Advanced Search

Author Topic: காதல் கவிதைகள்  (Read 24369 times)

March 20, 2019, 02:12:08 am
Read 24369 times

ரதி

காதல் கவிதைகள்
« on: March 20, 2019, 02:12:08 am »
என்னுள் நீ...
உன் உருவம் நுழைத்தாய்
கண்ணின் வழியே...
உன் மூச்சும் கலந்தாய்
நாசின் வழியே...
உன் உணர்வுகள் கொடுத்தாய்
மேனியின் வழியே...
உன் உயிரும் ஒளித்தாய்
இதயத்தின் வழியே.

March 22, 2019, 04:36:51 am
Reply #1

MDU

Re: என்னுள் நீ
« Reply #1 on: March 22, 2019, 04:36:51 am »

March 28, 2019, 03:53:27 am
Reply #2

MDU

காதல் கவிதைகள்
« Reply #2 on: March 28, 2019, 03:53:27 am »


உன் கண்கள் என்ன
காந்தக் கடலா இல்லை
காற்றலையா
எவ்வாறீர்த்தாய் என்னை
சொல்லடி கள்ளியே
தாமரை தவிக்கிறது
உன் இதழ் வேண்டி
என்னிடம்
பறிக்க வருகிறேன்
கண்களை மூடிக்கொள்
என் உதடுகள் பார்க்கும்
உன் வெட்க்கத்தை
துடிப்பதை நிறுத்திவிடு இதயமே
இல்லை இறந்துவிடுவேன்
துடிக்கும் அவள் இதயத்தால்


MDU

March 28, 2019, 08:05:16 pm
Reply #3

AnJaLi

Re: சொல்லடி கள்ளியே
« Reply #3 on: March 28, 2019, 08:05:16 pm »

March 29, 2019, 03:27:33 am
Reply #4

MDU

காதல் கவிதைகள்
« Reply #4 on: March 29, 2019, 03:27:33 am »




நீ
வானவில்லாய்
இரு நான்
அதில் இருக்கும்
ஏழு நிறமாய்
இருப்பேன்..!
என்றும்
இணைப்பிரியாமல்...

காற்றை கண்ட
உடன் நடனமாடும்
மரங்களை போல
அவனை கண்டதும்
என் மனமும்
நடனமாடுகிறது...

எனக்குள்
தனிமையை
தவிடு பொடியாகி
விடுகிறது
உன் நினைவுகள்...

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து
நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

உன்னை
தேடி அலைந்திடும்
தேடலில் சுவாரஸ்யம்
குறையும் போது
உன் நினைவுகள்
என்னை தீண்டி
தேடலை அதிகப்படுத்துகிறது



MDU

March 29, 2019, 07:33:41 pm
Reply #5

AnJaLi

Re: Kadhal Kavithai
« Reply #5 on: March 29, 2019, 07:33:41 pm »

March 30, 2019, 04:27:20 am
Reply #6

MDU

Re: Kadhal Kavithai
« Reply #6 on: March 30, 2019, 04:27:20 am »


MDU

August 01, 2022, 03:01:09 am
Reply #7

SuNshiNe

மங்கிய கனவுகள்
« Reply #7 on: August 01, 2022, 03:01:09 am »
அவள்


இவள் நினைவினை
இழக்க நினைக்கும்
இவனுக்கு
இடையூறான
இந்தக் காதலைத்
துறப்பதற்கு
துணிவற்ற நெஞ்சம்...
உந்தன்
மனதில் தோன்றும்
மெளனங்களின்
மொழியினைக் கூட
என் இதயத்திற்கு
மொழிபெயர்த்துக்
கொடுக்கும்
உன் கண்களின்
அசைவிற்கு
இசையா மனம்
இவனது இல்லை...
உந்தன் காலடி
தடம் பட்ட
தரையினைத்
தழுவிக்கொள்கிறேன்...
உனது ஓசையினை
பதிவு செய்து வைக்க
என் வீட்டு சுவர்களுக்கு
கட்டளையிட்டுள்ளேன்...
என்ன தவம்
புரிந்தேனும்
உனை அடையும்
வேட்கை இல்லை
இவனுக்கு எனும்போதும்
இவள் நிரம்பிய
இதயத்தில்
இனி எவருக்கும்
இடமில்லை என்பது
இவன் முடிவு...
« Last Edit: August 03, 2022, 03:01:40 am by SuNshiNe »
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

December 18, 2022, 05:30:38 pm
Reply #8

Sanjana

Re: காதல் கவிதைகள்
« Reply #8 on: December 18, 2022, 05:30:38 pm »
NICE ONE...