Advanced Search

Author Topic: குட்டி கதைகள் பகுதி  (Read 12772 times)

November 24, 2018, 12:00:44 pm
Read 12772 times

Arrow

குட்டி கதைகள் பகுதி
« on: November 24, 2018, 12:00:44 pm »
ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.

யார் அந்த முதலைகள் 🐊🐊 நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி 💸💵💸 ரூபாய் பரிசு என்று.

அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவன் 🤸🏻‍♂ மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை🏊🏼 அடைந்தான்.

அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து கேட்டான்.... யார்டா என்னை குளத்தில் தள்ளி விட்டது?

கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.


அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி மட்டும் அவனைப் பார்த்து சிரித்தாள்.😎😎


நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள் :D :D

November 24, 2018, 12:01:57 pm
Reply #1

Arrow

Re: குட்டி கதைகள் பகுதி
« Reply #1 on: November 24, 2018, 12:01:57 pm »
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன !! 🌳🌳
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க☁ இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது
😣😣😣😣😣😣😣😣

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது
😌😌😌😌😌😌😌

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦

அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச்சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது  , எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று !!!!

அதற்கு அந்த மரம் கூறிய பதில் :  எனக்குத் தெரியும் நான் வழுவிழந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன் , தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று ,  நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢

கருத்து:   உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்!!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...

November 24, 2018, 12:05:03 pm
Reply #2

Arrow

Re: குட்டி கதைகள் பகுதி
« Reply #2 on: November 24, 2018, 12:05:03 pm »
காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது.
ஆனால்,
அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்?
கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.

அதே சமயம்,
அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.
அதைப்பார்த்த சிங்கம்,
"ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை?

யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே!
அப்படியானால்,
பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது

November 24, 2018, 12:19:58 pm
Reply #3

Arrow

Re: குட்டி கதைகள் பகுதி
« Reply #3 on: November 24, 2018, 12:19:58 pm »
கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் தூரம் என்ன?

முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி
புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள்
இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம்
இருக்கும்?” என்ற வினா எழுந்தது. உடனே அரச
சபையை கூட்டி அனைவரிடமும் இதற்கான
விடையை வினவினார் மன்னர்.
-
யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை.
இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு
வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார்.
-
அந்த முனிவரிடம், “கடவுள் எவ்வளவு தூரத்தில்
இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
என்று வினவினார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், “கடவுள் கூப்பிடுகிற
தூரத்தில் தான் இருக்கிறார்” என்று பதில் அளித்தார்.

“அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே
வந்து விடுவார் அல்லவா?” என்று கேட்டார் மன்னர்.
அதற்கு அந்த முனிவர், “எந்த இடத்தில் கடவுள்
இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது”
என்றார்.

“புரியும்படி கூறுங்கள்” என்று அந்த மன்னர் கேட்டுக்
கொண்டார்.

இதற்கு பதில் அளித்த முனிவர், “துரியோதனன்
சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது,
“வைகுண்ட வாசா! காப்பாற்று” என்று கிருஷ்ணரை
அழைத்தாள் திரௌபதி. ஆனால் கிருஷ்ணர் வரவில்லை.

“துவராகை நாயகனே!” என்னை காப்பாற்று என்று
அழைத்தாள் திரௌபதி. அப்போதும் கிருஷ்ணன்
வரவில்லை. “இதயத்தில் இருப்பவனே!” என்று
கடைசியாக அழைத்தாள் திரௌபதி. உடனே பகவான்
கிருஷ்ணர் தோன்றி திரௌபதியின் மானத்தைக்
காத்தார்.

கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று
நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்கு
தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார்.
எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல்
கடவுளுக்கு கேட்கும்.

உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால்
உடனே வந்து அருள் பாலிப்பார்” என மன்னருக்கு
விளக்கம் அளித்தார் அந்த முனிவர்.


January 02, 2019, 11:50:07 am
Reply #4

Arrow

Re: குட்டி கதைகள் பகுதி
« Reply #4 on: January 02, 2019, 11:50:07 am »
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில்  பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.

தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.

சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால்
சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை.
சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.

அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....

அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...

மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது... 🙏🙏🙏
#மனிதனோட பல பிரச்சனைக்கு காரணம் #மனஉளைச்சல்  தான்!