நிலவொளியில் மிளிரும் காதல்!
கடல் நீரில் காலை நனைக்க சென்றால்
கடலலைகள் தந்து செல்லும்
வண்ண வண்ண கிழிஞ்சல்கள்...
கடற்கரை மணலில் பாய் விரித்து படுத்து
நீல வானை அண்ணாந்து பார்க்கையிலே
எங்கிருந்தோ வந்தது கடற்காற்று...
சாந்தமான நிலவொளியில் உன் சந்தன முகம் பார்த்து..
என்னைச் சார்ந்த உன் இதயம் சாந்தமாக துடிக்க,
அந்நிகழ்வை படம் பிடித்த என் கண்கள்
"மின்மினி"யின் அழகையும் தவிர்த்து
உன்னை நோக்க,
சாந்தமான உன் இதழின் புன்சிரிப்பு
ஆயிரம் அர்த்தங்களை பறைசாற்றும்...
அழகே!..
மின்னுவது மின்மினியா அல்லது
உன் கண்களில் தெரியும் நிலவொளியா
சொல்லில் தமிழெடுத்து சொர்க்கத்தின் அமுதெடுத்து
எல்லையில்லா நீலவான அழகெடுத்து அந்திப் பொழுதில்
அல்லி மலராக அழகிய நிலவொளியில் உனை வடித்தானோ பிரமன்...
தேவதைகள் சிறகுகளோடுதான்
திரிவார்கள என்கிற மரபை
உடைத்துப் போட்டவள் என் அம்மு!
நீ வாசிக்கும்போது மட்டும்
எனது கவிதைகள் சுவாசிக்கின்றன அம்மு !
கண்ணாடியில் பிரதிபலிக்காத என்னவளின் முகம்...
இதோ இங்கே நிலவொளி பட்டு எதிரொலிக்கிறது....