Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-032  (Read 5238 times)

October 10, 2023, 12:10:46 am
Read 5238 times

Administrator

கவிதையும் கானமும்-032
« on: October 10, 2023, 12:10:46 am »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-032


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: November 27, 2023, 06:31:53 pm by Coffee »

October 11, 2023, 02:14:40 pm
Reply #1

SÄM

Re: கவிதையும் கானமும்-032
« Reply #1 on: October 11, 2023, 02:14:40 pm »
Hi my dears,
SAM here
எனது கவிதை:
 

                உயிர்நாடி

மாயோளின் மனம் கவர்ந்த மானிடனாய்
அவளின் உள்ளங்கியோடு,
உறவாடிய எனது உள்ளம்.....
துளைகளின் தீண்டலால் துளிர்த்தது,
கடந்திடாத கனங்களை எண்ணி சிறகடித்தது.
விறளியின் விரல்கள் ,இதயத்தை மீட்ட.....
இசையாய் இயம்பியது அவளது பெயரை.
வாழ்க்கையை வர்ணஜாலமாக்கிய
வாணவில்லின் விரல்களை......
விலக்க விரும்பாமல் விம்மிய விணாடிக்கு,
பரிசளித்தேன்..... பாவையின் கரம்பற்றி.
செம்பியின் சிகப்பு நெகப்பூச்சை,
சிந்தையில் ஏந்தினேன்......
செம்மைநிறத்தின் பொருள் நிருத்தமாதாலால்...
சற்று ஐயத்தை தூவிய ஆடவளுக்கு,
உறவாடுவதைக்காடிலும்....
உறவை விடாது காப்பேன் என உறுதியளித்தேன்.


« Last Edit: October 11, 2023, 08:56:05 pm by SÄM »

October 12, 2023, 12:18:40 pm
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-032
« Reply #2 on: October 12, 2023, 12:18:40 pm »
என்னவளின் இதய துடிப்பில் சொர்க்கம் கண்டேன்!!!!

அழகிய மாலை வேலை
அந்த கடற்கரை மணலில்
இதமாய் வீசிய குளிர்காற்று
இருமேனி இடைவெளி குறைத்தது

என்னவள் என் கரம் இறுக்க பிடித்து
உன்னை மிகவும்  பிடிக்கும் என்றால்
நான் அம்மு வின் நெற்றியில் முத்தமிட்டு
நீ என்றி நான் இல்லை என்றேன்

முழு நிலவின் தரிசனம் முழுமையாக
அம்முவின் கண்ணில் ஒரு ஏக்கம் கண்டேன்
உடலும் உணர்வுகளும் ஒன்றான நிமிடங்களில்
இதழ்கள் இணைய இதயம் துடித்தது

என்னவள் தலை என் மார்பில் புதைத்தால்
நான்  இருகரத்தால் அவள் முகம் தூக்கி
அவள் விழிகளை வினாடிகள் ரசித்து
இதழ்கள் இணைய இமைகள் மூடிக்கொண்டது

காந்தவிசை தோற்கும் ஒரு ஈர்பால்
இறுக்கமாய் இணைந்திருந்த இதழ்கள்
ஈர் உயிர் ஓர் உயிரான நொடி துளிகள்
இமை வழி கசிந்தது கண்ணீர் துளிகள்

சொர்க்கம் மண்ணிலா விண்ணிலா என்று
கற்பனையில் தவித்த எனக்கு
சொர்க்கம் என்னவளின் இதய துடிப்பில் என்று
அவளது அணைப்பாள் என்னை உணர வைத்தால்....

October 14, 2023, 12:35:20 am
Reply #3

Ruban

Re: கவிதையும் கானமும்-032
« Reply #3 on: October 14, 2023, 12:35:20 am »
நானும் என் தோழயும் இருவரும் ஒன்றாய்
ஒரு அழகான மாலை வேளையில்
அழகான பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
இருவர் மட்டுமே இருக்கையில்

அழகிய நினைவுகள் வந்து வட்டமிட
அதை ரசித்தபடி என் தோழியிடம் பேசிக்கொண்டே
அவள் கையை பிடித்தபடி  நேரம்
செல்கயில் ஒரு தனி இன்பம் அவள்
என் தோழியாய் என்னோடு இருக்கையில்

இந்த உலகம்கூட சிறியது தான்
அவள் அன்பின் முன்
அவளே என் உலகமாக இருக்கிற போது
எதற்கு வெறுலகம் எனக்கு
என் அன்புக்கு உருவம் கொடுத்தவள்
அவளே என் அன்பு தோழியுமானவள்

அன்புக்கு நிகர் ஏதும் இல்லை
தேழிக்கு நிகர் யாருமில்லை
அவள் என்னோடிருக்கையில்
எனக்கு நிகர் ஒருவருமில்லை
என்று தோன்றவைக்கும் அவள் அன்பு

அன்பும் என்னோடிக்கிறது
அரவணைப்பும் என்னோடிருக்கிறது
அன்பும் அரவணைப்பும் இருந்தால்
ஒருவனுக்கு அகிலமும் அவன் காலடியில் இருக்கும்
அன்புக்கும் அரவணைப்புக்கும் அவளே அர்த்தம் தந்தவள்.

💚 RuBaN 💚

October 17, 2023, 02:57:18 pm
Reply #4

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-032
« Reply #4 on: October 17, 2023, 02:57:18 pm »
இதய துடிப்பின் ராகம்


பெண்ணே உணர்வுகளில் உள்ளடக்கியது தான் மனிதனின் வாழ்கை

உன்னோடு எனக்கு இருக்கும் உணர்வை பற்றியதுதான் இந்த கவிதை

உன்னை கண்ட நாளில் தோன்றிய உணர்வு அது அன்பா ? காதலா ? என்று புரியாத உணர்வு

உணர்வை எனது இதயத்தின் துடிப்பில் உணர்கிறேன் பெண்ணே

ராகங்கள் பதினாறும் உள்ளாகியது இதயத்தின் துடிப்பு

உன்னை காணும்போது பார்த்த ஆனந்தத்தில் எனது இதயம் துடிப்பது ஆனந்த ராகத்தில்

உன்னை காணாமல் இருக்கும்போது துடிப்பது  சோக ராகத்தில்

இன்பமும்  துன்பமும்  கலந்ததுதான் வாழ்கை பெண்ணே ,

ஆனால் துன்பம் நீ என்றால் இன்பமாக அதையும் ஏற்றுக்கொள்கிறது எனது இதயம்

தூரத்தில் நின்று ஏன் இடைவெளியை உருவாக்குகிறாய்

அருகில் வா பெண்ணே எனது  இதயத்தில் கை வைத்து கேள்

லப் டப் லப் டப் என்று துடித்த இதயம் உனது பெயரை அல்லவா

முணுமுணுத்து துடிக்கிறது இப்பொழுது புரிகின்றது பெண்ணே

எனது இதயத்துடிப்பின் ராகம் நீ என்று !!!



நீல வானம்

« Last Edit: October 17, 2023, 02:58:49 pm by Passing Clouds »

October 31, 2023, 09:00:13 am
Reply #5
Re: கவிதையும் கானமும்-032
« Reply #5 on: October 31, 2023, 09:00:13 am »
சாதரணமாக துடிக்கும் என் இதயம்
அவளை காணும் போதெல்லாம் 6 மடங்கு
அதிகமாக துடிக்கிறது…..
காரணம் அறியாமல் கலங்கி நின்றேன்….
இது தான் காதலோ…
அவள் என் நெஞ்சில் கை வைத்த அந்த நொடி
 நின்றதே என் மூச்சு…. மீண்டும் உயிர் பெற்றேன்
 அவளின் மூச்சு என் மீது பட்ட போது….
 எனக்கு மறு உயிர் தந்ததால் என்னவள் எனக்கு இன்னொரு தாயானாள்…..
இதயத்தின் ஓசை 20 அதிர்வெண் கீழே என்பது அறிவியல் கூற்று….
அவள் என் நெஞ்சில் கை வைத்த போது பொய்த்தது அக்கூற்று… 20000 அதிர்வெண் இயும் கடந்ததது போல் உணர்ந்தேன்….
என்னை தாக்க தோட்டாக்கள் தேவை இல்லை…
என்னவளின் துப்பட்டாவின் வாசம் ஒன்று போதும்…
நான் வீழ்ந்துவிடுவேன்
அவள் கரு விழிகளின் அசைவுகளில்
என்னை கட்டி போட்டு விட்டால்
இந்த தண்டனை ஆயுள் தண்டனை ஆக வேண்டும் என்று ஆண்டவனிடம் கேட்கிறேன்…..
என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொழைத்து விட்டேன்…..💗💗💗

1000 கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் Adheera_JD

November 19, 2023, 03:02:21 pm
Reply #6
Re: கவிதையும் கானமும்-032
« Reply #6 on: November 19, 2023, 03:02:21 pm »
என்னவளே அடியே என்னவளே !
என் இதயத்துக்கு என்னாச்சு ?
உன் பூவிதழ் விரல் பட்டு
என் இதயத்துடிப்பு நின்னாச்சு .
காதல் மயக்கம் வந்தாச்சு.
கன்னி உன் முகம் இதயத்தில் நின்னாச்சு.
உன் மெல்லிய விரல் வருடலால்
 என்
மெய் சிலிர்பாச்சு .
கூச்சம் கொண்டு நானும் கூனிக்குறுகி நின்னேனே !
வாட்டம் பார்த்து நீயும் வழி தேடி வந்தே வாசம் செய்து போனாயோ !
அடியே !
என் இதயத்தில் வாசம் செய்து போனாயோ !
விரலால் சிலிர்ப்பூட்டும் வித்தையை விடாமல் செய்துவரும் தத்தையே !
கொஞ்சம் விட்டுக் கொடுப்பாயா ?
என் இதயத்தை நான் தொட்டுப் பார்க்க.
நீ தொட்ட இதயம் பட்டு போகுமா ?
விட்டுப் போக மனமின்றி உன் விரலால் உரசி உறைந்து போக செய்தாயே !
கொஞ்ச நேரம் ஓய்வெடு .
உன் மெல்லிய ஐவிரல் மீண்டும் வருடவே அழகாய் ஓய்வு கொடு !
மீண்டும் ஒருமுறை நான் செத்துப் பிழைத்துக் கொள்கிறேன்.

November 21, 2023, 10:20:02 am
Reply #7

kathija

Re: கவிதையும் கானமும்-032
« Reply #7 on: November 21, 2023, 10:20:02 am »
இதய ராகம் :

அமைதியான காற்றின் கீதம் போல் சுற்றிக்கொண்டிருந்தது என் இதயம்.


அதில் எப்போதும் சஞ்சலம் இல்லாத ஒரு இசை கேட்டு கொண்டிருக்கும்

அது என்னை ஒரு மயில் தோகை
போல் வருடும்

திடிரென்று என் மனதிற்கு என்ன
ஆனது

அதில் ஒரு மெல்லிய சலனம்
 அதில் ஒரு மெல்லிய சலனம்

ஏன் இந்த நிலை என்று
எனக்குள் ஒரு கேள்வி

என்ன என்று மனதுக்கும்
நினைவுக்கும் ஒரு போராட்டம்

என்னவோ என்று எண்ணிய படியே நிமிர்ந்தது என் முகம்

என் கண்ணில் தோன்றிய கட்சியால்
ஏற்பட்ட சலனம் அது 😌😌

ஆம் என் இதய ஓசையில் ஒரு நாணத் தின் ஒரு வித ராகம் ஒலித்தது 😌😌😌😌😌

காரணம் என் முன்னே தோன்றியது
என் அவனின் முகம்

கண்ணும் ஒரு கணம் துடிப்பதை
நிறுத்தியது
என் கண்ணும் ஒரு கணம் துடிப்பதை
நிறுத்தியது

இதயத்தின் அமை‌தி ராகம் மறைந்து
சலன ராகம் ஒலிக்க ஆரம்பித்து

சலனம் சங்கடம் அல்ல இன்பம் என்று உரைத்தது
அந்த ராகம்


தினம் தினம் அவன் தூரத்தில்
வரும் முன்னே என்னுள்
தொடங்கி விடுகிறது அந்த இனம்புரியாத ராகம்

அவன் வரும் நொடிக்காக
ஏங்க துடித்தது உள்ளம்

மனதின் எண்ணத்தில் அனுதினமும்
தோன்றும் கேள்வி

என்னவனுக்கும் இந்நிலை தானா இல்லையா என்றே

அந்த கணம் தோன்றும் நிலை
இதய ராகம் தன்னில்
ஆழி பேரலையை எழுப்புகிறது

தினமும் இந்நிலை தொடர
 தினமும் இந்நிலை தொடர


அவன் அருகே நடக்க தொடங்கியது
கால்கள்

4 கண்களின் பார்வை ஒன்றானது
பேசும் பாஷையோ ஊமையானது

தூரம் விலக விலக
என் இதயம் தன்னில்
பேரிடி இடித்தது

தைரியம் இல்லை
பேசும் மொழி வரவில்லை
இதயமும் தன் ஓசையை நிறுத்த
என் கால்கள் வந்த வழியை நோக்கி
மீண்டும் திரும்பியது வேண்டாம் என்று
திரும்பி போய் விடு என்று


ஓசை நின்ற ஒரு கணம்
திடிரென்று ஆனந்த கூச்சல் என்னுள்

என் கரம் தன்னில் என்னவனின் கரம்
 என் கரம் தன்னில் என்னவனின் கரம்


எங்கே செல்கிறாய் நானின்றி
என்பது போல் என்னை இழுக்க


என் கரத்தினை வைத்தான்
அவன் இதய கூட்டில்

அப்போது தான் புரிந்தது
இந்த பேதைக்கு 😌😌😌😌

அவன் காதலின் ஆழம்

இரு இதய ஓசையும் ஒன்றானது
காதலின் கீதமாக

ஆம் இரு இதய ஓசையும் ஒன்றானது
காதலின் கீதமாக 😌😌😌😍😍😍

என்றும் உங்கள் jodha ❤️❤️
« Last Edit: November 21, 2023, 10:21:45 am by kathija »