்தாடை வாங்கி கொடுப்போம்..
உழைப்போருக்கு சிறப்பு ஊதியம் அளிப்போம்..
ஊர் வியாபாரிகளிடம் பொருளை வாங்குவோம்..
எளியவர் வீடுகளில் ஒளியேற்றுவோம்..
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்..
ஐயமில்லா பட்டாசுகள் வெடிப்போம்..
ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்வோம்..
ஓடி ஆடி தீபாவளியை மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம்..

என்றும் உங்கள் நட்புடன்

November 06, 2024, 12:05:43 pm
Reply #6

Limat

Re: தமிழின் கவி
« Reply #6 on: November 06, 2024, 12:05:43 pm »

நீ இல்லாத நான் தனிமரமானேன்..
படைசூழ நண்பர்கள் இல்லை..
உற்றார் உறவினர் சுற்றமென்றுரைக்க யாருமில்லை...
என் சோகமெல்லாம் தலைதூக்கும் உன் நினைவுகளிலே ஆறுதலடைகிறேன்..

உன் நினைவுகளே என் பொக்கிஷமாய்...
நீ என்னருகில் இல்லாவிடிலும் நித்தமொரு படைப்பினையை உன் நினைவுகளிலேயே காண்கிறேனடி...

தனியாளாய் இருந்தாலும் தனித்துவம் வாய்ந்தவனாய் இருக்கிறேனடி உன் நினைவுகளாலேயே...

சாதிக்க வேண்டுமென்ற உத்வேகம் என்னுள் உதயமாகியதற்கு காரணமே உன் நினைவுகளே

என்னைவிட்டு நீ நெடுந்தொலைவில் இருந்தாலும் என் தைரியம் நீயாவாய்...
என் சிந்தனை ஊற்றின் ஆதாரமாவாய்...
உன்னை மறந்தால் நானேதடி...
உண்மையை மறுத்தால் நான் மனிதனில்லையடி...
நாளும் உன் நினைவுகளுடன் நான் வாழ,
மற்ற மனித துணை எனக்கெதுக்கடி???....

என் கவலையெல்லாம் என்னவென்றால்,
நான் இல்லாது நீ சந்தோஷமாக வாழ்கிறாயா? என்பதே...
உன்னை காண வரலாமென்றே நினைப்பேன்...
ஆனால், நீ என்னைக் கண்டுத் துயருற்றால் அதைக் காண என்னால் இயலாதடி....

கடைசிவரை உன் நினைவுகளுடன் மட்டுமே வாழ்வேனடி..
உன்னை எண்ணிய மனதில் வேறு பெண்ணிற்கு இடமில்லையடி....

என்றும் உந்தன் நினைவலையில் நான்

November 06, 2024, 05:55:19 pm
Reply #7

Shruthi

Re: தமிழின் கவி
« Reply #7 on: November 06, 2024, 05:55:19 pm »
Super pa 👍

November 11, 2024, 06:09:05 pm
Reply #8

Limat

Re: தமிழின் கவி
« Reply #8 on: November 11, 2024, 06:09:05 pm »

நீர்வீழ்ச்சி


வானில் முட்டி மோதி
உரசிச் செல்லும் மேகக் கூட்டம்,
அது மோகத்தின் தாகத்தில் உச்சி
மலையை முத்தமிடும்.

முத்த மிச்சங்கள் பாற்கடலாய்
உச்சியில் வழிந்து கொட்டும்..!
பொங்கும் உவகையால் பூரிக்கும்
நுரைக்கடல் எங்கும் ஆர்ப்பரிக்கும்
அருவியை நான் பார்க்கிறேன்
அதன் அழகில் என்னை மறக்கிறேன்..!

சுடரின் பட்டுக்கதிர் பட்டு,
சிறு துளிகள் ஒளி வீசும்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
வெண் நுரைப் பந்தலாய்,
கண்ணையும் கருத்தையும்
கரைக்கின்ற விந்தையாய்,
நிலம் மோதும் நீரினோசை
சட சட ஒலி பரப்ப
மரமோதும் காற்றோசை
பட பட ஒலி பரப்ப
மரமுகும் சருகுகள்
சர சர சப்தமிட
வானத்தில் வழிந்து வரும் நீரருவி,
ஆனந்த நடை போடும் நம் மனமுருவி.

அருவிநீர் அருகே பனிதரும் காற்றும்
ஆகாயம் முட்டும் கனிதரும் மரமும்
ஓங்கார இரைச்சலிட்டு ஓடிவரும் நீரும்
எங்கும் காணாத எழில் மிகு அழகு
சிந்தையில் என்றும் நீங்காது ..!

November 13, 2024, 07:01:11 am
Reply #9

Shruthi

Re: தமிழின் கவி
« Reply #9 on: November 13, 2024, 07:01:11 am »
Woww arumai 👍

November 13, 2024, 08:32:26 am
Reply #10

Limat

Re: தமிழின் கவி
« Reply #10 on: November 13, 2024, 08:32:26 am »

இயர்கை அன்னை குளியல் கொள்ளும் கார்காலம் .,
அவள் மடியில் தவழும் வாடை காற்றில் மண்வாசம்..
பச்சை பசுமை அணிவகுத்த ஊர்கோலம்.,
என் இதழ்ளில் விழுந்த மழை துளியும் கவி பேசும் ...!!!

November 13, 2024, 11:18:21 am
Reply #11

RiJiA

Re: தமிழின் கவி
« Reply #11 on: November 13, 2024, 11:18:21 am »
Hi Limat  நீர்வீழ்ச்சி Kavithai  Very  Nice  &  Last That KuTTy Kavithai Also Very Nice Keep On👏👏👏

November 13, 2024, 11:21:24 am
Reply #12

Limat

Re: தமிழின் கவி
« Reply #12 on: November 13, 2024, 11:21:24 am »


மழையின் கண்ணீர்..!



 வானிலிருந்து குதித்து வந்தேன்
பூமி குளிர இறங்கி வந்தேன்
ஏரிகுளம் தேடி வந்தேன்
ஓடையாக பொங்கி வந்தேன்
பசுமைப் பரப்பை பார்க்க வந்தேன்
பார் முழுதும் சுற்றி வந்தேன்
சிறார் மகிழ பொழிந்து வந்தேன்
அடுக்கி வைத்த வீடுகள்
ஆக்கிரமிப்பு செய்த மனிதர்கள்
தூர்வாரா ஏரிகள்
துண்டு போட்ட மனிதர்கள்
வாடி நின்றேன்
ஏங்கி நின்றேன்
தேங்கி நின்றேன்
கழிவு நீரில் கலந்தேன்
வீட்டுக்குள் புகுந்தேன்
வசவுகளைச் சுமந்தேன்
சுயநல மனிதர்களால்
சுமையாகிப் போனேன்..!

November 18, 2024, 08:14:29 pm
Reply #13

RiJiA

Re: தமிழின் கவி
« Reply #13 on: November 18, 2024, 08:14:29 pm »


மழையின் கண்ணீர்..!



 வானிலிருந்து குதித்து வந்தேன்
பூமி குளிர இறங்கி வந்தேன்
ஏரிகுளம் தேடி வந்தேன்
ஓடையாக பொங்கி வந்தேன்
பசுமைப் பரப்பை பார்க்க வந்தேன்
பார் முழுதும் சுற்றி வந்தேன்
சிறார் மகிழ பொழிந்து வந்தேன்
அடுக்கி வைத்த வீடுகள்
ஆக்கிரமிப்பு செய்த மனிதர்கள்
தூர்வாரா ஏரிகள்
துண்டு போட்ட மனிதர்கள்
வாடி நின்றேன்
ஏங்கி நின்றேன்
தேங்கி நின்றேன்
கழிவு நீரில் கலந்தேன்
வீட்டுக்குள் புகுந்தேன்
வசவுகளைச் சுமந்தேன்
சுயநல மனிதர்களால்
சுமையாகிப் போனேன்..!

VERY NICE👏