Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-038  (Read 5148 times)

February 05, 2024, 09:23:41 pm
Read 5148 times

RiJiA

கவிதையும் கானமும்-038
« on: February 05, 2024, 09:23:41 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-038


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
[/color
« Last Edit: March 04, 2024, 07:48:08 pm by RiJiA »

February 06, 2024, 12:34:51 pm
Reply #1

Shree

Re: கவிதையும் கானமும்-038
« Reply #1 on: February 06, 2024, 12:34:51 pm »



மொழி இல்லாத மௌனம்...


அழகாய் ஒரு இனிய பொழுதில்
 அமைதியாய் ஓர் புதிய அறிமுகம்...
 
ஆசை எதும் இல்லாமல்
 இசையால் தொடங்கிய உரையாடல்...

உரையாடிய நேரங்களின் மிகைப்பு
 தடுக்க ஏதும் எண்ணம் நேராமல்...

ரசிக்க நேர்ந்த பதிவுகள்
 ரசிகையாக மாற்றிய எண்ணங்கள்...

ரசனை என்று உணராமல்
 உரிமையாக மாறிய நிகழ்வுகள்...

பகிர்ந்த நேசங்களின் மிகுதி
 ஏனோ விலகியே நிற்கிறது...

நேசம் அன்பாய் மாற
 அன்பின் பிடியில் இருந்தே ரசித்தது...

அன்பே அனைத்துமாக வேண்டும் என்று
 எண்ணிய மனதிற்கு தெரியும்
தெரிந்தும் உரைக்காது மறுக்கும்...

ஏனோ விலகவும் இயலாமல்
 சேர்க்கவும் மனம் இல்லாமல்...

விலகியே உரைக்க நினைக்கும்
 இவளின் மொழி இல்லாத மௌனம்...

ஶ்ரீ

« Last Edit: February 06, 2024, 01:08:45 pm by Shree »
ஶ்ரீ

February 07, 2024, 09:45:50 am
Reply #2

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-038
« Reply #2 on: February 07, 2024, 09:45:50 am »

மௌனம் எனும் மொழியால்

மழையின் அரவணைப்பில் ஆனால்  இருவரும் தூரத்தில் !!

நனைந்தது தேகம் மட்டும் அல்ல
 மனமும், தான் சோகத்தில்!!!

மழையின் சத்தத்தில் மௌனம் எனும் மொழியில் இருவர் !!

 வலி தோன்றுவது கண்ணில் நீர்த்துளியாக ..
அடை  மழையோ அதை போக்கிவிட்டது !!!

உன்னிடம் பேசத்தான் நினைக்கிறேன் பெண்ணே
எனது கைகள்கூட தடுக்கிறது  காத்திரு என்று !!!

நம்மை சுற்றி  தண்ணிர்  சூழ்ந்திருந்தாலும்
உன்னை அரவணைக்கவே நான்  காத்திருக்கிறேன் !!!


என்னவளை. எனது சோகத்தினால் காயப்படுத்த வேண்டாம் என்று
என்னை நனைத்து  மனதின்   சோகத்தை  மாற்றினாயே !!

பெண்ணே நீ என்னை விட்டு விலகி விலகி சென்றாலும் அந்த
குடைபோல உன்னோடு நான் இருப்பேன் !!

எங்கும் உள்ள காற்றைப்போல  உனது மூச்சுக்காற்றில் வசிப்பேன்
நீ என்னை வெளியேற்றினாலும் சுவாசிக்கும்போது உனக்குள் புகுவேன்  !!

எத்தனை   காயங்கள்  எற்படுத்தினாலும்
நான் உன்மீது வைத்திருக்கும் அன்பு அனைத்தையும் உடைத்தெறியும் பெண்ணே !!

உன்மேல் வைத்த அன்புக்கு
 அந்த வானம் சாட்சி
அந்த காற்றும்  சாட்சி
 நான் போகும் வரை அந்த நிலம் கூட சாட்சி !!

எனது மூளை கூட  சொல்கிறது உன்மீது சினத்தை காட்ட ..
கர்வம் தலைக்கேராதவரை காதலும் கை பிள்ளைதான் !

கண்மணியே நீயே எனது முதல் பிள்ளை உன்னை
காலமெல்லாம் காப்பேனடி பெண்ணே கண்ணுக்குள் கருவிழியாக !!

பெண்ணே வீண் பிடிவாதம் எதற்கு! மழையில் கலைந்தது
உனது முகச்சாயம் மட்டும் அல்ல

உனது மனதில் நீ என்மீது வைத்திருந்த காதலும்தான்

என்றும் காதலுடன்


💜💜💜நீலவானம் 💜💜💜

« Last Edit: February 07, 2024, 09:58:29 am by Passing Clouds »

February 07, 2024, 12:50:04 pm
Reply #3

Sudhar

Re: கவிதையும் கானமும்-038
« Reply #3 on: February 07, 2024, 12:50:04 pm »
நான் இருந்தாலும் என்னுள் நீயடி,
நீ இல்லையெனில் நான் ஏதடி
உன் புன்னகையை எனக்கு போதுமடி,
உன் அன்பில் ஆயரம் அர்த்தமடி,
உன்னை கையில் ஏந்துவேன்,
என்னை உன் மார்பில் இடம் தருவாய் என்று,
காத்திருந்தேன் உனக்காக இவளுகில் பார்த்துருந்தேன் நமக்காக ஓர் இடம்.
கண்டேன் என் காதலியை வென்றேன் என் காதலை,
நிஜமடி என் காதல் உண்மையடி,
காலத்தில் காதல் அழியாது என் உயிர் உள்ளவரை என் காதல் அழியாது.
வாழும் வரை நீ, இவுலகில் வேர் ஏதுவும் இல்லை எனக்கு,
காத்திருப்பேன் உனக்காக பூத்துருப்பேன் இதயத்திற்காக,
உனக்காக என்னையும் தருவேன்,
வேண்டாம் என்றால் உனக்காக மாண்டும் விடுவேன்.
சந்தோஷத்தில் வாழ்ந்தாலும், துக்கத்தில் வாழ்ந்தாலும் என்னுடன் நீ இருந்தால் போதுமடி,
குடையாய் காவல் இருப்பேன் உன் வாழ்வில் ஒருபோதும் வருந்தாதே என் உயிரே...

February 08, 2024, 08:55:14 am
Reply #4

queen

Re: கவிதையும் கானமும்-038
« Reply #4 on: February 08, 2024, 08:55:14 am »
உலகில் ரசிக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும்!  நான் அதிகமாக நேசித்தது உன்னுடன் பேசும் போது எனக்கு கிடைக்கும் அந்த  நொடிகளை தான்....

துடிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்துக்கு தவிக்கவும் கற்று கொடுத்தது உன் நினைவுகள் தான்...
உன் நினைவுகள் இல்லாத என் விடியலும் இல்லை...

உனக்காக துடிக்கும் என் இதயமும்... உன்னுடன் பேச துடிக்கும் உதடுகளும்... உன்னை காண தவிக்கும் என்  கண்கள் ஆயிரம் கதை சொல்லும் என் காதலின் ஆழத்தை....

ஏனோ சில கோபம்... ஏனோ சில மௌனம்..
ஏனோ சில தயக்கம்..
நம் காதலில் கண்டேன்... ஆனாலும் அதையும் ரசிக்கிறேன்... ஏன் தெரியுமா கோபம் தீரும்போது மௌனம் உடையும் போது... கெஞ்சி பேசிட நானும் கொஞ்சி பேசிட நீயும்! அன்பு மழை பொழியே நம் காதலும்... கோபத்தின் பின்னால் ஒழிந்து கொண்டிருக்க... உன்னை எப்படி நான் வெறுத்து செல்வேன் அன்பே....

நீ அருகில் இல்லாத போது உன்னை தேடும் கண்கள்... நீ அருகில் வந்தவுடன் இமைக்க மறுக்கும் என் கண்கள்... அன்பு நிறைந்த கண்ணீரோடு வரும் காதல்  அது...  மோதலில் ஆரம்பித்து காதலில் முடியலாம் தவறில்லை...ஆனால் காதலில் ஆரம்பித்து மோதலில் முடியும் காதல் உயிர் உள்ளே சென்று உயிருடன் கொல்லம் சக்தி காதலுக்கு உள்ளது...

தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் காதல் அழகு தான்... ஆனால் ஒரு போதும் தவிக்க விட்டு சென்று விடாதே... அந்த நொடி என் இதயத்தை ரணமாக்கி விடும்....

ஆயுள் முழுதும் கைதியாக இருப்பேன் உன் இதயமோ சிறையாக இருந்தால்.... சண்டை போட்டு உன் மௌனத்தை கூட ரசிப்பேன்... கோபத்தை உடைக்கும் என் காதல் உன் மௌனத்தை விட பெரியது என் அன்பே....

காதலில்  வரும் மௌனத்தை கூட புரியாதவர் பிரிந்து செல்கின்றனர்... புரிந்தவர் அன்பை மேலும் கொடுத்து காதலை வலுப்படுத்துகின்றனர்... காதலில் வரும் கோபம் கூட காதல் அதிகம் இருப்பதால் தான் வருமே தவிற... விட்ட விலக இல்லை...
உண்மையான இதயம் அடிக்கடி குட்டி குட்டி சண்டை போட்டு காதலை ரசிக்க கற்று தரும்! அது நம் காதலில் உள்ளது அன்பே .. புரியும் காதல் என்றும் பிரிவை தேடாது... கோபத்தில் இருக்கும் அன்பை உணர்ந்தவருக்கு என்றும் காதல் வெற்றி தான்....

காதல் சண்டை போட தயாரா!.... கோபத்தில் அன்பை கொடுக்க தயாரா! அப்போ உங்கள் காதல் அந்த கோபத்தையே வென்று விடும்.... இனி உங்கள் அன்பானவர் உங்களிடம் முதலில் அன்பை எதிர்பார்க்காது சண்டை போட தான் காத்திருக்கும்... ஏன் தெரியுமா ... நீங்கள் தான் சண்டையின் பின்னால் அதிக அதிக காதலை கொடுக்க போகின்றீர்களே...😍

உன்னை நினைக்காத நாள் இல்லை!😍
உன்னை நேசிக்காத பொழுது இல்லை💕
உன்னை மறந்த நிமிடமில்லை
உன்னை மறக்கவும் நினைக்கவில்லை💞

February 09, 2024, 10:10:47 pm
Reply #5
Re: கவிதையும் கானமும்-038
« Reply #5 on: February 09, 2024, 10:10:47 pm »
எட்டி நீ நின்றாலும்
குட்டிக்கரணம் போடும் என் குட்டி இதயம் !
வானம் தூரல் போடும் வேலையில்
என் மனம் சாரல் வீச உன் அருகில் வருகிறது !
ஆளைக் கொல்லும் உன் கருவிழி மிரட்டலில்
ஆழ்ந்து போனவன் நானே !
அடியாத்தி இது என்ன முறைப்பு !
என் முறைப்பெண்ணால் எனக்குள்ளே தவிப்பு !
எத்தனை முறை சொல்லியும்
எடுத்தெறிந்து பேசும் இவளின் கோபம் இவளுக்கு தனிச்சிறப்பு !
என்னை  வெட்டி வீசும் இவளின் கத்தி புருவம்
என்னை புத்தி புரள செய்கிறதே !
பூடகமாக நான் என் காதல் சொல்லியும்
நாடகமாடியே என்னை கடந்து செல்கிறதே
உன் கால்கள் !
உன் நிழலை கூட நெருங்காதவன் நான்
நீ மழையில் நனைகையில் நெருங்கி வந்தேன் - உன்னை இறுக்கி அனைக்க அல்ல !
 மழைநீர் உன்னை உருக்கி விடாமல் காத்து நிற்க !
மெழுகு சிலை நீயென்றால் மெட்டிசைத்து பாடியிருப்பேன் மழையில் நீ நினைகையில் ! - நீயோ மெய் மணக்கும் சந்தன சிலையாச்சே !
உன்னை விட்டு விடவும் முடியாமல்
உன் அருகில் வந்து உன்னை தொட்டுவிடவும் முடியாமல்
நில்லாமல் நிற்கிறேன் நான்
ஒருமுறை முகம் திருப்பி பார்ப்பாயா
நான் யுகம் வாழ !

February 13, 2024, 11:17:42 am
Reply #6

iamcvr

Re: கவிதையும் கானமும்-038
« Reply #6 on: February 13, 2024, 11:17:42 am »
கோபித்தால்,
அடம் பிடித்தால்,
தான் கேட்டது நடக்கும் என சிறுவயதில்
தகப்பனிடம் அவள் பழகியிருக்க வேண்டும் -
தொடர்கிறது . . .
தகப்பன் வர அழுது காட்டி
தம்பிக்கு அடி வாங்கி கொடுத்தவள் - இப்போது
அரவணைப்பை தேடும் தகப்பனாயும்
விளையாட்டாய் சண்டையிடும் தம்பியாயும்
இரண்டு இடத்திலும்
நானே இருப்பதால் தடுமாறுகிறாள்.

மழையில் நான் ஒன்றும்
கரைந்துவிட போவதில்லை;
அவள் கோபித்த காரணத்தோடு ஒப்பிட்டால்
நான் நனைவதெல்லாம் ஒன்றுமேயில்லை;
காய்ச்சல் எதுவும் வந்துவிடலாம் தான் - அப்போது
கட்டியணைத்து காய்ச்சலை பகிர்பவளும்
அவளே தான் - பைத்தியக்காரி.

மழையில் நனையாமல் குடை காப்பது போல,
அவள் கோபித்த காரணம் நிகழாமல் இருந்திருக்க
என்னிடம் குடையாய் ஏதும் இருந்திருக்கலாம்.
இப்போது கோபித்து விட்டாள்;
இனி மழை அதுவாய் அடித்து ஓயும் வரையும்
நனைந்தே ஆகவேண்டும்;

எப்போது முடியும் என்றெல்லாம் தெரியாது;
அவள் மழை.


சி. வி. ஆர்.
« Last Edit: February 13, 2024, 11:20:34 am by iamcvr »