POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

வான்முகிலின் கவிதை சுவடுகள்....

(1/11) > >>

Vaanmugil:
எனக்கெனவே நீ......

நீ என் நிஜம் என்பதா? - இல்லை
என்னை தொடரும்
என் நிழல் என்பதா?

நீ என் உயிர் என்பதா? - இல்லை
என்னுள் இருக்கும்
என் சுவாசகாற்று என்பதா?

நீ என் இமை என்பதா? - இல்லை
எனக்குள் நுழைந்து
கலைந்து செல்லும் கனவென்பதா?

நீ என் அகிலம் என்பதா - இல்லை
என்னுள் வசிக்கும்
முகில் என்பதா?

அன்பே. நீ  நான் செய்த தவமல்லவா?
என் வாழ்வில் கிடைத்த வரம்மல்லவா?
அன்பே. என்றும் எனக்கெனவே நீ,
எனக்கு மட்டுமே நீ......

Ishan:


Vaanmugil nejamave romba azhaga erku enum unga kavithai varanum ethir pakren

Vaanmugil:
போர் வீரன் காதல்....

களம் இறங்கி வாள் வீசி,
வகை சூடிய போர் வீரன் நான்....
அவள் பார்வை பட்ட கணம் முதல்
சிக்கி தவிக்கின்றேன்......

எதிர் நாட்டின் வீழ்ச்சியை
சில நொடியில் வீழ்த்தியவன் நான்.....
அவள் எதிரில் என் வீழ்ச்சியை
உணர்கின்றேன்.....

போரில் வாள் வீசி வேல் எய்து
வெற்றி வீரன் என்று
பேர் சூட்டப்பட்டவன் நான்......
இன்று அவள் விழியில்
நான் தோற்று சரணடைகிறேன்.....

போர்களம் சென்று
குருதியில் நீந்தியவன் நான்.....
அவள் சிரிப்பினில் செத்து பிழைக்கிறேனே....
என் காதலே....

Vaanmugil:
புது உறவு......

புதிய  உறவு.....
புதியதாய் இணையத்தில்.....
பொக்கிஷமாய் கிடைத்த உறவு.....
இது சொந்தமும் இல்லை,
இது பந்தமும் இல்லை,
சொந்தமாய் உரிமைகொள்ளவும்,
பந்தமாய் தொடரவும்,
பாவி விதி அவன் விட்டு வைப்பானோ?
வினவி கொண்டு ?
ஆழ்ந்த சிந்தனையில் நான்......
உரிமை நட்பு வரை வேண்டும்,
உறுதியாய் உரக்க கூறிட வேண்டும்,
உலகம் முழுதும் வியப்பில் ரசிக்க வேண்டும்,
விமர்சனம் எழுந்தால் விளக்கம் தாராமலே.....
உறவை பார்த்து மன்னிப்பு கோருதல் வேண்டும்,
இவனே என் சொந்தமாய்,
இவனே என் பந்தமாய்,
இவனே என் நட்பின் உரிமையாய் ,
என் நண்பன் இஷான் என்கிற கண்ணனுக்கு சமர்பணம்........


Vaanmugil:
தொலைதூர காதல்

தொலைதூர காதல்.....
தொலையாத காதல்......

முகம் காணாமல்,
முகவரி தெரியாமல்
தொடர்கின்ற காதல்
தொலைதூர காதல்.....

கடல் தாண்டியும்,
பல நாடுகள் தாண்டியும்,
பல ஆயிரம் மைல் தாண்டியும்
தொடர்கின்ற காதல்
தொலைதூர காதல்.....

இரு மனம் கதைக்க
வலைதளமும், கைபேசியும்
காதலின் தூதாய்
வந்த காதல்
தொலைதூர காதல்.....

கண்கள் பேசா காதல்
கை பிடித்து கதைக்கா
முடியா காதல்.....
கணம் ஒரு பொழுதும்
பிரியாத காதல்
தொலைதூர காதல்.....

பல ஆண்டுகள் கடந்தும்
சந்திக்க நாள் இல்லா காதல்
ஒரு பொழுதேனும் சந்திப்பில்
விடியாதா ?
என்னும் காத்திருப்பில்,
இரு மனங்களின் தவிப்பில்
வரும் காதல்
தொலைதூர காதல்.....

சந்திப்பில் இல்லா காதல்
சற்றும் மாறாத காதல்
இரு மனங்களின் காதல்
தொலைதூர காதல்.....
என்றும் தொலையாத காதல்....

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version