Advanced Search

Author Topic: MDU கதைகள்  (Read 16523 times)

August 30, 2018, 04:22:05 am
Read 16523 times

MDU

MDU கதைகள்
« on: August 30, 2018, 04:22:05 am »
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.   

January 17, 2019, 04:24:12 am
Reply #1

MDU

டைனோசர்-சிறுகதை
« Reply #1 on: January 17, 2019, 04:24:12 am »
மலையடிவாரத்தில் அமைந்த சிறுசிறு வீடுகள்கொண்ட அழகிய கிராமம். அந்தக் கிராமத்தின் அனுபல்லவி என்கிற சிறுமிதான் நம் கதாநாயகி. அனுவின் நெடுநாள் ஆசை, ஒரு டைனோசரை வீட்டில் வளர்ப்பது.
தந்தை கதிரேசனிடம், ‘‘அப்பா, டைனோசர் எந்த ஊரில் இருக்கு?’’ எனக் கேட்டாள்.

‘‘டைனோசர் எப்பவோ அழிஞ்சுபோச்சு. அருங்காட்சியகத்தில் படிமங்கள்தான் இருக்கு. நாளைக்கு அங்கே போகலாம். இப்போ தூங்கு’’ என்றார் அப்பா.அனுபல்லவி தூங்கச் சென்றாள். கொஞ்ச நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் சத்தம். அப்பாவும் அம்மாவும் ஆழ்ந்து தூங்கியதால், கதவைத் திறந்தாள் அனு. மலையிலிருந்து உருண்டுவந்த பாறை ஒன்று, கதவின் மேல் மோதியிருப்பது தெரிந்தது.

அனு அந்தப் பாறையை உருட்டிவிட நினைத்தபோது, அதிலிருந்து சத்தம் கேட்டது. பயந்துபோய் ஓட நினைக்க, பாறையில் விரிசல்... அதிலிருந்து ஓர் உருவம் எட்டிப் பார்த்தது. அட, அது பாறை இல்லே; முட்டை. அதிலிருந்து வந்தது ஒரு டைனோசர் குட்டி.

தலையை நீட்டி சுற்றிலும் பார்த்த டைனோசர் குட்டி, அழத் தொடங்கியது. ‘‘உஷ்.. உஷ்... பாப்பா ஏன் அழறே?'' என்ற அனு, வேகமாக உள்ளே சென்று, தம்பி ஜீவாவின் விளையாட்டு பொருள்களுடன் வந்தாள். அதைக் கொடுத்து டைனோசரை சமாதானம் செய்தாள்.
மறுபடியும் உள்ளேபோய் பால் காய்ச்சி எடுத்துவந்து கொடுத்தாள். குடித்த டைனோசர் அழத் தொடங்கியது. சந்தேகத்துடன் அந்தப் பாலில் கொஞ்சம் குடித்துப் பார்த்தாள். ‘ஆகா... சர்க்கரைக்குப் பதில், உப்பு போட்டுட்டோமே' என நினைத்தாள்.

டைனோசர் குட்டி முறைப்பதைப் பார்த்த அனு, ‘‘சரி... சரி... அவசரத்துல தப்பாயிடுச்சு. இரு வரேன்'' என்றபடி, பழங்களை கொண்டுவந்து கொடுத்தாள். குட்டி மளமளவெனச் சாப்பிட்டது.
‘‘உனக்கு ஒரு பெயர் வைக்கணுமே... என் பெஸ்ட் ஃப்ரெண்ட் பேரு, தாரா. அதையே வைக்கிறேன்'' என்றபடி, குட்டியைப் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்று, மெத்தையில் படுக்கவைத்த தூங்கிப்போனாள்.
விடியற்காலையில் அனுவும் தாராவும் மலையில் நடந்துகொண்டிருந்தார்கள். ஆம்! ‘‘உன் தாய் டைனோசரிடம் உன்னை என் வீட்டில் வளர்க்க அனுமதி வாங்கிக்கொண்டு வருவோம்'' எனச் சொல்லிய அனு, தாய் டைனோசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தாள்.

‘‘இந்த வழியில் அருவி இருக்கு.  குளிச்சுட்டு,  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு உன் அம்மாவைத் தேடலாம்'' என்ற அனு, ‘‘ஆமா... உனக்குத் தமிழ் தெரியுமா?’’ எனக் கேட்டாள்.

பதிலுக்கு விநோதமாகச் சத்தமிட்டது தாரா. அருவியில் குளித்து, பழங்களைப் பறித்து உண்டனர். பிறகு, தாராவின் தாயைச் சந்தித்தனர். உருவத்தில் ஒன்றுபோல இருந்ததால், தாராவின் தாயை அனுவால் அடையாளம் காணமுடிந்தது. தாய் டைனோசர் கண்ணீர் மல்க, தாராவைக் கட்டி அணைத்துக்கொண்டது.
அனு தயக்கத்துடன், ‘‘உன் குழந்தை மேலே இருக்கிற பாசம் புரியுது. ஆனாலும், தாராவை நான் வளர்க்கட்டுமா?’’ எனக் கேட்டாள்.

அனு நினைத்தாள், தாராவின் தாய்க்கும் தமிழ் தெரியாது என்று. ஆனால், ‘‘என் குட்டியை ஒளிச்சுவைக்காமல் நேர்மையா கூட்டிவந்து காட்டினதுக்காக, உன்னோட அனுப்பறேன்’’ என்றது.
அனு சந்தோஷத்துடன் தாராவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.

‘‘ஒரே ஒரு விஷயம்... மனிதர்களாகிய நீங்கள் சுயநலத்துடன் இருக்கீங்க. உணவு சங்கிலியில் ஓர் உயிரினம் அழிந்தாலும் ஆபத்து மொத்த பூமிக்கே. மரத்தை வெட்டி, காட்டை அழிச்சு, காற்றை மாசுபடுத்தி எல்லா வகையிலும் இயற்கையை இம்சிக்கிறதை நிறுத்துங்க. வருங்கால தலைமுறையான நீங்களாவது இதைச் செய்யுங்க'' என்றது அம்மா டைனோசர்.
அப்போது, ‘‘அனு... அருங்காட்சியகம் போகணும்னு சொன்னியே... சீக்கிரம் எழுந்திரு'' என்ற அம்மாவின் குரல் கேட்டு கண் விழித்தாள் அனுபல்லவி.

இவ்வளவு நேரம் நடந்தது கனவு என அவளால் நம்பவே முடியலை. ‘அது நிஜம்தான்... ஏதோ ஒண்ணு புரியாமல் இருக்கு' என நினைத்துக்கொண்டாள்.
சற்று நேரத்தில் தயாராகி அருங்காட்சியகத்துக்குச் சென்றார்கள். ‘‘இதோ... இதுதான் அந்தக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் படிமம். தாயும் குட்டியும்'' என்றார் அப்பா.
அதைப் பார்த்த அனு திகைத்துப் போனாள். கனவில் பார்த்த அதே டைனோசர் தாயும் குட்டியும். அவை, அனுபல்லவியைப் பார்த்துப் புன்னகைப்பது போலவே இருந்தன

February 12, 2019, 03:43:33 am
Reply #2

MDU

தெனாலிராமன் கதை - The story of Theanaliraman
« Reply #2 on: February 12, 2019, 03:43:33 am »
பிறந்த சிலநாட்களில் தந்தையை இழந்து, அதன்பின் வறுமையில் உழன்று, பின் மாமன் வீட்டில் வளர்ந்தவர் தெனாலிராமன். இளமையிலே படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தான். இருப்பினும், மற்றவரை சிரிக்கவைக்கும் ஆற்றலால், உடன் உள்ள சிறுவர்களை அவ்வப்போது தனது கோமாளித் தனங்களால் சிரிக்க வைப்பதில் சமர்த்தராக இருந்தார். அவை சேட்டைகளாக இருந்தாலும், அவற்றில் இருந்த அறிவுக்கூர்மையான விகடநுட்பம் எல்லோரையும் கவர்ந்தது.
எதையும் எதிர்பார்க்காதே!!!
இவரின் நகைச்சுவையை கண்ட ஒரு துறவி, காதில் ஒரு மந்திரம் சொல்லி, இதை உச்சரித்துக்கொண்டே இரு, காளிதேவியின் வரம் கிடைக்கும் என்று கூற, அதன்படியே காளியின் தரிசனம் கிடைக்கப்பெற்று, காளிதேவியையே தன் மதிநுட்பத்தால் சிரிக்கவைத்து, விகடகவி பட்டம் பெற்றதாக கதைகளில் அறியமுடிகிறது.

இப்படிப் பெற்ற வரம் தந்த நம்பிக்கை காரணமாக, விஜயநகரை ஆண்டுவந்த கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் நுழைந்து, மன்னரின் நம்பிக்கையைப் பெற்று அரசவைப்புலவராக, விகடகவியாக இருந்தார்

அப்போது அரசவையில், அவர் நிகழ்த்திய நிகழ்வுகள், படிக்கப்படிக்க திகட்டாதவை, அவை, அரசரை மனமகிழ சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நீதி போதனைகளாகவும் இருந்தது. அவர் சொல்ல வந்த கருத்தை, சிறு சம்பவங்கள் மூலம் சிரிக்கவைத்து, அதன் பின் எல்லோரும் பொருள் உணர்ந்து, அவர் சொல்ல வந்ததை ஒப்புக்கொள்ளும் வகையில் அவருடைய புலமை இருந்தது.

இப்படித்தான் ஒருநாள், அரசவையில், மன்னர் கிருஷ்ணதேவராயர் பிறந்த நாள் விழா, ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்கள், வணிகர்கள்,பொதுமக்கள் எல்லோரும் அவரவர் நிலைக்கேற்ப பரிசுகளை மன்னரிடம் சமர்ப்பித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில், தெனாலிராமரும் இருந்தான். அவர் மன்னரிடம் சென்று, கொண்டு வந்திருந்த மிகப்பெரிய பரிசுப்பொட்டலத்தை சமர்ப்பித்தபோது, மன்னரும் எல்லோரையும் போல அதில் என்ன இருக்கிறது என்றறிய ஆவல் கொண்டு, தெனாலிராமரிடம், பொட்டலத்தை பிரிக்கச் சொல்ல, அவரும் பிரித்தார். மேலே உள்ள தாள்களையும், இலைகளையும் பிரிக்கப்பிரிக்க உள்ளே வெவ்வேறு வடிவங்களில் சிறுசிறு பொட்டலங்கள் வந்துகொண்டே இருந்தன, அவையோர் எல்லாம் மன்னர் உட்பட, அப்படி என்ன பரிசு அதனுள் இருக்கிறது என்று அறிய ஆவல் கொண்டு அவர் பிரிப்பதையே, ஆர்வத்துடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர்.

கடைசியில் ஒரு சிறிய பெட்டியை தெனாலிராமன் பிரிக்க அதனுள் இருந்து நன்கு பழுத்த ஒரு சிறு புளியம்பழம். எல்லோரும் ஏளனமாகச் சிரித்தனர். அடச்சே, இதற்குதான் இத்தனை ஆர்ப்பாட்டமா எனச் சிலரும், எத்தனை தைரியம் இருந்தால் மன்னரின் பிறந்த நாளில் அவரை ஏளனப்படுத்துவது போல, புளியம்பழம் கொடுத்திருப்பான, மன்னர் என்ன தண்டனை விதிக்கப்போகிறாரோ என எல்லோரும் பதைபதைப்புடன் மன்னரைப் பார்த்தனர்.

மன்னர் அமைதியாக " தெனாலி! எதற்காக இந்தப் புளியம்பழம்" என்று கேட்க, தெனாலிராமன் அமைதியாக " மன்னா, நாடாளும் அரசர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது இந்தப் புளியம்பழம் ஒன்றுதான், எனவே தான் தங்களுக்கு இதனை பரிசளித்தேன்" என்றான். " அப்படி என்ன தத்துவம், இந்தப் புளியம்பழத்தினுள்" என அரசர் கேட்டார். "மன்னா!! மன்னர் என்பவர், உலகம் என்னும் புளியமரத்தில் காய்க்கும் புளியம்பழத்தைப்போல இனிமையானவராக இருக்கவேண்டும், அதேநேரம், ஆசாபாசங்கள் எனும் பந்தத்தில் ஒட்டாமல், புளியம்பழம் ஓட்டினுள் ஒட்டாமல் இருப்பதுபோல இருங்கள் என உணர்த்தவே, புளியம்பழம் பரிசளித்தேன்" என்றான். அவையோர், தெனாலியின் சமயோசிதபுத்தியை எண்ணி ஆரவாரத்துடன் கைதட்டினர். மன்னர் கண்கள் கலங்க சிம்மாசனத்தை விட்டு இறங்கி, தெனாலியை ஆரத்தழுவி "என் கண்களைத் திறந்துவிட்டாய்..  மன்னனுக்கு எதற்கு இத்தனை ஆடம்பரமான பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அனைத்தையும் உடனே நிறுத்துங்கள், அரச சொத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீண் செலவு செய்துவிட்டேனே, இனி பிறந்தநாளில் திருக்கோவில்களில் அர்ச்சனைமட்டும் செய்யுங்கள் போதும் என உத்தரவிட்டார். அவையோர் அனைவரும், தெனாலியின் தைரியத்தையும், புத்தி சாதுரியத்தையும் வியந்து பாராட்டினர்.

March 03, 2019, 03:22:30 am
Reply #3

MDU

Akbar Birbal Stories Tamil font
« Reply #3 on: March 03, 2019, 03:22:30 am »


பீர்பால் முகலாய மன்னர் அக்பரின் நம்பிக்கைக்கு உரிய நண்பரும், அக்பர் அவையில் நவரத்திரனங்கள் என அழைக்கப்பட்ட ஒன்பது அமைச்சர்களில் பிரதானமானவராகவும் இருந்த காரணத்தால், பீர்பால் மேல் பொறாமை கொண்டு, அவரிடமிருந்து மன்னரைப் பிரிக்க சில அமைச்சர்கள் எடுத்த முயற்சிகள் யாவும், தோல்வியிலேயே முடிந்தன. பீர்பாலின் புத்திசாலித்தனமும் நகைச்சுவையும் கொண்ட சமயோசித செயல்களின் மூலம் அக்பர் மட்டுமின்றி, அவையில் இருந்த மற்ற அமைச்சர்கள் மற்றும் நாட்டு மக்களிடம் தனிப்பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார் பீர்பால். மனிதனுக்கு அழகைவிட அறிவே முக்கியம்!! பீர்பாலை மன்னர் முன் முட்டாளாக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்டு, அதன்மூலம் அவர்களே முட்டாள்களாகிப்போவது தொடர்கதை. அப்படி ஒருநாள்,

அக்பரின் அவையில், அமைச்சர்கள், பீர்பால் எல்லாரும் அமர்ந்திருக்க, ஒரு அமைச்சர் பீர்பாலைப் பார்த்து மிகவும் ஏளனமாகச்சிரித்தார். மன்னர்" ஏன் அப்படி சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார். " மன்னா, தங்கத்தால் செய்த உடல்போல நீங்கள் மின்னுகிறீர்கள், நாங்களும் சிவந்த உடல் கொண்டு, இங்கே இருக்க, பீர்பால் மட்டும் கருத்த நிறத்தில், இந்த அவைக்கு பொருத்தமில்லாமல் மாறுபட்டவராக இருக்கிறார்" என்று சிரித்தார். அவர்கள் பீர்பாலை அவமானப்படுத்த இப்படி சிரிக்கிறார்கள் என்று உணர்ந்து " பீர்பால் !! அமைச்சர் சொல்லுவதற்கு பதில்கூறும்!! உம்முடைய பதில் ஆணித்தரமாக இருக்கட்டும்" என்றார்.

பீர்பாலும் மன்னரை வணங்கி"

மன்னா!! இறைவன் எல்லோரையும் சமமாகவே நடத்தி, நம்மைப் படைப்பதற்கு முன்னால் எல்லோரையும் உங்களுக்கு என்னவேண்டும் என்று கேட்கிறான், நீங்களெல்லாம் எனக்கு நல்ல சிவந்தநிறமுடைய தோல் வேண்டும் என்று கேட்டீர்கள்.. உங்களுக்குக் கிடைத்தது.. எல்லோரும் இறைவனிடம் சிவந்தநிறமே கேட்டதால், இறைவனிடம் அறிவு நிறையத் தேங்கிவிட்டது. நான் இறைவனிடம் எனக்கு நல்ல அறிவைத்தாருங்கள் என்றுகேட்டு வாங்கிவந்தேன். அதுதான் உங்கள் நிறம் சிவப்பாக இருக்கிறது நான் வேறுவிதமாக இருக்கிறேன்" என்று பதிலளித்தார். புன்முறுவல் பூத்த அக்பர் "பீர்பால்!! நீங்கள் சொன்ன சிவந்தநிறம் பெற்ற கதையில், நானும் இருக்கிறேனா " எனக்கேட்டார். " மன்னா!! நீங்கள்தான் இறைவனிடம், சிவந்த நிறத்துடன் எனக்கு பீர்பாலும் அமைச்சராக வேண்டும் என்றுகேட்டு என்னையும் பெற்றுக்கொண்டீர்களே!" என்று பீர்பால் கூற, அக்பர் அழகைவிட அறிவே முக்கியம் என்று பீர்பால் உணர்த்திய நகைச்சுவையை வெகுவாக இரசித்து மகிழ்ந்தார். சொர்க்கத்தில் தாடி மீசை வளருமா? இப்படித்தான் ஒருமுறை, பீர்பாலின் செல்வாக்கு நாளுக்குநாள் மன்னரிடம் அதிகரிப்பது கண்டு, பீர்பாலை நிரந்தரமாக மன்னரிடம் இருந்து பிரிக்க எண்ணிய சில அமைச்சர்கள், ஒருதிட்டம் போட்டு அதன்படி, மன்னரின் முடித்திருத்துபவனை அழைத்து, பொன்னையும் பொருளையும் அளித்து ஆசை வார்த்தை கூறி,தங்கள் இரகசியதிட்டத்திற்கு அவனை சம்மதிக்கவைத்து,திட்டம் நிறைவேறியபின், மேலும் பொன்னை அளிப்பதாகக்கூறி தங்கள் சதித்திட்டத்தை தயார்செய்தனர். எதிர்பார்த்ததுபோல, ஒருநாள் மன்னரிடமிருந்து முடித்திருத்துபவனுக்கு அழைப்புவர, மன்னரின் முடியை வெட்டிக்கொண்டே அவன் "மன்னா, தங்கள் தந்தை முடிபோல தங்களுக்கும் முடி அழகாக இருக்கிறது, இருந்தாலும் நீங்கள் உங்கள் தந்தையாரின் நலன்மீது அக்கறை செலுத்துவதில்லை, இப்போது தந்தையாரின் தலைமுடி நீண்டு வளர்ந்து, அவருடைய முக அழகை கெடுத்துவிட்டது. அவர் நலனை விசாரியுங்கள்: என்றான்.

என்ன உளறுகிறாய்? என்தந்தை காலமாகி நெடுநாட்களாகிவிட்டன. இப்போது எப்படி அவருக்கு முடிவளர்ந்திருக்கும்? இறந்துபோனவரிடம் எப்படி நலம் விசாரிக்கமுடியும்? புத்திபேதலித்துவிட்டதா உனக்கு? மன்னர் கடிந்து கொண்டார். அவன் பவ்யமாக " முடியும் மன்னா! ஒரு மந்திரவாதி இருக்கிறான், அவன் உயிருடன் ஒருவரை சுடுகாட்டுக்கு கொண்டுசென்று விஷேச மந்திரங்களை சொல்லி, அவன் உடலை எரிப்பார். நம் கண்களுக்குத்தான் உடலை நெருப்பு எரிப்பதாகத்தெரியும், மந்திரவாதியின் சக்தியால், அந்த நபரின்உடல் தீயில்வேகாமல் மேலோகம் சென்று நம் முன்னோரை கண்டுவரும். என்ன, ஒரு நம்பிக்கையான ஆள் மட்டும்வேண்டும்." என்று மன்னரிடம் கூறினார்.

கை கொடுக்கும் கை!!

ஒருமுறை அவையில் அக்பர் திடீரென ஒரு சந்தேகத்துக்கு எல்லோரிடமும் விளக்கம் கேட்டார். " பொதுவாக தானம் கொடுப்போர் கை உயர்ந்தும், தானம் பெறுபவர்கள் கை தாழ்ந்தும் இருக்கும், இதுவே நாம் எங்கும் கண்டிருக்கிறோம். ஆனால் தானத்தில் கொடுப்பவர்கள் கை தாழ்ந்தும், தானத்தை பெறுபவர்கள் கை உயர்ந்தும் இருக்கும். அது எப்போது? சரியான விளக்கம் கூறுங்கள்" என்று அமைச்சர்களைப் பார்த்து கேட்டார். அமைச்சர்கள் எவ்வளவுயோசித்தும், பதில் தெரியாததால், அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். அப்போதுதான் வந்த பீர்பாலிடமும் இதே கதைக்கூறி விடையைக்கேட்டார். பீர்பால் சிரித்துக்கொண்டே " மன்னா! இந்தக் கேள்விக்கு யார்வேண்டுமானாலும் பதில் சொல்லிவிடுவார்களே... நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். மூக்குப்பொடி போடுபவரிடம், கொஞ்சம் பொடி கேட்டால், அவர் பொடிடப்பாவை தூக்கி நம் முன் நீட்டுவார்.. நாம் நம் கைவிரல்களை பொடிடப்பாவில் விட்டு பொடியை எடுக்கும்போது, நம் கை மேலே இருக்கும். கொடுப்பவர் கை தாழ்ந்திருக்கும்." அட, இந்தச்சின்ன விஷயம்கூட நமக்கு தெரியவில்லையே.. என்று வழக்கம்போல மங்குனிஅமைச்சர்கள் வருந்த, இன்ஸ்டன்ட் பதிலைச் சொன்ன பீர்பாலை அக்பர் பாராட்டினார் என்று சொல்லவும் வேண்டுமோ?!


March 07, 2019, 03:49:27 am
Reply #4

MDU

Cinderella Fairytale
« Reply #4 on: March 07, 2019, 03:49:27 am »


ONCE UPON A TIME a girl named Cinderella lived with her stepmother and two stepsisters.  Poor Cinderella had to work hard all day long so the others could rest. It was she who had to wake up each morning when it was still dark and cold to start the fire.  It was she who cooked the meals. It was she who kept the fire going. The poor girl could not stay clean, from all the ashes and cinders by the fire.

“What a mess!” her two stepsisters laughed.  And that is why they called her “Cinderella.”

One day, big news came to town.  The King and Queen were going to have a ball!  It was time for the Prince to find a bride. All of the young ladies in the land were invited to come.  They were wild with joy! They would wear their most beautiful gown and fix their hair extra nice. Maybe the prince would like them!

One day, big news came to town.

At Cinderella’s house, she now had extra work to do.  She had to make two brand-new gowns for her step-sisters. 

“Faster!” shouted one step-sister.

“You call that a dress?” screamed the other. 

“Oh, dear!” said Cinderella.  “When can I–“

The stepmother marched into the room.  “When can you WHAT?”

“Well,” said the girl, “when will I have time to make my own dress for the ball?”

“You?” yelled the stepmother.  “Who said YOU were going to the ball?”

“What a laugh!” said one step-sister.

 

“YOU?” yelled the stepmother.  “Who said YOU were going to the ball?”

 

“Such a mess!” They pointed at Cinderella.  All of them laughed.

Cinderella said to herself, “When they look at me, maybe they see a mess.  But I am not that way.  And if I could, I WOULD go to the ball.”

Soon the time came for the stepmother and step-sisters to leave for the big party.  Their fine carriage came to the door. The stepmother and step-sisters hopped inside.  And they were off.

“Good-bye!” called Cinderella.  “Have a good time!” But her stepmother and step-sisters did not turn around to see her.

“Ah, me!” said Cinderella sadly.  The carriage rode down the street.  She said aloud, “I wish I could go to the ball, too!”

Then - Poof!

All of a sudden, in front of her was a fairy.

“I wish I could go to the ball, too!”

 

“You called?” said the fairy.

“Did I?” said Cinderella.  “Who are you?”

“Why, your Fairy Godmother, of course!  I know your wish.  And I have come to grant it.”

“But…” said Cinderella, “my wish is impossible.”

“Excuse me!” said the Fairy Godmother in a huff.  “Did I not just show up out of thin air?”

“Yes, you did,” said Cinderella.

“Then let me be the one to say what is possible or not!”

 

“Excuse me!” said the Fairy Godmother in a huff.  “Did I not just show up out of thin air?”

 

“Well, I think you know I want to go to the ball, too.” She looked down at her dirty clothes.  “But look at me.”

“You do look a bit of a mess, child,” said the Fairy Godmother.

“Even if I had something nice to wear," said the girl, "I would have no way to get there."

“Dear me, all of that is possible,” said the Fairy. With that, she tapped her wand on Cinderella’s head.

At once, Cinderella was all clean.  She was dressed in a beautiful blue gown.  Her hair was set up high on her head inside a golden band.

“This is wonderful!” said Cinderella.

“Dear me, all of that is possible,” said the Fairy Godmother.

 

“Who said I was done?” said the Fairy Godmother.  She tapped her wand again. At once, a beautiful carriage came to be, with a driver and four white horses.

“Am I dreaming?” said Cinderella, looking around her.

“It is as real, as real can be,” said the Fairy Godmother.  “But there is one thing you must know.”

“What is that?”

“All of this lasts only to midnight.  Tonight, at the stroke of midnight, it will all be over.  Everything will go back to how it was before.”

“Then I must be sure to leave the ball before midnight!” said Cinderella.

“Good idea,” said the Fairy Godmother.  She stepped back. “My work is done.” And with that, the Fairy Godmother was gone.

 

“All of this will last only to midnight.”

 

Cinderella looked around her.  "Did that even happen?"  But there she stood in a fine gown, and with a golden band in her hair.  And there were her driver and four horses before her, waiting.

“Coming?” called the driver.

She stepped into the carriage.  And they were off.

Over at the ball, the Prince did not know what to think.  “Why do you have that sad look on your face?” the Queen said to her son.  “Look around you! You could not ask for finer maidens than these.”

“I know, Mother,” said the Prince.  Yet he knew something was wrong. He had met many of the young women.  Yet after he said “hello,” one by one, he could find nothing more to say.

"Look!"  Someone pointed to the front door.  “Who is that?”

All heads turned.  Who was that lovely maiden stepping down the stairs?  She held her head tall and looked as if she belonged. But no one knew her.

"Look!"  Someone pointed to the front door.  “Who is that?”

 

“There is something about her,” said the Prince to himself.  “I will ask her to dance.” And he walked over to Cinderella.

“Have we met?” said the Prince.

“I am pleased to meet you now,” said Cinderella with a bow.

“I feel as if I know you,” said the Prince.  “But of course, that is impossible.”

“Many things are possible,” said Cinderella, “if you wish them to be true.”

The Prince felt a leap in his heart.  He and Cinderella danced. When the song was over, they danced again.  And then they danced again, and yet again. Soon the other maidens at the ball grew jealous.  “Why is he dancing all the time with her?” they said. “How rude!”

 

“Many things are possible,” said Cinderella, “if you wish it to be true.”

 

But all the Prince could see was Cinderella.  They laughed and talked, and they danced some more.  In fact, they danced for so long that Cinderella did not see the clock.

“Dong!” said the clock.

Cinderella looked up. 

“Dong!” went the clock again. 

She looked up again.  “Oh, my!” she cried out.  “It is almost midnight!”

“Dong!” rung the clock. 

“Why does that matter?” said the Prince.

“Dong!” called the clock.

“I must go!” said Cinderella. 

“Dong!” went the clock.

 

“Oh my!” she cried out.  “It’s almost midnight!”

 

“But we just met!” said the Prince.  “Why leave now?”

“Dong!” rung the clock.

“I must GO!” said Cinderella.  She ran to the steps.

“Dong!” said the clock.

“I cannot hear you,” said the Prince.  “The clock is too loud!”

“Dong!” rung the clock.

“Goodbye!” said Cinderella. Up, up the stairs she ran.

“Dong!” went the clock.

“Please, stop for a moment!” said the Prince.
“Dong!” rung the clock.

 

“Oh, dear!” she said as one glass slipper fell off her foot on the stair.  But Cinderella kept running up.

“Dong!” said the clock.

“Please wait a moment!” said the Prince. 

“Dong!” rung the clock.

“Goodbye!” Cinderella turned one last time.  Then she rushed out the door.

“Dong!”  The clock was quiet. It was midnight. 

“Wait!” called the Prince.  He picked up her glass slipper and rushed out the door.  He looked around but could not see her blue dress anywhere.  “This is all I have left from her,” he said, looking down at the glass slipper.  He saw that it was made in a special way, to fit a foot like none other. “Somewhere there is the other glass slipper,” he said.  “And when I find it, I will find her, too.  Then I will ask her to be my bride!”

 

“This is all I have left from her,” he said, looking down at the glass slipper.

 

From hut to hut, from house to house, went the Prince.  One young woman after another tried to fit her foot inside the glass slipper.  But none could fit. And so the Prince moved on.

At last the Prince came to Cinderella’s house. 

“He is coming!” called one step-sister as she looked out the window.

“At the door!” screamed the other step-sister. 

“Quick!” yelled the stepmother.  “Get ready! One of you must be the one to fit your foot in that slipper.  No matter what!”

The Prince knocked.  The stepmother flew open the door.  “Come in!” she said. “I have two lovely daughters for you to see.”

The first step-sister tried to place her foot in the glass slipper.  She tried hard, but it just would not fit. Then the second step-sister tried to fit her foot inside.  She tried and tried with all her might, too. But no dice.

 

“Come in!” she said.  “I have two lovely daughters for you to see.”

 

“Are there no other young women in the house?” said the Prince.

“None,” said the stepmother.

“Then I must go,” said the Prince.

“Maybe there is one more,” said Cinderella, stepping into the room.

“I thought you said there were no other young women here,” said the Prince.

“None who matter!” said the stepmother in a hiss.

“Come here,” said the Prince.

 

“Maybe there is one more," said Cinderella, stepping into the room.

 

Cinderella stepped up to him.  The Prince got down on one knee and tried the glass slipper on her foot.  It fit perfectly! Then, from her pocket Cinderella took out something. It was the other glass slipper!

“I knew it!” he cried.  “You are the one!”

“WHAT?” shouted a step-sister. 

“Not HER!” screamed the other step-sister.

“This cannot BE!” yelled the stepmother. 

But it was too late.  The prince knew that Cinderella was the one.  He looked into her eyes. He did not see the cinders in her hair or the ashes on her face.

“I have found you!” he said.

“And I have found you,” said Cinderella.

And so Cinderella and the Prince were married, and they lived happily ever after.