Advanced Search

Author Topic: தினம் ஒரு திருக்குறள்.....  (Read 15738 times)

September 14, 2022, 07:54:12 pm
Read 15738 times

SuNshiNe

தினம் ஒரு திருக்குறள்.....
« on: September 14, 2022, 07:54:12 pm »
அனைவருக்கும் வணக்கம் !✨✨



💫நமது கற்றலின் எல்லையை விரிவு செய்யும் வகையில்  நல்ல ஒரு  தொடக்கமாக தினம் ஒரு திருக்குறள் இங்கு  பதிவு செய்யப்படும் ....



💫திருக்குறள் தொடர்பான கேள்விகளை நமது GTC  மன்றத்தில் உள்ள விளையாட்டு பிரிவில் வினாக்கள்  கேட்கப்படும் .இதில் பங்கேற்று  இதன் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளியுங்கள்.





━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



திருக்குறள் :


இயற்றியவர்: திருவள்ளுவர்
அதிகாரங்கள்: 133(௧௩௩)
குறள்: 1330(௧௩௩௦)
பால்:  3(௩)


சிறப்பு பெயர்கள்:

பொய்யாமொழி
முப்பால்
உலகப்பொதுமறை
தெய்வநூல்
வாயுறைவாழ்த்து
உத்தரவேதம்
திருவள்ளுவம்
வள்ளுவமாலை

               
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


திருவள்ளுவர் :


குறிப்பு:  (முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை)
செவி வழியாக வந்த செய்திகள் .....



ஊர் : சென்னையில் உள்ள மைலாப்பூர்
பெற்றோர் : ஆதி - பகவன்
மனைவி : வாசுகி
மரபு :  வள்ளுவ மரபு
காலம் :  கி.மு 31


சிறப்பு பெயர்கள்:


தெய்வப்புலவர்
பொய்யில் புலவர்
பெருநாவலர்
நாயனார்
தேவர்
முதற்பாவலர்
நான்முகனார்
மாதானுபங்கி
செந்நாப்போதார்

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



திருக்குறள் சிறப்புகள்:




⭐தமிழ் மொழியில் இந்த நூல் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் தமிழ் என்ற சொல் எந்த குரலிலும் இடம் பெறவில்லை. அதே போல கடவுள் என்ற சொல்லும் இடம்பெறவில்லை.

⭐திருக்குறளில் மொத்தம் 14,000 சொற்கள் உள்ளன.

⭐திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன.

⭐முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

⭐திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

⭐நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.

⭐பனை, மூங்கில் ஆகிய மரங்கள் மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.

⭐ஒரு குறளில் “பற்று” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும்.

⭐குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது.





━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 17, 2022, 12:00:22 am
Reply #1

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #1 on: September 17, 2022, 12:00:22 am »



பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 1
அதிகாரம் : கடவுள் வாழ்த்து



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



குறள்-01






━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


சாலமன் பாப்பையா விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன;
(அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.


கலைஞர் விளக்கம்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை;
ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 18, 2022, 03:22:48 am
Reply #2

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #2 on: September 18, 2022, 03:22:48 am »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



குறள்-02








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?


சாலமன் பாப்பையா விளக்கம்:

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?


கலைஞர் விளக்கம்:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 20, 2022, 09:19:24 pm
Reply #3

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #3 on: September 20, 2022, 09:19:24 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



குறள்-03








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்


சாலமன் பாப்பையா விளக்கம்:

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்


கலைஞர் விளக்கம்:

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு,
உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 21, 2022, 03:45:51 am
Reply #4

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #4 on: September 21, 2022, 03:45:51 am »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



குறள்-04








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு
எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை


சாலமன் பாப்பையா விளக்கம்:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால்
எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை


கலைஞர் விளக்கம்:

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு
எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 21, 2022, 09:30:15 pm
Reply #5

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #5 on: September 21, 2022, 09:30:15 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



குறள்-05








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்
அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை


சாலமன் பாப்பையா விளக்கம்:

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை,
தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை


கலைஞர் விளக்கம்:

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்,
 நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 23, 2022, 02:25:40 am
Reply #6

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #6 on: September 23, 2022, 02:25:40 am »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-06








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க
நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்


சாலமன் பாப்பையா விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின்
பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்


கலைஞர் விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய
 நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 24, 2022, 03:02:52 pm
Reply #7

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #7 on: September 24, 2022, 03:02:52 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-07








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல்,
மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது


சாலமன் பாப்பையா விளக்கம்:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி,
 மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்


கலைஞர் விளக்கம்:

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 01, 2022, 12:12:29 am
Reply #8

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #8 on: October 01, 2022, 12:12:29 am »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-08








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல்,
 மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது


சாலமன் பாப்பையா விளக்கம்:

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல்
மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்


கலைஞர் விளக்கம்:

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும்
அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 06, 2022, 07:55:22 pm
Reply #9

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #9 on: October 06, 2022, 07:55:22 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-09








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய
கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்


சாலமன் பாப்பையா விளக்கம்:

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள்,
புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே



கலைஞர் விளக்கம்:

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ
 அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 07, 2022, 05:03:25 pm
Reply #10

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #10 on: October 07, 2022, 05:03:25 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-10








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய
பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது


சாலமன் பாப்பையா விளக்கம்:

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்;
மற்றவர் நீந்தவும் மாட்டார்


கலைஞர் விளக்கம்:

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர்,
தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 09, 2022, 01:23:05 pm
Reply #11

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #11 on: October 09, 2022, 01:23:05 pm »
                           அதிகாரம் 1

 


1)அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

          பகவன் முதற்றே உலகு

 2)கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 

          நற்றாள் தொழாஅர் எனின

 3)மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 

          நிலமிசை நீடுவாழ் வார்

 4)வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு 

          யாண்டும் இடும்பை இல

 5)இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 

          பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

 6)பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 

          நெறிநின்றார் நீடுவாழ் வார்

 7)தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 

          மனக்கவலை மாற்றல் அரிது 

8 )அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 

          பிறவாழி நீந்தல் அரிது

 9)கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் 

          தாளை வணங்காத் தலை

 10)பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 

          இறைவன் அடிசேரா தார்



 

 
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 09, 2022, 01:58:53 pm
Reply #12

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #12 on: October 09, 2022, 01:58:53 pm »



பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 2
அதிகாரம் : வான்சிறப்பு



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-11








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும்

உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்


சாலமன் பாப்பையா விளக்கம்:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது;
அதனால் மழையே அமிழ்தம் எனலாம்


கலைஞர் விளக்கம்:

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால்
அதுவே அமிழ்தம் எனப்படுகிறது



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 11, 2022, 08:18:12 pm
Reply #13

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #13 on: October 11, 2022, 08:18:12 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-12








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை
உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.


கலைஞர் விளக்கம்:

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,
அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 12, 2022, 04:25:37 pm
Reply #14

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #14 on: October 12, 2022, 04:25:37 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-13








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற
உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த

இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.


கலைஞர் விளக்கம்:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால்
பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ