Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-017  (Read 5263 times)

February 13, 2023, 07:21:46 pm
Read 5263 times

Administrator

கவிதையும் கானமும்-017
« on: February 13, 2023, 07:21:46 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-017


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

February 13, 2023, 09:12:51 pm
Reply #1

Barbie Doll

Re: கவிதையும் கானமும்-017
« Reply #1 on: February 13, 2023, 09:12:51 pm »


உன்னையே நேசித்து , உனக்காக வாழ்கிறேன் அன்பே.. என்னை கண்கொண்டு பாராமுகம் ஏனோ..?

நீ விலகி, விலகி சென்றாலும்.. உன்னை நோக்கியே ஓடி வரும் கடலலை போன்றவள் அல்லவா நான்..? எனை அரவணைத்து அன்பு கொள்ள மறுப்பது ஏனோ..?

கதையாகவும், கற்பனையாகவும் இருந்த நம் காதல்.. நனவாகும் நேரமதில் கண்களில் கோபக்கனல் வீசுவது ஏனோ..?

கவிதையின் இலக்கணமே, உனை படித்து விடும் உரிமையை எனக்களித்து.. திரும்பி பார்த்து உன் புன்னகையை தர மறுப்பதேனோ..?

எனுலகில் நீயும், உன்னுலகில் நானும், தடம் பதித்து நடைபோடும் நேரமதில்.. உன் மௌனத்தினால் எனை வதைப்பதேனோ..?

என் பெயரும் அழகானது உன் நா உரையிலே..செல்லமாக என் பெயர் சொல்லி அழைத்து, காதல் மொழி பேச மறுப்பதேனோ..?

சந்திப்பின் முடிவில் நீ தரும் கடைசி முத்தத்தில்.. கானல் நீராய் கோபங்கள் மறைந்து.. மனம் லேசாக மிதப்பது போன்ற உணர்வை.. இன்று மட்டும் தர மறுப்பதேனோ..?

கண நொடி பிரிவினைக் கூட தாங்கி கொள்ள முடியா நாம் , நம் கரங்கள் கோர்த்து இவ்வுலகை ரசிக்க, ஏங்கி தவிக்கும் என் மனம் புரிய மறுப்பதேனா..?

யாசித்து பெறுவது அன்பல்லவே.. நம் புரிதலில் ஆரம்பித்த காதலில், கோபம் மட்டும் பனிக்கட்டி போல் உருகி விடாமல் இருப்பதேனோ..?

புரியாத ஓவியமாய் நீ இருக்க, உனை புரிந்து விடும் ஓவியராய் நானிருக்க.. அதில் தீட்டும் வண்ணமாய், நம் காதலிருக்க .. இத்தனை கோபங்கள் அவசியம் தானா..?

வெறுக்கப்பட்ட அத்தியாயம் வேண்டாம் நம் வாழ்வில்.. நான் இழைத்த தவறுக்கு மன்னிப்பாய் ..உன் கரம் பற்றி மன்னிப்பு கேட்கிறேன்.. மனமிரங்கி பதில் மொழி கூறி விடு அன்பே..!

ஓடி வந்து எனை அணைத்து கொள் அன்பே.. உன் மூச்சு காற்றில் நம் இடையேயான 'ஊடல்கள்' எரிந்த காகிதமாக காற்றில் பறந்து போகட்டும்..!



« Last Edit: February 13, 2023, 09:38:33 pm by Barbie Doll »

February 13, 2023, 11:56:22 pm
Reply #2

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: கவிதையும் கானமும்-017
« Reply #2 on: February 13, 2023, 11:56:22 pm »
என்னவளே.....

என் அன்பானவளே
என் சொந்தமானவளே,
என் கவிதைக்கு இலக்கனமானவளே,
என் ராகத்திற்கு இசையானவளே,
என் வாழ்வில் அங்கமானவளே,
என் வாழ்வுக்கு வழி காட்டுபவளே,
என் வார்த்தைக்கு வாக்கியமானவளே,
என் ஜென்மம் பிறப்பிற்க்கு விளக்கமானவளே,
என்னுள் யாவிலும் நீயடி......

ஏனடி பெண்ணே கோபம் ஏனடி !
நீ என் செல்ல பெண்ணடி !
இந்த கோபம் வேண்டாமடி,
என் உயிர் தாங்காதடி......

பெண்ணே !
கோப பார்வை பாராதடி
உன் பார்வை வில் அம்பால்
என் நெஞ்சைக் கொய்து கொல்லாதடி....

பெண்ணே பேசாமல் இராதடி !
நீ பேசா நொடி
என் உள்ளம் தினம் நோகுதடி......

பெண்ணே
நீயே என் அகிலமடி
நீ இல்லையேல்
என் வாழ்வுக்கு இல்லை அங்கீகாரமடி......

பெண்ணே
உன் கரம் பிடிப்பேனடி
பிடித்த கரம் 
என்றும் உன்னை விட்டு பிரியாதடி....

பெண்ணே நீ வேண்டுமடி.....
ஏழேழு ஜென்மும் தொடர வேண்டுமடி.....
என் ஆயுள் என்றும் உணதாகுமடி.....
உனதால் என்றும் என் வாழ்வு சிறப்பாகுமடி.....



« Last Edit: February 14, 2023, 12:00:39 am by Vaanmugil »

February 14, 2023, 08:22:32 am
Reply #3

Sanjana

Re: கவிதையும் கானமும்-017
« Reply #3 on: February 14, 2023, 08:22:32 am »
விரல்களில் அபிநயம்
விழிகளில் நவரசம்
உன்னிடம் உள்ளதடா
விடிகிற வரையிலும்
மடியில் உறங்கிட
என் மனம் தவிக்குதடா...

என் இதய கதவைதிறந்து
கனவை தீர்மானிப்பவனே
உன் புன் சிரிப்பில்
என் வாழ்க்கையை அலங்கரிப்பவனே
இறுக்கமான ஒரு அணைப்பு
நீ கொடுத்த காயமும் மறந்து போகும்டா ...

சுவாச காற்றைப் போல காதலை
ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கணும்டா
தூக்கம் தொலைந்து எடை குறைந்து
நான் என்னவோ ஆகிறேன்
என் உயிரின் அணுவினில்
காதலை விதைத்தவனே...

எனக்காக நீ இருக்கிறாய் என்று
மரணம் வரை உனக்காகவே
தொடரும் என் வாழ்வின் பயணம்
உன்னிடம் கேட்பதெல்லாம்
என் ஆயுளின் இறுதிவரையிலும்
எனக்கு மட்டுமே அன்பை
தந்து விட்டுப் போ...

என் கரம் பிடித்து
என்னை அணைத்து
உன் காதலை உணரவைத்தாய்
வாழ்வின் எல்லை வரை
உன்கரம் பற்றி
உனக்கு உறுதுணையாய்
நான் வருவேன் உன் துணையாய்...

« Last Edit: February 14, 2023, 08:49:29 am by Sanjana »

February 14, 2023, 09:57:27 am
Reply #4

RavaNaN

Re: கவிதையும் கானமும்-017
« Reply #4 on: February 14, 2023, 09:57:27 am »
கரமோ நழுவிட
கண்களோ கனத்திட
காயங்கள்  நிறைந்திட
காலங்கள் பறந்திட
கதைக்கவும் மறந்திட
காதலோ கரைந்திட

நிஜமோ நீங்கிட
நினைவுகளோ  நிலைத்திட
விழிகளோ மூழ்கிட
வலியோ உணர்ந்திட
சிந்தனையில் உறைந்திட
சிரிக்கவும்  மறந்திட

தவிப்பினில் வாடிட
தனிமையோ நாடிட
கரையினில் நீந்திட  (நினைவுகளில் )
கடலோ அழைத்திட
கடமையோ தடுத்திட

கரையாத கனவுகளை
நீங்காத  நினைவுகளை
மறக்கத்தான் நினைக்கிறேன்
மரணத்தின்  மடியிலே


                      - இராவணன் என்கிற பச்சப்பிள்ளை
« Last Edit: February 14, 2023, 10:23:37 am by RavaNaN »

February 14, 2023, 02:38:45 pm
Reply #5

Ishan

Re: கவிதையும் கானமும்-017
« Reply #5 on: February 14, 2023, 02:38:45 pm »
என்னவனே ,
என் காதல் கள்வனே....
என்னில் கலந்தவனே....
என்னை என்ன செய்தாயடா?
இப்படி ஓர் ஆர்ப்பாட்டம் எனக்குள்!

இதை ரணம் என்பதா ?
இல்லை சுகம் என்பதா?
ஏனடா எனக்குள் இந்த தடுமாற்றம்...

உன்னை நினைத்த போதெல்லாம்
என் நெஞ்சுக்குள் சிறகொன்று துளிருதடா....

என் மைவிழி தேடலில்,
உன்னை காணா நேரம்
என் மனம் பதை பதைத்து
என்னை கொல்கிறதடா....

உன்னை பார்த்த கணம்
என்னையும் மறந்து
என் எண்ணத்தையும் இழந்து ரசிக்கிறேனடா....

வேண்டும்மடா ! நீண்ட காலம்
என்னோடு நீ வாழ வேண்டுமடா......

வாழ்வோமடா ! வாழ்க்கை இறுதி வரை,
வாழ்வில் காதல் வரலாற்றை படைப்போமடா....
« Last Edit: February 14, 2023, 02:48:50 pm by Ishan »

February 15, 2023, 08:57:44 am
Reply #6

kittY

Re: கவிதையும் கானமும்-017
« Reply #6 on: February 15, 2023, 08:57:44 am »
என்னவனே....
இலட்சத்தில் இலட்சியமாய் கரம் பிடிக்க வந்த என்னை கரம் தட்டி விட்டு போகாதே.....

இருளிலும் விலகி விட நீ என் நிழலாக இல்லை... என் உதிரமாக இருக்கின்றாய்... காயங்கள் இல்லாமல் வலிகளை உன்னால் மட்டுமே கொடுக்க முடியும் அன்பே.....

காலம் உள்ள வரை என் இதய கருவறையில் உன்னை  சுமப்பேன்.... நியோ தள்ளி சென்று நினைவின் வேதனை சுமையை கொடுத்து செல்கிறாய்.....

வாரத்தில் இரு நாள் விடுமுறையாம்.... உன் நினைவிற்கு  என்றும் விடுமுறை இல்லை உன் நினைவில் நான்.... துடிக்கும் இதயத்திற்கு எப்படி சொல்லி புரியவைப்பேன் துடிக்க வைப்பது அவன் தான் என்று....

தள்ளி செல்லாதே என் அன்பே...வேண்டும் உன் காதல் ஒன்றே...உன்னை மட்டும் நேசித்தேன் அது உண்மை மீண்டும் வேறொரு காதல் இல்லை .....         

சிதரிப்போன என் சிந்தனையில் சில்லு சில்லாய் உன் நினைவுகள்...கடந்து போன நீயும் மறக்க நினைக்க நானும்...பிரிந்து போன இடத்தில் உரைந்து போனதோ என் இதயம்....அதை உயிர் பிழைக்க செய்வாயா??....

காதல் ஒன்று உன்னில் கண்டேன்...வாழும் ஆசை என்னில் கொண்டே காதல் என்றால் கண்ணீர் என்று....இன்று நான் அறிந்து கொண்டேனடா....
விலகி சென்றதெனோ...விட்டு விலக முடியாமல் தவிக்கும் என் இதயம்...
     
மனசுல இருக்கிற வலியை மறைக்க தெரியுதே தவிர....
மறக்க தெரியவில்லை.... வழி நெடுவில் வலியுடன் ஒரு பயணம் உன் நினைவுடன்..... மறந்தும் கூட மறக்க மாட்டேன் உன் நினைவுகளை.....   




February 15, 2023, 04:42:04 pm
Reply #7

Ruban

Re: கவிதையும் கானமும்-017
« Reply #7 on: February 15, 2023, 04:42:04 pm »
ஒருமுறை என்னை திரும்பி பார்

என்னை விட்டு சென்றுவிடாதே என் அன்பே
நீ என்னோடே கூட இருந்துவிடு
என்னை விட்டு சென்றுவிடாதே
உன்னை நான் போகவிடமாட்டேன்
என் அன்பே என் உயிரே..!

நீ என்னோடிருக்கும் போது நான் மன்னனானேன்
நீ என்னை விட்டு சென்றால் மண்ணோடு மண்ணாவேன்
நீ என்னோடிருந்தால் நானும் சிகரம் தொடுவேன்
நீ என்னை விட்டு சென்றால் நானோ சிதைந்துபோவேன்
என் அன்பே என் உயிரே..!

என் அன்பே என்னை விட்டு செல்லாதே
வாழ்வோ! சாவோ! இருவரும் ஒன்றாய் செல்வோம்
நான் உன் கையை பிடித்துவிட்டேன் இனி விடமாட்டேன்
நீ எங்கு சென்றாலும் நானும் உன்னுடனே வருவேன்
என் அன்பே என் உயிரே..!
💚 RuBaN 💚