Chat
Upload Image
Link 3
Link 4
Link 5
Welcome,
Guest
. Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
Like stats
Home
Help
Search
Login
Register
Advanced Search
GTC FORUM
»
General Category
»
General Discussion
»
தினம் ஒரு திருக்குறள்.....
« previous
next »
Print
Pages:
1
...
4
5
[
6
]
Author
Topic: தினம் ஒரு திருக்குறள்..... (Read 43616 times)
February 08, 2023, 09:45:52 am
Reply #75
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு திருக்குறள்.....
«
Reply #75 on:
February 08, 2023, 09:45:52 am »
🔥
குறள்-74
🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️
மு.வ விளக்கம்:
⚜️
⭐அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்✨
⚜️
சாலமன் பாப்பையா விளக்கம்:
⚜️
⭐குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்✨
Logged
February 21, 2023, 09:36:08 am
Reply #76
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு திருக்குறள்.....
«
Reply #76 on:
February 21, 2023, 09:36:08 am »
🔥
குறள்-75
🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️
மு.வ விளக்கம்:
⚜️
⭐உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்✨
⚜️
சாலமன் பாப்பையா விளக்கம்:
⚜️
⭐இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்✨
Logged
March 08, 2023, 09:29:07 am
Reply #77
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு திருக்குறள்.....
«
Reply #77 on:
March 08, 2023, 09:29:07 am »
🔥
குறள்-76
🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️
மு.வ விளக்கம்:
⚜️
⭐அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது✨
⚜️
சாலமன் பாப்பையா விளக்கம்:
⚜️
⭐அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்✨
Logged
March 09, 2023, 11:25:28 am
Reply #78
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு திருக்குறள்.....
«
Reply #78 on:
March 09, 2023, 11:25:28 am »
🔥
குறள்-77
🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️
மு.வ விளக்கம்:
⚜️
⭐எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்✨
⚜️
சாலமன் பாப்பையா விளக்கம்:
⚜️
⭐எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்✨
Logged
March 10, 2023, 02:35:02 pm
Reply #79
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு திருக்குறள்.....
«
Reply #79 on:
March 10, 2023, 02:35:02 pm »
🔥
குறள்-78
🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️
மு.வ விளக்கம்:
⚜️
⭐அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது✨
⚜️
சாலமன் பாப்பையா விளக்கம்:
⚜️
⭐மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்✨
Logged
March 11, 2023, 07:56:49 am
Reply #80
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு திருக்குறள்.....
«
Reply #80 on:
March 11, 2023, 07:56:49 am »
🔥
குறள்-79
🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️
மு.வ விளக்கம்:
⚜️
⭐உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்✨
⚜️
சாலமன் பாப்பையா விளக்கம்:
⚜️
⭐குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?✨
Logged
(1 person liked this)
March 12, 2023, 10:27:16 am
Reply #81
AslaN
Hero Member
1064
Posts
Total likes: 52
Gender:
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது
Re: தினம் ஒரு திருக்குறள்.....
«
Reply #81 on:
March 12, 2023, 10:27:16 am »
🔥
குறள்-80
🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️
மு.வ விளக்கம்:
⚜️
⭐அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்✨
⚜️
சாலமன் பாப்பையா விளக்கம்:
⚜️
⭐அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்✨
Logged
(1 person liked this)
Print
Pages:
1
...
4
5
[
6
]
« previous
next »
GTC FORUM
»
General Category
»
General Discussion
»
தினம் ஒரு திருக்குறள்.....