Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-043  (Read 4657 times)

May 20, 2024, 04:04:44 pm
Read 4657 times

RiJiA

கவிதையும் கானமும்-043
« on: May 20, 2024, 04:04:44 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-043


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: July 15, 2024, 05:14:49 pm by RiJiA »

May 21, 2024, 10:24:23 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-043
« Reply #1 on: May 21, 2024, 10:24:23 am »
செவ்வானம் தந்த பசுமை புறாக்கள் நாம்..!
வாரத்தில் ஒருமுறை வந்தது விடுமுறை
வானம் தாண்டிக் கேட்கும் எங்கள் புன்னகை
அடடா வானம் தாண்டிக் கேட்கும்
எங்கள் புன்னகை...
ஞாயிறு பிறந்தது பாரு
என் நண்பர்களுடன் நகர்வலத்தோடு
இந்த இருப்பதிநான்கு மணி நேரம்
இனி தடைகள் ஏது?
இதை மீண்டும் தந்திட வேண்டும்
இது இறைவா உன் பாடு
இதை மாற்றி எழுதி வைத்தால்
இல்லை உன்னுடன் உடன்பாடு
செவ்வானம் எங்களை சூழ
எங்கெங்கும் நண்பர்கள் விளையாட்டு
சுற்றி நின்னு பாக்கும் பிகருக்கு
நாங்கதான் டார்கெட்டு
அடிச்சா நூறு ரன்னுதான்
தோத்தா ஒரு கப் தேநீருதான்
மாலையில் ஆட்டம் போட்டுத்தான்
வாய்விட்டுப் பாட்டு பாடத்தான்..

ஒரு நல்ல நண்பன் போதும் நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!
ஆனால்...
ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன் வாழ்வதற்கு..!
கற்பனைக்கு எட்டாததும் கவிதைக்குள் அடங்காததும் தான் நம் நட்பு !!
கவிஞர்களால் வர்ணிக்க முடியாததும்!கைவினை கலைஞராலும்
செதுக்க முடியாதது தான் நம் நட்பு!
கடந்து செல்ல நெடுஞ்சாலையும் அல்ல!கரையை கடக்க காட்டாறும் அல்ல!
கண்களை மூடினாலும் கனவுகளோடு தொடர்வதுதான் நம் நட்பு !
காணுமிடமெல்லாம் நண்பர்கள் கூட்டம்!பூக்களாய் பூத்திருந்தது விளையாட்டு தோட்டம்!சேர்ந்து போடாத ஆட்டமும் இல்லை!
தோல்வி என்றால் வாட்டமும் இல்லை!
முதுமை அடைந்தாலும் பசுமை நினைவுகளோடு பறக்கும் புறாக்கள்
நம் GTC நண்பர்கள்
 என்றும்  நட்பூக்களுடன் உங்கள் தமிழ்...!


May 21, 2024, 12:17:44 pm
Reply #2

Kanmani

Re: கவிதையும் கானமும்-043
« Reply #2 on: May 21, 2024, 12:17:44 pm »
குழந்தைப் பருவம்..
 ஒரு வசந்தத்  காலம்...
கள்ளமில்லா பருவம்...
பொய் கூறா  பருவம்...
பொறாமை இல்லாப் பருவம்...
கவலையில்லா பருவம்..
கீழே விழுந்தால் மட்டுமே காயம்...
கண்ணில் பட்டது எல்லாம் வாங்க..
அடம் பிடிக்கும் பருவம்...
பாசமும் நட்புமும்
இணை திருந்த.....
 உண்ணத பருவம்......
வஞ்சகமற்ற மனம்.......
பயம் அறியாப் பருவம்
நிலத்தில் உருண்டு அழுது..
நினைத்ததய் சாதித்த பருவம்...
பட்டம் போல்.....
உயர பறந்த பருவம்...
தெருக்களில் மான்னாக
சுற்றி  திரிந்த  பருவம்...
மீண்டும் கிடைக்காத என
உலகம் யேங்கும பருவம்....
சில சமயங்களில் தோன்றும்...
வாழ்க்கை கடிகாரத்தை
பின் நோக்கி வைக்கலாம் என்று..
முடியாதே என்று உணர்ந்து
நிஜம் அறிந்து......
அமைதியாய் அசைபோடுகிறது மணம்....


May 30, 2024, 01:32:23 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-043
« Reply #3 on: May 30, 2024, 01:32:23 pm »
நான் நானாய் வாழ்ந்த நாட்கள் …..

கைபேசியும் , காணொளியும் என்னை களவாடி…
எல்லாம் இருந்தும் நான் ஒரு வெற்றிடம்... ….
ஏல்லோரும் இருக்க நான் மட்டும் தனிமையில்...

எனோ ..இன்று traffic  நெரிசல் இல்லை …
auto  பஞ்சு  பொதிகளாய்   குழந்தைகள் காணவில்லை ..
பள்ளி சிறை சாலைகள் மூடி கிடந்தன.…
ஓஒ...கோடை விடுமுறை….

என் எண்ணம் எனும் சிறகுகள் பறந்தன …என்
பள்ளி என்ற ஆனந்த சரணாலயத்திற்கு ….

sunscreen  இல்லாத  முகங்கள்... 
குடை விரித்து வெயிலுக்கு கருப்புகொடி காட்டியதில்லை …
வியர்வை அழுக்கு அருவருப்பாய் வெறுத்ததில்லை  …

ஆலமரங்கள் பள்ளிக்கு கூரை..
குருவிகளும் காக்கைகளும் எங்களோடு தமிழ் படித்தன ..
கழுத்தில் பட்டை இல்லாத பைரவர்கள் ….
உலக நாடுகள் போட்டி போடும் விண்வெளியில்
எங்க காத்தடியும் ….ஒரு ராக்கெட்….

காத்தாடி …செய்வதும்
ராக்கெட் இன்ஜினியரிங் தான் …

அளவுகளும் கோணங்களும் வளைவுகளும்
சரியாய் அமையாவிட்டால் மண் நோக்கி விழும்
ராக்கெட்டை போல் …
காத்தடியும் சரியும்...

காற்றின் வேகம் , மாஞ்சா நூலும்….
நேர்த்தியாய் அமைய …
கழுகாய் உயர பறக்கும் காத்தாடி ……

Harry Potter ,  PUBG … தெரியாத  நாங்கள் …என்றும்
BOSS BABIES…..

திடீரென்று ஒலித்த கைபேசி …

நிகழ் காலத்திற்கு வந்த ………. என் மனதில்

நிதர்சனமான நிற்கும் …

நான் நானாக வாழ்ந்த நாட்கள்.……





June 11, 2024, 10:35:20 am
Reply #4

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-043
« Reply #4 on: June 11, 2024, 10:35:20 am »
மழலையாக மாறத்தான் ஆசை எனக்கு

மாலை வேளை கதிரவன் கண்ணை சாய்க்கும் நேரம்
மழலை கூட்டங்கள் மகிழ்வோடு உலாவருகின்றனர் …

கதிரவனை விட உயரே பறக்கும் பட்டம்
மழலையின் மனதினை போல  …

தனது சகோதரனை போல நான்கு கால்
ஜீவனையும் பாவிக்கும் மழலை மனது  …

பறவைகள் ஆனந்தமாய் உலவருவது போல
மாலையில் உலாவரும் குழந்தைகள் கூட்டம்  …

செக்க சிவந்த வானத்தின் அழகில் செந்நீர  கதிரவனின் நிறத்தில்
அங்கங்கே வெள்ளை மேகம் கண்ணுக்கு தரும் விருந்து  …

கலங்கம் இல்லாத மனது கலப்படம் இல்லாத சிரிப்பு
இதுவே மழலைக்கு கடவுள் தந்த பரிசு  …

கல்லோ முள்ளோ காலில் குத்தினாலும்
அதை பொருட்படுத்தாமல் விளையாடும் மழலை உள்ளம்  …

ஓடும் தூரம் தெரியாமல் குறிக்கோள் ஏதும் இல்லாமல்
நண்பர்களோடு ஆனந்தமாக உலாவரும் மழலை  காலம் …

பட்டத்தை நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்ப்போம்
காற்றடிப்பதால் பட்டம் பறக்கிறது உயரே  …

நாமும் வாழ்வில் உயரே பறக்கிறோம்
பட்டத்தை போலே நம்பிக்கையெனும் நூலுடன்  …

நம்பிக்கை அறுப்பட்டால் நூல் இல்லாத காற்றடிபோல
காற்றுபோகும் திசைக்கு பட்டம் செல்வதுபோல செல்லும்  நமது வாழ்கை …

நமது வாழ்கை பட்டத்தை போல பறந்தாலும்
பலவித ஆசைகள் உலகத்தின் மாற்றம் சுமுக வலைத்தளம்
இவற்றில் நாம் அடிமையாகும் பொது

நம்பிக்கை எனும் பட்டத்தின் நூல் அறுந்து
நமது வாழ்க்கை நமது கையை விட்டு  பறந்து செல்கிறது

மழலையாக மாறத்தான் ஆசை எனக்கு
மழலையாக மாறத்தான் ஆசை எனக்கு

இந்த சமுதாயம் மாறவிடாது தெரியுமா உனக்கு?




என்றும் அன்புடன்

நீலவானம்

July 02, 2024, 07:13:51 pm
Reply #5

kathija

Re: கவிதையும் கானமும்-043
« Reply #5 on: July 02, 2024, 07:13:51 pm »
vanakam rijia sis after long time unga pgm pakum pothu oru happy unga voice la enga kavithai read pannum pothu ta nanga eluthunathoda uyir kidaikuthu ,keep rocking sis ma love u

அது ஒரு கனாக் காலம்:
 

பிள்ளை பருவம்!
வெள்ளை உள்ளம்!
கொள்ளை இன்பம்!
கொண்டு

வீதியிலே சுற்றினோம் பறவைகள் போலே
வீதியிலே சுற்றினோம் பறவைகள் போலே

கால்கள் ஓயவில்லை !
காற்றும் ஓயவில்லை!
எந்தன் கனவும் ஓயவில்லை!
கையில் தொலைபேசியும் இல்லை!

என்னை கட்டிப்போட அன்று
என்னை கட்டிப்போட அன்று

அதனால் தான் என்னவோ உண்மையான நண்பனை மட்டும்
கண்டேன் அன்று

அன்றைய பொழுது எனக்கு
இயற்க்கையின் சுவாசம் தந்தது!
உணவின் சுவையை தந்தது!
பகிர்ந்து கொள்ளும் உணர்வை தந்தது!
வீடுகள் பல தந்தது நண்பனின் மூலம்

வீட்டின் உள்ளே அடைபட்டதில்லை அன்று
இன்று என் கையில் உலகமே தெரிகிறது


ஒன்றை தவிர
ஆம் இன்பம் ஒன்றை தவிர

தொலைத்து விட்டேன் என் இனிமையின் நாட்களை
மீண்டும் அந்த நாட்களே வேண்டும்

இன்று கனவாய் போன என் அழகிய குழந்தை பருவம்


July 08, 2024, 12:29:21 pm
Reply #6

Misty Sky

Re: கவிதையும் கானமும்-043
« Reply #6 on: July 08, 2024, 12:29:21 pm »
"மழலை பருவம் அழகு அழகு அழகு எத்தனை அழகு மிக்கது இந்த மழலை பருவம்"

"மழலை பருவம், வாழ்க்கையின் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்த பருவம், வண்ணத்துப்பூச்சியாய் சிறகைவிரித்து பறந்த பருவம், சக நண்பர்களுடன் மகிழ்ச்சியாய் துள்ளித் திரிந்த பருவம், மனதில் ஆயிரம் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைந்த பருவம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் சிறகு முளைத்த சிட்டு குருவிகளாய் சிறகடித்து பறந்த சிங்கார காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் எந்தத் துயருமின்றி சிரித்து மகிழ்ந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் ஆலமரத்தடியில் மகிழ்ச்சியாக ஊஞ்சலில் ஆடிய காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் நண்பர்களுடன் ஆற்றில் நீச்சலடித்து மகிழ்ந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் நண்பர்களுடன் தெருக்களில் கோலி விளையாடுவது, பட்டம் விடுவது, மணல் வீடு கட்டி விளையாடுவது, கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிடுவது என மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் தெருக்களில் மிதிவண்டி பந்தயம் வைப்பது, டயர் பந்தயம் வைப்பது, மழைக் காலங்களில் தெருக்களில் ஓடும் தண்ணீரில் காகித கப்பல் விட்டு விளையாடுவது என ராஜாக்கள் போல தெரு வீதியில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் கண்ணைக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது, ஓடிப்பிடித்து விளையாடுவது, பந்து வீசி விளையாடு, நொண்டி அடித்து விளையாடுவது என துடிப்போடு சுற்றித் திரிந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் கோடை வெயிலில் குளிர்ச்சி தேடி குளத்தின் நீரில் குதித்தோம், குப்பைக் குவியலில் கோட்டைகள் கட்டி ராஜாக்களாய் ஆட்சி செய்து பரவசமாக சுற்றித் திரிந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் கொட்டும் மழையிலே குளிரில் நடுங்கிக் கொண்டே துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டு விட்டு அன்னை மடியில் அயர்ந்து படுத்துக்கொண்ட பொன்னான காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் எந்த கலவையும் இன்றி, சோகங்களும் இன்றி சந்தோஷமாக துள்ளித் திரிந்த காலம்" இன்று அந்த அழகிய நாட்கள் மீண்டும் திரும்ப கிடைக்காத என ஒருவித ஏக்கம், அதனால் என் மனதில் ஒருவித துக்கம்"

"மழலையாகவே இருந்திருக்கலாமோ
மழலையாகவே இருந்திருக்கலாமோ"

"பரிசுத்த மிக்க என் தாயைப் போல மீண்டும் வருமா எம் மழலைப்பருவம்!!
"பரிசுத்த மிக்க என் தாயைப் போல மீண்டும் வருமா எம் மழலைப்பருவம்!!
என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!

இப்படிக்கு
உங்கள் MISTY SKY