Knowledge Based Category > Stories - கதைகள்

AslaN குட்டி கதைகள் 😄

(1/1)

AslaN:

கணவனும் மனைவியும்  😄


புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.

அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து

காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.

ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.

அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல.

இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.

AslaN:

கழுதை அமைச்சர் 😄



மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ''மழை வருமா?''எனக் கேட்டான்.'

'வராது''என்றான் அமைச்சன்.

வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது கடும்மழை வந்து நன்றாய் நனைந்துபோனான். திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழைவரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.

அவனோ,''மன்னா எனக்குத் தெரியாது.ஆனால் என்கழுதைக்குத் தெரியும். அது மழை வரும்முன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.

உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டான், என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.

AslaN:

ஒரு அருமையான குட்டிக் கதை…!

பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள்…

அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.

அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி

விடும்.

அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள் தான் மிக ருசியானதாக இருக்கும்.

ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும்.

மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர்…

இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர்த் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர்…

ஆயினும், அத்தனைப் பெரிய கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை…

யோசித்த மீனவர்கள் புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.

குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.

இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக...

அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.

இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.

நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அப்படித் தான். வாழ்க்கை சுவைக்க கவலைகளோடே கிடக்கக் கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா இருந்தால் மட்டும் தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம்…

சோம்பியே தான் கிடப்போம்…

சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்…

கதையின் நீதி :-

அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை…

பிரச்சனை இல்லாத மனிதர்கள் இந்த உலகில் யாரும் இல்லை .

Barbie Doll:
Super 👏

karthick sri:
Nice, first story sema

Navigation

[0] Message Index

Go to full version