Advanced Search

Author Topic: வான்முகிலின் கவிதை சுவடுகள்....  (Read 33036 times)

June 09, 2023, 08:02:11 pm
Reply #30

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
ஓர் பெண்ணின் உறுக்கம்

எங்கிருந்தோ வந்தான்,
எண்ணமெல்லாம் நீயே என்றான்,
என் உறவாய் நீ இரு என்றான்,
பேச்செல்லாம் தேன் என்றான்,
தித்திப்பாய் நீ என்றான்,
எப்பவும் நான் உனக்குன்னு சொன்னான்,
என் உசுரே நீதான் என்றான்,
சொன்னதெல்லாம் உண்மையின்னு நான் இருக்க
அப்போ உருகி போன என் உசுரு
இப்போ ஊசலிலே தள்ளாடுது
சொந்தம் எல்லாம் ஒதுக்கி வச்சேன்
சொந்தமா நீ மட்டுமே நான் இருந்தேன்
இப்போ ஒத்தையில விட்டுபுட்டு,
கண்ணீருல மிதக்கவிட்டு,
கண்ணாலம்னு மடல காட்டிபுட்டு,
கடைசியில என் உசுரையும் கொன்னுபுட்டு போனானே......



« Last Edit: July 14, 2023, 07:31:27 pm by Vaanmugil »

June 18, 2023, 12:02:09 am
Reply #31

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
நினைக்காத நேரமில்லை.......

நினைக்காத நேரமில்லை,
உன் நினைவுகள்
எனக்குள் என்றும் பாரமில்லை,

பார்க்காத தூரமிருந்தும்
பழகிய நாட்கள் என்னுள்
மிதந்து தளும்புகிறது,

கதைக்காத நேரமெல்லாம்
என் கை பேசியும்
ஓய்வில் ரணமாய் எண்ணுகிறது,

உறங்காத நேரமெல்லாம்
கனவாக உன் வரவை
தினமும் ஏங்குகிறது,

அழுகின்ற நேரமெல்லாம்
உன் தோள் ஒன்றை,
ஆறுதலாய் தேடுகிறது

எப்போதும்
உன் பார்வை என்மீது
என்று நானறிவேன்,

ஆனால் நானோ,
என்றும்,
இந்த கிறுக்களில்
உன்னை தேடுவேன்.....
இப்படிக்கு உன்னை மறவாதவள்......

June 19, 2023, 08:37:09 pm
Reply #32

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
உன் நினைவில்.....

என் இரு விழியினுள் தென்பட்டு
ஆழ்மனதில் புகுந்து,
சொப்பனத்தில் மிதந்து,
என் உறக்கத்தை களவு கொண்டாய்....

இன்று என் அகிலமாய் நீ மட்டுமே
என்று நினைக்க வைத்தாய்.......

ஆனால் நீ ஒன்றும் அறியாதவனாய்,
யாரோ ஒருவனாய்,
என் முன் வருகிறாய், செல்கிறாய்.....

நான் மட்டும் உன் நினைவுகளில்
உறக்கத்தை மறந்து,
உணவை மறந்து,
என் நினைவை மறந்து.....
மதி இழந்த பேதையாய் நான்...

எனக்குள் ஏன் இந்த இம்சை செய்கிறாய்.....
என்னை இம்சிக்க யார் உன்னை அனுப்பியது.....

June 21, 2023, 05:02:55 pm
Reply #33

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
அன்பில் விளைந்த வரமே.....

ஆதவன் எழுகின்ற வேளையிலே,
அழகான காலை கருக்கலிலே,
அதிகாலை தென்றல் வீசயிலே.....

கூரமேல நின்னுக்கிட்டு
கோழி கூவி எழுப்புதம்மா
குருவிகளும் கூச்சலிலே.....
கொஞ்சி கொஞ்சி குலவுதம்மா....

என் ஆசை மச்சானே
வெட்டருவா மீசை வச்சானே....
மண்வெட்டி கையயோட
மனசாலே சொல்லி சென்றானே.....

மெல்லிசை சலசலப்பில்
மிதமான வயல் வெளியில்
மண் வாசம் பார்க்கத்தான்
வயலுக்கு போனாறே....

மத்தியான வேளையில,
உச்சி பொழுது நேரத்தில,
மச்சான் வயலில
பசியத்தான் தீர்க்க
கண்டாங்கி சேலையில
கஞ்சி கொண்டு போனேனே.....

வரப்பு மேட்டுல நின்னுகிட்டு
மச்சான்னு அழைக்கையிலே
எட்டத்தில மச்சான் மனசு
பறக்குறத கண்டேனே...
கிட்டத்தில வந்ததும்
தன் முந்தானை சொருவளை
முகத்தைத்தான் துடைத்தேனே...

பாதி நீ என்றும்
பாதி நான் என்றும் பகிர்வாரே.....
என் பாசமுள்ள மச்சானே.....
இந்த ஜென்ம போதாது
நீ தந்த வாழ்வுக்கு
உனக்கு வாக்கப்பட
ஏழேழு ஜென்மம் வேண்டும் என
படைத்தவனிடம் வரமாய் கேட்பேனே......
« Last Edit: June 21, 2023, 05:10:06 pm by Vaanmugil »

June 23, 2023, 10:54:57 pm
Reply #34

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
என் தங்கை நிலா.....

என் செல்ல தேவதை இவள்,
என் சின்ன தேவதை இவள்,

பூமிக்கு கிடைத்த அதிசய நிலவு இவள்,

பூக்களை விட மென்மையான
மனம் கொண்டவள்,

புன்னகையில் மனம் கவரும்
பூஞ்சோலை இவள்,

அதட்டி பேச அறியாதவள்
அன்பால் அரவனைப்பவள்,

அழுகை ஆள வந்தால்,
நம்பிக்கை என்ற வாள் வீசி
வதம் செய்பவள்,

இன்பம் துன்பம் வந்த போதிலும்
எதிர்த்து போராடும்
வீரப் பெண் என்ற பெயரும் கொண்டவள்
சாதிக்க பிறந்தவள்,

இவள் போல அழகு எங்கும் இல்லை,
இவளே என் செல்ல பிள்ளை,
இவள் குழந்தை மனம் போல்
வேறு எதுவும்  தேவை இல்லை....
இவள் அன்புக்கு அடிமையாகாதவர் எவருமில்லை,

எனக்கு தங்கை இல்லை என்ற குறை தீர்த்தவள்,
இவளே என் அன்பு தங்கை நிலா செல்லம்......

I love u da NILA CHLMM.....
« Last Edit: June 23, 2023, 11:05:45 pm by Vaanmugil »

June 23, 2023, 11:31:23 pm
Reply #35

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
அன்பே !!

அன்பே சுகமா?
உன் சுகத்தில்
உனக்குள் நானும் நலமா?

அன்பே !!
என் நினைவினில்
உன்னை திணிக்கிறேன்,
தித்திப்பில் தனியாய் சிரிக்கிறேன்,
என் சிரிப்பினில்
எனக்குள் நீயும்  என்று உணருகிறேன்,

அன்பே !!
கடந்து போக தவிக்கிறேன்,
கடக்க நினைத்த கணமே,
உன் நினைவுகள்  தகர்த்து கொண்டு
என்னை தடுக்குதே.....

அன்பே !!
ஏதேதோ சொல்ல தவிக்கிறேன்
குறுஞ்செய்தி ஒன்றை தட்டச்சு செய்கிறேன்
நினைவில் நீ சொல்லிய வார்த்தைகள்
வந்து போகவே அதை,
அப்படியே அழித்து விட்டு செல்கிறேன்,

அன்பே !!
இன்று ஏதோ உன் நினைவு,
என்னை உருக்குலைத்து கொண்டே இருந்தது,

அன்றைய நாள் ஞாபகம்,
ஆழமாய் என் நினைவுக்குள்
அழகாய் உணர செய்தது,
அத்தனையும் கனவாய் போனதா?
என்று எண்ணச் செய்தது,
அந்த கணம் I miss you,
என்ற உணரவை உணர செய்தது.....


« Last Edit: June 23, 2023, 11:47:30 pm by Vaanmugil »

June 23, 2023, 11:37:11 pm
Reply #36

Nilla

Sis ma 🥹love u so much

June 23, 2023, 11:42:01 pm
Reply #37

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Sis ma 🥹love u so much



LOVE YOU TOO SISY MA UMMAA

June 24, 2023, 12:39:03 pm
Reply #38

RiJiA

என் தங்கை நிலா.....

என் செல்ல தேவதை இவள்,
என் சின்ன தேவதை இவள்,

பூமிக்கு கிடைத்த அதிசய நிலவு இவள்,

பூக்களை விட மென்மையான
மனம் கொண்டவள்,

புன்னகையில் மனம் கவரும்
பூஞ்சோலை இவள்,

அதட்டி பேச அறியாதவள்
அன்பால் அரவனைப்பவள்,

அழுகை ஆள வந்தால்,
நம்பிக்கை என்ற வாள் வீசி
வதம் செய்பவள்,

இன்பம் துன்பம் வந்த போதிலும்
எதிர்த்து போராடும்
வீரப் பெண் என்ற பெயரும் கொண்டவள்
சாதிக்க பிறந்தவள்,

இவள் போல அழகு எங்கும் இல்லை,
இவளே என் செல்ல பிள்ளை,
இவள் குழந்தை மனம் போல்
வேறு எதுவும்  தேவை இல்லை....
இவள் அன்புக்கு அடிமையாகாதவர் எவருமில்லை,

எனக்கு தங்கை இல்லை என்ற குறை தீர்த்தவள்,
இவளே என் அன்பு தங்கை நிலா செல்லம்......

I love u da NILA CHLMM.....


BEAUTIFUL  KAVITHAI  ❣

June 25, 2023, 07:54:19 pm
Reply #39

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
என் தங்கை நிலா.....

என் செல்ல தேவதை இவள்,
என் சின்ன தேவதை இவள்,

பூமிக்கு கிடைத்த அதிசய நிலவு இவள்,

பூக்களை விட மென்மையான
மனம் கொண்டவள்,

புன்னகையில் மனம் கவரும்
பூஞ்சோலை இவள்,

அதட்டி பேச அறியாதவள்
அன்பால் அரவனைப்பவள்,

அழுகை ஆள வந்தால்,
நம்பிக்கை என்ற வாள் வீசி
வதம் செய்பவள்,

இன்பம் துன்பம் வந்த போதிலும்
எதிர்த்து போராடும்
வீரப் பெண் என்ற பெயரும் கொண்டவள்
சாதிக்க பிறந்தவள்,

இவள் போல அழகு எங்கும் இல்லை,
இவளே என் செல்ல பிள்ளை,
இவள் குழந்தை மனம் போல்
வேறு எதுவும்  தேவை இல்லை....
இவள் அன்புக்கு அடிமையாகாதவர் எவருமில்லை,

எனக்கு தங்கை இல்லை என்ற குறை தீர்த்தவள்,
இவளே என் அன்பு தங்கை நிலா செல்லம்......

I love u da NILA CHLMM.....


BEAUTIFUL  KAVITHAI  ❣





நன்றி Sis

June 28, 2023, 10:39:34 pm
Reply #40

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
மாயக்கண்ணனே....

மன்னனே,
என் மாயக்கண்ணனே,
மந்திரமாய் வருவானோ?
தந்திரமாய் மனதிலே,
காதல் அம்பு ஒன்று எய்துவானோ?
கள்வன் என்று பேர் பெறுவானோ?
மனம் மகிழ செய்வானோ?
மயக்கும் வர்ணிப்பு வார்த்தைகள் கூற்வானோ?
எண்ணமெல்லாம் அவன் நினைவை விட்டு செல்வானோ?
அவன் வருகையை ஏக்கத்தில் வைத்து விட்டு போவானோ?
« Last Edit: June 28, 2023, 10:44:03 pm by Vaanmugil »

July 02, 2023, 01:03:06 pm
Reply #41

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
அம்மா !!!

என் அன்பு தாயே,
அகிலம் போற்றும் அன்னையே !

பாரம் என தெரிந்தும்
வரமாய் நினைத்து
பத்து மாதம் சுமந்தாயே !

தன் வலி பாராமல்
தரணியை காண
தங்கமென பெற்று எடுத்தாயே !

அல்லும் பகலும் தூங்காம
தாலாட்டி, சீராட்டி
அரவணைப்பை தந்தாயே !

பட்டினியா கிடந்தாலும்
பச்சை மண்ணு நானுன்னு
தன் பசிய மறந்து
என் பசிய தீர்க்க பாலூட்டி வளர்த்தாயே !

பச்சிளம் குழந்தையில்
எட்டி எட்டி உதைத்தாலும்
என் பிள்ளை நீயின்னு
முத்தத்தாலே கொஞ்சிடுவாயே !

வறுமையில் நீ இருந்தாலும்
பண்டிகையின்னு வந்தா
புது பட்டுடுத்தி அழகு பார்ப்பாயே !

பக்குவமாய் நான் வளர
அம்மா உன் அன்பு வளர்ப்பில்
உன் வாழ்வை எனக்காய் அர்பணித்தாயே !

அம்மா.......உன்னை போல் ஓர் உறவும்
இவ்வுலகில் ஒப்பிட இயலாதே.....
என் அன்பு தாயே.....
ஏழேழு பிறப்பிற்க்கும் நீயே என் தாயே......



« Last Edit: July 14, 2023, 07:27:44 pm by Vaanmugil »

July 02, 2023, 09:05:41 pm
Reply #42

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
தனிமை......

தனிமை என் இனிய நண்பனே,

சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......

இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,

இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......

ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....

கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....

பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...

யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......


« Last Edit: July 04, 2023, 11:57:38 pm by Vaanmugil »

July 04, 2023, 11:56:48 pm
Reply #43

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
கடலும், கடற்கரை அலையும்......

கரை தொடும் அலை கடலே,
கண்கவரும் கருங்கடலே,
பல பெயர் கொண்ட ஆழ்கடலே,
சீற்றெடுக்கும் செங்கடலே,
பரவிக்கிடக்கும் பெருங்கடலே......

நீல வண்ண கடலே,
நீண்ட அகல கடலே,
நீரோடிய அழகே,
நீரோடு உப்பு கொண்ட கடலே.....

வானில் கதிரவன் எழும் வேளையிலே
வியக்க வைக்கும் கடலே,
வான் அழகை தனக்குள்
வர்ணிப்பில் வெளிபடுத்தும் கடலே......

வீசும் காற்றில் எழும் அலையே,
விரைந்தோடிய விரவியே,
ஓயாமல் உருவெடுத்து
கரை தொடும் அலையே,
நுரையென வந்து
பாதத்தில் முத்தமிடும் அலையே........

இருளென ஆகினும்
அலையோசை அகலாத கடலே,
கட்டுமர அசைவில்
கட்டழகாய் காட்டும் கடலே,

ஆழ்கடலில் எண்ணற்ற உயிரினம்
கொட்டிகிடக்கும்  முத்துக்கடலே.....
மீனவனின் வீடே....
மிரள வைக்கும் சுனாமியே....

அழகின் உச்சம் உன் அழகே,
ஆக்ரோஷம் உன் குறையே,
அன்பின் எல்லை உன் கரையே.....
« Last Edit: July 04, 2023, 11:58:58 pm by Vaanmugil »

July 05, 2023, 12:54:58 pm
Reply #44

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
கோபம்....

அன்பே ! கோபம் வேண்டாமே,
நான் உடைந்து போவேனே.....

அன்பே ! வார்த்தையால் வதைக்காதே,
சிந்தனையிலும், மனதிலும்
காய தழும்பை தீட்டாதே...

அன்பே ! நான் உன்னவள் என்பதை
மறக்காதே,
மறந்தும் ஒரு நாளும் என்னை இழக்காதே,
என் வாழ்வை என்றும் சிதைக்காதே.....

அன்பே ! உன் கோபப் பார்வையால்
என்னை கொல்லாதே......
அதனால்,
என் மனம் தாங்காதே....

அன்பே ! நீயே என் அகிலமே
உன் மனமே எனக்கு அடைக்கலமே
உன்னிலிருந்து என்னை
நீ விரட்ட எண்ணாதே....

அன்பே ! உன் நினைவால்
தினம் உருகுகிறேன்...
உன் நினைவால்
உயிரையையும் இழக்குகிறேன்....

அன்பே ! நீ பிரிய வேண்டாமே,
உன் பிரிவில்
என் வாழ்வில் ரணமும் வேண்டாமே.....

குறிப்பு : இது வெறும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.....
« Last Edit: July 05, 2023, 02:25:45 pm by Vaanmugil »