இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் டயாபெட்டீஸ் நோய் வருகிறது. இந்த டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க வில்வ இலை உதவுகிறது. இந்த இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்தாலே போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தயாரிக்கும் முறை
முதலில் 7 வில்வ இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி அந்த தேநீரை தினமும் 3 முறை பருக வேண்டும்.
பக்க விளைவுகள்
இந்த வில்வ இலையால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பக்க விளைவுகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கருவுற்ற பெண்கள் இந்த வில்வ இலைகளை சாப்பிடக் கூடாது.
இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் நீங்கள் ஏற்கனவே மருந்து எடுத்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்துவது நல்லது.