Advanced Search

Author Topic: Empty Dappa Kavithaigal  (Read 31036 times)

January 02, 2023, 04:35:05 am
Reply #45

Sanjana

Re: நான்…..🖋️
« Reply #45 on: January 02, 2023, 04:35:05 am »
AMAZING ONE....

January 02, 2023, 06:55:13 am
Reply #46
❄️அவள்கள்❄️
« Reply #46 on: January 02, 2023, 06:55:13 am »
தன்னந்தனியே
அழுதழுது கூட
தீர்ந்து விடாத சோகங்களில்,
உழன்று கொண்டிருக்கும் ஒருத்தியின்
ஆகச் சிறந்த வேண்டுதல் ஒன்றுமில்லை.
அவள் உள்ளக்குமுறலில்
பாதியை சுமப்பதற்கான,
இன்னோர் உறவின்
தாங்குதலைத் தவிர.

சொல்லிவிடத் தெரியாத ஏக்கத்தை தன்னகத்தே
நிரப்பி வைத்துக் கொண்டு,
இறக்கி வைத்து விட
ஏங்கிக் கிடக்கும் ஒருத்தியின்
வலிகளுக்குத் தேவை ஒன்றுமில்லை.
தொண்டக்குள்சிக்கிக் கொண்டு தவிக்கும்
வார்த்தைகளை செவிமடுப்பதற்கான, இன்னோர் நிகரற்ற
துணையைத் தவிர.

புறக்கணித்து,
ஓரமாய் தள்ளி வைத்து,
நா பேசக்கூட
இடமளிக்கப்படாத,
ஒடுக்கி வைக்கப்பட்டவளின்
அரண்ட தனிமைக்கு
வேறொன்றும் தேவையில்லை.
ஆறுதல் உணர்த்திடத் தெரிந்த
சில மனிதர்களையும்,
விம்முதல்களை
தணித்து விடத் தயாராய் உள்ள
உறவொன்றின்
அளவற்ற நேசத்தையும் தவிர.

யாருமே புரிந்து கொள்ளவில்லையே? என்பதாய் எண்ணி,
தனக்குள்ளேயே
விசும்பிக் கொண்டிருப்பவளுக்கு...! நினைப்பதை
பேசி விடத் தேவையான,
ஓர் சில மணித்துளிகள்
போதுமாய் உள்ளது.
முழு வீச்சுடன் தன் பாரங்கள்
குறைக்கப்பட்டதாய் அவள் உணர்வதற்கு.

அலுத்துப் போய்,
விரக்தியின் எல்லைகளில்
நின்று கொண்டு,
இவ்வாழ்வு நமக்கும் ஏதோவோர்
விடுதலை மிச்சத்தை,
எப்போதாவது வழங்கி விடாதா என்று, குமுறிக் கொண்டிருக்கும்
ஒருத்தியின் கடைசி நிலைப்பாட்டுக்கு, வைத்தியமாய் எதுவுமில்லை.
அவளைச் சுற்றி உள்ள
அனைத்தும்
அன்பினால் நிரப்பப்படுவதை தவிர.

அவள்களை
அவள்களுக்கான சின்ன உலகத்தில், பிரம்மாண்டங்களாய்
உணர்த்தி விடுதலை தவிர,
அவள்களுக்குள்
அவ்வளவு பெரிதான
வேண்டுதல்கள் எதுவும் இருப்பதில்லை. அவ்வளவே தான்...!
படபடப்பில்லாமல்
வாழ்வை நகர்த்துவாள்

January 03, 2023, 04:57:28 am
Reply #47
மெய்கண்😇
« Reply #47 on: January 03, 2023, 04:57:28 am »
சிரிப்பை பரிசளிக்காத,
புன்னகை செய்யாத,
ஆரத்தழுவி அன்பு பாராட்டாத மனிதர்களை
ஒரு நேரத்தில் நான் நெருங்கவே அச்சப்படுவேன்
அவர்களை பயத்தின் வடிவமாகப் பார்ப்பேன்.
இனிக்க இனிக்க பேசுபவர்களை
அப்படியே நம்புவேன்.
ஏற்றும் கொள்வேன்.

குறிப்பிட்ட சில மனிதர்களுக்கான
காலத்திற்குப் பின் இனிக்கப் பேசுபவர்களை,
அசட்டுத் தனமாக புகழ்பவர்களை
சந்தேகப்படத் தொடங்கினேன்.
அவர்கள் என்னைத் தாண்டி,
என்னை பற்றி சொல்பவைகளை அறிய ஆவலானேன்.
அப்போதுதான் புகழும் வாயின் புண்களைக் கண்டேன்.

எப்போதாவது வரம்பு மீறி நம்மை பாராட்டுபவர்களை
நினைத்து நாம் அச்சப்படுவோம் அல்லவா.
கிட்டத்தட்ட அப்படிதான்.

என் தவறை சுட்டிக்காட்டி,
அறைந்து விட்டு அதே நேரம் யாரிடமும்
என்னை விட்டுக் கொடுக்காதவர்களை கண்டறிந்தேன்.
ஏன் இவ்வளவு நன்மனிதர்களை
இத்தனை புறந்தள்ளி நிறுத்தியிருக்கிறேன் என்று வருத்தமும் பட்டேன்.

இப்போதெல்லாம் எடுத்த எடுப்பில்
என் குற்றங்களை என்னிடம் சுட்டுபவரையும்,
என்றோவொரு நாள் சுட்டிக் காட்டியவரையும்
பிடிக்கத் துவங்கியிருக்கிறது.
நான் அழகாய் ஆக அவர்கள் கண்களின் வழியே
என்னைப் பார்க்க நினைக்கிறேன்……

❣️

January 03, 2023, 05:08:54 am
Reply #48
அன்பின் விருப்பம் 🥰
« Reply #48 on: January 03, 2023, 05:08:54 am »
கடுமையான அலுப்புக்குப்
பின் என்ன யோசிப்போம்.
கொஞ்ச நேரம் படுப்போம்.
தூங்குவோம்.
இல்லைன்னா சும்மாவாச்சும்
சுவர்ல சாஞ்சி கெடப்போம்ன்னு யோசிப்போம்ல.

கை, காலெல்லாம் நரநரத்துப் போற அளவுக்கு
வேல முடிச்சி படுத்தா அசந்து தூங்க போற நேரத்துல
தூக்கத்துக்கும், விழிப்புக்கும் நடுவுல வால் விண்மீன் மாதிரி
ஒரு சின்ன முகம் நம்ம நெனப்புல சிரிச்சிட்டே போகும்.

அது ஒரு குழந்தையோ,
அம்மாவோ,
காதலோவா கூட இருக்கலாம்.
அந்த முகத்தோட மொத்த அன்பின் பாதிப்புதான்
இந்த எல்லா அலுப்பையும் கொஞ்ச நேரம்
தள்ளி வச்சிட்டு நம்மல நாமலே அழகா,
நிம்மதியா, சந்தோஷமா உணரச் செய்யிது.

அழகான ஏதோவொன்னு தான்னு கிடையாது.
ஆத்மார்த்தமான எதுவா வேணா இருக்கலாம்.
புன்னகைக்க நினைக்கும் அந்த ஒரு நொடி,
நம்முடைய அந்த புன்னகைய பரிசளிக்க
நாம தேடுற முகம்தான் அழகானது.
அழகென்பது அன்பின் விருப்பம்.

❣️

January 03, 2023, 05:13:40 am
Reply #49
அன்புக்குரிய💞
« Reply #49 on: January 03, 2023, 05:13:40 am »
ஒரு கட்டத்துல
நாம எந்தவொரு அன்புக்கும் தகுதியில்லாத ஆளுன்னு
சிலருக்கு தோன வச்சிரும் வாழ்க்கை.
நாம விரும்புறத இழக்கும் போதோ,
இழந்துருவோம்ன்னு தெரிஞ்சே விரும்பும் போதோ
இப்டி தோனலாம்.

இல்லைன்னா அதற்கான தகுதியோ,
அந்த தகுதியை உருவாக்கிக்கிறதுக்கான
உடல், மன, பண வலிமையோ நம்மகிட்ட
இல்லாத இயலாமை அதை தோன வச்சிரும்.
யாருடைய அன்புக்கும் ஆளாகாத மனிதராக
யாராலயும் இருக்க முடியாதுதான்.

கண்டிப்பா யாரோவொருத்தர் நம்மல நேரடியாவோ,
மறைமுகமாவோ நேசிச்சிட்டுதான் இருப்பாங்க.
அது யாரா வேணா இருக்கலாம்.
கண்டிப்பா ஒரு மனிதனுக்குன்னு
ஒருத்தராவது அழ ஆள் இருப்பாங்க.

ஆனா, மனிதனோட முரணான இயல்பே
அவன விரும்புறத அவன் விரும்புறதில்ல
அல்லது
அவன் கண்ணுக்கே எட்டாத தூரத்துல இருக்குற
எதையோ நினைச்சி அவன் கைக்கு பக்கத்துல இருக்குற
எல்லாத்தையும் மறந்துர்ரது.

சுத்தி சாதாரண வாழ்க்கைய
ரொம்ப எளிமையா வாழ்ந்துட்டு போற
மனுஷங்களுக்கு மத்தியில,
அதே சாதாரண வாழ்க்கைய ரொம்ப போராடியும்
ஏன் இதெல்லாம் எனக்கு
இவ்ளோ கஷ்டப்பட்டுதான் கிடைக்கனுமான்னு
ஒரு வெறுப்பு வரும்ல.

அப்போதான் அவன் முடிவு பண்ணி
தனக்கு பிரியமான எல்லார்கிட்ட இருந்தும்
விலக தொடங்கி ஒரு விசயத்த அவனே உறுதிப்படுத்தி நம்பத் துவங்குறான்.
அன்புக்கு தகுதியானவன் யாரா வேணா இருக்கலாம்ன்னு
அந்த அன்ப கொடுக்குற நாமதான் முடிவு பண்ணனும்.

அதுக்கும் வரையறை,
பணம், பக்க பலமெல்லாம் பாத்தா
ஒரு உளவியல் சிக்கலான மனநிலைய
ஒருத்தனுக்குள்ள நாமலே விதைக்கிறோம்ன்னு அர்த்தம்.
பாகுபாடு இல்லாமல் ஏந்திக் கொள்ள தான் கைகள் வேண்டும்.
பிரித்தறிய அல்ல!


January 18, 2023, 05:22:35 am
Reply #50

Sanjana

Re: Empty Dappa Kavithaigal
« Reply #50 on: January 18, 2023, 05:22:35 am »
AGAIN A SUPERB POEM.....ROMBA NALA ITUKU....