Advanced Search

Author Topic: ரதி கதைகள்  (Read 25660 times)

March 21, 2019, 12:21:21 am
Read 25660 times

ரதி

ரதி கதைகள்
« on: March 21, 2019, 12:21:21 am »
         நிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.

           ஒரு நாள், அங்கே வந்த ஒருவர்  செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.

நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.

பல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.

திரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.

அதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.

அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின.


March 21, 2019, 12:24:27 am
Reply #1

ரதி

உண்மையின் உடை!
« Reply #1 on: March 21, 2019, 12:24:27 am »
ஓர் ஊரில் உண்மை, பொய்  இரண்டும் அருகருகே வசித்து வந்தன. இரண்டும் பரம எதிரிகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

உண்மை எப்போதுமே புத்தாடையோடு காணப்படும். அமைதியானது. அன்புமயமானது. இன்னும் பல நற்குணங்கள் அதனிடம் இருந்தன. அதனால், நல்லோர் உண்மையை நேசித்தனர்.

ஆனாலும், உண்மை எப்போதும் மறைவாகவே இருந்தது. தன்னை அரிதாகவே வெளிப்படுத்தியது.  அப்படி  வெளிப்பட்டபோது,  மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

பொய்யின் நிலையோ இதற்கு நேர் எதிர். எப்போதும் மனிதர்கள் மத்தியில் உலவிக்கொண்டே இருந்தது. அழுக்கு உடையில் வலம் வந்தது. நல்ல மனிதர்கள் அதனுடன் பழகுவதைத் தவிர்த்தனர். ஆனால், கெட்டவர்கள் பொய்யை மிகவும் விரும்பினர். உண்மையிடம் இருந்து விலகி இருப்பதுதானே அவர்கள் வழக்கம்?

ஒரு நாள் உண்மையும் பொய்யும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தன. உண்மை, தனது அழகிய உடைகளை ஒரு கல் மீது வைத்திருந்தது.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட பொய், உண்மையின் உயர் தர உடைகளைத் திருடி அணிந்துகொண்டு ஓட்டம் பிடித்தது.

குளத்தில் இருந்து வெளியே வந்த உண்மைக்கு அதிர்ச்சி. அது, பொய்யின் அழுக்கு உடைகளை அணிய விரும்பவில்லை. அதைவிட உடையின்றி இருப்பதே நல்லது என எண்ணியது.

இன்று நாம், பொய்யை பகட்டான பொன்னிற உடையிலும், உண்மையை உடை ஏதும் இல்லாமலும் காண்கிறோம்

March 22, 2019, 04:42:42 am
Reply #2

MDU

Re: உண்மையின் உடை!
« Reply #2 on: March 22, 2019, 04:42:42 am »

March 23, 2019, 03:53:57 am
Reply #3

MDU

Re: காளான்களின் ராணி!
« Reply #3 on: March 23, 2019, 03:53:57 am »
NICE

March 29, 2019, 08:55:22 pm
Reply #4

ரதி

நாங்களும் நல்லவர்களே
« Reply #4 on: March 29, 2019, 08:55:22 pm »
நாங்களும் நல்லவர்களே
நாங்களும் நல்லவர்களே!
நரிகள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று பெயர் ஏற்பட்டிருந்தது.

அதனால் அந்தக் காட்டுக்குள் நரிகளைக் கண்டாலே எல்லா விலங்குகளும் கடித்து விரட்டின. எனவே நரிகள் அந்தக் காட்டை காலி செய்து கொண்டு அடுத்த காட்டிற்குச் சென்றுவிட்டன.

இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. மூன்றாவது தலைமுறையில் பரதன் என்ற இளம் நரி இருந்தது. அதற்கு தனது மூதாதையார் கதையைக் கேட்டதும் அவமானமாக இருந்தது. இந்த அவமானத்தை துடைத்து திரும்பவும் சொந்த காட்டில் வாழ வேண்டும். நம் இனத்தையும் சொந்த காட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என எண்ணியது.

அதற்காக பழைய காட்டிற்குச் சென்று அனைத்து விலங்குகளையும் சந்தித்து பேசுவது என்று முடிவெடுத்த பரதன் பயணத்தை தொடங்கியது.

பரதனைக் கண்ட மற்ற விலங்குகள், ‘புதிய வன் யாரோ வருகிறான்’ என்று கலங்கின. வயதான விலங்குகளோ நரியை அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் இங்கு எங்கே வந்தான்’ என்று முறைத்தன. ‘அவனிடம் யாரும் பேச வேண்டாம்’ என்று இளைய தலைமுறைக்கு உத்தரவிட்டன.

“எங்கள் இனத்தை சகுனி குணம் படைத்தவர்கள், கூட இருந்தே குழி பறிப்பவர்கள். தந்திரசாலிகள் என்று யாரோ கட்டிவிட்ட கதையை நம்பலாமா? நாங்கள் மட்டும்தான் கெட்டவர்களா? மலர்களில் எல்லாமே மணமிக்கதா? மணமற்றவையும் கலந்துதான் உள்ளன. எங்களிலும் நல்லவர்களும் உண்டு” என்று வாதம் செய்து விலங்குகளிடம் நியாயம் கேட்டது.

ஆனால் எல்லா விலங்குகளும் அதை ஏற்பதாக இல்லை. ‘நீ இங்கிருந்து ஓடிப் போய்விடு’ என்று விரட்டின. மனம் உடைந்த நரி, மலை மீதேறி கிழே விழுந்து உயிரை விட்டுவிட முடிவெடுத்தது.

அப்போது அங்கிருந்த குயில், “நரி அண்ணே உங்கள் இனத்தின் அவப்பெயரை துடைக்க தானே புறப்பட்டு வந்தீர்? ஒரு லட்சியத்தை சுலபமாக அடைய முடியாது. விலங்குகள் போற்றும்படி செய்து அவைகளின் நம்பிக்கையைப் பெற்றால் உங்கள் குறிக்கோள் வெற்றி பெறும். மயற்சி செய்யுங்கள்” என்றது.

நீ சொல்வதும் சரிதான் என்ற நரி தற்கொலை முடிவை கைவிட்டது. புத்திசாலித்தனமாக செயல்பட முடிவெடுத்தது.

வேடர்கள் வலை விரித்திருந்ததைக் கூறி பறவைகளிடம் நன்மதிப்பைப் பெற்றது நரி. அதேபோல காலுடைந்த முயலை பத்திரமாக அதன் இருப்பிடத்திற்க்கு அழைத்து வந்து விட்டது. ஒரு மரத்தில் இருந்து தவறி விழுந்த குருவிக் குஞ்சை, அதன் கூட்டில் எடுத்து வைத்தது. இதைக் கண்ட தாய்ப்பறவை நரியை வாழ்த்தியது.

இப்படியே சின்னச் சின்ன உதவிகளைச் செய்து நரி கொஞ்சம் கொஞ்சமாக நற்பேர் பெற்று வந்தது.

ஒரு நாள் வேட்டைக்கார்கள், பெரிய பள்ளம் வெட்டி இலை தழைகளால் மூடி வைப்பதை நரி பார்த்தது. அந்தப் பக்கமாக வந்த யானைக் கூட்டத்தை எச்சரிக்கை செய்து அவற்றை காப்பாற்றியது.

யானைக்கூட்டம் காட்டுக்கு ராஜாவான சிங்கத்திடம் நரி செய்த உதவியை சொல்லின. அதேபோல முயல், புறாக்கள், பறவைகளும் தங்களுக்கு நரி செய்த நன்மையைக் கூறின. இதனால் சிங்கராஜா, நரிகளை தங்கள் காட்டில் சேர்த்துக் கொள்வதாக முடிவெடுத்தது. மற்ற மிருகங்களும் அதை ஆமோதித்தன.

பரதன் சந்தோஷமாக தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்றது. தங்கள் குழுவினருடன் தங்கள் சொந்த காட்டுக்கு திரும்பி வந்து வாழத் தொடங்கியது.

March 29, 2019, 09:02:48 pm
Reply #5

ரதி

இனிப்பா உப்பா
« Reply #5 on: March 29, 2019, 09:02:48 pm »
இனிப்பா உப்பா
இனிப்பா? உப்பா?

ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன.

பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணமா ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். இதைப்பார்த்த அவர் நண்பர் ராமலிங்கம் ‘ என்ன பெரியநாயகம்! ஏன் கவலையாயிருக்கே என்ன சமாசரம் என வினவினார். பெரியநாயகம் வஷயத்தைக் கூறியதும் ‘இதுக்கா கவலைப் படறே. ரேஷன் கடைகள் எதுக்கு இருக்கு அங்க தள்ளி விடு. போ, வேலையைப் பாரு என்றான் ராமலிங்கம்.

இவர்கள் பேச்சைக் கேட்டதும் சர்க்கரையும், உப்பும் இப்படி மறியாதை இல்லாமல் பேசுகிறார்களே? அப்படியா நாம் மக்களுக்கு பயணற்று போவோம்!. என்று வருந்தி தங்களை உற்பத்தி செய்யும் கரும்பினிடமும், கடலிடத்திலும் முறையிட்டன.

கரும்பு சொன்னது சர்கரையைப் பார்த்து நீ என்ன உப்பா கரிச்சுக் கொட்ட கல்யாணம் மற்றும் எல்லவைபவங்களுக்கும் நீ இல்லாமலா, குழந்தைகள் பிறந்தாலும் உன்னைத்தான் கொடுப்பார்கள். தெய்வப் பிரசாதமாகிய சர்கரைப் பொங்களிலும் உன் அண்ணன் வெல்லம்தான். ஒரு நல்ல செய்தி சொன்னால் அவன் வாயில் சர்க்கரைப் போடுங்கள் என்பது சொல் வழக்கம். யானைக்கு பிடித்ததும் கரும்புதான், அம்பாள் கையில் வைத்திருப்பதும் கரும்புதான். கரும்பில்லாத பொங்கல் விழாவா என்று தைரியம் கூறியது.

இதைக் கேட்ட கடல் ஆத்திரத்தில் பொங்கியது. டேய் உப்பு! என்ன யோசிக்கிரே. நீ இல்லாம ஒரு பண்டமுண்டா. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சாம்பாராகட்டும், ரசமாகட்டும், மசாலா, பொறியல் எதுவானாலும் நீ இல்லாவிட்டால் வாயில் வைப்பார்களா? ஊறுகாய்க்கும் உப்பு, உடல் அடக்கத்திற்கும் நீ தான், “உங்கள் உப்பைத் தின்னவன் உங்களுக்கு துரோகம் நினைப்பானா என்று தானே சொல்கிறார்கள்”. உப்பு சப்பில்லாத என்ன சாப்பாடு என்று சொல்லும் நம்ம ஆதரவாளராகிய சாப்பாட்டு ராமன்கள் இல்லையா? நீ பல பிராண்டுகளில் விற்பனைக்கு வந்து விட்டாய். நோய் குணமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டு உப்பு போடுகிறார்களே. தெரியாதா உனக்கென்ன குறைச்சல் என்றது கடல்.

ஒரு தினம் பெரிய நாயகம் தள்ளாடி வீட்டில் நுழைவதைப் பார்த்த அவன் மனைவி, ‘ஏங்க! என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்று கேட்டது..

என் காலில் ஒரு புண் வந்தது. அதுக்கு மருந்து போட்டும் இன்செக்ஷன் செய்தும் குணமாகலே. டாக்டர் சொல்றார். எனக்கு சக்கரை வியாதியாம். இனிப்பு சாப்பிட்டக் கூடாதாம். அப்போது தான் புன் குணமாகுமாம் என்று என்று புலம்பினான் பெறியநாயகம்.

அதனாலென்ன. இனிமே நீங்க சாப்பிடறதிலே சர்கரையை ஒதுக்கிடறேன் என்று சமாதானப்படுத்தினாள் அவன் மனைவி.

இதைக் கேட்ட உப்பிற்கு ரொம்ப குஷி. சர்கரையைப் பார்த்து இளித்தது.

அப்போது ராமலிங்கம் அங்கு வந்தார். அவரிடம் எல்லாவற்றையும் விலாவரியாக கூறினார் பெரிய நாயகம்.

அதைக் கேட்ட ராமலிங்கம் கண்ணீர் விட்டார். உன்கதை இப்படி. என் கதை தெரியுமா. நான் திடீரென்று மயங்கி விழுந்து விட்டேன். டாக்டரிடம் எடுத்து சென்றார்கள். அவர் சோதித்துவிட்டு எனக்கு ரத்தக் கொதிப்பாம், கொழுப்பு சத்து அதிகரித்து விட்டதாம். உடன் சாப்பாட்டில் உப்பைக் குறைக்க வேண்டுமாம். அல்லது அறவே தவிர்க்க வேண்டுமாம் என வருந்தினார்.

இதை செவியுற்ற சர்க்கரை உப்பை ஏளனமாகப் பார்த்தது.

இனிப்பு உப்பைக் கூப்பிட்டு ‘நம்மைப் பற்றி நமக்கே தலை கனமேறி விட்டது. அதனால்தான் நம்மைப் படைத்த கடவுள் நம் தலையில் குட்டிப்பாடம் கற்பித்தார் என்றது.

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான். என்பதையும் மருந்து போல் சாப்பிட்டால் விருந்து சாப்பிடலாம். விருந்து போல் சாப்பிட்டால் மருந்து தான் கதி!

March 30, 2019, 04:42:02 am
Reply #6

MDU

Re: இனிப்பா உப்பா
« Reply #6 on: March 30, 2019, 04:42:02 am »