Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-040  (Read 9877 times)

March 18, 2024, 07:21:06 pm
Read 9877 times

RiJiA

கவிதையும் கானமும்-040
« on: March 18, 2024, 07:21:06 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-040


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: April 08, 2024, 10:24:41 am by RiJiA »

March 20, 2024, 09:04:16 pm
Reply #1

Shree

Re: கவிதையும் கானமும்-040
« Reply #1 on: March 20, 2024, 09:04:16 pm »



உனதருகில் நான்...


ஒவ்வொரு நிமிடத்தின் ஆழங்கள்
 சற்று கடினமாக கடக்க நேர்ந்தாலும்
என்னில் இருக்கும் எண்ணில்லா உணர்வை
 ஏனோ! வெளிப்படுத்த வெய்த்தது நீயே....

எவற்றை இழந்த பொழுதும்
 எனக்காய் என்று என்னோடு இன்றும்
உறவாடும், உன் எண்ணத்தின் மதிப்பு
 உன்னோடு இருக்கும் என் சிரிப்பில் வெளிப்படும்....

எண்ணற்ற எண்ணங்கள் அனைத்தும்
  எண்ணக் கூட வெய்க்காது,
விலகியே விரும்பும் உன் மனதின் செயல்பாடு
  செயல் இழந்த என்னை ஓர் புதிய செயழியாக மாற்றியது....

சிறிதும் செயல் இழக்க நேர்ந்தால் கூட
 மனதின் அன்பை கொண்டு என்னை சரி செய்யும் நீ..
செவி சாய்த்து உன் தோளில் விழும் தருணத்தில்
என்னோடு எழும் ஆசை அனைத்தும்
  உன்னுடன் கூற விரும்பியது யாதெனில்
தந்தையின் மார்போடு தன் முகத்தை முட்டி சாய்க்கும்
  ஓர் இன்புற்ற ஏக்கங்கள் நிறைந்த மழலையைப் போல
என்றும் உனதருகில் நான் 😇💜


« Last Edit: March 20, 2024, 09:16:39 pm by Shree »
ஶ்ரீ

March 22, 2024, 06:55:19 am
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-040
« Reply #2 on: March 22, 2024, 06:55:19 am »
உன்னருகே நான் இருந்தால்..!
உன்னருகே நான் இருந்தால் கவலை என்பது எனக்கேது!!
உன் மனதை நீ அறியாவிட்டாலும்...
உன் ஆழ் மனதை நான் அறிவேன்...
காற்று செல்லக்கூட இடமில்லை என்றாய்
உன் இரும்பாலான இதயத்தில்...
இரும்பையும் துளை இடலாம் சில கருவிகள் கொண்டு என்று..
நான் உன்னிதயத்தில் உட்புகுந்தேன்
என் அன்பு என்னும் கருவி கொண்டு...
கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
உன்னருகே நான் இருந்தால்..!
எனக்கு வருத்தமென்றால் உன்
உடல் சோரும் உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் உன்னருகே நான் இருந்தால்..!
எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
உன்னருகே நான் இருந்தால்..!
வாழ்க்கையில் வேதனை சோதனை
குடும்பத்தினரால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
உன்னருகே நான் இருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை..!
உன்னருகே நானிருந்தால் என்னருகே
கவலைகளுக்கு ஏது இடம்....?
உந்தன் குறும்பான பேச்சு கரும்பாகிப்
போச்சு....
எந்தன் விழிகளில் வீழ்ந்த நட்பே....
உந்தன் பார்வையில் என்றும்
நானிருப்பேன்.....
கடும்புயலும் கம்பளிக்குள் அடங்கும்
உன்னருகே நான் இருந்தால்..!
இமைகள்கூட இமைக்க மறுக்கும்
உன்னருகே நான் இருந்தால்..!
பேசும் வார்த்தைகள்கூட ஊமையாகும்
உன்னருகே நான் இருந்தால்..!
வருடங்கள் நிமிடங்களாகும்
உன்னருகே நான் இருந்தால்..!
காணும் காட்சிகள் பதிவுகளாகும்
உன்னருகே நான் இருந்தால்..!
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
உன்னருகே நான் இருந்தால்..!
ஒரு வரிக்கு ஓராயிரம் அர்த்தங்கள்
உன்னருகே நான் இருந்தால்..!
ஒரு நொடிக்குள் ஒரு கோடி புரிதல்கள்
உன்னருகே நான் இருந்தால்..!
தாய்மையும் தனிமையும் ஒரே நேரத்தில்
உன்னருகே நான் இருந்தால்..!
இதோ கிடைத்துவிட்டது என் ஏழேழு ஜென்மங்கள்
உன்னருகே நான் இருந்தால்..!
காலமெல்லாம் நட்பு வாழட்டும்
அதையும் தாண்டி நாம் வாழ்வோம்....

March 25, 2024, 09:58:24 am
Reply #3

My bestie

Re: கவிதையும் கானமும்-040
« Reply #3 on: March 25, 2024, 09:58:24 am »
ஒன்றாய் பிறந்த உறவுகள் நாங்கள்
இரண்டாய் பிறந்தும் ஒரே எண்ணங்கள்
பாசம் பகிரும் பிறப்புகள் நாங்கள்
நேசம் மறக்கா அண்ணன் தம்பிகள்
 
ஒன்றாய் குடித்த தாயின் பாலும்
சுகமாய் பகிர்ந்த தாயின் மடியும்
அன்போடு கிடைத்த நேச வளர்ப்பும்
சமமாய் கிடைத்த தாயின் அன்பும் .

எனதென்றும் அவனது என்றும் ஏதுமில்லை
ஒன்றாய் பயணிக்கும் வாழ்க்கை இதிலே
போட்டிகள் பொறாமைகள் என்றும் இல்லை
பொய்யாய் போற்றும் அன்பும் இல்லை

ஒருவரை ஒருவர் மறுப்பதுமில்லை
ஒருவரை ஒருவர் மறந்ததுமில்லை
துரோகங்கள் இல்லா எங்கள் வாழ்க்கை
துயரம் இல்லா இன்ப வாழ்க்கை

காலம் மாறும் கடமைகள் மாறும்
வேகமாய் போகும் உலகம் இதிலே
இனிந்தே பயணிக்கும் அண்ணன் தம்பிகள்
நாம் என்றுமிருப்போம் ஒற்றுமை உணர்வில்....

March 26, 2024, 11:44:55 am
Reply #4
Re: கவிதையும் கானமும்-040
« Reply #4 on: March 26, 2024, 11:44:55 am »
நானே நீ தானே
நீயே நான் தானே !
நம் தந்தையின் விந்தில் முந்தியவன் நீ
நம் தாயின் கருவறையில் முதலில் தூங்கியவன் நீ
அம்மாவின் அமுதத்தையும் அன்பையும் முதலில் பகிர்ந்தவன் நீ
தாயின் அரவணைப்பில் முதலில் ஆழ்ந்தவனும் நீ
தந்தையின் விரல் பிடித்து தத்தி தத்தி நடந்தவனும் நீ
உனது சாயல்கள் அனைத்தையும் எனக்கென தந்தவன் நீ
நீயும் நானும் வேறல்ல
இருவரும் ஓர் உயிர் என்றே எனக்கு உறைத்தவன் நீ
நீ கற்ற மொத்த வித்தைகளின் மிச்சம் மீதியை எனக்கென சொல்லித் தந்தவன் நீ
அம்மா என்று அழைத்த வாயாலும்
அப்பா என்று அழைத்த வாயாலும்
அண்ணா என்று அதிகமாய் அழைக்க அழகாய் பழகித்தந்தவன் நீதானே !
அன்னநடை நான் நடக்க
அண்ணன் நீயே அழகாய் கைப்பிடித்து
நடக்க வைத்தாயே !
நீ கடித்த எச்சில் மிட்டாயை
எனக்காய் உன் சட்டை பையில் சேமித்து வைத்து எடுத்து வந்து தந்தாயே !
அச்சு அசலாய் அப்பனை போல் நீ என் றும்
அச்சு அசலாய் அண்ணனைப் போல் நான் என்றும் ஆகிவிட்டேன்
உன் அறிவில் பாதி தந்தை என்றும்
என் அறிவில் பாதி நீ என்றும் சொல்லும்படி
 நீயே நானாக இங்கு நாளெல்லாம் நமதாக
அண்ணன் தம்பியாய் அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
-ஆம்
வாழ்வை அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

April 01, 2024, 02:00:31 pm
Reply #5

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-040
« Reply #5 on: April 01, 2024, 02:00:31 pm »
விலைமதிமற்ற அன்பு

நீளவானத்தை விட நீண்டந்து  அன்பு எங்கள் அன்பு ...

பறந்துகிடக்கும் கடலின் ஆழத்தைவிட ஆழமானது எங்கள் அன்பு ....

அரைக்கால் சட்டை போடு ஊர் சுற்றுவோம் காற்றைப்போல ...

சட்டைகளில் ஆயிரம் கரை இருக்கலாம் ஆனால் எங்கள் உள்ளங்கள்
தூய்மைக்கு மறுபெயர் …

நாம் உயிர்வாழும் காற்றில் கூட  கலப்படம் உள்ளது, 
கலப்படம் அற்றது எங்கள்  அன்பு

சந்தோஷத்தில் நாங்கள் துள்ளிக்குதித்து ஆடும்போது
பூக்கள் கூட பூத்துக்குலுங்கும் இன்பத்தில்

எங்கள் துக்கங்களை எங்களோடு  கண்ணீராக பகிர்ந்துகொள்ளும் மழைகள் ...

இயற்கையின் வரப்பிரசாதங்கள் அனைத்தும் எங்கள் அன்பிற்கு  கிடைத்த பரிசு ...


ஆம் , ஒரு அண்ணனின் அன்பை பற்றிய கவிதைதான் இது ....

வாடாத மலரைப்போல் என்னை வாடாமல் பார்ப்பவன்

என்னக்கு ஒன்று என்றல் இதயத்தில் இருந்து துடிப்பவன்

தனக்காக எதையும் எண்ணாதவன்

தன்  கரங்களில் என்னை சுமப்பவன்

கடவுள்கூட தம்பியாக இருக்க ஆசைப்படுவார்  இவனிடம் ….

எத்தனை அன்பு காட்டுகிறாய் என்னிடம் …

அண்ணா என்று கூப்பிடுவதைவிட அம்மா என்று கூப்பிடுவது பிடித்தது எனக்கு

இப்படிபோல ஒரு அம்மா ஆனா அண்ணா உண்ட உனக்கு ??




நீலவானம்