இது ஓவியமா இல்லை
மொழியின்றி பேசும் காவியமா?
ஒன்றும் புரியவில்லை?
சுவற்றில் கிறுக்கிய கிறுக்கல்களை
உயிரின் பந்தமாய் நினைத்து
வியக்கிறாய்!
அந்த நிலையை கடந்து
செல்ல
தெரியமல் தவிக்கிறாய்!
ஏனோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி
அமைகிறது வாழ்க்கை!
அதனால் அவர்கள் மனம் கடந்த
செல்ல முடியாமல் தவிக்கிறது உலகை!
சுவற்றில் அதை தீட்டியது ஒரு சிறுவன்
அல்லது சிறுமியாக கூட இருக்கலாம்!
ஆனால்,
நீயோ?
அதை மனதில் வேதனை தூண்டும்
கிருமியாக நினைத்து தவிக்கிறாய்!
ஒரு ஓவியமே!
ஒரு சிறுவனுக்கு ஏக்கம், தவிப்பு,
சோகம் மற்றும் தேடல் தருமானால்,
இந்த உலகம் அவனுக்கு என்ன என்ன
தருமோ!
இனியாவது,
நாம் அனைவரும் ஒற்றுமையாய்
இணைந்து வாழ்வோம்!
உலகில் யாரும் தனித்த மனிதன் இல்லை
என்று
குரல் கொடுப்போம்!,
மனிதநேயத்தோடு!.