Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-029  (Read 5316 times)

July 31, 2023, 05:05:47 pm
Read 5316 times

Administrator

கவிதையும் கானமும்-029
« on: July 31, 2023, 05:05:47 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-029


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: August 21, 2023, 09:54:23 pm by Administrator »

August 02, 2023, 11:32:52 am
Reply #1

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: கவிதையும் கானமும்-029
« Reply #1 on: August 02, 2023, 11:32:52 am »
மழையும்,  மழலை பருவமும்....

வெண்மேகம் திரண்டு கார்மேகம் சூழ,
கண் கவரும் விண்ணவனே...

விண்ணின் அதிசயமாய்
மண்ணை முத்தமிட வந்த முத்து மழை தாரகையே...

சொட்டும் மழையே !!
சுகமாய் தூறல் கொட்டும் மழையே !!

ஜில் ஜில் மழையே
சில்லென்ற தூறலில்
சிலிர்க்க வைக்கும் மழையே !!

மழை சொட்டும் வேளையில்
மழைநீர் தேக்கத்தில் ஓசை எழுப்பும் மழையே !!

சிறு மழலை பருவத்தில்
தோழமையோடு குதுகலமாய்
நடனமிட தூண்டும் மழையே !!

மழையில், மழலையின்
இளநகை கண்டு மகிழ்விக்கும் மழையே !!

மழையில், சிறு மழலையின் புன்னகையில்,
மத்தளமாய் முழங்கும் இடியோசை
அதிர்ந்து விலகும் இடியே !!

மழலையின் பேரானந்தத்தில்,
மின்னல் கீற்றில் ஒளி எழுப்பி
உற்சாகம் ஊட்டும் மின்னல் மழையே !!

மழலையின் மகிழ்ச்சியில்,
தன் அழகின் வரையறை கண்டு
ஒளிந்து கொள்ளும் வண்ண அதிசய வானவில்லே !!

மழையில், மழலையின் மகிழ்விற்கு
ஈடு இணை ஏது,
இதுவும் உலகில் ஓர் புதுமை அற்புதமே....!!

« Last Edit: August 02, 2023, 11:38:16 am by Vaanmugil »

August 08, 2023, 04:21:21 pm
Reply #2

Shruthi

Re: கவிதையும் கானமும்-029
« Reply #2 on: August 08, 2023, 04:21:21 pm »
மழை...
மழை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?
அதுவும்  குழந்தை  பருவம்  என்றால்  சொல்லவா   வேண்டும் !!!

வார்த்தையால் விவரிக்க  முடியாதது  அந்த  மழலை பருவம்!!!

மழையே....
விண்ணுக்கு  மண்ணுக்கும்  நீ  நடத்தும்  பேச்சு வார்த்தை ஒத்த சொல்லில் அடக்கி  விட  முடியாது!!!

நீ  வருவது  ஆனந்தம்  என்றால்..
உன்னோடு  விளையாடுவது பேரானந்தம்!!!
உன்னோடு  விளையாடுவது பேரானந்தம்!!!

தூறல்  விட்டால் போதும்  விடுமுறை  கேட்டு   கெஞ்சும் என்  குடை!!
போட்ட  ஆட்டத்தில் முழுவதும் நனைந்து விட்டது என் உடை!!

நீ  வரும் போதே...நீ  வரும்  போதே...  உன்னை  தழுவிக்  கொள்வேன்!!
நீ  இல்லை  என்றால்  நானும்  கொஞ்சம்  அழுது  கொள்வேன்!!

அது  என்ன  நீ வந்து  தொட்டு  முத்தமிட்டதும்
மண்ணிற்கு அப்படி  ஒரு  வாசனை?
அதுதான்  எப்படின்னு   எனக்கு  அடிக்கடி  யோசனை!!

இப்பூவுலகில்..இப்பூவுலகில்...
நீ அடியெடுத்து  வைக்கும்  முன்  நீ  மீட்டு  சங்கீதம்...
அதை  யாரிடம் கற்றுக் கொண்டாய்?
விடை  பெறும்  முன் சொல்லி  விட்டுப் போ!!!
விடை  பெறும்  முன் சொல்லி  விட்டுப் போ!!!


அன்று  பெய்த அதே மழை இன்றும்  காண்கிறேன்!!!
ஆனால்  அந்த  மழலை  பருவம்  இனி  என்றும்  திரும்ப  போவதில்லை!!!

ம்ம்ம் ....ம்ம்ம்

அப்ப  புரியல  இப்ப  புரிது,,
கவிதை  எழுதும்  இந்த  வாழ்கை  அல்ல,,,,கவிதை  எழுத  வைத்த அந்த  மழலை  வாழ்க்கை  தான் சொர்க்கம்  என்று!!!!
நான்  யாருன்னு  யோசிக்கிறிங்களா?
அதோ  அந்த  புகைப்படத்தை நல்லா பாருங்க  கடைசியா  அழகா smart ah  ஓடி  வரேன்ல  அது....
நான்தான்😊

« Last Edit: August 08, 2023, 04:23:10 pm by Shruthi »

August 09, 2023, 10:07:14 am
Reply #3

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-029
« Reply #3 on: August 09, 2023, 10:07:14 am »
என்னை மழலையாக மாற்றவா மழையே!

இப்பொழுது திரும்ப கிடைக்காத பருவம் மழலை
தேன் போன்ற குரலுடன் இருந்த பருவம் மழலை
யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத பருவம் மழலை
தெரு தெருவாக ஓடி திரித்து விளையாடிய பருவம் மழலை
வெண்சங்கு சுட்டாலும் வெண்மை தரும் கூற்று
மழலை மனதிற்க்கு ஒப்பிடலாம் வஞ்சகம் அற்ற
வெண்சங்கு மழலை மனது
கூட்டம் கூட்டமாக விளையாடும் பொது
துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்யும் பருவம் மழலை
இந்த ஆரவாரம் செய்யும் பருவத்தில்
மழை வந்தால் சொல்லவா வேணும் !

மழை பூமியின் காதல் காதலி வறண்டு கிடைக்கும்
காதலன் மனதை அன்பால் நனைப்பதை போல
பூமியை நனைகின்றது மழை !

மழலையும் மழையும் ஒன்றுதான்
இரண்டிற்கும் மதம் தெரியாது
ஜாதி தெரியாது இனம் தெரியாது
பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கிடையாது
அனைவரையும் தனது அன்பால் நனைக்கும் !

மழையே மேகங்களின் ஊடல்களால்
எங்களை வந்து நினைத்தாய் .
அந்த மேகங்கள் கூட பொறாமை
கொண்டிருக்கும் நீ எங்களை காட்டி அரவணைத்து
நனைத்து செல்வதை பார்த்து!

புகைப்படத்தை பார்த்து கவிதை எழுதினேன்
நானும் அந்த புகைப்படத்திற்கு உள்ளே சென்றுவிட்டேன்
எனது மழலை பருவத்திற்கு !

நண்பர்களோடு நண்பகல் சூரிய ஒலியென்றும் கூட
கருதாமல் சுற்றித்திரிந்த நாட்ட்கள் மழலை

மழைக்கு மழலைக்கும் எப்பொழுதும் ஒரு காதல் உண்டு
இது எல்லை இல்ல காதல் உறவுகளுக்கு இடையே பிடிப்பை உண்டாகும் காதல் !

சற்று நாமும் செல்வோம் நமது மழலை பருவத்திற்கு,
மழையில் நனைத்து வீடுசெல்லம்போது அன்னையின்
பாசம் நம்மை துவட்டுவதும் , தந்தையின் நேசம்
பாசனத்தை மனதிற்குள் வைத்து கொண்டு  நம்மை
திட்டுவதுமாக இருக்கும் !

இப்பொழுது நினைத்தால் கூட எனது உடல் சிலிர்க்கிறது !

மழையே  உனக்கு இருக்கும் அந்த மாசற்ற மனதை
நானும் பெற மாசுள்ள மனதை நனைக்க வா !
என்னை மழலையாக மாற்றவா மழையே !



என்றும் அன்புடன்

நீல_வானம்



August 09, 2023, 11:13:57 pm
Reply #4

Nilla

Re: கவிதையும் கானமும்-029
« Reply #4 on: August 09, 2023, 11:13:57 pm »
பிரிவில் ஒரு மழைத்துளி



அந்தி சாயும் மாலை நேரம்..
அழகான மேகங்கள் கடந்த    தூரம்..
நானோ..
பரதம் கற்றுக்கொண்டு
பள்ளி விட்டு வந்த நேரம்..
அழகான தூரல்கள்..
இடைவிடா சாரல்கள்..
துள்ளி துள்ளி குதிக்கும்
துள்ளிமான் போல..
துள்ளிக்குதித்து ஓடியது இந்த குட்டி மான்..
மழையை ரசித்தபடி..
மனசெல்லாம் மங்களமாய்..
பல வண்ண கனவுகளுடன்..
கரை கடந்து நடந்து வந்தேன்..
அம்மா அதிர்சம் செய்திருப்பாள்.
அப்பா அழைத்துக்கொண்டு வெளியே செல்வார்..
இந்த நாள் என் பொன்நாளா?
இல்லை பொன்விழா கொண்டாடும் நாளா?
ஏகப்பட்ட ஆசையுடன்..
எதிர் வந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்..
எதை நான் இங்கு சொல்வது?
என்னுடைய காதல் மழை என்னுடன் பயணத்தில்..

எதிர்ப்பார்ப்பில் வீட்டை அடைந்தேன்..
எத்தனையோ புது முகங்கள்..
எதற்காக என் வீட்டில் என்று
எத்தனை கேள்விகள் என் மனதில்..
இரண்டு கண்கள் சிவந்து வர..
எதற்கு என என் மனம் தடுமாற.. அப்பா இங்கு மறைந்துவிட்டார் ..
இடியை என் நெஞ்சில் இறக்கி வைத்தார்..
கதறிய நான்..
கட்டிலில் இருந்த என் தந்தையை
கட்டி அணைத்து கதறினேன்..
காலை பள்ளி விட்டு சென்ற தந்தை..
கட்டிலில் கண் மயங்கி கிடக்கிறார்..
காண்பதெல்லாம் கனவென
கல் நெஞ்சை தேற்றுகிறேன்..
கண்ணில் வடிந்த நீர்த்துளிகள்
எல்லாம்
மழைத்துளிகள் மறைத்து கொண்டது..

நேரம் இங்கு நெருங்கவே..
நேர்மை மனிதரின் ஊர்வலம்..
ஆசைப்பட்ட மழைத்துளிகள்..
பன்னீர் துளிகளாய் தெளித்து சென்றது..

முழுதாய் உடைந்தேன்..
எங்கும் அழைத்து செல்லும் அப்பா...
இங்கும் அழைத்துச் செல் என்று கதறினேன்..
மயங்கி விழுந்தேன் ஓர் மடியில்..
எழுப்பியது என் தாய் கண்ணீர் துளிகள்...
எழுந்து சென்று தேடியும்..
என் அப்பா அங்கு இல்லை..
பிஞ்சு மனம் பித்து பிடித்து நின்றது...

விட்டு சென்ற நாற்காலி உண்டு..
அதில் அமர்ந்து என் தந்தை மடி கண்டேன்..
அவர் விட்டுச்சென்ற கண்ணாடியில்
என் கண்ணீர் துளிகளாய் காண்கிறேன்...
எதற்கு இந்த கவிதை என நினைத்தேன்.
எழுதிவிட்டு மீண்டும் அமர்ந்தேன்..
நினைவெல்லாம் நீதான் அப்பா..
நினைத்து கண்ணீர் வடிக்கிறேன் நீதான் மீண்டும் வரவேண்டும் அப்பா..

மழையும் இங்கு ஓய்ந்தது..
மனமும் இங்கு காய்ந்தது..
பொன்நாள் என்றும் பொன்விழா     என்றும்,
என் காதல் மழையோடு வந்த எனக்கு ,
இயற்கை தந்த அன்பு பரிசு
" பிரிவின் வலி"


              NillA

August 10, 2023, 12:10:48 am
Reply #5

Donmama

Re: கவிதையும் கானமும்-029
« Reply #5 on: August 10, 2023, 12:10:48 am »
 மழையும் மனமும் நனைந்ததே...

சின்னஞ் சிறு கிளிகளே...
சீக்கிரமாய் சிலிர்த்துக்கொண்டு வாருங்களேன்..
சின்ன சின்ன மேகங்கள் சேருது இங்கு பாருங்களேன்..
சின்னதாய் வெட்கத்தில் மறையுது கேளுங்களேன்..

எண்ணத்தில் உள்ளதெல்லாம்
எழுந்து நின்று தூருது பாருங்களேன்...
எட்டுத்திக்கும் இடி இசை
இசைக்குது ஆடுங்களேன்..

பட்டமரம்  பூ பூக்குதம்மா..
பட்டு பூச்சி கண்சைத்து கவிபாடுதம்மா..
பச்சை வயல் பசி போக்க கொண்டாடுதம்மா..

செங்கதிர் சோலை எல்லாம்..
செவ்விதழ்கள் திறந்திட காணுதம்மா..
செம்மலை மேகம் எல்லாம்
செல்லத்தான் மறந்து இங்கு    வாழுதம்மா...

 தெம்மாங்கு பாடி வரும் ..
 தென் மேற்கு பருவமழை தெகட்டாமல் கொட்டிவிடும்..
  தென்றல் காற்று
  தேனிசை ஒன்றை இசைத்து இயங்குதம்மா..
 தேகம் எங்கும் திகட்டாத காதல் வந்ததம்மா..

 துளி துளி மழைத்துளிகள்..
 துளிர் விட்டு சென்றதம்மா..
 தூது நிலா
 துவண்டு போய் மீண்டும் வந்ததம்மா..

  என்னுள் ஆசையெல்லாம்..
  சாரலாய் சரிந்து துதி பாடிடுமா?
  தூரலாய் துணை இன்றி  வாழ்ந்திடுமா?
 
   மழை வந்தால் மனமெல்லாம்
   கவலை விட்டு தண்ணீரில் ஆடுதம்மா..
   கண்ணீரும் இங்கு கலந்துதான் ஓடுதம்மா?
Follow your heart ❤️

August 18, 2023, 10:54:48 am
Reply #6

Eagle 13

Re: கவிதையும் கானமும்-029
« Reply #6 on: August 18, 2023, 10:54:48 am »
அது ஒரு அடைமழைக்காலம்  வீதிகள் தோறும்  மழைவெள்ளம் உலா போகும்!
பருவமழை தொடங்கியது, மக்கள் கூட்டம் வீதியிலே அடங்கியது!
எங்கள் பள்ளி பருவத்தில்,
தொடர்மழை வந்தால் பள்ளி விடுமுறை!
விடுமுறை விட்டநாள்
வெயில் காய்வதே அன்றைக்கு நடைமுறை!

மழையில் விளையாடி தாயிடம்
திட்டுவாங்குவோம் பல முறை!
மழைநீர் செல்லும்,
கால்வாயில் காகித கப்பல் விடுவதும்!

வீட்டுக்குள் தாயம் விளையாடுவதும்,
அன்றைக்கு எங்கள் செயல்முறை.
அந்நேரத்தில்,
எங்களுக்கு சிற்றுண்டி வறுத்த நிலக்கடலையும்
புளியங்கொட்டையும்!
காலங்கடத்துவது கிழிந்த
காலண்டர் அட்டையும்,
தாயக்கட்டையும்!

வீதிகளில் நீர் வழிந்தால் அது நீர்நிலைகளை
அடையும்!
நீர் நிலைகள் நிரம்பி வழிந்தால் கரைகளில்
 மீன்கள் மடியும்!
விளைநிலங்களில் நண்டு, நத்தைகள் மேயும்!

அதை பிடிக்க குடைகளுடன் எங்கள்
கைகள் பாயும்!
மழையில் நனைந்தால் உடல்
காய்ச்சல் படும்!
இரவுகளில் தவளைகள் கூச்சலிடும்!
இந்த பூமிக்கு மழை ஒரு வரம்!
அது இல்லை என்றால், பூமியில் எந்த உயிரும்
 வாழ முடியுமா?
இந்த கணம்?!.


August 20, 2023, 11:34:02 am
Reply #7
Re: கவிதையும் கானமும்-029
« Reply #7 on: August 20, 2023, 11:34:02 am »
ஓ....இயற்கையே இயற்கையே!!!
ஓ....மழையே மழையே!!!
மேள தாளத்துடன் இடியினை கொண்டு வா!!!

ஓ....மழையே மழையே மின்னல் ஒளியினால் தோரணத்தை கட்ட வா!!!

ஓ....மழையே மழையே உன் ஈரத்தினால் ஒத்தடம் போல முத்தம் நூறு நீ கொடுத்து என்னை மொத்தமாக கொள்ளை அடிக்க வா!!!

ஓ....மழையே மழையே உன் தீண்டலால் மீண்டும் என்னை குழந்தை போல மாற்றிட வா!!!

ஓ....மழையே மழையே புத்தம் புது மனிதனாய் நான் அவதரிக்க என்னை ஆசிர்வதிக்க வா!!!

ஓ....மழையே மழையே வாடிய பயிர்களுக்கு உயிர் கொடுக்க பறந்து வா!!!

ஓ....மழையே மழையே ஏழைகள் மற்றும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நீயும் மண்ணில் வா!!!

ஓ....மழையே மழையே வெட்கத்தை தொலைத்து வெளியிலே பூத்து வா!!!

ஓ....மழையே மழையே பூமியின் ஏக்கத்தை பூர்த்தி செய்ய உடைந்து வா!!!

ஓ....மழையே மழையே பூக்களின் வாசத்தை தலையிலே சூட வா!!!

ஓ....மழையே மழையே மண்ணின் சாயத்தை உடம்பிலே பூசி குளிக்க வா!!!

ஓ....மழையே மழையே பூமிக்கு உதிரத்தை தானமாக கொடுக்க வா!!!

ஓ....மழையே மழையே மண்ணுக்கு உந்தன் சக்தியினை
ஆணுவாக கொடுக்க வா!!!

ஓ....மழையே மழையே சின்னஞ்சிறு விளையாட்டு பிள்ளையாய் வீதியிலே வீசி விளையாட வா!!!

ஓ....மழையே மழையே உந்தன் விரதத்தை முடித்துக் கொள்ள மண்சாதத்தை உண்ண வா!!!

ஓ....மழையே மழையே பல நாட்களாய் படுத்த படுக்கையாய்
செடி கொடிகள் எல்லாம் வாடிப் போய் கிடக்கு வா!!!

ஓ....மழையே மழையே உனக்காகவே நானும் நாள் கணக்காய்
உனக்காகவே ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் வா!!!

நாம் வாழ எல்லாவற்றையும் இழந்தோம்..... இயற்கையான நிலம், சுத்தமான நீர், தூய்மையான காற்று.....
இனி வரப்போகும் தலைமுறைகளுக்காக வரப்போகும் மழை நீரையாவது சேமிப்போம்......
மரம் வளர்ப்போம்!!!
மழை பெறுவோம்!!!

இப்படிக்கு உங்கள்,
NATURE LOVER (இயற்கை நேசகன்)
« Last Edit: August 20, 2023, 11:57:56 am by NATURE LOVER »