எங்க வீட்டு புளியமரம்:
நாள் முழுக்க
கால்வலிக்க ஓடி ,
பகல் முழுவதும் மட்டை பந்து
ஆட நிழல் தந்தாய்
அன்று,
மழலை முதல் இளமை வரை
உன் கிளைகளில்
ஊஞ்சல் ஆடி
பெற்ற இன்பங்கள்
கோடி,
கோடையில் வெயில் விரட்டும்
பொழுது செல்ல செல்ல அனல் மிரட்டும்,
அப்பொழுது அந்த நிழலில் அனைவரும்
ஒன்று கூடி,
பேசுவோமே குடும்ப கதைகள்
தேடி தேடி,
'பள்ளி விடுமுறை நாட்களில்,
கபடி, கோலி மற்றும் கில்லி
விளையாடுமே, வெற்றி எனது
என்று அடித்து சொல்லி!
தரையில் பாயிட்டு அமர்ந்தாலும்,
தாயம், பரம்பபதம்!
ஒவ்வொரு நாளும் விளையாடுவோம்,
ஒவ்வொரு விதம்!
மாத்தில் பழல் வந்தால்,
பழத்தை அணில் கொஞ்சும்!
குரங்கு கூட்டம் வந்தால்
மனம் அஞ்சும்!
பறவை இனங்களுக்கு அதுவே
தஞ்சம்!
பழ அறுவடை நேரத்தில்
மரத்தின் மீது ஏறி பார்த்தால்,
கொக்கு, நாரைகளின் செ
எச்சம்!
அதை கண்டபின் மரத்தின் மீது
மீண்டும் ஏற கூச்சம்!
தலைமுறைகளை கண்ட மரத்தை
தலை வீதி எங்கு விட்டது,
திடீரன அடித்த புயலில் அருகில்
இருந்த வேப்பமரம் பக்கத்து
வீட்டின் மீது மாய்ந்தது!
அதன் அச்சதால் புளியமரத்தை
வெட்டவும் நேர்ந்தது!
அதன் பின் எங்களை விட்டு
நிழலும் சென்றது!
உணவிற்காக புளியும்
வேண்டி
தினமும்
மளிகை கடையை
நாடவும்
உள்ளது!.