Advanced Search

Author Topic: தினம் ஒரு திருக்குறள்.....  (Read 15776 times)

January 06, 2023, 09:49:21 am
Reply #60

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #60 on: January 06, 2023, 09:49:21 am »
🔥குறள்-59🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

January 07, 2023, 09:35:39 am
Reply #61

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #61 on: January 07, 2023, 09:35:39 am »
🔥குறள்-60🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

January 09, 2023, 09:38:38 am
Reply #62

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #62 on: January 09, 2023, 09:38:38 am »

பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 7
அதிகாரம் : மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்
 


🔥குறள்-61🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

January 10, 2023, 10:31:30 am
Reply #63

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #63 on: January 10, 2023, 10:31:30 am »
🔥குறள்-62🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா⭐



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா⭐

January 12, 2023, 10:06:44 am
Reply #64

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #64 on: January 12, 2023, 10:06:44 am »
🔥குறள்-63🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்✨

January 13, 2023, 11:22:15 am
Reply #65

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #65 on: January 13, 2023, 11:22:15 am »
🔥குறள்-64🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது✨

January 17, 2023, 10:35:52 am
Reply #66

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #66 on: January 17, 2023, 10:35:52 am »

🔥குறள்-65🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்✨

January 18, 2023, 12:26:13 pm
Reply #67

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #67 on: January 18, 2023, 12:26:13 pm »
🔥குறள்-66🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்✨


January 19, 2023, 09:31:54 am
Reply #68

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #68 on: January 19, 2023, 09:31:54 am »

🔥குறள்-67🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே✨


January 20, 2023, 09:10:03 am
Reply #69

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #69 on: January 20, 2023, 09:10:03 am »

🔥குறள்-68🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது✨


January 23, 2023, 09:46:09 am
Reply #70

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #70 on: January 23, 2023, 09:46:09 am »

🔥குறள்-69🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்✨


January 24, 2023, 10:28:35 am
Reply #71

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #71 on: January 24, 2023, 10:28:35 am »

🔥குறள்-70🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே✨


January 25, 2023, 09:39:21 am
Reply #72

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #72 on: January 25, 2023, 09:39:21 am »

பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 8
அதிகாரம் : அன்புடைமை / The Possession of Love
 



🔥குறள்-71🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்✨



January 26, 2023, 11:12:16 am
Reply #73

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #73 on: January 26, 2023, 11:12:16 am »

🔥குறள்-72🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்✨



January 31, 2023, 10:13:09 am
Reply #74

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #74 on: January 31, 2023, 10:13:09 am »
🔥குறள்-73🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்✨