Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-023  (Read 5291 times)

May 16, 2023, 05:15:57 pm
Read 5291 times

Administrator

கவிதையும் கானமும்-023
« on: May 16, 2023, 05:15:57 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-023


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: May 22, 2023, 10:28:56 pm by Administrator »

May 16, 2023, 11:37:59 pm
Reply #1

AniTa

Re: கவிதையும் கானமும்-023
« Reply #1 on: May 16, 2023, 11:37:59 pm »
என் அன்புள்ள இசையே,

இத்தனை வருட வாழ்வில்
உன்னை பல ராகங்களில்,
பல குரல்களில்,
பல வாத்தியங்களில்,
கேட்டு, உணர்ந்து
ரசித்திருக்கிறேன்...

உணர்ச்சிகளை சொற்களாய்,
ஓவியமாய் வெளிப்படுத்த
தெரியாமல் சிக்கி தவிக்கும்
வாழ்க்கையில்..
நீ மட்டும் எவ்வாறு
உணர்வுகளை துல்லியமாக
வெளிப்படுத்துகிறாய்...

காதல், கண்ணீர், காமம், குரோதம்
என்று நீண்டு கிடக்கும்
உணர்வுகளை, நீ அழகாக
வெளிப்படுத்தும் ரகசியம்
என்னவோ  !!!
மனிதர்களுக்குள் இருக்கும்
தயக்கம் உன்னில்
இல்லாததால !

மண்ணில் பிறந்து,
மண்ணில் புதைகின்ற வரை
இயக்க படுவது உன்னால் தான்.
அதனால் என்னவோ, உன்னில்
கலந்து வரும் வார்த்தைகள்,
அதன் மொழிகளை கடந்து
நீ எல்லோராலும் ரசிக்க
படுபவனாக இருக்கிறாய்.
உன் ராஜாங்கத்தில் இப்புவியில்
வாழும் அனைத்து ஜீவராசிகளுமே
அடிமை தான்...

வாழ்வில் எல்லா நேரங்களிலும்
எனக்கு உயிர் நண்பனாக
இருப்பது நீ தான், இனிமேல்
இருக்க போவதும் நீ தான்.

என் தனிமையில் அமைதியாய்,
என் ஆனந்தத்தில் சிரிப்பாய்,
என் துயரத்தில் கண்ணீராய்,
இது மட்டுமா...
என் கோபத்திலும் என்னை
அணைத்து கொள்கிறாயே...
உன்னை விட ஆறுதல்
எனக்கு வேறு ஏது  !!!

நன்றி இசையே ...!



இக் கவி, GTC யின் குயில் RJ RiJiA அவர்களுக்கு dedicate seigiren. இசையின் கவி குயிலுக்கு dedicate செய்யாமல் இருந்தால் தவறல்லவா 🤗.

May 17, 2023, 01:30:28 am
Reply #2

LOVELY GIRL

Re: கவிதையும் கானமும்-023
« Reply #2 on: May 17, 2023, 01:30:28 am »
நான் தனிமையில் இருக்கும் போதும் காதல்..
என் அன்னையின் அரவணைப்பில் இருக்கும்போதும் காதல்..
என்னவரிடம் உரையாடும்போதும் காதல்..
இறைவனை வணங்கும்போதும் காதல்..

ஆம் காதல் எனக்கு இசையின் மேல் காதல்..

ஒவ்வொரு தருணத்திலும் இசை..
தூங்கும்போதும் இசை..
நம் அன்றாட பணியில் இருக்கும்போதும் இசை..
குழந்தை அழும்போது தாலாட்டும் ஒரு இசை..
காதலர்கள் கொஞ்சி கொள்ளும்போதும் இசை..
நண்பரின் பிறந்தநாளுக்கு இசை..
துக்க வீட்டிலும் இசை..

ஆமாம் இந்த உலகம் இயங்குவதிலும் கானம்..

பூக்கள் பூக்கும்போதும் கானம்..
பறவைகள் கூச்சலிடும்போதும் கானம்..
மழை சாரல் அடிக்கும்போதும் கானம்..
இன்று நம்மை கவிதை மழையில் நனைப்பதும் RiJiA வின் கானம்....

பசி தூக்கம் கவலை சந்தோசம் எல்லா நேரங்களிலும் இசையோடு வாழ்ந்து இசையின் பிரியராகிறோம்...

இந்த கவிதை எழுதும் பாரதியும் ஒரு இசை பிரியரே..


« Last Edit: May 17, 2023, 01:41:34 am by LOVELY GIRL »

May 17, 2023, 07:32:04 am
Reply #3

Barbie Doll

Re: கவிதையும் கானமும்-023
« Reply #3 on: May 17, 2023, 07:32:04 am »

மெத்த படித்த மேதைகளும், மெய்சிலிர்க்கும் பாடலொன்றை இசைமீட்ட கேட்கின்றேன்..! இசைக்கென்ற இனமுண்டோ? இதய ராகம் ஒன்றல்லவா அதன் மொழி..!

சலனமில்லா இருதயத்தில், சரணமது கேட்கையிலே சரணாகதி அடைகின்றேன்..!
இசையே போதுமென்று, இன்னிசையில் தஞ்சமடைந்தேன்..!

பட்டிக்காட்டில் ஒலித்தாலும்.. பாட்டுக்கொரு அர்த்தமுண்டு...! பட்டணத்தில் ஒலித்தாலும்.. பல்லவியில் புரிதலுண்டு..!

இசையின் பிறப்பிடம் இயற்கையென்பேன்..!
வாழ்வியலில் ஒன்றி போன, இசைக்கும் இயற்கைக்கும், பிரிவென்பதில்லை என்பேன்..!

இசையின்றி இல்லை இங்கே எவர் வாழ்வும்...!
இளவயதும் வயோதிகமும் விதிவிலக்கல்ல  இசை முன்னே யாவும்...!

 ஆராரோ தாலாட்டில், அழகாக அறிமுகமாகும் நம்மிடம்...! உறக்கத்திலும் தாயை போல தாலாட்டும் உறைவிடம் ..!

உருவமற்ற உணர்வலை..!
உற்சாகம், உவகை, காதல், கடமை , கோபம், நல்லது, கெட்டது , நட்பு, சொந்தம் என அனைத்திலும் பிரதிபலிக்கும் இதன் அலை...!

மொழிவளம் மெருகேறும் இசைவழி குரல் கேட்டால்..!.
ரணமான மனக் காயமும்,  மயிலிறகாய் மாறிப்போகும் இசைப் பாட்டால்...!

பிறப்பில் தொடங்கி, இறப்பிலும் தொடரும் இசை காதல்..!
ஒருமனதாக ஒலிக்கும் ஒற்றை காதல் இசை. .!
ஒப்பீடுகள் இல்லா ஓசை இசை..!

 புல்லாங்குழலில் புதைந்திருக்கும் இசை கேட்டு, பூக்காத செடியிலும் பூ மலரும்..!
வானத்தில் வளர்பிறையும் நீடிக்கும் வசந்த கானமதை கேட்டால்..!

மானுடர் அறியா நம் மனநிலையும், மறக்காமல் தெரிந்து கொண்டு பின்தொடரும் மாயக் கள்வன் இசை..!

யாதொரு வரம்புமின்றி, மாறி மாறி இசை மீட்டி, மனதை மயங்க வைக்கும் வசியக்காரன்.!

காதலர்களின் காவலன் இசை..!
காதல் சண்டைகள், சமாதானம், என அனைத்திலும், களமாடும் இசையின்றி, காதலும் இல்லை காதலர்களுமில்லை..!

நிஜமான நிழலாக நம்முடனே பயணிக்கும்..  இந்த இசையோடு இயைந்த காதல்.. என்றுமே நமக்கான காதல்..!

இந்த வாழ்வே சங்கீதமாய் மாறிப் போனால் தான் என்ன.?
இசையை மிஞ்சிய ஏதேனும் இவ்வுலகிலுண்டோ..? என்ற

கேள்விக்கான விடையாக.. இசைஞானியின் இனிய இசையுடன் இந்த இரவும் மெல்ல நகர்கிறது விடியலை நோக்கி...

May 17, 2023, 10:49:48 am
Reply #4

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: கவிதையும் கானமும்-023
« Reply #4 on: May 17, 2023, 10:49:48 am »
மனதைச் சுற்றி யுவன் பாடல்களே எனக்கு அதிகம்!! காற்றுக்குள்ளே
வாசம் போல என்ற பாடலை  பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!!!!!

பாடல்கள் என்றும் வாழ்வின் புதிய அத்தியாயங்களின் தருணங்களை தருபவை அல்ல

அவை பழைய அத்தியாயங்களையே புதுப்பித்து திருப்பி தருபவைதான்

யுவன் நிகரில்லாமல்  கஞ்சா விற்று கொண்டிருந்த காலம் அது

 teetotaler முதற்கொண்டு இந்த போதையில் சிக்காதவர் யாரும் இல்லை

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒளிப்பதிவு

இதயத்திற்கு விருந்தாக நடு காற்றில் தனிமை வந்ததே என்று ஆரம்பமாகும் இந்த பாடல்

 காதலியே இல்லை என்பவருக்கும் ஒரு கற்பனை காதலியை ஏற்படுத்திவிடுவார்

பாட்டிலேயே மழை காடுகளுக்குள்ள ஒரு டூர் கூட்டிட்டு போவார்

ஊறிவரும் ஊற்றைப் போல

துளித்துளி தூரலாய் பாடலின் ராகம்

பரவி வரும் வான் மழையில்

பூங்குழலின் நாதம் போல

எழுத்தாளர் பா. விஜய்யின்  எதுகை மோனை இனிமை சேர்க்க

சிலிர்க்க வைக்கும் குரலால்

ஜீவன் உரசும் தருணமாய்  யுவன்  பாட

"மாறாதே" என்ற வரியில் சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று கண் முன்னே காட்டினார்

நடு வீட்டில் தனிமை வந்ததே

இந்த ஒரு பாடல் இதயம் தொட்டதே

மனம் மாறுதே...!!



Song Request ~~இந்த பாடலை எனக்காக ஒளிபரப்பு செய்தால் சந்தோஷப்படுவேன்

Movie : Sarvam

Song : kaatrukulle

May 17, 2023, 09:38:12 pm
Reply #5

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: கவிதையும் கானமும்-023
« Reply #5 on: May 17, 2023, 09:38:12 pm »
இசையே என்  காதல்....
இசையை நேசிக்கிறேன்...
இசையே மூச்சென்றும் சுவாசிக்கிறேன்...

இசை யாவருக்கும் ஓர் நண்பனே...
இசைக்கு மயங்கா மானிடன் எவருமிலரே!
யான் மட்டும் விதிவிலக்கோ?
இசையில் நானும், மெய் மறந்தும் கிடக்கிறேன்,

இசையில் துன்பம் யாவும் மறக்கிறேன்...
துயிலும் வரை
இசையே என் துணையென உணர்கிறேன்...

இசையில் என்றும் இன்பமே....
சில ஞாபகங்களை எண்ணத்தில்
எடுத்துரைப்பதும் என் இசையே...
இசையில் இணைத்த காணமே,
எனக்குள் புகுந்து அசைவிட தூண்டுதே....

கவிஞர்களின் எழுத்துகளில்
கவிதைகள் தீட்டி,
பல இசைக்கருவி கொண்டு இயங்கும் இசையில்
துன்பம் யாவும் தொலைந்து போகுமே....
 
எங்கும் இசை எதிலும் இசை....
காற்றுக்கூட ஒர் இசையே,
பறவைகளின் கூச்சலில் ஓர் இசையே,
பறக்கும் இறக்கையில் ஓர் இசையே,
மரங்களின் அசைவில் ஓர் இசையே,
கடல் அலையில் ஓர் இசையே,
கால் நகர்வில் ஓர் இசையே,
கால் கொலுசில் ஓர் இசையே,
பெண்ணின் கையில் குலுங்கும் வளையல் ஓர் இசையே,
குழந்தையின் சிரிப்பில் ஓர் இசையே,
குழந்தையின் அழுகையில் ஓர் இசையே,
முத்தச் சத்தத்தில் ஓர் இசையே,
மூங்கிலின் புல்லாங்குழல் ஓர் இசையே,
உலகில் பொது மொழியும் இசையே,
பல கருவியில் நான் கண்டேன்
புதுமையான இசையே....

இசையே நீ ஒரு அதிசயமே...
உணதால் நான் கண்டேன்
புதுவித விசித்திரமே...
நீ என்றும் வேண்டுமே,
என் காதலுக்கு அவசியமே....


May 18, 2023, 08:56:29 am
Reply #6

kittY

Re: கவிதையும் கானமும்-023
« Reply #6 on: May 18, 2023, 08:56:29 am »
ஆயிரம் ஆயிரம் வார்த்தை இல்லாமால்  மொழி பேசும் இதயத்திலே.....❤️

நான் முதல் கேட்ட கீதம்.....கருவறை முதல் எனக்காக துடித்த என் தாயின் இதய துடிப்பின் ஓசையில் அறிந்த சங்கீதமே....
யாரும் இதுவரை இசைக்கவில்லை அது போல் ஒரு கீதம்.....இன்று முதல் எல்லோர் இதயத்திலும் விட்டு விட்டு துடிக்குது தாயின் கருவறை முதல் பாடிய தாலாட்டு.....

எத்தனை வகை சங்கீதம் இருப்பினும்....
என்னை பத்து மாதம் பத்திரமாய் பார்த்து கொண்ட தாயின் இதய துடிப்பின் கீதமே என் முதல் கீதமும் என் கடைசி கீதமும்......

தாயின் அன்பை தியாகத்தை மறந்து விட கூடாது என்பதாலோ என்னவோ....கடவுளால் நம் ஒவ்வொரு இதயமும் இடைவிடாது துடித்து கொண்டிருக்கின்றது... தாயின் தியாகத்தை இசையாய் ஒரு ஓசையாய் என்னுள் கேட்டுக்கொண்டே இருக்கின்றது....

பல பல சாங்கீதங்கள் உலகில் இருந்தாலும்.... அதை பற்றி சொல்ல தோனவில்லை என் இதயத்திற்கு.... எவராலும் இதயம் துடிப்பின் ஓசையை நகல் எடுத்து இதயத்தில் சேர்க்க முடியாத கீதம் அது தாயின் தியாக கலந்த  சங்கீதம் இதய துடிப்பின் ஓசை அது....

நம் கருவறை தோன்றிய நாள் முதல் கேட்ட இதயம் கீதம் ! இன்று பல உணர்வுகளில் கதை பேச கற்று தந்தது அதுவும் உண்மை தான்....நம் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு கீதம் ஒலிந்து கொண்டு தான் இருக்கின்றது
இதயம் அது எத்தனை நாள் துடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை... ஆனால் நீ துடிக்கும் வரை என் தாயின் கீதம் என்னுள் இசைந்து கொண்டே இருக்கும்.... என்று நான் என் தாயை மறந்தேனோ அன்று என் இதயம் துடிப்பதும் நின்று விடும்.....

எத்தனை எத்தனை இசைகளால் உலகம் சுற்றி கொண்டு இருந்தாலும் நமக்குள் துடித்து நம் உயிரோடு இருப்பதை உலகிற்கு காட்டி கொண்டிருக்கும் இதயம் போடும் இசையே முதல் இசை....

என் இதயத்தை நான் மறந்தாலும்... என் இதயம் என்னை மறக்கவில்லை லப் டப்... லப் டப்... என்ற சத்தத்துடன் இன்னும் இசைத்து கொண்டு தான் இருக்கின்றது.......அன்னையின் அன்பில் ஒரு தாலாட்டு என்னுள் இதயத்தோடு இதயம் உயிரோடு இணைந்த சங்கீதம்....(❤️அன்னையின் அன்பில் ஒரு தாலாட்டு என்னுள் இதயத்தோடு இதயம் உயிரோடு இணைந்த சங்கீதம்)....❤️

May 18, 2023, 07:00:52 pm
Reply #7

Eagle 13

Re: கவிதையும் கானமும்-023
« Reply #7 on: May 18, 2023, 07:00:52 pm »
இதையமும் சிதையும் இசைகேட்டு, சொல்ல முடியாத கவலைக்கும் மருந்து இசையே!

காற்றே கருவி இசைக்கு - அதை

உரிமை கொள்ள முடியாது எந்த

திசையும்!

இசை சிலநேரம் வண்டுக்குள்ளும்,

காற்றில் அலைமோதும் இரு

செண்டுக்குள்ளும்,

மேகத்தின் சோகத்தில் பொழியும்

மழையிலும்,

மனிதன்

உச்சிக்கொட்டும்

பிழையிலும், காகம் கரையும் போதும்,

நீர் பாறைமீது மோதி உறையும் போதும்,

கடலின் அலைகளிலும்,

மழைக்காலங்களில்,

தவளைகளால் நீர்நிலைகளிலும்,

குயில்

கூவும் போதும்,

யானை

பிளிரும் போதும்!.
இசை

இசை

வடிவம்  பெட்ரு மலரும்!

இசை ஒலியாய்  ஒவ்வொரு குறிப்பிட்ட உயிரினத்துர்க்கு அடையாளம்!






ஏரு ஸ்வரங்கள்

சரிகம பதநி

அதை நீ

கவனி

அதில்,
ச-


மயிலின் குரலாம்.
ரி

காளை மாடு குரலாம்

க ஆடு குரலாம்
ம-

புறா     

ப கிளியின் குரலாம்
த-
குதிரை குரலாம்
நி-

யானையின் குரலாம்.

இசையை

வடிவமைத்தவனோ அதை

விலங்குகளின் குரலுக்குள் அடக்கிவிட்டான்!

ஆனால் அதை புரியவைக்கமால்

மறைந்துவிட்டான்,

மனிதன்

தேடுவது இசையே !

நவரச உணர்வுகளிலும் இசை பூமியில் காற்றுள்ளவரை ஒலிக்கும் எத்திசையிலும்!
நீ ஒவ்வொரு கணமும் 
 உள்ளுணர்ச்சிகலின் அசைவிலும்!.