Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-011  (Read 5572 times)

November 28, 2022, 09:29:41 am
Read 5572 times

Administrator

கவிதையும் கானமும்-011
« on: November 28, 2022, 09:29:41 am »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

November 28, 2022, 08:40:27 pm
Reply #1

RavaNaN

Re: கவிதையும் கானமும்-011
« Reply #1 on: November 28, 2022, 08:40:27 pm »
மழலைப்பருவம் 

கள்ளமில்லா புன்னகையும்
களைப்பில்லா புத்துணர்வும்
காலைமுழுக்க விளையாட்டும்
காரணமில்லாச்  சந்திப்பும்
கவலையில்லா வாழ்வும் 

கலந்துபேச ஆலமரம்
இளைப்பாற ஆற்றங்கரை
சோர்வுபோக்க சோறுண்டு
களைப்பாற கதைக்கேட்டு
கண்ணயர கயிற்றுக்கட்டில்

துயரமில்லா துயில்கொள்ள
துளிர்விடும் கனவுலகில்
கலையாத நினைவுகளில்

நெஞ்சமும் நிறைந்திட
நித்தமும் மகிழ்ந்திட
நினைவும் நிலைத்திட
மனமும் மலைத்திட

மறையாத நினைவுமது
மழலையின் பருவமது

                         - இப்படிக்கு இராவணன் என்கிற பச்சப்பிள்ளை
« Last Edit: November 29, 2022, 01:59:24 pm by RavaNaN »

November 28, 2022, 10:18:22 pm
Reply #2
Re: கவிதையும் கானமும்-011
« Reply #2 on: November 28, 2022, 10:18:22 pm »
பாசமுள்ள பள்ளிக் கூடமே !
முதலாம் வகுப்பில் உன்னைத் தேடி வர மனமின்றி
அம்மா கைப் பிடித்தே
அலறி அழுதேன் .
வழியெங்கும் விழுந்து புரண்டேன் !
புதிதாய் தைத்த சீருடை
புழுதி படிந்திட வழியெங்கும் விழுந்து புரண்டேன் !
உள்ளம் வெதும்பி
கண்கள் பிதுங்கி
கண்ணீர் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடிட
இடை இடையே ஓயாமல் ஒழுகும்
எனது ஒற்றை மூக்குச்சளியை
தன் இடக்கையால் வழித்தெடுத்து
வழியில் வீசியெறிந்தும்.
ஏற்கனவே
வாரிய தலையை வாஞ்சையின்றியே வலக்கையால் கோதிய படியும்
“வாய்யா என்  ராசாலா பள்ளி கூடம் போனா தானே பெரிய ஆளாக முடியும்" என்றே அலறிய எனது அழுகையின் இடையே அழகு வசனம் பேசியே அழைத்து வந்துவிடுவாள் உன்னருகே ! 

அய்யோ ! பள்ளிக்கூடம் வேண்டாம் என கதறி அழும் என்னை கண்டதும்
ஒரு வீச்சு நடை வேகமெடுத்து வகுப்பறையின்
வாசல் வந்தே
வா உள்ளே ,
என்ன அழுகை ?என்றே ஜோதி டீச்சர் சத்தமாக சொன்னதும் .
கப்சிப் என தொண்டையை தொட்டுவிடாமல் எனது அலறலை அடக்கிக் கொள்வேன் !
அஞ்சலி அருகே போய் அமைதியாய் அமர்ந்துக் கொள்வேன்.
இந்த வேடிக்கையே வாடிக்கையாகி போனது எனக்கு அடிக்கடி. 
புளித்தபோதும் அதிகம் பிடித்து போனது அஞ்சலி கடித்து தரும் அரைத்துண்டு ஆரஞ்சு மிட்டாய் !

ஆண்டுகள் உருண்டோட
அடி எடுத்து வைத்தேன் ஆறாம் வகுப்பில்.
பாசாங்கு செய்யாமல் தினமும் படையெடுத்தேன் பள்ளிக்கு !
அஞ்சலி அருகிலிருந்து அநியாயமாகப் பிரிக்கப்பட்டேன் நான்.

பாட வேளைகள் எல்லாம் எனக்கு பாரமானது !
கணக்கு கசப்பானது ! எனக்கு வெறுப்பானது !
பரீட்சை தாளில் பேனாவால் செய்வேன்
அறுவை சிகிச்சை !
மதிப்பெண் வரும் வேளையில் ஆசிரியை கையில் பிரம்பு இயக்கம் பெரும் !
எனக்கு சற்றே மயக்கம்
வரும் !

விளையாட்டுப் பிரிவு எனக்கு விருப்பமானது
எனவே வியாழக்கிழமை என் மனதுக்கு நெருக்கமானது !

கல்வியில் ஓரளவு நல்லவன்
கலைத்துறையில் நான்தான் வல்லவன் !
கணக்கும் நானும் கட்டிப் புரண்டு
ஒரு வழியாய் கடந்து வந்தேன் மேல்நிலை வகுப்பிற்கு !

குரல் வளம் கனத்தும்
குறும் மீசை முளைத்தும்
ஆளும் கொஞ்சம் அழகானேன் !
அறிவிலும் கொஞ்சம்
வளமானேன் !
விரைந்து சென்றது நாட்கள்
உன்னிடமிருந்து விடைபெறும் நேரத்தை நோக்கி .

உன்னோடு பயணித்த இறுதி நாளில்
உள்ளம் வெதும்பி
கண்கள் பிதுங்கி வந்தது
முதல் வகுப்பில் வந்த அதே அழுகை !
உன்னை விட்டு பிரிய மனமின்றி.

November 28, 2022, 11:54:21 pm
Reply #3

LOVELY GIRL

Re: கவிதையும் கானமும்-011
« Reply #3 on: November 28, 2022, 11:54:21 pm »
என் பள்ளி நாட்களின் நினைவுகள்,
நான் வகுப்பில் இருந்ததாக ஞாபகம் நேற்று தான் தெரிகிறது,
இப்போது ஆண்டுகள் கடந்துவிட்டன..

கடந்த வருடங்களை திரும்பிப் பார்த்தால்,
மகிழ்ச்சியான நேரங்களில் சோகமும் இருந்தன,
பள்ளி முற்றத்தில் விளையாடிய தருணங்கள் மலர்ந்த காலைப் பூ போல.
இந்த நினைவுகள் என்னைத் தொடர வைக்கின்றன..

மனதில் கள்ளம்கபட மில்லாத நாட்கள்
கவலைகள் துன்பங்கள் இல்லாத நாட்கள்,
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காத நாட்கள்,
எவருக்கும் எதற்கும் அஞ்சிடாத நாட்கள்,

சிறகில்லாமல் வானத்தில் பறந்தோம்,
விளையாட்டாய் எதையும் நினைத்தோம்..

அன்று நீ என் கண்களுக்கு வெறும் கட்டிடமாக தெரிந்தாய்,
இன்றோ நான் உன்னை கோபுரம் என உணருகிறேன்..



என் பள்ளி பருவத்தை நினைவு படுத்திய RJ RIJIAவிற்கும் மற்றும் KG குழுவினருக்கும் நன்றி

November 30, 2022, 08:23:16 am
Reply #4

kittY

Re: கவிதையும் கானமும்-011
« Reply #4 on: November 30, 2022, 08:23:16 am »
★★★சின்ன மன சிதறல்★★★


கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கின்றேன்!
நெஞ்சில் சுமைகள் கூடியதே...
ஒவ்வொன்றாய் நினைக்கையில் கண்கள் கலங்கியதே...(ஒவ்வொன்றாய் நினைக்கையில் கண்கள் கலங்கியதே...)

தொலைத்த இடமும் தெரிகின்றது....
தொலைந்த மனமும் வதைக்கின்றது... தொலையாத நெஞ்சம் அதை நினைக்கின்றது...
ஆடிப்பாடிய   மேடைகளும்,,,
கூடி பேசிய வார்த்தைகளும்,,,
ஓடி விளையாடிய கால் தடங்களும்...  என் மனதில் நீங்காத சுவடுகளுடன்..... நினைத்தாலே இனிமையாய்  வலிக்கிக்கிறது உள்ளம்....
'ஆனால் திருப்பி மீட்கத்தான் முடியவில்லை எல்லாம் நினைவுகளாக....  (ஆனால் திருப்பி மீட்கத்தான் முடியவில்லை எல்லாம் நினைவுகளாக....)

பத்து வருடமோ... பல வருடமோ...
சிலருடன் இருந்த நினைவுகள்,,, முகவரி இன்றி முடிந்து போன உறவுகள்....

நிஜத்தில் மீண்டும் அடைய முடியாத அழகிய வலியாய்....  நினைவுகளை சுமப்பதில் நிகரில்லா காட்சிகளாய்  பள்ளி பருவ ஞாபகங்கள்...  நிஜங்கள் நிலைப்பதில்லை... நினைவுகள் அழிவதில்லை....

November 30, 2022, 09:49:20 am
Reply #5

Sanjana

Re: கவிதையும் கானமும்-011
« Reply #5 on: November 30, 2022, 09:49:20 am »
பள்ளிக் காலம்

பள்ளிக் காலம் மிக சிறந்த  காலம்
பெரியவர்கள் அதை என்னிடம் பகிர்ந்த பொழுது
மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அன்று
ஆனால் அவர்களுக்கும் சரியாகத் தெரியவில்லை
பள்ளிக்குச் செல்லவிரும்பும் நான்
புத்திசாலியாக மாறுவேன் என்று…(smile)

அப்போது நான் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்
எனது ஆசிரியர் என்னை சரியான நேரத்தில் பார்க்க விரும்புவார்
சற்று தாமதம் என்றாலே முகத்தை சுழிப்பார்
அவர் அன்பும் நட்பும் முகத்தில் தெரியும்
வகுப்பில் தூங்குவேன் அதையும் பொருட்படுத்த மாட்டார்
என் ஆசான் குறுஞ்சிகண்ணன்…

நீங்கள் கணிதம் செய்ய வேண்டும்,எழுத வேண்டும், படிக்க வேண்டும்
என கூறும் அறிவுரையை நான் சற்று நினைத்து பார்க்கிறேன் இன்று
வீட்டுப்பாடம் எப்போதும் இருக்கும்
ஆனால் அதை நான் கண்டுகொள்வதில்லை
தோழி தோழருடன் விளையாடுவதே எனது சந்தோசம்
அதை விட வேறு என்ன சுகம் இந்த உலகில்
அதனால் திட்டு வாங்கும் போது நான்
அன்று என் மனதில் எண்ணியது ஒன்றே ஒன்று
"நான் மருத்துவராகும் வரை காத்திருங்கள்!" என்று...


எப்போதும் என் நினைவில் இருக்கும் அந்த பள்ளிக் காலம்
ஆனால் காலம் செய்த கோலமோ
விதி செய்த துரோகமோ
இல்லை போர் செய்த கொடுமையோ
இடையிலே நாட்டை விட்டு பள்ளியை விட்டு பிரிய நேர்ந்தது
தொலை தூரத்தில் மீண்டும் வேறு மொழியில் கற்க நேர்ந்தது…


அதிகமாக பயிற்சி செய்து கற்றுக்கொண்டேன்
அனைத்து ஆசையும் நிறைவேறியது
ஆனால் அந்த பள்ளிக்கால சந்தோசம்
என்றுமே திரும்ப வரவில்லை
வரவும் வராது என உணர்ந்தேன்
பள்ளிக் காலம் மிக சிறந்த  காலம் என உணர்ந்தேன்
இன்றும் உணருகிறேன்….




THANK YOU KG TEAM and GTC  FOR THIS OPPORTUNITY.

WITH LOVE
YOUR SANJU
« Last Edit: November 30, 2022, 07:36:20 pm by Sanjana »

November 30, 2022, 10:16:39 am
Reply #6

Eagle 13

Re: கவிதையும் கானமும்-011
« Reply #6 on: November 30, 2022, 10:16:39 am »
சரிவர பேச தெரியாத நாட்களில்- பிறரிடம்
அதிகமாய் பேசிய நினைவு கேள்!
- பள்ளிப்பருவம்!
சிற்றுண்டி பேரின்பமாகும் - தினமும்
விளையாடுதான் தன் நாட்கள் ஆரம்பம் ஆகும்
தொலைக்காட்சி இருக்காத நாட்களில், தினந்தோரும்
அனைவரும் வீடுவாசல்களில் கூடி மகிழந்தோம்!
இரவில்,
வீதிகளில் தினமும் ஒரு விளையாட்டு! :-[
அதற்காக ஒரு தனிப்பாட்டு!
வார இறுதி நாட்களில்  விடுமுறை என்பதால்,
உடலும் மனமும் வீட்டில் தங்காது!
ஒரு விடு முறை நாள் கூட,
நழுவி செல்லாது,
அம்மாவிடம் திட்டு வாங்காது!
திங்கட்கிழமை வந்தால் எங்குவோம்?
எப்போது வெள்ளிக்கிழமை  வரும் என்று!
இன்றும் கூட நான் நினைக்கிறேன்?
திங்கட்கிழமை வந்தால்!
இன்னுமா பள்ளி செல்கின்றேன் என்று!
பிறந்ததிலிருந்து என்னவென்று அறியாமல் சமத்துவம் பயின்றோம்!
இன்றும் கூட,
வேற்றுமையில் நாம் ஒற்றுமை ஆக இருக்க முயன்றோம்!
இதுவரை கல்வி படிப்பிற்கு மட்டுமே அடித்தளம் இல்லை!,
இன்றைக்கு,
கல்வியில் பணமும் பிற மொழிகள் மணமும்
உயர்ந்து நிற்பது நாட்டிற்கே தொல்லை!.
நன்றி!!.


December 01, 2022, 08:17:48 am
Reply #7
Re: கவிதையும் கானமும்-011
« Reply #7 on: December 01, 2022, 08:17:48 am »
"பள்ளிக்கூடம் என்றுமே என் மனதில் பூங்காவனம்!!!...
"பள்ளிப்பருவம் என்றுமே என் நினைவில் பிருந்தாவனம்!!!...
"பள்ளிக்கூடம் என்னை ஈன்றெடுத்த மற்றொரு தாயின் சோலைவனம்!!!...

"என் தாயின் கருவில் பாதுகாப்பாக இருந்தேன்!!!
"இவ்வுலகிற்கு நான் கனவுகளோடு பிறந்தேன்!!!
" தாயின் பிரியாத அரவணைப்பில் அனைத்தும் உணர்ந்தேன்!!!

"வருடங்கள் கடந்தன திடிரென முதல் முறை பள்ளிக்குச் செல்ல ஒரு சின்ன பயம் உண்டானது"....
"என் மனதில் பயத்தையும், தோளில் புத்தகத்தையும் சுமந்தபடி பள்ளிக்கூடத்தை அடைந்தேன்... `அம்மா... அம்மா... என்ன விட்டுட்டு போகாதேம்மா என்று கதறி அழுதேன்"....
"என் அம்மாவோ என் குமுறல் அழுகையைப் பார்த்து கண் கலங்கி நின்றார்"....
"பள்ளிக்குச் சென்ற அந்த முதல் நாள் நான் ஒரு  அசத்துடனும், பயத்துடனும் அழுது கொண்டே பெண் ஆசிரியரின் முகத்தைப் பார்த்தேன்....
என் வகுப்பு பெண் அசரியரோ என்னை தூக்கிக்கொண்டு அழதே என் தங்கமே என்று கூறியது இன்றும் என் நினைவில் வைத்திருக்கிறேன்"....

"பள்ளிக்கூடம் என் உள்ளத்தில் அறிவை அள்ளிக் கொடுத்த ஞானச்சாலை"....
"என் பிஞ்சு விரல் பிடித்து அ...ஆ.... என்று சொல்லித்தந்த என் பெண் ஆசிரியரின் முகம்  31 வருடங்கள் கழித்தும் இன்றும் என் மனதில் பதித்திருக்கிறது"....
"பள்ளிக்கூடம் என் வாழ்க்கையின் பொன்னான பருவ நாட்களில் ஒன்று"....
"பள்ளிக்கூடம் என் நண்பர்களுடன் நான் சந்தோஷமாக குடியிருந்த நினைவுக்குடு"....
"பள்ளிக்கூடம் அன்று என் நண்பர்களுடன் துள்ளிக்குதித்து விளையாடிய ஆனந்தக்களம்"....
"பள்ளிக்கூடத்தில் நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது,  பந்துவீசி விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாடுவது மற்றும் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வது என பல சந்தோஷம் மிகுந்த அந்ந தருணங்கள் மிகவும் அற்புதமானவைகளே"....
"பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அந்த சந்தோஷமான தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியனவையே"....
"பள்ளிக்கூடத்தில் பள்ளிப்பருவத்தில் எனக்கு கிடைத்த என் ஆருயிர் நண்பர்களின் நட்பு  இன்று வரை எனக்கு கிடைத்த பொக்கிஷம்"....

"பள்ளி விடுமுறை தினங்களில் கூட பள்ளி செல்ல முடியவில்லையே என்று என் மனதில் ஒருவித ஏக்கம்"....
"நண்பர்களை காண முடியவில்லையே என்று என் மனதில் ஒருவித துக்கம்"....
"பரிட்சை நேரம்...வினாக்கள் இன்னும்... எத்தனை இருக்குன்னு எண்ணம்.. விநாடிகள் நகர.... பயமோ உதர.... நண்பனோ   விடை கொடுக்க....
பதில்  அளித்தேன் கை வலிக்க.... சந்தோஷமோ என் மனம்முழுக்க"....

"இப்படி என் பள்ளிக்கூட அனுபவத்தை சொல்லிக்கொண்டே போகலாம்"....
"என் வாழ்வில் மீண்டும் திரும்பக் கிடைக்காத அந்த நாட்களை எண்ணி திரும்பி பார்க்கும் போது கனத்த இதயமும் கண்களில் கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது"....
"கடவுள் என்னிடம் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்!!!
"எனக்கு என்னுடைய அம்மாவை திரும்பக் கொடு, எனக்கு என்னுடைய பள்ளி நாட்களை திரும்பக் கொடு என்று தான் கேட்பேன்"....

இப்படிக்கு
உங்கள் NATURE LOVER (இயற்கை நேசகன்)
« Last Edit: December 06, 2022, 01:23:26 pm by NATURE LOVER »