Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-001  (Read 7584 times)

July 23, 2022, 01:05:37 pm
Read 7584 times

Administrator

கவிதையும் கானமும்-001
« on: July 23, 2022, 01:05:37 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: July 25, 2022, 10:07:50 am by AslaN »

July 24, 2022, 11:51:37 pm
Reply #1
Re: கவிதையும் கானமும்-001
« Reply #1 on: July 24, 2022, 11:51:37 pm »
ஆறுதல் கூற வருகின்ற
எல்லோரிடத்திலுமே
தூய்மை இருப்பதில்லை.

பொழுது போக்கிற்காக
சிலர் வருவார்கள்.

சங்கடப்படுத்துவதற்காக
சிலர் வருவார்கள்.

தற்காலிகமாக
சிலர் வருவார்கள்.

துயரத்தில் குளிர்காயவென்றே
சிலர் வருவார்கள்.

அகத்தில்
மகிழ்ச்சியை தவழச் செய்து கொண்டு, புறத்தில் கைப்பிடிப்பதாய் காட்டுவதெற்கென்றே
சிலர் வரத்தான் செய்வார்கள்.

இவர்கள் எல்லாம்
வந்துவிட்டுப் போகட்டும் விடுங்கள்.!

எல்லோரும் வந்து சென்ற பிறகும், மீதமிருந்து தோள் தரும் உன்னதமெது என்பதை சிலர் உணர்த்துவர்.
அவர்களை மட்டும் அங்கீகரியுங்கள். எங்கோவொரு
தூரத்துப் புள்ளியாய் இருந்து கொண்டு
நம் நலனை விரும்புபவர்கள்,
அருகில் வந்து
துயரமூட்டுபவர்களை விட மேலானவர்கள்....

July 25, 2022, 01:09:55 am
Reply #2

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: கவிதையும் கானமும்-001
« Reply #2 on: July 25, 2022, 01:09:55 am »

தனிமையில் அவளும் நானும் !நிசப்தமான இரவு நேரம் !!
பால் போல் பொழியும் பௌர்ணமி நிலவின்  வெள்ளிசிதறலில் இருவரும் நனைந்து கொண்டிருக்கிறோம்.!!!

ரம்மியமான கடல் அலைகளின்
இன்னிசை கானம்!
அற்புதமான கடற்கரையின் மனற்திட்டின் மேல் அமர்ந்து,
கடலின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறோம்!!
தென்னங் கீற்று கடற்கரை காற்றில் அசைந்து எழும் அந்த மனதிற்கினிய இசை!!!

 நிலவின் ஒளியில் கடலின் நீர் தீவலைகள் வைரம் போன்று மின்னுகின்றனவே!
இரவின் நிழலில் குளிர் காய்ந்து முன்னிரவில் அவளுடன் அளவளாவியதை எண்ணி மகிழ்ந்தேன்!!
என்னவளுடன் தனிமையில் இருக்கும் அந்த நேரம் கூட விலை மதிப்பில்லா தருணம்!!!

அவள் கூந்தலின் கார் போன்ற கரிய நிறம் கூட நிலவின் ஒளியில் டாலடிக்கின்றது!
என்னுடன் இருக்கும் போது பளிங்கு போன்ற அவள் முகம் மருதாணி போன்ற சிவப்பில் நானம் கொண்டாள்!!
 நானத்தால் முகம் கவிழ்ந்து என்னை ஏறெடுத்து பார்க்க மறுக்கிறாள்!!!
நானோ அவளின் பாரா முகம் காண ஏங்கி தவிக்கிறேன்!!!!

July 25, 2022, 04:13:20 pm
Reply #3

LOVELY GIRL

Re: கவிதையும் கானமும்-001
« Reply #3 on: July 25, 2022, 04:13:20 pm »
பார்வை இல்லாத போன்ற உணர்வுடன்
தனிமையில் தவிக்கும்  வேளையில்
என் கைகளை கோர்த்துக்கொண்டு
அழகான புதிய பாதையை
உருவாக்கி தந்தாய்.

இரவின் நிலவொளியில்
உன் தோளில் சாய்ந்த தருணத்தில்
இரவிலும் வெளிச்சமாய் இருந்தது
 உன்னுடைய அரவணைப்பும் ஆறுதலும்

இரவின் மடியில் அருகில் அமர்ந்து
ஆயிரம் முறை உன்னை பார்த்து ரசித்தாலும்
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் உன் வசீகரம்

கையில் முத்தம் கொடுத்த
 அந்த  இதழின் மென்மையும்
தென்றல் காற்று போல வீசும்
உன் மூச்சு காற்றும்
உன் நெருக்கத்தை
எனக்கு உணர்த்துகிறது

என் மேல் சிறு துரும்பும் படாமல்
மனம் கோணாமல் எனை கவனிக்கும்
நீயே என்றும் என் சுவாசம்
என் வாழ்வின் வசந்தம்.

இவ்வுலகில் வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டுமே போதுமானவன்..
....
💙🖤
« Last Edit: July 26, 2022, 02:58:11 pm by LOVELY GIRL »

July 26, 2022, 11:41:09 am
Reply #4

Eagle 13

Re: கவிதையும் கானமும்-001
« Reply #4 on: July 26, 2022, 11:41:09 am »
Oru Azhagana maalai pozhuthul!
Yendrum idhamana thendral kaatril !
endrum nirgadha alaigalin paatil!
Unnudan naan kadhalika ninaitha nodi !
Ennule pala matrangal Nigazhndhathadi!
Yethirey pournami nilvavin muzhu oli!
Adhai sutri vinmeangalum minnudhadi!
Ennule edhirkalam patri ennangal oduthadi!
Adhaiyum nee kettukol en tholil saindhapadi!
Endralum!enakul edho oru vali !
Adhu sugama Sumaiya endru theriyavillaiyadi!
Adhai solvaya penne indha nodi!
Adhai sonnal nam kadhal vazhumadi!
Un karungkoothalin neela mudi,
En manadhai vaari poduthadi!
Nam kadhalin azhamadi ,adhai sol vaai penne,
Ulagam vazhthi pesum padi!
Naam mananaal endru aagumadi,
Endru sonnal en uyir vazhumadi!
Penne!.

July 26, 2022, 05:32:54 pm
Reply #5

MASS

Re: கவிதையும் கானமும்-001
« Reply #5 on: July 26, 2022, 05:32:54 pm »
இரவினில்!....

நீ...

நடந்தால்!....

இந்திரனிடம்...

இரவல் வாங்கி!.....

சந்திரனை!...

நட்டுவைப்பேன்.....

நீ செல்லும்!....

சாலையெங்கும்.....

MASS

July 26, 2022, 06:39:37 pm
Reply #6

AkshiTha

Re: கவிதையும் கானமும்-001
« Reply #6 on: July 26, 2022, 06:39:37 pm »
இரவெனும் ஆடையில்
நட்சத்திர கண்ணாடி மின்ன
நிலவில் அழகில் தன் நிழலை பதிக்க முயலும்
தென்னங்கீற்றை ரசிக்கிறேன்!

மயிலிறகால் வருடுவது போல்
தென்றல் என்னை தழுவிச் செல்ல
என்னவனை தவிர
வேறு யாரும் என்னை தீண்டி விட முடியாதென்ற
 
உறுதியுள்ள என் கர்வத்தை உடைக்கவே
தென்றல் எனைத்தீண்டி,, சீண்டியதோ?

அவரும் நானும் ...

இதை சொல்லும் தருணம்
இதழில் பூத்த புன்னகை சொல்லும்
என் நாணத்தின் ஆழத்தை...

என்னவரின் தோளில் நான் சாயும் அந்த நொடி
அவரின் விரல் ஸ்பரிசம் என் தோளில் படும் அந்த தருணம் 
பட்டாம் பூச்சி சிறகடிக்க ,
மலர்கள் மலரும் தருணம் போல் தேகம் சிலிர்க்க
விவரிக்க இயலா உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

என் சகி நீ ... என்னுள் பாதி நீ... 
உனக்கு உறுதுணையாய் நான் இருப்பேன் ..
என்று  அவர் ஸ்பரிசம் உணர்த்தியது..

என் இணை... நீ  உன் துணை நான்...
இனிவரும் காலங்களில் இன்பத்துன்பங்களை
உன்னுடனிருந்து பொறுப்பேன்
என்ற உறுதியோடு...மேல் சாயும்  பொழுதில்
நான் உணரும் அவர் வாசம்
எந்நாளும் என் மேல் வீச
உள்ளம் வேண்டுகிறது.

இப்படியே உன் தோள் சாய்ந்து  விடியும் வரை
கதை பேச  ஆசை கொள்கிறது மனம்

கடலின் ஆழத்தை மிஞ்சும்
அன்பையும் காதலையும் கொண்டு
வாழ்வின் அர்த்தத்தை
ஆழமாக்கும் முயற்சியில் நாங்கள்...

என்னவனின் உடனிருக்கும் நொடிகள்
சொர்கமாய் நான் உணர...
விடியலை தூரமாக்க... இரவே நீயும் நீள்வாயோ???


July 26, 2022, 09:53:02 pm
Reply #7

Ishan

Re: கவிதையும் கானமும்-001
« Reply #7 on: July 26, 2022, 09:53:02 pm »
மின்னலை விழியிலேந்தி
கூந்தலில் முகிலைத் தாங்கி
கன்னத்தில் குழிவு
காதல் கவிதை எழுதும்
உன்னையே பார்த்து
உன்நினைவிலே மூழ்கித் திளைத்து
என்னையே உன்னில்
நான்முற்றிலும் தொலைத்து விட்டேன்

மின்னல் விழியினில்
கார்முகில் கூந்தலில்
கன்னக் குழிவுகள் காதல் எழுதிடும்
உன்நினைவி லேநாளும் மூழ்கியே நான்உன்னில்
என்னைத் தொலைத்துவிட் டேன்


எங்கே என் காதல் எங்கே..
இங்கே அது இங்கே...
என் முத்தத்தில் பூத்த
அந்த காதல் எங்கே..
என் சுவாசத்தில் கலந்த
அந்த காதல் இங்கே...

என் கன்னங்கள் கில்லும்
அந்த காதல் எங்கே...
என் மார்போடு சாய்ந்த
அந்த காதல் எங்கே..
எங்கே என் காதல்
அது எங்கே...

« Last Edit: July 28, 2022, 04:11:51 am by Ishan »

July 27, 2022, 07:46:14 pm
Reply #8

karthick sri

Re: கவிதையும் கானமும்-001
« Reply #8 on: July 27, 2022, 07:46:14 pm »
கவிதையும் கானமும்-001
  கார்த்திக்



"மேகப் போர்வையில்
மறைந்திருக்கும் முழு நிலா,
உன் முகத்தை கண்டதும்
மூன்றாம் பிறை ஆனதே"



"பெட்ரோல் விலை போல்
விண்ணில் இருப்பது
நானும் அவளும்
பால்நிலவும் தான்...!



வெள்ளை நிலா உன்னை
வெல்ல முடியாமல்
மேக கூட்டத்தில்
மறைந்திருக்கும்...!




"அவளிடம் பேச இரவில்
ஆயிரமாயிரம்  வார்த்தைகள் இருந்தாலும் ,
மௌனமே மொழியானது...!



அவள் வெளிச்சத்தில் அழகாக தெரிந்தது –
நிலா...!



"வெள்ளை மேகத்தில்
கருப்பு நிலா-
கண்டேன் உன்
இரு விழிகளில்...!



நன்று....