Advanced Search

Author Topic: தினம் ஒரு திருக்குறள்.....  (Read 48346 times)

November 16, 2022, 02:06:47 pm
Reply #30

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #30 on: November 16, 2022, 02:06:47 pm »
🔥குறள்-29🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.





⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

November 17, 2022, 09:50:24 am
Reply #31

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #31 on: November 17, 2022, 09:50:24 am »
🔥குறள்-30🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.


November 18, 2022, 10:31:15 am
Reply #32

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #32 on: November 18, 2022, 10:31:15 am »
பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 4
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்



🔥குறள்-31🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.





⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.

November 21, 2022, 10:23:17 am
Reply #33

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #33 on: November 21, 2022, 10:23:17 am »


🔥குறள்-32🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.





⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

November 22, 2022, 12:33:43 pm
Reply #34

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #34 on: November 22, 2022, 12:33:43 pm »
🔥குறள்-33🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.





⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

November 23, 2022, 09:28:38 am
Reply #35

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #35 on: November 23, 2022, 09:28:38 am »

🔥குறள்-34🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.





⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

November 24, 2022, 10:03:27 am
Reply #36

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #36 on: November 24, 2022, 10:03:27 am »

🔥குறள்-35🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

November 26, 2022, 09:10:03 am
Reply #37

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #37 on: November 26, 2022, 09:10:03 am »
🔥குறள்-36🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.





⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

November 28, 2022, 10:22:09 am
Reply #38

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #38 on: November 28, 2022, 10:22:09 am »

🔥குறள்-37🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.





⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

November 30, 2022, 12:19:19 pm
Reply #39

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #39 on: November 30, 2022, 12:19:19 pm »
🔥குறள்-38🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━





⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

December 05, 2022, 11:40:37 am
Reply #40

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #40 on: December 05, 2022, 11:40:37 am »
🔥குறள்-39🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.


December 06, 2022, 12:40:07 pm
Reply #41

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #41 on: December 06, 2022, 12:40:07 pm »
🔥குறள்-40🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

December 07, 2022, 10:01:03 am
Reply #42

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #42 on: December 07, 2022, 10:01:03 am »
பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 5
அதிகாரம் : இல்வாழ்க்கை


🔥குறள்-41🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.


December 08, 2022, 05:50:55 am
Reply #43

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #43 on: December 08, 2022, 05:50:55 am »

🔥குறள்-42🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

December 09, 2022, 09:43:18 am
Reply #44

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #44 on: December 09, 2022, 09:43:18 am »
🔥குறள்-43🔥



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.