Song - Oruvan Oruvan
Movie - Muthu (1995)
Music - A. R. Rahman
Singer - S. P. Balasubrahmanyam
Lyrics - Vairamuthu
பிடித்த வரிகள்:
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
இப்பாடலை பற்றிய சிறு குறிப்பு:
உலகத்தேயே ஜெயித்த அலெக்ஸாண்டர் தான் இறந்த பிறகு தன் இரு கைகளையும் சவ பெட்டிக்கு வெளியே தெரியும் படி ஊர்வலமாக போக சொன்னாராம்.
காரணம் உலகத்தையே போரில் வென்ற அலெக்ஸாண்டர் கூட போகும் போதும் வெறும் கையோடு போனார் என்று உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்று.
இந்த வரலாற்றை படித்த கவிஞர் வைரமுத்து,
"மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது" என்று எழுதினார்.
வாழ்க்கை என்பது ஒரு முறை.., உதவும் கரங்கள் கொடுப்போம் பல முறை..!
நன்றி வணக்கம்!