காதலின் மகத்துவம்....
படை பலம், பணம் பலம்
கொண்ட மன்னனே,
போர் கொண்டு வெற்றி வாகை சூடி
நாட்டை ஆளும் அரசனே....
அவளை கண்ட முதல் பார்வையிலே
மூழ்கி விட்டார் காதலிலே....
மனச் சேர்வில் மணமானது ,
மகிழ்வில் வாழ்க்கை அழகானது..
தீரா காதல் கொண்ட காதலியே
தீர்க்கத்தான் வந்ததே மரணம் என்ற கொடூரனே....
ரணமாய் தவித்தாரே...
ரணத்தில் அவள் நினைவாய்
கல்லறை ஒன்றை செதுக்க திட்டமிட்டாரே.....
இன்று, அதுவே காதலின் சின்னமே,
கவிதைக்கு மெய் சித்திரமே,
காதலியின் நினைவு கோட்டையே,
காதலரின் மகிழ்வுக்கு அருங்காட்சியமே....
உலக அதிசயமே,
உயிருக்கு உயிராய் உருவான ஓவியமே,
யமுனை கரையின் அழகே,
யாவரையும் ஈர்க்கும் காதல் கோட்டையே...
அளவில்லா காதலின் நினைவால்
ஆழ்மனதில் அவதரித்த கலை கட்டிடமே,
வடிவமைப்பில் வார்த்த சிறப்பு தோற்றமே,
தன் அழகால் வசியம் செய்யும்
ஷாஜகானின் தாஜ்மஹால் மண்டபமே....
இந்தியாவின் பெருமை கட்டிடமே...
காதலின் அன்பால் நிறைந்த மகத்துவமே,
கல்லறை ஆனாலும் கால காலத்திற்கும்
முடிவில்லா தொடரும்,
முகலாய மன்னரின் காதல் சரிதமே.....
(இது கல்லறையாய் இருந்தாலும் தன் காதலை வெளிப்படுத்த ஷாஜகான் மும்தாஜ் மேல இருந்த அன்பு ரொம்பவே ஆழமானது, அழகானது...
இறந்த பின்பும் உலகறிய விட்டு சென்றுள்ளார் தன் உண்மை காதலை.....)