Advanced Search

Author Topic: ஒரு வரியில் தமிழ் கவிதைகள் - One line tamil kavithai  (Read 27614 times)

May 17, 2019, 12:14:33 am
Read 27614 times

MDU

யோசித்துப்பார் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்

தேடலில் தொடங்கி எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை

வாழ்க்கை முடியும் வரையிலும் ஒரு புதிராகவே இருக்கிறது...!

மழலையாய் மனதை வைத்திரு கவலைகளும் தீண்டாது

நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்

வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை தனிமை

எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு

மனதிற்கு பிடித்தமானவர்கள் செய்யும் அனைத்துமே அழகானவை தான்

நமக்கும் சேர்த்தே வேண்டிக்குற அந்த மனசுதான் கடவுள்

ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே எவ்ளோ போராட வேண்டியிருக்கு

கொடுப்பதை வாங்கிக்கொள் முடிவை தெளிவாக எடு

ஒரு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சத்தைக் காண்பது இன்னும் பேரின்பம்

சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது

ஒருவருக்கு திரும்ப கொடுக்கவே முடியாதது அவர் நமக்கு செலவிட்ட நேரம்


May 20, 2019, 03:49:39 pm
Reply #1

Arrow

ஒரு வரி கவிதைகள் அருமை

கவிதையோ தத்துவமோ
எதுவாயினும் அருமை

May 23, 2019, 03:32:27 am
Reply #2

MDU