Advanced Search

Author Topic: கொடுப்பது கிடைக்கும்  (Read 26753 times)

February 24, 2019, 01:24:20 pm
Read 26753 times
கொடுப்பது கிடைக்கும்
« on: February 24, 2019, 01:24:20 pm »
" என்னை யாரும்
 புரிந்துகொள்ளவில்லை
என்னை யாரும்
நேசிக்கவேயில்லை
என்னை யாரும் ……."

போதும் போதும்
நிறுத்து
உன்னைப் போலவே தான்
எல்லோரும்
பிச்சைக்காரனிடமே பிச்சை கேட்கும்
அறியாமை மனம்கொண்டு !

உன் எதிர்பார்ப்பை நிறுத்தி
அடுத்தவனுக்கு பாசத்தை
அள்ளிக் கொடு
அடுத்தவரை புரிந்துகொள்

எதெல்லாம் நீ அடுத்தவரிடம்
எதிர்பார்கிறாயோ
அதையெல்லாம் மற்றவருக்கு கொடு
எதெல்லாம் உன் பட்டியலில் உள்ளதோ
அதையெல்லாம்  மற்றவரிடம்
கண்டு மகிழ்

இந்த மகிழ்ச்சி வந்ததும்
நீ அறியப்படுவாய்
உன்னை புரிந்துகொள்ளும்
இந்த மானுடம்

March 03, 2019, 03:28:55 am
Reply #1

MDU

Re: கொடுப்பது கிடைக்கும்
« Reply #1 on: March 03, 2019, 03:28:55 am »