Advanced Search

Author Topic: தமிழின் கவி  (Read 51160 times)

November 23, 2024, 11:53:36 pm
Reply #15

RiJiA

Re: தமிழின் கவி
« Reply #15 on: November 23, 2024, 11:53:36 pm »


சிறகின்றிப் பறக்கும் பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்க கண்டேன் உன்னால்..!

இது வலியா சுகமா என்று
புரியாமல் புரளுகிறேன்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..!

அலை பாயும் நதி நீராய் என் மனம்
உன் கரைசேர
துடிக்கிறது இங்கு..!

உன் விழி பார்க்க காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை காணாததால்..!

மெய் சிலிர்க்க வைத்த உன் காதல்
இன்று
புயலென மாறி எனைத் தாக்குகிறது..!

என் நிழல் கூட மறைந்து போகும்
என்றும் மறையாத நிழலாய்
நீ வேண்டும் என் பயணங்களில்..!

Nice👏👏👏

November 29, 2024, 08:23:51 am
Reply #16

Limat

Re: தமிழின் கவி
« Reply #16 on: November 29, 2024, 08:23:51 am »


புயலின் இன்னொரு கோர முகம்..!



இயற்கை அன்னையின்
இரக்கமில்லா குணம்..!
இளந்தென்றலின்
இன்னொரு முகம்..!

பசியில் உள்ள மலைப்பாம்பாய்
பார்த்ததை எல்லாம் விழுங்கும்..!
பயணம் செல்லும் இடமெல்லாம்
பாவங்களை சம்பாதிக்கும்..!

கடலை நம்பியவனையும்
கழனியை நம்பியவனையும்
கண்ணீரில் குளிப்பாட்டும்
காட்டுமிராண்டி காற்று இது..!

அளவில்லா விடுமுறைகளை
அள்ளி அள்ளி தருவதால்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
தேவதையாக தெரியும் இது..!

வீட்டில் மரம் வளர்க்க
விரும்பாத உலகத்தில்
காட்டிலும் வளர விடாமல்
காவு வாங்கும் காட்டேறி இது..!

மடிந்து போன மனிதநேயம்
மறுமலர்ச்சி பெற்றிட
பறந்து பறந்து பந்தாடும்
இறைவனின் விளையாட்டு இது..!

March 05, 2025, 06:26:22 pm
Reply #17

Limat

Re: தமிழின் கவி
« Reply #17 on: March 05, 2025, 06:26:22 pm »


என்னை அள்ளி சென்றவள்..!



நீல வண்ண  சேலையில்
பளிச்சென்று இருப்பவளே!

பாரபட்சம் பார்க்காமல்
பார்வையால் மனதை
பட்டென்று பறிப்பவளே!

பெண்ணே!

உன் செவ்விதழில்
வானவில் வந்து வசித்து கொள்ள
நினைக்குதடி!

உன் கருவிழியை
கடத்தி கொண்டு போக
நிலவு திட்டம் தீட்டுதடி!

உன் கண்ணக்குழியில்
பதுங்கி கொள்ள
பிரபஞ்சம் உன் பின்னால் சுத்துதடி!

நீ கடந்து போகும் போது
உன் வாசனையை
சுவாசித்து உயிர் வாழ
காற்று கூட காத்துக் கிடக்குதடி!

உன் உள்ளங்கையில்
கைக்குட்டையாய் மடிந்து கொள்ள
மேகங்கள் எல்லாம் தவிக்குதடி!

கண்னே!

தேன் சிந்தும் உன் புன்னகை!
வான் கொஞ்ச நினைக்கும் காரிகை!

அழகியே!
என்னை மறந்து
எழுதுகோல் இல்லாமல்
எழுதிக் கொண்டு இருக்கிறேன்
உனக்கான கவிதை ஒன்றை
இன்னும் முடிந்தபாடில்லை
உன் அழகிற்கு முடிவு என்பதே இல்லை
இனி எழுதுவதற்கு என்னிடம்
வார்த்தைகள் ஏதும் இல்லை!!!

August 15, 2025, 11:51:08 am
Reply #18

Limat

Re: தமிழின் கவி
« Reply #18 on: August 15, 2025, 11:51:08 am »

என்னவளின் ஸ்பரிசம்....


அன்பே...
என் கண்ணீர்த் துளிகளுக்கு
பன்னீர் தெளிக்கிறது
உந்தன் மெல்லியப் புன்னகை...
எத்தனை பேர்
என்மீது நடந்தாலும் நான் கரையாகவே இருக்க விரும்புகிறேன்
அலையாக நீ வந்து என்னை முத்தமிட்டு செல்வதால்...
உன்னை முத்தமிடவும்
தயங்குகிறது என் மனசு என் அருவா மீசை
உன் மெல்லிய இதழ்களை காயப்படுத்திவிடுமோ என்பதனால்...
இந்த மழைத்துளிகளின்
மீது எனக்கு பொறாமையாக உள்ளது உன் அழகிய மேனியோடு
ஒட்டி உரசுகிறதே என்பதனால்...
உனக்குத் தாலி கட்டுவதை நிறுத்தி
ஒரு தூளி் கட்டவேண்டும்
உன்னிடம் இன்னும் அந்தக் குழந்தைத் தனம் மாறவேயில்லை....
உன் கூந்தலில் பிரிந்த
ஒற்றை முடியொன்று
என் கவிதைப் புத்தகத்தில் நுழைந்து புதுவாசம் வீசுகிறது...
உன் நடை நளினத்தில்
என் வாலிபம் உடைந்து நொருங்கி ஊசலாடுகிறது....

September 02, 2025, 10:41:56 am
Reply #19

RiJiA

Re: தமிழின் கவி
« Reply #19 on: September 02, 2025, 10:41:56 am »
புயலின் இன்னொரு கோர முகம்..!👏

என்னை அள்ளி சென்றவள்..!👏

என்னவளின் ஸ்பரிசம்....👏

Hi Limat  inthe 3 Kavithaiyum rombe nalla irukku 💐