Advanced Search

Author Topic: AslaN குட்டி கதைகள் 😄  (Read 253 times)

October 11, 2022, 04:35:07 pm
Read 253 times

AslaN

  • Moderation Staff

  • *****

  • 834
    Posts

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
AslaN குட்டி கதைகள் 😄
« on: October 11, 2022, 04:35:07 pm »

கணவனும் மனைவியும்  😄


புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.

அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து

காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு அப்படின்னு சொன்னா.

ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.

அதுக்கு அந்த கணவன்அது வேற ஒன்னும் இல்ல.

இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன் அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.
« Last Edit: October 20, 2022, 10:12:11 am by AslaN »

October 20, 2022, 10:20:12 am
Reply #1

AslaN

  • Moderation Staff

  • *****

  • 834
    Posts

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: AslaN குட்டி கதைகள் 😄
« Reply #1 on: October 20, 2022, 10:20:12 am »

கழுதை அமைச்சர் 😄



மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ''மழை வருமா?''எனக் கேட்டான்.'

'வராது''என்றான் அமைச்சன்.

வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது கடும்மழை வந்து நன்றாய் நனைந்துபோனான். திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழைவரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.

அவனோ,''மன்னா எனக்குத் தெரியாது.ஆனால் என்கழுதைக்குத் தெரியும். அது மழை வரும்முன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.

உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டான், என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.