Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-042  (Read 7905 times)

May 06, 2024, 06:10:56 pm
Read 7905 times

RiJiA

கவிதையும் கானமும்-042
« on: May 06, 2024, 06:10:56 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-042


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: May 20, 2024, 04:03:24 pm by RiJiA »

May 07, 2024, 12:11:30 pm
Reply #1

Kanmani

Re: கவிதையும் கானமும்-042
« Reply #1 on: May 07, 2024, 12:11:30 pm »
என்னவன்னுடன் இருக்கும் நேரம்
மிக குறைவு
என்னில் அவனின் தாக்கம்
இருக்கும்...
அவன் இருக்கும் வரை யல்ல,
நான் இறக்கும் வரை தொடரும்..
தேடாமல் கிடைத்த
பொக்கிஷம் நீ…
தெரியாமல் கூட உன்னை
பிரிய மாட்டேன்
இந்த சிறிய உலகில்
எனக்காக. .. என்னுடன்  இருக்க....
கடவுள் தந்த வரம் நீ...
பொழுதெல்லாம் உன்னுடன் கழிக்க
மணம் யேங்கும...
வாய்ப்பில்லை என்று புத்திக்கு  தெரியும்..
உன்னுடன் இருக்கும் நேரத்தை
சேமித்து வைத்தேன்..
ஏனெனில் வீதி வலியது...
நம் அன்பிற்கு முன்பு

May 07, 2024, 12:58:10 pm
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-042
« Reply #2 on: May 07, 2024, 12:58:10 pm »
நிலவொளியில் மிளிரும் காதல்!

கடல் நீரில் காலை நனைக்க சென்றால்
கடலலைகள் தந்து செல்லும்
வண்ண வண்ண கிழிஞ்சல்கள்...
கடற்கரை மணலில் பாய் விரித்து படுத்து
நீல வானை அண்ணாந்து பார்க்கையிலே
எங்கிருந்தோ வந்தது கடற்காற்று...
சாந்தமான நிலவொளியில் உன் சந்தன முகம் பார்த்து..
என்னைச் சார்ந்த உன் இதயம் சாந்தமாக துடிக்க,
அந்நிகழ்வை படம் பிடித்த என் கண்கள்
"மின்மினி"யின் அழகையும் தவிர்த்து
உன்னை நோக்க,
சாந்தமான உன் இதழின் புன்சிரிப்பு
ஆயிரம் அர்த்தங்களை பறைசாற்றும்...
அழகே!..
மின்னுவது மின்மினியா அல்லது
உன் கண்களில் தெரியும் நிலவொளியா
சொல்லில் தமிழெடுத்து சொர்க்கத்தின் அமுதெடுத்து
எல்லையில்லா நீலவான அழகெடுத்து அந்திப் பொழுதில்
அல்லி மலராக அழகிய நிலவொளியில் உனை வடித்தானோ பிரமன்...
தேவதைகள் சிறகுகளோடுதான்
திரிவார்கள என்கிற மரபை
உடைத்துப் போட்டவள் என் அம்மு!
நீ வாசிக்கும்போது மட்டும்
எனது கவிதைகள் சுவாசிக்கின்றன அம்மு !
கண்ணாடியில் பிரதிபலிக்காத என்னவளின் முகம்...
இதோ இங்கே நிலவொளி பட்டு எதிரொலிக்கிறது....



May 07, 2024, 11:34:47 pm
Reply #3

Crazy King

Re: கவிதையும் கானமும்-042
« Reply #3 on: May 07, 2024, 11:34:47 pm »
குளிர் காற்றுக் காதோரம் வீச
காரிருள் சூழ்ந்த இரவில்
நிலவைக் கண்டு ஆர்ப்பரிக்கும் அலைகளாய்
உன்னைக் கண்டு ஆர்ப்பரித்த என் மனம்
வெண்ணிலவும் பொலிவிழந்ததே
பெண்ணிலவே உன்னைக் கண்டவுடன்
என்னுயிரும் புதிதாய் மலர்ந்ததே
உன்னிதழ்கள் சிரிப்பைக் கொண்டவுடன்
கரையோரம் குளிர் காற்றும் வீச
உன் சுவாசக்காற்றில் குளிர் காய்ந்தேனே
அலையாய் ஆர்ப்பரித்த என் மனதை
அன்பால் அமைதிப் பெறச்செய்தாயே
கரம் கோர்த்து நடக்கும் இந்நிமிடம்
என் நாளும் நினைவில் மலரும்
உன்னோடு செல்லும் இப்பயணம்
வாழ்நாள் முழுதும் தொடரும்

   

May 08, 2024, 01:14:20 pm
Reply #4
Re: கவிதையும் கானமும்-042
« Reply #4 on: May 08, 2024, 01:14:20 pm »
*கருமேக கூரையில்...
இளைப்பாறிடும்
வெண்மதி வெளிச்சத்தில்...
கோர்த்திட்ட கைகள் வேர்த்திட...
எதை காட்ட இந்த
நடை பயணமடா!!!!
*அலை அலையாய்
அலைந்தேன்
உன் இதய கரை
தொட்டிடவே
என காட்டிடவா????
*பகலின் வெம்மையை
மறக்கச் செய்யும்
இரவின் மென்குளிர்
நீயடி
என காட்டிடவா????
*நீள ஆள அகலம்
அற்ற என் காதலும்
இக்கடல் போன்றதே
என காட்டிடவா????
தெரியவில்லையடா....
*கனவுகளை நிறைத்திட்ட
இதயத்தோடும்....
*வார்த்தைகளை கசியவிடும்
கண்களோடும்....
*மௌன மொழி பேசிடும்
இதழ்களோடும்...
*நமக்கான இக்குளிர் இரவில்
வேண்டுவதெல்லாம்
ஒன்றே தான்....
*நொடிகளை விழுங்கி
விடிய காத்திருக்கும்
இவ்விரவு
விடியாமல் நீளட்டும்.....

May 08, 2024, 06:29:32 pm
Reply #5

Innocent Boy2

Re: கவிதையும் கானமும்-042
« Reply #5 on: May 08, 2024, 06:29:32 pm »
கடலைப் பார்ப்பதற்கு கண்கள் பத்தாது
அதே மாதிரி தான் நிலவும்
அதன் வெளிச்சமும்!

கடல் பெரிதாளவு ஆனல்
அதில் வரும் அலைகள் சத்தம் தான்
சந்தோசங்களை தரும்
நிலா வெளிச்சம் இலையென்றால்
கடலும் அதில் வரும் அலையும் தெளியாது.

நிலா ஒரு அழகு ,
கடல் ஒரு அழகு
 இந்த ரெண்டு அழகும் விட பெரிய அழகு
 என்னோட தேவதைl தான் என்பேன்

நாங்கள் இருவரும் இந்த கடலில்
நடக்கும்போது இந்த நிலா எங்களை
பார்த்து வெக்கப்படும்,

என்ன ஜோடி
நம்மலை விட அழகாயிருக்கிறது!!!
« Last Edit: May 19, 2024, 04:11:29 pm by Administrator »

May 12, 2024, 08:49:55 pm
Reply #6
Re: கவிதையும் கானமும்-042
« Reply #6 on: May 12, 2024, 08:49:55 pm »
பௌர்ணமி வெளிச்சம் பகல் போல் வீச
பாவி மனம் உன்னை கண்டதும் பரவசமாகுதடி !
அழகுக்கே அழகு சேர்க்கும் அழகின் மகள்  நீ எனத் தெரிந்தும்
உன்னை எட்டிப் பார்க்கும் வான் நிலவோ
உனதழகில் வெட்கி தலை குனிகிறதடி !
உன் விரல் பிடித்து நடந்திடும் வரம் எனக்கு கிடைத்திடவே
என் பிறப்பு மறுஜென்மம் எடுக்கிறதடி !
பொங்கி வரும் கடல் நுரைகள்
பூரிப்பு  கொள்ளுதடி பொன்மகள் உந்தன் அழகு கண்டு !
ஆர்ப்பரிக்கும் அலை கடலும்
கலைமகள் உந்தன் கண்கள் கண்டு ஆனந்தம் கொள்ளுதடி !
வீசும் காற்றுக்கும் வேர்த்துக்கொட்டுதடி
வெண்மகள் உந்தன் மூச்சுக்காற்றால்.
உன் வாழைப்பூ விரல் தன்னை வாடாமல் இருக பற்றியே
வழியெல்லாம் நான் செல்லவே
வானம் பட்டொளி வீசியதடி !
காற்றோடு கதை பேசும்
கன்னி உந்தன் வாய் கீதம்  வண்ணக் கடல் அலையாய் வானளவு உயருதடி !
எண்ணமெல்லாம் வண்ணமாக
எந்தன் நெஞ்சமெல்லாம்
நிலவின் மகள் உந்தன் தஞ்சமாக
 நித்தமும் ஆவி துடிக்குதடி !
வளவிப்போட்ட வான் கிளியே
உன்னை வளைச்சு போட்ட ஆண்கிளி நான் தானே !
வாழ்நாள் எல்லாம் வசந்தம் பாட
வாடி கிளியே பறந்து போவோம்
வெண்ணிலவை  நோக்கியே !
« Last Edit: May 13, 2024, 10:37:39 am by Sivarudran »

May 14, 2024, 10:06:45 am
Reply #7

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-042
« Reply #7 on: May 14, 2024, 10:06:45 am »
நிலவுடன் உறவு

இரவின் மடியில் நிலவும் தாலாட்டும்
கடலின் அலைகள் கூட இசை மீட்டும் !!!

உனது கைகோர்த்து நடக்கும்பொழுது
அந்த நிலவே பொறாமைகொள்ளும் ...

இரவில் மின்சாரம் இல்லாமல்
எரியும்  விளக்கு சந்திரன் மட்டுமே !!!

அந்த விளக்கின் ஒளியில் நீயும் நானும்
நடந்துச்செல்லும் போது  இனம் புரியாத சந்தோசம் !!!

இரவில் பால்போன்ற  நிலவழகு
அந்த நிலவின் ஒளியில் நீ பேரழகு !!!

கடற்கரை மணல்கள் கூட தவம் கிடக்கிறது
உனது பாதத்தின் சுவடுகள் பதிப்பதற்காக ...

நீலவானத்தை கண்டு நான்  பொறாமை படுகிறேன்
நிலவை வெண்மையாய் காட்ட அது இருளில் சென்றுவிட்டது ....

பெண்ணே உன்னோடு கோர்த்த இந்த கைகள்
ஒருபோதும் உன்னை விட்டு பிரியாது !!!

நான் சிறுபிள்ளையாய் இருக்கும்போது நிலவை
காட்டி என்னக்கு உணவு கொடுத்தால் அன்னை …

அதே நிலவின் அருகில் கை  கோர்த்து நிற்கிறோம் 
வருடங்கள் போனாலும்  அழகே போகாத ஒன்று நிலவு !!!

நிலவே உனக்கு  வருடம் முடிவில்
ஒரு வயது குறைகிறதா என்ன ?

எத்தனை வருடங்கள் ஆனாலும் நிலவை போல
பிரகாசமாய் இருக்கும் நம் காதல் !!!

கை  கோர்த்து செல்வோம் நிலவின் ஒளியில்
கடலின் அலைகள் பூக்கள் போல பாதத்தில் மோத
இங்கு ஏற்ப்படுகிறது நிலவுடம் ஓர் உறவு



அன்புடன்
நீலவானம்



(பின்குறிப்பு ரிஜியா உங்கள் பணி  சிறக்க வாழ்த்துக்கள் )
« Last Edit: May 14, 2024, 10:16:30 am by Passing Clouds »