மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்
நீ மாமா வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்
உன்னை காணாத வரை இன்பத்தையே அறியாதவன் நான்
நீ மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்
மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு
மாமா வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி
நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்
மாமா வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி
உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் உன்னுடன் நான் வாழ என் அம்மு தர்ஷினியே..!!