Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-044  (Read 4789 times)

July 15, 2024, 05:17:27 pm
Read 4789 times

RiJiA

கவிதையும் கானமும்-044
« on: July 15, 2024, 05:17:27 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-044


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

[/url]

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: July 29, 2024, 03:18:46 pm by RiJiA »

July 15, 2024, 08:01:30 pm
Reply #1

Innocent Boy2

Re: கவிதையும் கானமும்-044
« Reply #1 on: July 15, 2024, 08:01:30 pm »
இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது,
இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை...
நேரம் நெருங்க விடாமல் தடுப்பதால்,
நினைவு துளிகளில் தவிக்கிறேன்!
தொலைவால் தூரத்தில் இருந்தாலும்
என் நினைவால் நெஞ்சோரத்தில் நீ...
நீ என்னை தவிர்ப்பதும்,
நான் உனக்காக தவிப்பதுமே நம் காதலாகிவிட்டது!
குயிலின் குரலோசை கேட்டேன்
தொலைவிலிருந்து தொலைபேசி மூலம்
நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்,
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்..
நீயில்லா ஒவ்வொரு பொழுதும்
நம் நினைவுகளைத் தவிர
வேறு எதற்கும்
அனுமதி இல்லை
என் அருகில்
உன்னை காணும் அந்த ஒரு நொடிப் பொழுதிற்காக
நான் கடக்கும் ஒவ்வொரு நாளும்
பல யுகம் போல காட்சியளிக்கிறது...
விடியாத இரவு வேண்டும்
அதில் கலையாத கனவு வேண்டும்
அந்த கனவிலாவது நீ எனக்கு வேண்டும்
எவ்வளவு தொலைவில்
நீ இருந்தாலும்
உன் நினைவுகள் மட்டும்
என்னை தொல்லை செய்து
கொண்டே இருக்கின்றது
கனவிற்க்கும் நிஜத்திற்க்கும்
ஒரு வித்தியாசம்
கனவில் என் அருகில் நீ
நிஜங்களில் உன் தொலைவில் நான்.
என்னால் முடிந்த வரை
பயணித்து கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன்….

July 15, 2024, 11:38:18 pm
Reply #2

Kanmani

Re: கவிதையும் கானமும்-044
« Reply #2 on: July 15, 2024, 11:38:18 pm »
எழுத தொடங்கும் போதே
மகிழ்ச்சியின் உச்சம்...
கவிதையின் பொருள் என்னவண் அல்லவா...
தமிழ் இலக்கணத்தில்
சொலும் பொருளும் போல
விரல்கள் கோர்த்து ..
உன் கண்களை பார்த்து..
ஒன்றாக கரைந்து..
தீராத காதல் செய்ய..
மணம் யேங்குகிறது....
முடியுமா எண ஒரு குரல் 
ஒரு பக்கம் ஒலிக்க
என்னவணை கட்டி தழுவ 
அலைகிறது மணம்..
உன்னுள் தொலைந்து விட,
சிந்தை எழுகிறது
தொலைந்தாலும் தீராதே
என் அன்பின் அளவு...
இது எப்படி நடந்தது . .
மாயமாக தோன்றுகிறது...
என சிந்திக்கும் தருணத்தில்
நம் இருவரின் புரிதலே  அதற்கு பதில்...
இந்த புது உறவு
நிலைக்குமா நிறைவேருமா...
என ஒவ்வொரு நொடியும் கடக்கிறேன்
மனதில் ஒரு குரல்
முதலில் காதலை சொல்
ஏனேனில் சொல்லாத காதல்
கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது...
பகிர்வதில் தான்
காதல் முழுமை அடையும்..
முயற்சிக்கிறேன் என்னவணிடம்
என் காதலை சொல்ல...



July 16, 2024, 09:36:37 am
Reply #3

Limat

Re: கவிதையும் கானமும்-044
« Reply #3 on: July 16, 2024, 09:36:37 am »

தாவணி தென்றல் (தர்ஷினி)
சிறகின்றிப் பறக்கும் பட்டாம்பூச்சியாய்
என் மனம் இங்கு பறக்க கண்டேன்
நீ தாவணி அணிந்து நடக்கையில்..
இது வலியா சுகமா என்று புரியாமல்
உனை பின் தொடர்கிறேன்
இமைக்கா விழிகளுடன்
நீ தாவணி அணிந்து நடக்கையில்..
அலை பாயும் நதி நீராய் என் மனம்
உன் கரைசேர தொடர்கிறேன் உன் பின்னே
நீ தாவணி அணிந்து நடக்கையில்..
உன் விழி பார்க்க வெட்கம் கொண்டு
உன் கொலுசொலி பாதம் பார்த்து
தொடர்கிறேன் உன் பின்னே
நீ தாவணி அணிந்து நடக்கையில்..
மெய் சிலிர்க்க வைத்த உன் காதலை எண்ணி
என்றும் தென்றலென தொடர்வேன் உன் பின்னே
 நீ தாவணி அணிந்து நடக்கையில்..
உன் நிழல் கூட மறைந்து போகும்
என்றும் மறையாத நினைவாய்
தொடர்வேன் உன் பின்னே
நீ தாவணி அணிந்து நடக்கையில்..
செந்தமிழ்த் தேரே செம்மலர்ப் பூவே
அந்தியின் அழகே ஆலய விளக்கே
புன்னகை முத்தே புதுக்கவிதைச் சிரிப்பே
என்றும் உனை தொடர்வேன்
நீ தாவணி அணிந்து நடக்கும் நடைஅழகை ரசித்தபடி..!
கவிதை அழகும் கார்முகில் கூந்தலும்
புவியை வசமாக்கும் புன்னகை அதரமும்
அந்தியின் அழகை எல்லாம் ஏந்தி
பூவிரி செந்தமிழ்த் தோட்டமாய் நடந்துவரும்
தாவணித் தென்றலே என்றும் உன்னை தொடர்வேன்..!
/color]

July 16, 2024, 12:31:37 pm
Reply #4

Shree

Re: கவிதையும் கானமும்-044
« Reply #4 on: July 16, 2024, 12:31:37 pm »

மனதோடு மழைக்காலம்....

மனதில் எழும் எண்ணிலா துயரங்களை தானே சுமந்து.,
      தனக்கு, தாம் போதும் என இருந்த எண்ணங்கள்.,
அவன் உடன் இருந்தால், ஏனோ! தடம் மாறித்தான் போகிறது....

அவளின்  பின் அவன் இருப்பான் என்பது, என்னவோ.,
      அவன் பின் தொடர்வதை ரசிப்பதற்கு அல்ல.,
தன்னுடன் இருப்பவனை, தனக்கானவனாய் ரசிக்கவே....

அனைத்தும் அறிந்த அவள் மனமோ,
      தன் துயரங்கள் யாவையும் சுமப்பது இனி என் வேலை அல்ல என்றது.
ஏன் என வினவிய என் எண்ணம், மனதோடு குரல் எழுப்பிய போது,
      உன் ஊடலை இனி அவனிடமே வைத்துக்கொள் என்றது....

ஓர் நிமிடம் நிலைதடுமாறிய நான், சற்று சிந்தித்த பொழுது
      ஒர் சிறிய புன்னகையோடு உணர்ந்தது, (என்)அவனை...

அவன், உடன் இருப்பதை உணரும் தருணங்கள் எல்லாம்
      அவள் சந்தோஷத்தின் மிகுதி சிறிதளவு கூட சிதறியதில்லை.,

அழகிய மழைத் துளிகள் போல், அவள் உணர்வோடு ரசித்தது யாதெனில்.,
அவள் மனதோடு மழைக்காலம் 💙

   

« Last Edit: July 16, 2024, 12:35:33 pm by Shree »
ஶ்ரீ

July 18, 2024, 08:20:30 am
Reply #5

Misty Sky

Re: கவிதையும் கானமும்-044
« Reply #5 on: July 18, 2024, 08:20:30 am »
"என்னவளே என்னவளே
உன் அழகிய முகத்தை பார்த்து நான் வியக்க....
வெட்கத்தில் என் உதடுகளோ புன்னகையில் சிரிக்க....
மகிழ்ச்சியில் என் மனதோ பட படவென துடிக்க....
உன்னுடன் நெருங்கிப் பேச என் மனதோ தவிக்க....
என் உடலோ என்னை அறியாமலே மெய்சிலிர்க்க....
இப்படி என்னையே நான் மறக்க....
என்றுமே உன்னுடன் நான் இருக்க....
இந்த கவிதையை என்னவளே உனக்காக நான் சமர்ப்பிக்கின்றேன்"

"என்னவளே என்னவளே
என் இனியவளே இனியவளே"
"அழகான பெண்ணவள் என்னை ஆளும் தேவதையவள்"
"அழகான பெண்ணவள் என்னை ஆளும் தேவதையவள்"

"என்னவளே லேசான உன் புன்னகையில் என்னை புதைத்து விட்டாயடி"
"என்னவளே பேசாத உன் மெளனத்தில் என்னை சிதைத்து விட்டாயடி"
"என்னவளே அழகான உன் புன்னகை அதுபோதுமடி அது தந்துவிடுகிறது ஆயிரம் அர்த்தங்களை"

"என்னவளே என்னவளே என்னோடு பேசு"
"என்னவளே ஒட்டிக்கொண்ட உன் உதட்டில்
பூட்டிக்கொண்ட உன் வார்த்தைகளை
எனக்காக உதிர்ப்பாயா
என்னிடம் கதைப்பாயா"

"என்னவளே என்னோடு ஒரு வார்த்தை பேசு ஒரு யுகமே எனக்கு சுகமாகும்"
"என்னவளே என்னோடு ஒரேயொரு முறை பேசு இந்த நொடி எனக்கு வரமாகும்"
"என்னவளே உன்னோடு பேசிட,  உன் குரல் கேட்டிட நொடிகள் ஒவ்வொன்றும் துடிக்கிறது என் இதயம்"
"என்னவளே காதோரம் மெல்ல கதைபேச வந்துவிடு, கண்ணத்தைக் கடித்து கள்ள முத்தம் தந்துவிடு"

"என்னவளே உன் புன்னகை ஒளியில் என் கண்கள் குசுதடி, உன் வெட்கத்தில் என் இதயம் உன்னிடம் பேசுதடி"
"என்னவளே என்னோடு நீ பேசு நீ பேசும் அந்தச் சிறிய அசைவில் என் சிறிய இதயம் இசைக்கும்"
"என்னவளே மணிக்கணக்கில் நீ பேச காத்திருக்கிறேன் உனக்காக"
"என்னவளே என் மொத்த வார்த்தையும் சேமித்து உன்னிடம் பேச காத்திருக்கிறேன் உனக்காக"
"என்னவளே உன் அழகை கண்டதும் கவிஞனும் ஆனேன், உன் இருவிழி அசைவில் என் இதயமும் தொலைத்தேன்"
"என்னவளே உன் இருவிழி பார்வையால் என்னை மொத்தமாக திருடினாய்
இரக்கமே இல்லாமல் என் இதயத்தை வருடினாய்"
"என்னவளே பார்த்தேன், ரசித்தேன், எடுத்தேன் எனக்குள் உன்னை
பிரம்மித்தேன், வியந்தேன், கொடுத்தேன் உனக்கு என்னை"

"என்னவளே எத்தனை நாள் இன்னும் என் உயிர் தாங்குமோ??
கடைசி நொடி வரை காத்திருப்பேன் உனக்காக"
"என்னவளே உறக்கத்திலும் உன் நினைவு கெல்லுதடி
என் உசுருக்குள்ளும் உன் குரல் மட்டும் கேட்குதடி"
"என்னவளே என் உறவாகவே நீயிரு
என்னுடன் நீ உறவாடியே மகிழ்ந்திரு"
"என்னவளே உன்னை பிடித்துவிட்டது
என் உயிரில் வந்து கலந்துவிடு
என் இதயத்தில் ஒன்றாக இணைந்துவிடு"

"என்னவளே நீரின்றி உலகுமில்லை
நீயின்றி நானுமில்லை"
"என்னவளே என்னைப் புரிந்து கொண்டு வருவாயா??
இல்லை என்னைப் புரிந்து கொள்ளாமல் புன்னகைப்பாயா??
எதுவானாலும் சரிதானடி
எனக்குள் என்றுமே நீதானடி
எனக்குள் என்றுமே நீதானடி"

"என்னவளே உன்னை காணும் நேரம் வருமா, என் வாழ்வின் சோகம் தீருமா"
"என்னவளே உன்னை காணும் நேரம் வருமா, என் வாழ்வில் இன்பம் மலருமா"
சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!

இப்படிக்கு
உன் என்னவன் MISTY SKY
« Last Edit: July 18, 2024, 08:55:43 am by Misty Sky »

July 18, 2024, 07:08:19 pm
Reply #6
Re: கவிதையும் கானமும்-044
« Reply #6 on: July 18, 2024, 07:08:19 pm »
ஆச வெச்சேன் உன்மேல !
ஆசை தீர வாழுவோமா இந்த மண் மேல !

உன் காலடி ஓசைய வச்சு
காவடி சிந்து ஒன்னு பாடட்டுமா ?

நிக்காம துள்ளுதடி என் மனசு -அத
சொல்லாம சொல்லுதடி உன் கொலுசு !
உன்ன பார்த்ததுமே குறையுதடி
என் வயசு -அத
கொல்லாம கொல்லுதடி உன் ரவுசு !

ஊசிக் கொண்ட காரி
என்ன உசுப்பு ஏத்தும் சண்டைக்காரி !

உடுக்கை இடுப்புக்காரி
என்ன கடுப்பு ஏத்தும்
மிடுக்குகாரி !

கத்தரி மூக்குகாரி
என்ன கவுத்துபோடும்
நேக்குகாரி !

செவிதழ் சின்ன பொண்ணு -உனக்கு
செந்தாமரை சின்ன கண்ணு !

ஆயுள் தீரும் மட்டும்  ஆசை தீர வாழ -என்
ஆவி துடிக்குதேடி !

July 21, 2024, 06:49:37 pm
Reply #7

Eagle 13

Re: கவிதையும் கானமும்-044
« Reply #7 on: July 21, 2024, 06:49:37 pm »
.கலையாத கனவே - என்
தனிமையின் உணவே!
தவமின்றி கிடைத்து தினம் தினம் தவிக்க
விட்டாயே!
விடிகின்ற பொழுதில் உன்முகம் கேட்டேன்!
என்றும்,
முடியாத உறவாய் உன்னையே கேட்டேன்!
எனக்கு பிடித்த இசை உன் புன்னகை!
அதற்கு இணையாக இங்கு இல்லை
பொன்னகை!
விடியற்காலையில் உன் குரல்
சேவலாகும்!
அதை அடிக்கடி கேட்பது எனக்கு
ஆவலாகும்
உன்னை பற்றி
கனவுகள் எனக்குள் ஆயிரம்!
அதைக்கொண்டு படைப்பேன்
ஒரு காவியம்!
அதில் நீயே அழகிய ஓவியம்,
ஆனால்
எனக்கு வரையத்தெரியாதலால்
நானும் ஆனேன் பாவியும்!
உன் மனதை திறக்க என்னிடம்
இல்லை எந்த சாவியும்!.


அது ஒரு இளவேனிற்காலத்தின்
அந்திமாலை!
சுற்றி எங்கு பார்ப்பினும் இளஞ்சோலை!
கொக்கு நாரைக் கூட்டங்கள்
வலமடிக்கும்,
உணவிற்காக மீன்களை சிறைப்பிடிக்கும்,
அங்கு,
நீயும் நானும் ஏரிக்கரை மேட்டில்,
நீ அருகில் இருக்கும் போது
நான் பாடும் நமக்கு பிடித்த
பாட்டில்,
அதை உன் உதடுகள் முனுமுனுக்கும்!
உன் சினுங்கல்கள் என் மனதை
சிறை பிடிக்கும்!
அக்கம் பக்கம் யாருமில்லா
நேரத்தில்,
இப்போது,
நீயும் இல்லை எனைவிட
வெகு தூரத்தில்,
நம் ஆசைகளை
 பேசித்தீர்ப்போம் மனதை விட்டு!
நீயும் நானும் காலம்வரை சேர்ந்திருக்க
பிடிவாதத்தை விட்டு கொடுப்போம்
நம் அறிவைத்தொட்டு!.