POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

களத்தில் சிங்கமாய்...

(1/1)

Donmama:
"சிப்பாயே சிப்பாயே
சிறு காதலில் சிதைந்தாயே..
சிங்கத்தின் சீற்றம் நீயே
சிலந்தி வலையில் விழுந்தாயே..

வந்தாளே வருவாளே,
வாகை சூடி ஏற்பாளே,
வான் வீசும் அம்பு அவள்
வலைத்து உன்னை எய்ப்பாளே..

உன் பேனாக்கள் அவள் கண் பட்டு
கண் மையாய் மாறிடும்.
உன் கைவிலங்கு அவள் கைப்பட்டு
கைக்குட்டை ஆகிவிடும்.

போர்வீரன் இவன் தானே,
போராடி வெல்வானே,
போர் சூழ்ந்து வெல்லும் அவன்,
போர்வையிலே தோற்பானே..

முடி சூடும் மன்னனே,
முகத்தில் வெட்கமென்ன?
வாள் வீசும் வானவனே
வானவில் ரசிப்பதென்ன?

ஆண்மகனே ஆண்மகனே,
ஆயிரத்தில் ஓர் மகனே,
அகிலம் காக்கும் கருவி நீயே,
அவள் அன்பில் அருவி ஆவாயே..

களம் கொண்ட காளையனுக்கு,
காதல் மலர்ந்தென்ன?
சினம் கொண்ட சிறுத்தைக்கு
சிறகுகள் முளைத்தென்ன?

தளபதியே தளபதியே
தமிழ் காக்க தலைத்தவனே,
தளம் கண்ட தலைவன் நீயே,
தலை கோத மடி சாய்ந்தாயே..

முப்படை நாயகனுக்கு,
முத்தத்தில் வீரமென்ன?
இப்படைகள் தோற்றாலும்
இதயத்தில் இன்பமென்ன?"""

Navigation

[0] Message Index

Go to full version