மின்காந்த குரலுக்கு சொந்தகாரியே
GTC யின் வானம்பாடியே..!
கானம் பாடித் திரியும்
வண்ணப் பறவையே வானம்பாடி
வானத்தின் நீலம்
உனக்கு இசை மேடை !
கவிதை பாடித் திரியும்
எனக்கு
நமது GTC யே தமிழ் மேடை !
இந்த தமிழ் மேடையில் நமது வானம்படிக்கு
பிறந்தநாள் வாழ்த்து கவி என்னில் தோன்றியது உங்கள் பார்வைக்கு..!
உன்னை ஈன்ற பொழுது உனது பெற்றோர்கள்
பெற்ற பேரானந்தத்தை
GTC யும் பெற்றது உனது நட்பு மலர்ந்தபொழுது..!
நொடிக்கு ஒரு முறை
வெடி சிரிப்பு பூத்திடும் எங்கள் வானம்பாடியே..!
தேடி வந்த தோழமையை
ஜோடி மலராக போற்றி பேரானந்தம் கண்ட எங்கள் வானம்பாடியே..!
இப்படிப்பட்ட இந்த வானம்பாடிக்கு
எப்படிப்பட்ட வாழ்த்து எழுத?
நட்புப்பட்ட சொற்களை நாடி
புலப்பட்டது அர்த்தங்கள் கோடி..!
எங்கள் இனிய தோழியே....!
உனது பிறந்தநாளான இன்று
கோடி அர்த்தங்களும் கூடிய
எங்கள் தூய்மையான அன்பு பூக்கள்
வாழ்க! வாழ்க ! நீடுழி வாழ்க!!
என்று உனை வாழ்த்துகிறது..!