Advanced Search

Author Topic: தினம் ஒரு திருக்குறள்.....  (Read 15730 times)

October 14, 2022, 04:03:57 pm
Reply #15

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #15 on: October 14, 2022, 04:03:57 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-14








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப்
பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.


சாலமன் பாப்பையா விளக்கம்:

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால்,
 உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.


கலைஞர் விளக்கம்:

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 16, 2022, 02:10:56 pm
Reply #16

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #16 on: October 16, 2022, 02:10:56 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-15








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல்
வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத்
திருத்துவதும் எல்லாமே மழைதான்.


கலைஞர் விளக்கம்:

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,
பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 17, 2022, 12:18:57 pm
Reply #17

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #17 on: October 17, 2022, 12:18:57 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-16








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல்,
உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.


சாலமன் பாப்பையா விளக்கம்:

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின்
நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.


கலைஞர் விளக்கம்:

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில்
பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 18, 2022, 04:14:10 pm
Reply #18

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #18 on: October 18, 2022, 04:14:10 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-17








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல்
விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:

பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால்,
 நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.


கலைஞர் விளக்கம்:

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும்  மனித 
சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 20, 2022, 12:14:57 am
Reply #19

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #19 on: October 20, 2022, 12:14:57 am »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-18








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக
நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.


சாலமன் பாப்பையா விளக்கம்:

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது;
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.


கலைஞர் விளக்கம்:

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச்
சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 29, 2022, 02:14:50 pm
Reply #20

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #20 on: October 29, 2022, 02:14:50 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-19








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர்
பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும்
தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.


கலைஞர் விளக்கம்:

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும்
தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 30, 2022, 05:13:23 pm
Reply #21

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #21 on: October 30, 2022, 05:13:23 pm »
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




குறள்-20








━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது
என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது;
அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.


கலைஞர் விளக்கம்:

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால்,
 நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

November 02, 2022, 02:13:40 pm
Reply #22

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #22 on: November 02, 2022, 02:13:40 pm »



பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 3
அதிகாரம் : நீத்தார் பெருமை



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



குறள்-21






━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━




மு.வ விளக்கம்:

எஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச்
சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:

தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின்
பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.


கலைஞர் விளக்கம்:

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில்
விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.



━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

« Last Edit: November 05, 2022, 12:32:16 am by AslaN »
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

November 09, 2022, 06:55:49 pm
Reply #23

SuNshiNe

Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #23 on: November 09, 2022, 06:55:49 pm »
🔥குறள்-22🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟தபற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.




⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

November 10, 2022, 02:27:38 pm
Reply #24

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #24 on: November 10, 2022, 02:27:38 pm »
🔥குறள்-23🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.




⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

November 11, 2022, 10:31:14 am
Reply #25

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #25 on: November 11, 2022, 10:31:14 am »

🔥குறள்-24🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.




⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.




November 12, 2022, 12:09:31 pm
Reply #26

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #26 on: November 12, 2022, 12:09:31 pm »

🔥குறள்-25🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.



⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.




November 13, 2022, 04:31:39 pm
Reply #27

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #27 on: November 13, 2022, 04:31:39 pm »

🔥குறள்-26🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.




⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.




November 14, 2022, 12:44:49 pm
Reply #28

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #28 on: November 14, 2022, 12:44:49 pm »

🔥குறள்-27🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.




⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.




November 15, 2022, 10:00:19 am
Reply #29

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: தினம் ஒரு திருக்குறள்.....
« Reply #29 on: November 15, 2022, 10:00:19 am »
🔥குறள்-28🔥




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


❝நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்❞


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━






⚜️மு.வ விளக்கம்:⚜️

🌟பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.




⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

🌟நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.




⚜️கலைஞர் விளக்கம்:⚜️

🌟சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.