சிந்தனையில் சிறந்தவள்,
இல்லறத்தில் இனியவள்,
விருப்பங்களில் விந்தையவள்,
அறிவினில் அளவில்லாதவள்,
அழகினில் அமுதானவள்,
பாசத்தில் பணிவானவள்,
கருணையில் கரும்பானவள்,
கருத்தில் கனலானவள்,
பொறுமையில் பொலிவானவள்,
வித்தைகளில் வில்லானவள்,
பழகுவதில் பண்பானவள்,
தாய்மையில் தவமானவள்,
சினத்தால் சிறையிடுபவள்,
தேடல்களில் தேவதையானவள்,
மனதால் மகத்தானவள்,
மன்னிப்பில் மயிலிறகானவள்,
காதலில் கவிதையானவள்,
நட்பில் நம்பிக்கையானவள் ,
மனையில் மலரானவள்,
சமையலில் சாகசமானவள்,
வெட்கத்தில் வெள்ளந்தியவள்,
சிரிப்பில் சித்திரமானவள்,
அக்கரையில் அதிசயமவள்,
இத்தனை இருந்தும் அடிமை சிறை,
அகலவில்லை அவளை விட்டு,
சிறகடித்து பறந்து விட ஆசையிருந்தும்,
சிறகொடிந்த மடந்தை ஆனாள் பெண்ணாய் பிறந்து..
சம உரிமை கிடைத்த பின்பு,
மனிதன் கொஞ்சம் மாறிவிட்டான்,
பெண்ணை மதிக்க பழகி விட்டான்,
இன்று கிடைத்தது நிம்மதி,
வாழப் போகிறேன் என் வாழ்வை,
புதிய காற்று சுவாசிக்கிறேன்,
புதிய உறவு காண்கிறேன்,
தொலைந்து போன என் நாட்கள்,
மீண்டும் கிடைத்தது,
சந்தோஷத்தில் நான் தடுமாறி போகிறேன்,
நரகமாய் இருந்த என் பூமி,
சொர்க்கம் ஆகிறது இப்பொழுது,
உலகம் எங்கும் சிறகடிக்க போகிறேன்,
உற்சாகமாய் சுற்றித் திரியப்போகிறேன்,
என்றும் நான் நானாக.